நமது இலக்கு-2

தோழர்களே மார்க்சியத்தின் தேவையை அறிவதற்க்கான தொடராக இதனை எழுத நினைக்கிறேன். இதனூடாக அடிப்படை மார்க்சியம் மற்றும் இன்றைய மார்க்சிய போக்கோடு கடந்தகால நிலைகளையும் ஆராய்வோம்…. ஒரு சரியான மார்க்சிய பார்வைதான் என்ன என்பதையும் கற்றுத் தெளிவோம் என்பதே இந்த தொடரின் நோக்கம் தோழர்களே…இன்றைய பதிவு குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலிலிருந்து….

குடும்பத்தின் தோற்றம்
குடும்பத்தின் பிறப்பைப் பல வருடங்கள் நுணுக்கமாக ஆராய்ந்தார், மார்கன் என்பவர். குடும்பம் என்றும் ஒரே விதமாகத்தான் இருந்ததா என்னும் கேள்வியுடன் அவர் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார். உலகில் உள்ளவை எல்லாம் மாறுவதைப் போன்று குடும்ப அமைப்பும் மாறுகிறது என்றும், குடும்பம் என்னும் அஸ்திவாரத்தின் மீது சமுதாயம் என்னும் மாளிகை கட்டப்படவில்லை என்றும், அதற்கு மாறாக வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட நிலையில்தான் குடும்பம் வளர்ந் தது என்றும் மார்கன் கூறுகிருர், குடும்பமே இல்லாதிருந்த காலம் ஒன்று இருந்தது. மனிதன் குடும்ப வாழ்க்கையின் அவசியத்தை உணராது மனம் போன போக்கில் வாழ்ந்த காலமும் இருந்தது. வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் குடும்பம் அவசியமாயிற்று. எனவே குடும்பம் பிறந்தது. வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் குடும்ப அமைப்பும் மாறித்தான் தீரவேண்டும்.
மனிதன் மிருக சாம்ராஜ்யத்தில் விலங்கோடு விலங்காக வாழ்ந்த காலத்தில்-வாழ்க்கை முறையிலும் பழக்க வழக்கங்களிலும் மனிதனுக்கும் மிருகத்திற்கும் பிரமாதமான வித்தியாசம் இல்லாதிருந்த காலத்தில் குடும்பத்தின் அவசியத்தை அவன் உணரவில்லை. அன்று அவனுக்குக் குடும்பம் தேவையாய் இருக்கவில்லை. இயற்கை உணர்ச்சியைத் திருப்தி செய்து கொள்வதற்காக மாத்திரமே ஆணும் பெண்ணும் கலந்தனர். உலகில் உள்ள பெண்கள் எல்லாரும் உலகில் உள்ள ஆண்களின் மனைவிகள் என்னும் நியதி அன்று நடைமுறையில் இருந்தது. சகோதரன் சகோதரி, தாய் புதல்வன், தகப்பன் மகள் வித்தியா சத்தை அன்றைய மனிதன் பாராட்டவில்லை. புணர்ச்சியை அவன் ஒரு தேவையாகக் கருதினான்-அவ்வளவுதான். மனித சமூகம் வளர்ந்ததைத் தொடர்ந்து மனிதனின் வாழ்க்கை முறையும் வளர்ந்தது. நாகரீகமற்றவர்களின் கால இறுதியில் 'கூட்டு மணமுறை" தடை முறைக்கு வந்தது. இத்துடன் ' குடும்பத்தின் முதல் வடிவம் பிறந்தது.
தலைமுறை தலைமுறையாகப் பிரிக்கப்பட்டனர். முதல் வரிசையைச் சேர்ந்தவர்கள் தாத்தாக்களும் பாட்டிமார்களுமாவர். இந்த வரிசையைச் சேர்ந்த ஆண்களும் பெண்களும் கணவர்களாகவும், மனைவிகளாகவும் பிரிக்கப்பட்டனர், இந்த வரிசையைச் சேர்ந்த பெண்கள் எல்லாரும் இந்த வரிசையைச் சேர்ந்த ஆண்களின் பொது மனைவிகள். முதல் வரிசையைச் சேர்ந்தவர்களின் புதல்வர்களும் புதல்விகளும் இரண்டாவது வரிசையைச் சேர்ந்தவர்கள். இந்த வரிசையிலுள்ள ஆண்களும் பெண்களும் பொதுக் கணவர்களாகவும் பொது மனைவிகளாகவும் விளங்கினர். இவர்களுக்குப் பிறந்தவர் மூன்றாவது வரிசையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் ஆண்களும் பெண்களும் பொதுக் கணவர்களாகவும் பொது மனைவிகளாகவும் விளங்கினர். இவர்களுக்குப் பிறந்தவர்கள் நான்காவது வரிசையைச் சேர்ந் தவர்கள். இந்த முறைப்படி பெற்றோர்களும் குழந்தைகளும் மணம் செய்வது தடுக்கப்பட்டது. ஆனால் சகோதரியும் சகோதரனும் மணம் செய்துகொள்ளும் வழக்கம் தடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக சகோதரன் சகோதரியை மணந்துதான் தீரவேண்டும் என்ற நியதி அமுலுக்கு வந்தது. அன்று ஒருத்திக்குப் பல கணவர்கள் இருந்தார்கள்; அதே போன்று, ஒரு ஆணுக்கு பல மனைவிகள் இருந்தார்கள். இதைத்தான் "கூட்டு மணமுறை' என்கிறார் மார்கன். கணவர்களும் மனைவிகளும் பொதுவாக இருந்ததால் குழந்தையின் தந்தை யார் என்று சொல்லமுடியவில்லை. ஆனால் குழந்தையின் தாய் யார், என்பதைத் திட்டமாகச் சொல்லிவிட முடியும் அல்லவா ? எனவே, குழந்தை ஆண்கள் எல்லோரையும் “அப்பா" என்று அழைத்தது; ஆனால் ஒரு குறிப்பிட்ட பெண்ணை மாத்திரம்தான் 'அம்மா' என்று அழைத்தது. தாய்வழிக் குடும்பம் பிறக்க இது இடம் அளித்தது.
