நமது கல்விமுறை பற்றிய ஒரு தேடுதல்

நமது கல்விமுறை பற்றிய ஒரு தேடுதல் +++++++++++++++++++++++++++++++
எனது நீண்ட நாள் தேடுதல் எழுதமுடியாமல் இருந்தவற்றை இன்று எழுதிவிட்டேன், அதாவது நமது கல்விமுறை பற்றி பலரும் அறிந்தவைதான் இருந்தும் இன்று சமூகத்தில் எவ்வளவு கொந்தளிப்பான கட்டமாக இருந்தாலும் எல்லா மக்களும் போராட்டத்தை கண்டு ஒதுங்கி போவதை நினைத்து அதற்க்கான காரணங்களில் ஒன்றான பள்ளி கல்வியில் தொடங்கும் இந்த மன நலம் சம்பந்தமான பிரச்சினை பற்றிதான் இந்தப் பதிவு…. உங்களின் கருத்துகள் எதிர் பார்க்கிறேன்.
ஒடுக்குமுறையின் ஆரம்பம்————————————–பள்ளிக்கு செல்வது வெறும் புத்தகங்களைப் படிப்பதற்காக மட்டுமல்ல அறிவு பெறுவதற்கு மட்டுமல்ல வேறு எதற்காக என்று கேட்கிறீர்களா இன்றைய சமூக விதிமுறைகள் ஒழுங்கு முறைகளையும் அங்கு கற்றுத்தருகிறார்கள் பின்னர் சமூகத்தில் ஆம் உற்பத்தியில் ஈடுபட்டு சட்ட ஒழுங்கை ஏற்று கீழ்ப்பட்டு உழைப்பதற்கு வேண்டிய நீதிகளை கட்டுப்பாடுகளை ஒழுக்க விதிகளை பள்ளிகளிலேயே பயிற்றுவிக்கிறார்.
நேரத்தில் செல்ல வேண்டும் என்று பிள்ளைகள் ஆரம்பப் பள்ளியில் படிக்கும் போதும் அப்போது தற்போது சாப்பாடு இன்றியும் ஓடுவது ஏன்? சீருடை காலணி சிறப்பாக இருக்க வேண்டுமென்று அம்மா அப்பாவோடு சிறுகுழந்தை சண்டை போடுவது ஏன்?
வகுப்புகளில் ஒழுங்கு முறையை மீறி சத்தம் போட்டாலோ குளறுபடி செய்தாலும் தண்டிக்கப்படுகிறார்கள் பிரம்பால் அடிக்கிறார் மேலும் வகுப்பு முடியும்வரை நிற்க செய்கிறார் பள்ளி முடிந்த பின்னர் இருக்க செய்து தண்டிக்கிறார்கள்! சில வகுப்புகள் குற்றத்துக்காக பணம் வாங்குகிறார்கள் பள்ளியிலிருந்து சிலவேளை வெளியேற்றி விடுகின்றனர் பள்ளிகளை பொறுத்தவரை வெவ்வேறு விதமாக தண்டனை வழங்கப்படுகிறது பல தடவை தண்டனை பெற்றும் அவற்றை எதிர்த்து யாரும் போராடடுவதில்லை. இந்த அடிமை தனத்தை வாழ்க்கை முழுக்க திணிக்கிறார்கள்.
இந்த தண்டனை வழங்குவது என்பது பள்ளியை விட்டு வெளியேறிய பின்னரும் கட்டுப்பாடாக இருக்க கற்க்கும் பாடங்களே. இன்றைய சமூக சட்ட விதிமுறைகள் கீழ்படிந்து நடக்க வேண்டும் தவறினால் பள்ளியில் கிடைக்கும் தண்டனை வேறு வடிவத்தில் வழங்கப்படும் போலீசாரின் குண்டாந்தடியால் பூட்ஸ் கால்கள் விலங்குகள் அதன் மேல் நீதிமன்றங்கள் சிறைச்சாலைகள் என்ற தண்டனை வழங்கும் பல்வேறு அடக்கு முறை கருவிகள் உள்ளன. தொழில்நுட்பம் செயலாற்றும் திறன் உடல் உழைப்பு மட்டுமல்ல இன்று நடைமுறையில் உள்ள சட்ட விதிகள் ஒழுங்குமுறைகள் கட்டுப்பட்டு தொழிலாளர்கள் நடக்கவேண்டும், இவையும் பள்ளிகள் மூலம் பயிற்றுவிக்கப்படுகின்றன அதனாலேயே பள்ளிகளில் புத்தகங்கள் மட்டுமல்லாது சமூக உற்பத்தி ஒழுங்காக நடைபெறவேண்டிய விதிமுறைகளும் கற்பிக்கப்படுகின்றன பெருபான்மையிலான மக்களே உழைப்பவர்கள் அவர்கள் இன்றுள்ள சட்ட விதிமுறைகளுக்கு அடங்கி நடக்க வேண்டும், என்பத்துதானே இந்த கல்வி முறை புகுத்தும் பாடம்.
மற்றொருபுறம் சிறுபான்மையினர் சட்ட விதிகளுக்கு காவலர்கள் அடக்குபவர்கள் ஏஜென்ட்கள் இவர்கள் அதற்கேற்ற கல்வி கற்று ஓடுக்குவது மட்டுமே தொழிலாக கொண்டவர்கள்.
பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் மாணவிகளை கவனிக்கிறார்கள் அவர்கள் அரசிற்கேற்ற பொம்மைகளை உருவாக்குகின்றனர்.
இன்றைய சமூக அமைப்பு இருக்கும் வரை இளம் வயதில் மாணவர்கள் அடக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆயினும் கல்லூரி மாணவர்கள் அடங்கி ஒடுங்கி விடப்போவதில்லை அவர்கள் உலகில் நடக்கும் நிகழ்ச்சிகள் புரட்சிகளை பற்றி கற்றுத்தருகிறது அவர்கள் எதிர்கால நிலைமைகளை வேலையில்லா திண்டாட்டம் இன்னும் பல கற்று கலகம் செய்கின்றனர்.
பள்ளிகளிலேயே போட்டா போட்டி வேலையை மாணவர்கள் இடையில் ஏற்படுத்தி விடுகின்றனர். வகுப்பில் பாடங்களில் போட்டி, மார்க் எடுப்பதில் போட்டி, விளையாட்டு போட்டி, தரத்தில் போட்டி என இளம் வயதிலேயே போட்டிகளை ஏற்படுத்தி வருகின்றனர் இதனால் மாணவர்களிடையே பொறாமை பொச்சரிப்பு ஏற்பட்டு விடுகிறது, இது தவறான கல்விமுறையும் பகைமையும் சமூகத்தில் தோற்றிவிடுகிறது அமைதியான சமூகத்தை காண முடிவதில்லை.
இந்த ஒடுக்கும் சமூகத்தை தூக்கி எறிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் பொதுவுடைமை சமூகத்தில் மட்டுமே மனிதர்களாக நட்புடன் வாழ முடியும் என்பது இதிலிருந்து நாம் கற்க்கும் பாடம்…


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *