நமது இலக்கு.கம்யூனிஸ்டுகள் மக்களிடம் வேரூன்றி அவர்களே அரசியல் படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் மாபெரும் புரட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதை எல்லா பொதுவுடமை இயக்கங்கள் ஒப்புக் கொள்கின்றனர் ஆனால் திருத்தல்வாதிகளாகி ஆகிப்போன இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(CPI, CPM) மக்களி டையே பணியாற்றுவது என்ற பெயரால் உழைக்கும் மக்களை அணிதிரட்டி உடனடி பொருளாதார கோரிக்கைகளுடன் வரம்பிற்குட்பட்ட அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் புரட்சிகரப் போராட்டங்களை புறக்கணித்து அதற்கேற்ப ஓட்டுப் பொறுக்கும் பிழைப்பு வாதத்தையே தமது நடைமுறையை மாற்றிக் கொண்டனர்.திருத்தல் வாதத்தை தனது புரட்சியாக கையிலெடுத்த சிபிஅய், சிபிஎம் அதனை புறக்கணித்த புரட்சியின் இலக்கான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை தூக்கிப பிடித்த புரட்சியாளர்கள் இன்று இடது வலது சந்தர்ப்பவாத போக்கில்இன்று மாலெ அமைப்புகளின் தோல்விகளும் தேக்கமும் பின்னடைவும் பல்வேறு கேள்விகளை உள்ளடக்குகின்றன அவர்களை தேடியே நமது பயணமாக இருக்கும் மேலும் இன்றைய நிலையில்,மக்கள் என்னும் கடலில் மீன்களாக நீந்தி வரும் கம்யூனிசப் புரட்சியாளர்களுக்கு ம் புரட்சிகர அணிகளுக்கும் மக்களிடையே ஆற்றவேண்டிய புரட்சிப் பணிகளைப் பற்றி ஒருங்கிணைந்த கண்ணோட்டம் புரிதலையும் உருவாக்குவதே நமது கடமையாக இருக்கின்றது, முயல்வோம்.மார்க்சியவாதிகள் இயக்க இயல் பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தை தங்கள் அணிகளுக்கு மட்டுமன்றி பரந்துபட்ட திரளான மக்களுக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும். உழைக்கின்ற பெரும் திரள் மக்கள் இந்தக் கண்ணோட்டத்தை பற்றிக்கொண்டு முதலாளித்துவ கண்ணோட்டத்தை (திரிப்புவாதிகளையும்) நிராகரிக்காத வரையில், எதிரியை தோற்கடிப்பது என்பது அசாத்தியமாகும்.அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடே சமுதாயத்தை உந்தி முன்தள்ளி செல்வதற்கு தலையாய காரணமாகும். இம்முரண்பாட்டுத் தீர்வே ஒரு புதிய சமுதாயம் எழ வழிவகுக்கிறது.இம் முரண்பாட்டின் பிரதான அம்சம் உற்பத்தி சக்திகள் ஆகும் .இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி இருப்பதான் இந்திய சமுதாயத்தை பின் தங்கிய நிலையிலே வைத்திருக்கிறது. பிற்போக்கு சக்திகளின் தளைகளில் இருந்து உற்பத்தி சக்திகள் விடுபடும் பொழுது ஒரு புதிய சமுதாயம் உருவாகிறது. அப்படி என்றால் இந்த உற்பத்தி சக்திகளில் தலையாய மற்றும் பிரதானபிறக்கிறது.அது பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் உள்ள உழைப்பே அன்றி வேறல்ல எனவே மக்கள் திரள் அதாவது உழைக்கும் மக்கள் பின்தங்கிய உற்பத்தி உறவுகளின் தலைகளில் இருந்து விடுபட்ட உடன் புதிய உற்பத்தி உறவுகளை கொண்ட ஒரு முற்போக்கான புதிய சமுதாயம் பிறக்கிறது.”பொருள்களின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணம் அப்பொருளுக்கு வெளியே இல்லை; ஆனால், அவற்றிற்குள்ளேயே அவற்றின் உள் முரண்பாடுகளிலேயே உள்ளது” என்று இயற்கை இயல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.மூலதனத்துடனான உழைப்பின் மோதல், அவை இரண்டுக்கும் இடையிலான கடுமையான போராட்டத்தின் மூலம் தான் தீர்க்கப்படுகிறதே ஒழிய அவற்றிற்கு வெளியில் உள்ள சக்தியால் அல்ல.மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் – அதாவது அரசு எந்திரத்தைத் தலையாய அங்கமாகக் கொண்டிருக்கிற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் – அடங்கியுள்ளது. அதுபோலவே, உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே -அதாவது பாட்டாளி வர்க்கக் கட்சியைத் தலையாய அங்கமாக கொண்டுள்ள அதன் ஒட்டு மொத்த அமைப்பின் பலத்தில்- அடங்கியுளநடத்துவது ஆனால், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், உழைப்பாளரில் ஒரு பகுதியினரைக் கொண்டதே பொதுவுடைமைக் கட்சி. எனவே சமூதாயத்தை மாற்ற புரட்சி நடத்துவது என்பது கட்சி மட்டுமே செய்ய கூடியது அல்ல;உழைப்பாளர் அனைவரும் ஒட்டுமொத்தமாக செய்வதாகும்; பொதுவுடமைக் கட்சி புரட்சிக்கு சித்தாந்த தலைமை அளிக்கிறது. ஆனால், அது தனது சொந்த பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது ஒருபோதும் முடியாது. எனவே பொதுவுடமைக் கட்சி என்ற தேர் ஆனது மக்கள் திரள் என்ற அச்சாணியை உறுதியாக கொண்டிருக்க வேண்டும் . ஒரு பொதுவுடமை கட்சி அல்லது மார்க்சிய குழு பரந்துபட்ட மக்களின் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு பணியாற்றுமானால் அது அச்சாணி அற்ற தேர் போன்றதாகும் , அதன் இதர பகுதிகள் எவ்வளவு அழகாக மிகச் சரியாக இருந்தாலும் உண்மையான பொருளில் அது தேர் ஆகாது. அதாவது, பரந்துபட்ட மக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்பட்ட ஒரு கட்சி பொதுவுடமைக் கட்சியே அல்ல.”ஒரு தத்துவம் மக்களால் பற்றி கொள்ளப்பட்டு விட்டால் அது ஒரு பௌதிக சக்தியாகி விடுகிறது”என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிலாளி வர்க்க சித்தாந்த்தால் மக்கள் திரளை ஆயுதபாணியாக்கும் இக் கடமைதான் எந்த ஒரு நேர்மையான பொதுவுடமைக் கட்சியும் மேற்கொள்ள வேண்டிய கடமை ஆகும். பரந்துபட்ட மக்கள் தமக்குச் சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொண்டு அதன்படி நடக்க துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சு கிருமிகளையும் சீறி எழுந்து ஒரே அடியாக அழித்தொழிப்பர். கட்சி மக்களிடம் இருந்து பிரிந்து தனிமைப் பட்டிருந்தால் இது சாத்தியமில்லை.ஏனெனில் மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொள்ள முடியாது. மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலன்களைப் பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பாக திரட்டுவதும் ஆன இந்த இமாலயப் பணியையே நாம் மக்களிடையேயான பணி என்கிறோம்.