கல்வி என்பது தனிமனித வளர்ச்சிக்கும், சமுதாய வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இன்றோ கல்வி கடை சரக்காக மாறி, யார் வேண்டுமானலும் கல்வி நிலையங்களை துவங்கலாம் என்ற காரணத்தால் பல குழந்தைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. உலகமய, தனியார்மயக் கொள்கையால் ஏழை மிகவும் ஏழையாக ஆக்கப்பட்டு அவர்களின் குழந்தைகள், தான் என்ன ஆகப்போகிறோம் என்பதே தெரியாமல் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.