கூட்டு மணம்
முதல் குடும்ப முறை பெற்றேர்களும் குழந்தைகளும் மணப் பதைத் தடுத்தது என்ருல், இரண்டாவது மணமுறை சகோதர னும் சகோதரியும் மணப்பதைத் தடுத்தது. புதுமணமுறை சுயகுல மணத்தைத் தடுத்தது. ஒரு குலத்தைச் சேர்ந்தவர்கள் இன்னுெரு குலத்தைச் சேர்ந்தவர்களை மணந்தனர். இதைத்தான் ‘குலமணம்' என்கிருேம். அந்தக் காலத்தில்தான் சிறை பிடிப்பதன்மூலம் மணர் கும் முறை நடைமுறைக்கு வந்தது. இது ஏகதார மணத்திற்கு அத்திவாரமிட்டது என்கிருர் எங்கெல்ஸ். 
ஒரு பெண்ணை ஒரு வாலிபன் சிறை பிடிப்பதாகவும், இந்த முயற்சியில் அவனுக்குச் சில வாலிபர்கள் துணை புரிவதாகவும் வைத்துக் கொள்வோம். முதலில் சிறை பிடிக்கப்பட்ட பெண்ணை அந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவரும் பொதுவாக அனுபவித்த னர். ஆனல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவளைச் சிறைப்பிடிக்கத் திட்டமிட்ட வாலிபனின் மனைவியாவாள் அவள். இதஞல் அவன்மீது கணவனுக்கு பரிபூரண ஆதிக்கம் இருந்தது என்பது பொருள் அல்ல. கணவனை அவள் பிரிந்து சென்ருல் பிறகு அவனுக்கு அவள்மீது எத்தகைய உரிமையுமில்லை. கூட்டு மண முறை எங்கும் இயங்கின. அதே சமயத்தில் இணைப்பு மணமுறை சமூகத்தில் மெதுவாக இடம்பெற்றது.
- இணைப்பு மணம்
ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் ஆணும் பெண்ணும் கூடி வாழ்வதை 'இணைப்பு மணம்' என்கிருர் மார்கன். மிருகத்தனத் தையும் நாகரிகமற்றவர்களின் காலத்தையும் பிரிக்கும் எல்லைக் கோடாக விளங்குகிறது. இணைப்பு மணம் கூட்டுமணம் மிருகத் தனத்தின் விசேஷ அம்சம் என்ருல் இணைப்பு மணம் நாகரிகமற்ற வர்களின் காலத்தின் விசேஷ அம்சம் என்கிருர் எங்கெல்ஸ். அந்தக் காலத்தில் பெண் பரிபூரண சுதந்திரத்துடன் விளங்குகிருள். எப் பொழுது வேண்டுமானலும் கணவனைப் பிரிந்து செல்ல மனைவிக்கு அதிகாரமிருந்தது. w − புதிய முறைப்படி இரத்தக் கலப்பற்றவர் மணம் செய்து கொண்டனர். இதனுல் இவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் தே கா ரோக்கியம் படைத்தவர்களாகவும், புத்திகூர்மை படைத்தவர்களா கவும் இருந்தார்கள் என்று மார்கன் கூறுகிறர்.
குடும்பம் தேங்கி நிற்கும் தண்ணிர் அல்ல. 'குடும்பம் ஒரு நிர்ணயமான கொள்கையைப் பிரதிடலிக்கிறது. அது தேங்கி நிற்க லில்லை; ஆனல் சமூகம் கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்குச் செல்வ தைத் தொடர்ந்து குடும்பமும் கீழ்நிலையிலிருந்து மேல் நிலைக்குச் செல்கிறது' என்ருர் மார்கன்,
குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலின் பக்கம் 47 லிருந்து 95ன் சுருக்கம் மேல் உள்ளவை மற்றவை தொடரும் அடுத்தப் பதிவில் தோழர்களே....