மக்களிடையேயான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டப்பட்ட பின் சில நடைமுறைப் பிரச்சினைகளை எழுகின்றன. அவையாவன:(1). மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?(2). மக்களிடம் ஒரு கம்யூனிஸ்ட் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்கவேண்டும்?.(3). மக்களை பயிற்றுவிப்பதிலும் அமைப்பாகத் திரட்டுவதிலும் என்ன முறைகள் கையாளப்பட வேண்டும்?.தொடரும் தோழர்களே…..26/10/20மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?பொதுவாக மக்கள் என்று நாம் குறிப்பிடும் போது உற்பத்தியில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும் அடிப்படை வர்கங்களையே அதாவது தொழிலாளர்கள் விவசாயிகளை யே குறிப்பிடுகின்றோம். எனவே,இவ்வர்கங்கள் மத்தியிலேதான் மக்களிடையேன பணி அடிப்படையாகச் செய்யப்படவேண்டும் இருந்த போதிலும் இன்றைய புரட்சி கட்டம் புதிய ஜனநாயகப் புரட்சி கட்டமாகதனால் புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுக்க ஆதரிக்கின்ற அதற்காக வேலை செய்ய முன் வருகின்ற எந்த ஒரு சமூக தட்டு அல்லது குழுவும் மக்கள் என்ற பிரிவில் அடங்குவர் என கவனிக்கத்தக்கது.அடுத்து எழும் கேள்வி என்னவெனில் மக்களின் எந்த பிரிவினரிடையே வேலை செய்வது மிக முக்கியம் இப்பிரச்சினை வேறு எந்த பிரச்சினை போலவே இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்து நோக்க வேண்டுமே ஒழிய நெகிழ்வற்ற வறட்டுத்தனமான ஒரு பக்க கண்ணோட்டத்துடன் நோக்கக்கூடாது.விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடையே பணியாற்றுவது முதன்மையானது என்பதை கோட்பாட்டு ரீதியாக சரியானது என்று கூற வேண்டியதில்லை ஆனால் உடனடி நடைமுறை என்ற கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் பொழுது குறிப்பிட்ட நிலைமைகளில் பொருத்துமாறு வேலை செய்ய வேண்டும் அப்படி அல்லாமல் நெகிழ்வட்டு ஒருபக்க அணுகு முறையை கைக் கொண்டால் எல்லா வேலைகளுக்கும் கிராமப்புறங்களில் தான் விவசாயிகளை பிரதான சக்தி என்பதாக அல்லது எல்லா வேலைகளையும் தொழில்துறை பாட்டாளிகள் தான் முன்னணி சக்தி அதுதான் என்பதாக தவறான முடிவுகளுக்கு கொண்டு செல்லலாம் இதுபோன்ற ஒரு பக்கப் பார்வை நெகிழ்வுப் போக்கு மிகவும் ஊறு விளைவிக்கும்உடனடியான நடைமுறையை கணக்கில் எடுத்து நோக்கும் போது ஒரு பகுதிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பது மற்ற பகுதிக்கும் பொறுமை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை ஆனால் எந்தப் பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுக்கும் முன்னர் ஒவ்வொரு அம்சமும் அதற்குத் தொடர்புடைய மற்ற அம்சங்களையும் மிக ஆழமாக பரிசீலிக்க வேண்டும் ஒன்று அல்லது இரண்டு பொதுவான முக்கிய அம்சங்களை பரிசளித்துவிட்டு கொள்ளக் கூடாதுஆரம்பக் கட்டங்களில் அதாவது நாடுகளில் அளவில் இல்லாது இருக்கிற மாற்றுக் குழுக்களை மட்டுமே கொண்டிருக்கிற நன்கு வளர்ச்சி பெற்ற மக்கள் திரள் இயக்கங்களை குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கொண்டிருக்கிற ஆரம்ப கட்டங்களில் ஒரு விஷயம் நாம் தீர்மானகரமான சொல்லலாம் தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் நமக்கு மிகவும் பரிச்சயமான மற்றும் திறம்பட பணியாற்ற கூடிய துறைகளில் பணியாற்ற வேண்டும் அவ்வாறு இன்றி ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இயந்திர ரீதியில் எடுத்து பொருத்தக் கூடாது.28/10/20மக்களிடையே ஒரு கம்யூனிஸ்ட் கடைபிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்க வேண்டும்?ஏற்கனவே குறிப்பிட்டது போல, மக்கள் தான் புரட்சியைக் கொண்டு வருகிறார்கள். கோடிக்கணக்கான இந்தப் பரந்துபட்ட மக்கள் தான் புரட்சியை விசுவாசமாக ஆதரித்து அதற்காகப் பணிபுரிவார்கள். தோழர் மாவோ குறிப்பிடுவது போல் “மக்கள் தான் உண்மையான இரும்புக்கோட்டை , இதை உலகில் எந்த சக்தியாலும் தவிர்ப்பது சாத்தியமாகாது”.ஆனால் இந்த இரும்புக் கோட்டையை உருவாக்கும் இரும்பு கற்கள் தனித்தனியாகவும் ஒன்று சேர்க்கப்பட்டு பூசப்படும் படாமலும் உள்ளது. இந்த இரும்பு கற்களை அடுக்கி பூசி உலகிலுள்ள எந்த சக்தியாலும் மறுக்கப்பட முடியாத அளவிற்கு ஒரு சக்திவாய்ந்த இரும்புக் கோட்டையாக நிறுவவேண்டும்.இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க கடமையை மேற்கொள்வதுதான் கம்யூனிஸ்டுகளின் முக்கிய பணி. ஆனால் இந்தப் பணியை கம்யூனிஸ்டுகள் எவ்வாறு ஏற்று நடத்துவது மக்களிடம் எவ்விதமான அணுகுமுறையை கொண்டு கம்யூனிஸ்டுகள் இந்த பணிகளை நிறைவேற்றுவது மக்களிடம் இவர்களை முந்திச் செல்லும் உஉள்ளுணர்வு விருப்பமும் எண்ணமாக இருக்க வேண்டும்?.வெறும் தலைவர்களாக வேண்டும் என்ற ஆசையுடன் மக்களிடம் செல்வதா இல்லை அவர்கள் மக்களிடையே மார்க்சியவாதிகள் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செல்ல வேண்டுமா இல்லை அல்லது மக்களை அவர்களது தொழில்களிலும் சங்கங்களிலும் முன்னணி கட்டும் நோக்கத்தோடு செல்வதாக இல்லை கம்யூனிஸ்டுகளும் மக்களிடையே செல்வதற்கான ஒரே நோக்கம் உந்து சக்தியும் அவர்களுக்கு உளமார தொண்டு செய்வதுமே ஆகும்.மக்களுக்குத் தொண்டு செய்வதன் பொருள் அவர்களுக்கு பரோபகாரியாக இருப்பதல்ல; மாறாக அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களில் கம்யூனிஸ்டுகள் முழுமையிலும் பொருந்திய ஒரு பகுதியினராவர், உண்மையாக நன்மை கிடைக்கும் வகையில் பணியாற்றுவதாகும். மக்களின் நலனுக்காக விசுவாசமாக பாடுபடுவது என்பதன் பொருள் உண்மையில் மக்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களுக்கு பயிற்றுவிப்பது பயிற்சி அளிப்பதும் அவர்களை அமைப்பாகத் திரட்டுவது மேயாகும்.
நமது இலக்கு-2
நான் இதனை எழுதுவதன் நோக்கம் எந்த ஒரு குழுவும் புரட்சியை சாதிக்க முடியாது அதற்க்கு பலம் வாய்ந்த கட்சி வேண்டும் அதற்க்கு இங்குள்ள புரட்சிகர குழுக்களிடையே ஒற்றுமை வேண்டும் அவையை புறகணிக்கும் இவர்களின் நோக்கம் என்ன என்பதே என் பதிவு,.
புரட்சி பேசும் தோழர்களே நாம் ரசிய சீனாவை பற்றி பேசுவது அவர்கள் புரட்சியை அடைய நடத்திய வழி முறைகளை பின்பற்றி நமது நாட்டிற்க்கு பொருந்துவதை நடைமுறை படுத்த தான்..
ரசியாவில் கட்சி கட்டுவதற்க்கு முன் பல்வேறு புரட்சிகர குழுக்கள் மார்க்சிய வாசகர் வட்டம் தோன்றி இருந்தன தனித்தனியாக ஜார் ஏதெச்சாதிகாரத்தை எதிர்த்து போராடி வந்தன. 1895 ல். தொழிலாளர் விடுதலை குழிவினரால் வேலை திட்டம் முன் வைக்கப்பட்டது. 1895ல் தொழிலாளர் விடுதலைக்கான போராட்ட குழு லெனினால் அமைக்கப் படுகிறது. அதற்க்கு நகல் வேலை திட்டம் லெனின் முன்வைக்கிறார். புரட்சிகர குழுக்கள் சிதறுண்டு கிடப்பதால் பலம் பொருந்திய அதிகார வர்க்கத்தை எதிர் கொள்ள முடியாது ஆகவே நாடு தழுவிய அளவில் ஒரு கட்சி வேண்டும் பல்வேறு குழுக்களிடையே ஒற்றுமையை உருவாக்க குழுக்களிடையே நிலவும் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் நீக்கி சித்தாந்த ஒற்றுமை என்பது கட்சி வேலை திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு அடைய வேண்டும் என்று கூறுகிறார். லெனினது தீவிர மான முயற்சியினால் ஒரு கட்சி கட்டப் பட்டது அதன் பின்னரே 1905 ல் ரசியாவில் முதல் புரட்சிக்கு எழுச்சியூட்டியது.
இன்று 100 ஆண்டை கொண்டாடும் CPI,CPM திருத்தல்வாதிகளாகட்டும், நகசல்பாரி இயக்கம் என்னும் மா-லெ அமைப்பகட்டும் இன்றைய நிலையில் ஒற்றுமையின்றி சிதைந்து கிடப்பது ஏன் எனபதே எனது கேள்வி?.
புரட்சியை கைவிட்டு திருத்தல்வாதத்தை கையில் எடுத்த CPI CPM பற்றி வேறொரு நேரத்தில் பார்க்கலாம் முதற்கண்.
பல்லாயிரக் கணக்கில் தன் இயக்கத்தினரின் இன்னுயிரை புரட்சியின் வேள்வியில் நாட்டின் விடுதலைக்காக பாட்டளி வர்க்க மக்களின் விடுதலைக்காக புரட்சி தீயில் அர்பணித்த நக்சல்பாரி என்னும் மா-லெ அமைப்பு பற்றி மட்டுமே இங்கே சில தேடுதல்கள்.
இந்தியாவில் புரட்சியை முன்னெடுக்க அர்ப்பணிப்புடன் இயங்கிய இயக்கம் இன்று பல்வேறு குழுக்களாக சிதறி உள்ளவை பாட்டாளி வர்க்க புரட்சிக்கு வழி வகுக்குமா?
பாட்டாளி வர்க்க இயக்கமாக தங்களை அடையாளப் படுத்திக் கொள்ளும் இந்த இயக்கங்கள் – கட்சிகள் இன்று சிதறுண்டு பல குழுக்கலாக போய் கொண்டிருப்பதற்க்கு என்ன காரணம்?.
ஒவ்வொரு குழுவும் தாம்தான் கட்சி தாம்தான் புரட்சிகரமானவர், தாமதான் புரட்சிக்கு வித்திட்டவர் என்று பறைசாற்றி கொள்வதில் பெருமிதம் கொள்கிறது. இவை சரிதான ?
எல்லா அமைப்புகளும் தொழிலாளி விவசாயி வர்க்க ஒற்றுமை தேவையை உணர்த்திகின்றீர்கள். ஏகாதிபத்தியம்- அதிகார வர்க்கம், தரகு முதலாளித்துவம், நிலபிரப்புத்துவம் ஆகிய எதிரிகளை தூக்கி எறியப் பட வேண்டும் என்று சுட்டிக் காட்டிகின்றீர்கள். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி உற்பத்தி உறவுகளை மாற்ற வேண்டும், உற்பத்தி சக்திகளை விடிவிக்க வேண்டும் என்றெல்லாம் பேசுகின்றீர்கள்.
ஆனால் எல்லோரும் ஒரே கருத்தை முன் வைக்கும் பொழுது இத்தனை குழுக்கள் தேவை எதற்க்கு ஒன்று பட்ட சக்தியாக புரட்சிகர அமைப்புகள் செயல் படாமல் தனித்தனி குழுக்களாக இயங்குவது எதற்க்காக? கூட்டு நடவடிக்கையின்றி இந்த பலம் பொருந்திய அரசமைப்பை தனித்தனியாக எதிர்கொள்வது சரியாகுமா?
நக்சல்பாரி எழுச்சிக்கு பின் தமிழகத்தில் தோன்றி மூன்று பிரிவு இன்று முப்பதிற்க்கும் மேலான குழுக்கலானவை ஏன்?
இவையின் ஊடாக உலக பாட்டளி வர்க்க புரட்சியையும் படிப்பினையையும் தெரிந்துக் கொள்வோம்.
இன்னும் தொடர்ந்து எழுதுவேன்.
நமது இலக்கு-3 (10/10/20
இரண்டாம் உலகப்போரால் மக்களின் கடுங்கோவத்திற்க்கு ஆளான ஆங்கிலேய அரசை துக்கி எறிய இந்திய மக்களின் நிலை “எரிமலையின் விளிம்பில்” எந்நேரமும் வெடித்தெழும் நிலையில் இருந்தது. 1945 நவம்பர் 21-22 ஆம் நாட்களில் கல்கத்தா நகரமே போர்கோலம் பூண்டிருந்தது. 150 போலிசு இராணுவ வாகனங்கள் தீக்கிறையாக்கபட்டன. துப்பாக்கி குண்டைகண்டு அஞ்சாமல் மக்கள் போரிட்டதை குறிப்பிட்டுள்ள வைசிராய் இனி இந்தியரை கட்டுபடுத்த முடியாது என்பதனை தெள்ளதெளிவாக எழுதியுள்ளார். பல நூறுபேர் கொல்லபட்டனர் 1 அமெரிக்கர் உட்பட 33 பேர் கொல்லபட்டதாகவும் 200 பொது மக்களும் 70 ஆங்கிலப் படைவீர்ர்களும் 37 அமெரிக்கப் படைவீர்ர்களும் படுகாயம்பட்ட தாகவும் அதிகாரபூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 22, 1946 அன்று மும்பாயில் கடற்படையினர் ஆங்கிலேயே கடற்படையினுடைய துணைத்தலைவரின் முன்னணி கப்பல் உள்ளிட்ட மும்பாயில் இருந்த ஏறக்குறைய 22 கப்பல்களைத் தங்கள்ளுடைய கட்டுபாட்டிற்க்குள் கொண்டுவந்தனர். 20,000 கடற்படைவீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், விமானப்படைவீரர்களும் ஆதரவு தெரிவித்தனர்.இராணுவப்படை வீரர்கள் சுடமறுத்து ஆங்கிலேய படைகளுக்கும் இடையிலான மோதலாக வெடித்தது. இன்று மதம் அரசாள்கிறது இந்த பாசிஸ்ட்கள் நினைவில் கொள்ளட்டும் அன்று போரட்டத்தில் ஈடுபட்ட வீரர்களை பிரிக்க இந்து முஸ்லீம் மதவாத சிந்தனை எடுபடவில்லை, வீரர்கள் தோலோடு தோல் கொடுத்து போரிட்டனர். மக்கள் தன்னிச்சையாக முன்வந்து வீரர்களுக்கு உதவினர், போராட்டத்தை ஓடுக்க கனரக வாகனங்கள் ஆயிரக்கணக்கானோரை கொன்ற பின்தான் வீதிகள் ஆங்கிலேய படை கைவசமாயின- இங்கே ஒவ்வொரு கட்சியின் நிலைபாட்டையும் கணக்கில் கொளல் வேண்டும்.(1919 ல் ஜாலியன்வாலா பாக்கில் ஜெனரல் டைரின் வார்த்தையில் குண்டு தீர்ந்துவிட்டதால் சுடுவதை நிறுத்தினோம்) இங்கே வீதியில் உள்ள எல்லோரும் சுட்டு கொல்லபட்ட பின் சுடுவதை நிறுத்தினர். எந்த மதவாதத்திற்க்கும் மயங்காத கடல்படை வீரர்கள் சரண் அடைவதைவிட வீர மரணத்தை வரவேற்றனர்.
இவை விரிவான வரலாறு இதனை விவரிக்கும் முன்
தோழர் லெனின் செயல்தந்திரத்தின் வரையறையை பார்ப்போம்:-
செயல்தந்திரம் பற்றிய கேள்வியானது கட்சியின் அரசியல் நடத்தையைப் பற்றிய கேள்வியாகும். நடத்தை வழியானது கோட்பாடு, வரலாற்றுக் குறிப்புக்கள், அரசியல் சூழ்நிலை முழுவதையும் பகுப்பாய்வு செய்தல், இன்ன பிறவற்றின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும். (லெ.நூ. தி. 9.ப.26)
நிகழ்வுகளுக்குப் பின்னால் ஸ்தம்பித்து நிற்கின்ற, நிகழ்வுகள் தோன்றிய பிறகு அதற்கு ஏற்றாற்போல் தகவமைத்துக் கொள்கிற செயல்தந்திர முழக்கங்களைக் கொள்வதன் மூலம், நாம் திருப்தி அடைந்து கொள்ளமுடியாது. நம்மை முன்நோக்கி அழைத்துச் செல்கிற, நமக்கு முன்னால் உள்ள பாதையை ஒளியூட்டிக் காட்டக் கூடிய, இயக்கத்தின் உடனடிக் கடமையில் இருந்து நம்மை மேலே உயர்த்துகிற செயல்தந்திர முழக்கங்களை நாம் கொண்டிருக்க வேண்டும்.
”நமது தத்துவமானது வறட்டுச் சூத்திரவாதம் அன்று; அது செயலுக்கான வழிகாட்டி: என்று தோழர் எங்கெல்ஸ் தன்னையும் தன் புகழ்வாய்ந்த நண்பரையும் குறிப்பிட்டுக் கூறுகிறார்.
ஏனெனில் மார்க்சியம் என்பது உயிர்த்துடிப்புள்ள தத்துவமாகும். அதன் பல்வேறு வகையான பார்வைகள் மிகவும் முக்கியமானவையாகும்.
(லெ.நூ..தி.17, பக் 39-41)
மார்க்சியம் நம்மைச் சரியான விதத்திலும், புறவயமாகவும் வர்க்க உறவுகளைப் பற்றியும், ஒவ்வொரு வரலாற்றுச் சூழலின் கறாரான, விஷேட குணாம்சங்களையும் சோதித்தறிய, பகுப்பாய்வு செய்யுமாறு கோருகிறது. கம்யூனிஸ்டுகளாகிய நாம், கொள்கைக்கு விஞ்ஞான அடிப்படையைக் கொடுக்கக் கூடிய மிகவும் முக்கியமான இந்தக் கோரிக்கையினை நடைமுறைப்படுத்த எப்போதும் முயன்று இருக்கிறோம். “நமது தத்துவமானது வறட்டுச் சூத்திரவாதம் அன்று; ஒரு செயலுக்கான வழிகாட்டியாகும்” என்று மார்க்சும், எங்கெல்சும் எப்போதும் கூறிவந்ததுடன் “விதிகளை மனனம் செயவதும், அதைத் திரும்பத்திரும்பக் கூறுவதும் பொதுவான கடமைகளைப் பற்றிக் கூறுவதற்கே தகுதியுள்ளது” என்று சரியான விதத்தில் பரிகசித்துள்ளனர். தத்துவமானது வரலாற்று நிகழ்வின் ஒவ்வொரு குறிப்பிட்ட காலகட்டத்தின் பொருளாதார அரசியல் நிபந்தனைகளுக் கேற்றாற் போன்று அவசியமானதாகத் திருத்தி அமைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.(லெனின், செயல்தந்திரம் பற்றிய கடிதங்கள், முதல் கடிதம்)
நமது இலக்கு-4 (11/10/20)
ஒடுக்குவோனுகும் ஒடுக்கப்படுபவனும் நடைபெறும் யுத்ததை மார்க்ஸ் “வர்க்க போராட்டம்” என்றார். அவர்கள் இருவரும் ஒருங்கினைந்து வாழ முடியாது என்பதை அவர் தெளிவுப்படுத்தினார். ஒடுக்கப்படுவோர் தனது விதியை போராட்டம் மூலம் மாற்றி அமைக்க முடியும் என அவர் தனது தத்துவத்தில் நிறுவினார். முன்னெறிய ஐரொப்பிய சமூகத்தில் ரோமானியா காலத்து அடிமைகளையும் தற்போது உள்ள பஞ்சாலை தொழிளாலிகளையும் ஒப்பிட்டு பார்த்தால் பெரிதாக எந்த வித்யாசமும் இல்லை என்றார். ஆகையால் இந்த அடிமை சங்கிலியாக உள்ள அரசமைப்பை தூக்கி எறிய வேண்டும் என்றும் பொதுவுடமை சமுகத்தில் மட்டுமே ஏற்ற தாழ்வு இல்லா சாத்தியம் என்றார். அவரின் தத்துவத்தை தூக்கிபிடித்து ஒடுக்கப்பட்ட வர்க்கம் போராடி முதல் உலகப்போரில் ரஷ்யாவும் இரண்டாவது உலகப் போரில் சீனவும் சோசலிச நாடானது மட்டுமின்றி,உலகின் மூன்றில் ஒரு பங்கு சோசலிச நாடுகளாக மாறின. அவை மக்களின் தேவைகளை அறிந்து செயல்பட்டது அவை:-
(1) வறுமையை ஒழித்தது
(2) வேலையில்லா திண்டாட்டத்தை ஒழித்தது.
(3) பெண்கள் சமத்துவமடைந்தனர்.
(4)விவசாயத்தில் ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளை விட சாதனை படைத்தது.
(5)தொழில்துறையில் ஏகாதிபத்தியங்கள் ரஷ்ய தொழில்துறை வளர்ச்சியை கண்டு அஞ்சி நடுங்கின.
(6)தேசியஇனங்கள் விடுதலை,சமத்துவம் பெற்றன.
இவற்றை கண்டு ஏகாதிபத்தியங்கள் அஞ்சின. ஆகவே…..
1920-கம்யூனிச கோட்பாடுகளை முறியடிக்க திட்டம் தீட்டினார்கள் ஏகாதிபத்தியவாதிகள்.நேரிடையாக மோதவில்லை.ஆகவே கோட்பாடு அளவில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டமிட்டனர்.
1920-களில் ஃபிராங்பர்ட் பள்ளி தோன்றியது.
(1) கிராம்ஸ்கி தேவைப்பட்டார் மார்க்சியத்தின் பெயரில் மார்க்சிய விரோத கருத்துகளை பரப்புவதற்க்கு.
(2) பின்நவீனத்துவம் தேவைப் பட்டது, மார்க்சியத்தின் வரலாற்று பொருள்முதல்வாதக் கோட்பாடுகளை திரிப்பது,குழப்புவதற்க்கு.
(3) இந்தியாவில் ஆங்கில ஏகாதிபத்தியன் தேவைக்காக அம்பேத்கர் பெரியார் போன்றோர் மேற்கட்டுமானமே தீர்மானமான சக்தி என்றும் பொருளாதார அடித்தளத்தை மறுத்து சாதியம்,தீண்டாமை நிலைத்திருப்பதற்கான காரணம் பார்ப்பனியம்,இந்துமதம் என்றார். இதுவும் ஃபிராங்பர்ட் பள்ளி கோட்பாடு தான்.கருத்துமுதல்வாத தத்துவம் தான்.
இப்படி எதிர் புரட்சிகர சக்திகளை களமிறக்கி பின் தங்கிய நாடுகளின் புரட்சிக்கு தடை செய்தனர் அல்லது அடிப்படை மார்க்சியத்தை குழப்பினர்….
பூதத்தை கண்டஞ்சிய ஏகாதிபத்தியம் அதனை அழிக்க பல வழிகளை கையாண்டது அவை வரிசை கிரமமாக கீழே:-
ஃபிராங்பர்ட் பள்ளி
கிராம்ஸ்கி
அம்பேத்கர்
பெரியார்
தெரிதா,
ஃபூக்கோ
எஸ்விராஜதுரை
அ.மார்க்ஸ்
உலக சோசலிச மையம்
NGO கள் இன்னும் பலர்…
ஃபிராங்பர்ட் பள்ளி பல்வேறு மார்க்சிய விரோத போக்குகளை உலகுக்கு சமர்பித்துள்ளன அவற்றில் ஒன்றே பின்நவீனத்துவம்.
பின்நவீனத்துவமானது மார்க்சிய எல்லா கூறுகளையும் உள்வாங்கி அதற்க்கு எதிராக செயல்படுகிறது. அதாவது மையச் சமூகம், விளிம்புச் சமூகம் என்று சமூகத்தைப் பிரிக்கின்றது. அந்த விளிம்புச் சமூகத்தையும் பல்வேறு விதமான சமூகங்களாகப் பிரிக்கின்றது. அதிலேயும் கடைசியில்
தனிமனிதர்கள் என்று பிரிக்கின்றது. இப்படி ஒடுக்கப் பட்ட மக்களை வர்க்கமாக அணி திரள்வதை மடை மாற்றுவதே இதன் முக்கிய பணியாகும்.
உலக வரலாற்றில் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய
இயக்கங்களில் உறுப்பினர்களாக இருந்தவர்கள். பிறகு அனுதாபிகளாக மாறி, இறுதியில் தங்களின் தொடர்புகளை முறித்துக் கொண்டவர்கள். பிரான்சுக் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சிந்தனைப் போக்கின் தொடர்ச்சியாக இவர்களைக் காணலாம். பிரான்சுக் கம்யூனிஸ்ட் கட்சிதான் முதன் முதலில் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், வர்க்கப் போராட்டம் என்கின்ற கோட்பாடு களைக் கைவிட்ட ஐரோப்பிய பொதுவுடைமைக் கட்சி என்பதோடு இவர்களின் சிந்தனையை இணைத்துப் பார்க்க வேண்டும்.
இத்தகைய கட்சிகளிலுங் கூட, இவர்கள் தொடர்ந்து இருக்க முடியாமல் தங்களுடைய சிந்தனைகளைக் கட்சிகளுக்கு வெளியில் அமைத்துக் கொண்டவர்கள். அதிலே ஃபூக்கோ, கம்யூனிஸ்டு கட்சியில் உறுப்பினராக இருக்கும் பொழுதே கூட தன்னை ஒரு நீட்சேயிச கம்யூனிஸ்டு என்று அழைத்துக் கொண் டவர். நீட்சேயிச கருத்தாக்களால் கவரப்பட்ட பொதுவுடைமையாளர் என்பது அதன் அர்த்தம், நீட்சேயின் அதிகாரம் பற்றிய கோட்பாடு, அதிகாரம் சமூகத்தில் இருக்க வேண்டிய நியாயம் போன்றவற்றின் தொடர்ச்சியாக ஃபூக்கோவின் சிந்தனைகளைக் காண வேண்டும். ஃபூக்கோ தன்னுடைய விவாதங்களின் மையமாக, “19-ஆம் நூற்றாண்டினுடைய ஐரோப்பாவிற்கும், 20ஆம் நூற்றாண்டினுடைய ஐரோப்பாவிற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது. 19-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவை வறுமை வாட்டி வதைத்தது. ஆனால், 20-ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவிற்கு வறுமை ஒரு பிரச்சனை இல்லை. அதிகாரம் தான் பிரச்சனையாக இருக்கிறது’ என்கிறார். இதனால் பகுத்தறிவு என்கின்ற கோட்பாட்டை முழுவதுமாக ஃபூக்கோ மறுக்கிறார்.
இதை இன்றைய இந்திய ஆர் எஸ் எஸ் கோமாளிகள் தேடும் வேத கால இந்தியா போன்றதே பின் நவீனதுவ வாதிகளின் வாதம், மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத அரசு இங்கே கருத்து முதல்வாத புதைச் சேற்றில் மக்களை அமிழ செய்வதை மார்க்சியம் செய்யவில்லை, மக்களுக்கான விடுதலை சமத்துவ சமூகத்தை கட்டி எழுப்பினர்.
ஒரு சிலர் மட்டுமே உண்டு கொழுத்ததை முடிவுக்கு கொண்டு வந்தனர். எல்லா மக்களும் வாழ வழிவகை செய்தனர், ஏழை எளிய மக்களும் பாதுகாப்புடன் வாழ விழைந்ததை சுரண்டி கொழுத்த ஏகாதிபத்தியம் விடுமா? பொதுவுடமை சமூகம் உலகில் எங்குமே மலரா வண்ணம் அவர்களின் கம்யூனிச விரோத போக்குகளே மார்க்சியத்தின் பெயரால் மார்க்சியத்தை எதிர்ப்பது இன்றைய தேவையாக உள்ளது இந்தியா போன்ற பெரும் சந்தையை இழக்க நினைக்குமா ஏகாதிபத்தியம்…
(தொடரும்)
நமது இலக்கு-5
அன்புதுத் தோழர்களே நான் எழுத நினைத்த தொடர் பதிவு ஏனொ ஏற்புடையவாக இல்லை என்று நினைக்கிறேன் இருந்தும் என் பதிவு தினம் வரும். விரும்பம் உள்ள தோழர்கள் வாசித்துக் கொள்ளலாம்.
நேற்று என் பக்கத்தில் “மார்க்சை கற்க்க வாழ் நாள் போதாது” என்று பதிவிட்டிருந்தேன் அதில் சில தோழர்கள் ஆழமான பதில் தந்திருந்தனர் அதனை பற்றி நாளை பதிளளிப்பேன்.
இன்று நாம் மார்க்சியத்தை உள்வாங்கியுள்ளோமா என்பது என் கேள்வியாக உள்ளது. தோழர்களே, கம்யூனிஸ்ட் என்பவன் உண்மை, நேர்மை, அஞ்சாமை, தன்னடக்கம், பரந்தமனப்பான்மை, சகிப்புதன்மை போன்ற இயல்புகளை தனி நபராயினும் இயக்கமாயினும் பெற்றிருக்க வேண்டும் என்கிறது இங்கு காண முடிகிறதா?.
சரி இன்றைய பதிவு.
மார்க்சும், ஏங்கெல்சும் தமது காலத்தில் இந்த வரிசை வரிசையான, முக்கியமான தத்துவப் பிரச்சினைகளுக்கு ஆய்ந்து அறிந்து தீர்வு காண்பது சாத்திமற்ற ஒன்றல்லவா?
பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், தூக்கியெறியப்பட்ட முதலாளி வர்க்கம் அதிகார அரங்கிற்கு மீள எப்பொழுதும் முயன்ற வண்ணம் இருக்கும் அதேவேளையில், சிறு உற்பத்தியாளர்கள் முதலாளித்துவத்தையும், முதலாளி வர்க்கத்தையும் இடைவிடாது தோற்றுவித்துக் கொண்டே இருப்பர்; இவ்வாறு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஒரு அச்சுறுத்தல் எதிர்நோக்கியபடியே இருக்கும்; இந்த எதிர்ப் புரட்சி அச்சுறுத்தலை சமாளித்து, வெற்றிபெற வேண்டுமானல், ஒரு நீண்ட கால கட்டத்துக்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை பலப்படுத்துவது அவசியம்; இதற்கு வேறு வழியில்லை என லெனின் தீர்க்க தரிசனமாகக் கண்டார். இருந்தும் லெனின் அவர்கள் நடை முறையில் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமுன் மறைந்து விட்டார்.
ரசியாவில் சோசலிஸப் புரட்சியும் சோசலிச நிர்மாணமும் வெற்றிபெறாது என்று இரண்டு காரணங்கள் முன்வைத்த சமூக ஜனநாயகவாதி சுகானேவ் காரணங்கள் பின்வரு மாறு:- ஒன்று, ரஷியாவில் முதலாளித்துவ உற்பத்தி போதுமான அளவு வளர்ச்சி அடையவில்லை. இரண்டு ரஷிய, விவசாயிகள் பின்தங்கியவர்கள்; அவர்களுடைய கலாசாரம் தரம் தாழ்ந்தது.
லெனின் “நமது நாட்டுப் புரட்சி பற்றி’ என்ற தமது படைப்பில், ரசிய விவசாயி வர்க்கத்தின் கலாசாரத் தரம் தாழ்ந்ததாயினும், அது பாட்டாளி வர்க்கத்துடன் சேர்ந்து புரட்சி நடத்தியது; சோஷலிஸத்தை ஆதரிக்கின்றது என்று கூறினர். சில ஐரோப்பிய நாடுகளில் இருப்பதுபோல, ரஷியாவில் முதலாளித்துவ உற்பத்தி அவ்வளவு வளர்ச்சியடையவில்லை என்பது உண்மைதான் என லெனின் ஏற்றுக்கொண்டார். ஆனல், பாட்டாளி வர்க்கப் புரட்சியின் பின்னர், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் உற்பத்தியை பெருமளவில் ஏன் வளர்ச்சி அடைய செய்ய முடியாது? இப்படிச் செய்ய முடியாது என சுகானேவ் எந்த நூலில் படித்தார்? “யுத்தத்தின் விளைவைப் பார்க்க வேண்டுமானல், முதலில் யுத்தத்தில் குதிக்க வேண்டும்” என்று நெப்போலியன்தான் கூறினான்.
முதலாளிகளிடமிருந்தும் ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்தும் உற்பத்தி சாதனங்களையும், நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களையும் பறிமுதல் செய்தபின் உற்பத்தியைப் பெருமளவில் வளர்ச்சி செய்வது சாத்தியம் என்று லெனின் உறுதியாகக் கூறினர்.
முதலாளித்துவத்துக்கும் கம்யூனிஸத்துக்கும் இடையில் ஒரு முழு மையான வரலாற்று சகாப்தம் இருக்கின்றது என்ற லெனினின் கூற்றை எடுத்துக் கொள்வோம். தோழர் மாஒசேதுங் அவர்கள் குறிப்பாக இதைக் கருத்தில் வைத்துத்தான் சோஷலிச சமுதாயம் நிறுவிய பின், கம்யூனிச சமுகமாக மலர ஐம்பது ஆண்டுகள், நூறு ஆண்டுகள் அல்லது அதற்கு கூடிய காலம் எடுக்கலாம் என்று கூறினார்.
மாவோ சிந்தனையும், அக்டோபர் புரட்சியின் பின், முதலாளித்துவப் பாதையில் செல்வதை உறுதியாக எதிர்த்து, சோஷலிஸ்ப் பாதையில் உறுதியுடன் முன்னேறவேண்டும் என்று சுட்டிக்காட்டிய அதே லெனினின் சிந்தனை அன்றி வேறல்ல.
மூலம்
தொடரும்….
தோழர் மாசேதுங் அவர்கள் விவசாயிகளின் சேற்றில் தமது பாதத்தை நன்கு ஊன்றியிருந்தார். வேறு எந்த ஒரு தலைவரும் புரிந்துகொள்ளாத அளவில் அவர் விவசாயிகளைப் பற்றி அறிந்திருந்தார். எனவேதான், அவர்கள் புரியக்கூடிய எளிய மொழியில் அவரால் பேச முடிகின்றது. ஆகவேதான், ஏகாதிபத்தியவாதிகளும், முதலாளி வர்க்கமும் மக்கள் மனதைக் கவர்வதற்காக, நாள்தோறும், மணிதோறும் உயர்ந்த செலவிலும், ஒழுங்கான முறையிலும் பிரசார இயக்கம் ஒன்றை செய்து வருகின்றனர். நாம் ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் முதலாளித்துப் பிரசாரத்தால் தாக்கப்படுகின்றோம். முதலாளி வர்க்கத்தின் பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானெலி, திரைப்படம், மதபீடம், பள்ளி கல்லுரிகளில், கலை-இலக்கியம் முத லியவற்றின் பிரசாரத்தால் பாதிக்கப்படுகின்றோம். நமது மூளை ஒருபோதும் வெற்றிடமாக இருப்பதில்லை. அதில் முதலாளித்துவ சித்தாந்தம் அல்லது பாட்டாளி வர்க்க சித்தாந்தம் இருக்கும். தோழர் மாவோ அவர்களால் ஒருகால் சுட்டிக்காட்டியது போல, நமது மூளையில் இரண்டு சித்தாந்தங்களும் நீண்டகாலம் சமாதான சகவாழ்வு நடத்தமுடியாது. முதலாளித்துவ சித்தாந்தம் அல்லது தொழிலாளர் வர்க்க சித்தாந்தம் இறுதியில் வெற்றியடையும். மகத்தான பாட்டாளி வர்க்க கலாசார புரட்சி என்பது சீன மக்களின் மனதில் பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை தீர்க்கமான வெற்றிபெறச் செய்யும் ஒரு முயற்சியே ஆகும்.
நமது இலக்கு-6 (14/10/20)
அன்பு தோழர்களே நான் ஏழுதிக் கொண்டிருக்கும் தொடர் பதிவின் நோக்கம் இந்திய இடதுசாரி இயக்கம் அதன் வரலாற்று கட்டத்தில் மார்க்சியத்தை நடைமுறை படுத்தும் பொழுது இடறி சென்ற பாதை இன்று வரை ஒரு புரட்சிக்கு ஏங்கும் நாட்டில் நமது முனோடிகளின் நிறை குறை பற்றி தேடுவதோடு ஒன்று பட்ட ஒரு புரட்சிகர கட்சியால் மட்டுமே புரட்சியை சாதிக்க முடியும் அவைதான் நமது மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழி அதனை வரலாற்று வழியில் தேடுவதும் தேவையானவற்றை சுட்டிக் காட்டவே.
துயரறியா வாழ்வும் துயரமே வாழ்வும்
மாளிகைகள் ஒருபுறமும் குடிசைகள் மறுபுறமுமாக
பிழைக்கக் கிடைத்திருக்கும் இவ்வாழ்வு,
ஏன் இத்தகு பெருமுரண்களைக் கொண்ட்தாய் இருக்கிறது.
பாவ புண்ணிய்க் கணக்கே இதை நமக்கு விதித்திருக்கிறது என்று சமாதானமாகி முடங்கி விடுவதா, இல்லை அறிவியல்பூர்வமான விடைகளைக் கண்டடைவதா?
அறிவார்த்தமான அந்தத் தேடலின் முடிவில் நாம் சென்றடையும் இடம் மார்க்சியமே வேறில்லை- தோழர் பாரதிநாதனின் கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம் என்ற நூலின் அடிகோலில் இருந்து.
1789ல் நடைபெற்ற பிரஞ்சுப் புரட்சி ‘சுதந்திரம்-சமத்துவம்- சகோதரத்துவம் என்ற மனிதகுல உரிமை மாண்புக் குரலை எழுப்பியது.
1847ல் மார்க்ஸ்- ஏங்கல்ஸ் தலைமையில் ‘கம்யூனிஸ்ட் லீக்’ என்ற பாட்டாளி வர்க்கத்தின் முதல் அரசியல் கட்சி துவங்கப்பட்டது.
1848ல் உலகப் புகழ்பெற்ற ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ மார்க்ஸ்-ஏங்கல்ஸ் எழுதி வெளியிட்டனர்.
* வரலாற்று வளர்ச்சி ரீதியில் முதலாளித்துவத்தின் வீழ்ச்சியும் உழைக்கும் மக்களின் வெற்றியும் தவிர்க்க முடியாமல் நடந்தே தீரும்.
* மூலதன ஆதிக்கத்தின் சுரண்டல் நுகத்தடியிலிருந்து சமுதாயம் முழுவதையும் விடுவிக்காமல் ‘சமத்துவம்’ படைக்க முடியாது. சமத்துவம் இல்லாமல் உழைக்கும் மக்கள் விடுதலை பெற வேறு வழி இல்லை.
* கம்யூனிஸ்ட் புரட்சியை கண்டு ஆளும் வர்க்கம் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளி வரக்கத்திற்கு அடிமைச் சங்கிலியை தவிர இழப்பதற்கு ஏதுமில்லை. அடைவதற்கு ஓர் பொன்னுலகம் இருக்கிறது.
“உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்”
என்று மார்க்ஸ்சும் ஏங்கல்சும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் உலகம் முழுவதற்குமான முழக்கத்தை முழங்கினர்.
“ஒன்றுக்கொன்று நேர், எதிர் எதிர் முரண்பட்ட இரண்டு வர்க்கங்களுக்கு இடையில் அதிகாரத்தை கைப்பற்றுவ தற்காக நடக்கும் போராட்டம் வர்க்கப் போராட்டம்.
சமுதாயத்தின் சகல பகுதி மக்களையும் சுரண்டலில் இருந்து விடுக்காமல் பாட்டாளி வர்க்கம் தன்னை மட்டும் விடுவித்துக் கொள்ள முடியாது. கூர்மையான வர்க்கப் போராட்டத்தின் மூலம் உழைக்கும் மக்களை வர்க்கமாக அணிதிரட்ட வேண்டும்.
சமுதாயத்தை இயக்கும் ஆகப் பெரும் சக்தியான உழைக்கும் வர்க்க நலனுக்காக உருவானதே கம்யூனிஸ்ட் கட்சி.
எனவேதான் “புரட்சிகரமான லட்சியமும், புரட்சிகரமான கொள்கையும் இல்லாமல் புரட்சிகரமான கட்சி இருக்க முடியாது”
என்றார் லெனின்.
* ஜனநாயகத்திற்கான போராட்டத்திலும் தொடர்ச்சியாகப் பங்கேற்க வேண்டும். முழுமையான ஜனநாயகம் என்பதே சமத்துவம் ஆகும்.”
– என்று மார்க்ஸ் வலியுறுத்தினார்.
அப்படியெனில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி சில தேடுதல்!
1857ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக 60 ஆயிரம் ராணுவ வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆங்கில ஏகாதிபத்தியமும் அதன் அடிவருடிகளும் இதை ‘சிப்பாய் கலகம்’ என்று திசை திருப்பினர்.
ஆனால், இது சிப்பாய் கலகம் அல்ல. “முதல் இந்திய சுதந்திரப் போர்” என்று சரியாக கணித்தவர் காரல் மார்க்ஸ்.
1907ல் ஸ்டட் நகரில் சோசலிஸ்ட்களின் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் ஏகாதிபத்திய நாடுகள், காலனிநாடுகளை கடுமையாகச் சுரண்டுகின்றன என்பதை அம்பலப்படுத்தினார் லெனின்.
1908ல் திலகர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டார். இதனைக் கண்டித்து வடக்கே பம்பாயிலும், தெற்கே தூத்துக்குடியிலும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
இதனை, “இந்திய பாட்டாளி வர்க்கம் தனது உணர்வு பூர்வமான அரசியல் வெகுஜன போராட்டத்தை தொடங்கி விட்டது. இனி ஆங்கில ஏகாதிபத்தியம் ஆளுமை செலுத்த முடியாது இடிந்து நொறுங்கும்” என்று முழங்கினார் லெனின்.
1913ல் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் சோகன்சிங் பக்னா தலைமையில் ‘கதார் கட்சி’ துவங்கப்பட்டது.
முதல் உலகப் போருக்கு முன் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் குடியேறிய பஞ்சாப் தொழிலாளர்களால் இக்கட்சி உருவாக்கப்பட்டது.
இந்த கதார் கட்சியின் செயலாளர் லாலா ஹர்தயான் என்பவர்தான் காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாற்றை இந்தியா விற்கு முதலில் அறிமுகப்படுத்தினார்.
1914ல் கதார் கட்சியினர் கோமகட்டமாரு என்ற கப்பலில் ஆயுதங்களை ஏந்தி இந்தியாவை விடுவிக்க புறப்பட்டு வந்தனர்.
கல்கத்தா துறைமுகத்தில் ஆங்கில படையுடன் ஏற்பட்ட மோதலில் பலர் வீர மரணம் அடைந்தனர். சிலர் தப்பித்தனர். (தப்பித்தவர்களில் பலர் பின்னாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்).
1919 ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்தபோது, அமிர்தபஜார் என்ற பத்திரிகை மூலம் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு கண்டனமும், உயிரிழந்த இந்திய மக்களுக்கு அனுதாபமும் சோவியத் அரசின் சார்பில் லெனின் தெரிவித்திருந்தார்
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குப் பின்பு ஆங்கில ஏகாதிபத்திய ஆட்சிக்கு எதிராகவும், இந்திய விடுதலைக்கு ஆதரவாகவும் இந்திய மக்களிடையே மிகப் பெரிய எழுச்சி ஏற்பட்டது.
இந்திய விவசாயிகள் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்க தொடங்கினர். நிலப்பிரபுத்துவ மற்றும் காவல்துறை யின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விவசாயிகள் விடுதலைப் போராட்டத்தில் அணிவகுத்தனர்.
உ.பி.கோரக்பூர் மாவட்டத்தில் சவுரி சவுரா போராட்டத்தில் காவல்துறையினர் சிலர் விவசாயிகளால் கொல்லப் பட்டனர். காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
‘போராட்டப் பாதையில் வன்முறை புகுந்துவிட்டதாகக் கூறி’ காந்திஜி போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
காந்திஜியின் இந்த நடவடிக்கை விடுதலைப் போராட்ட வீரர்களிடமும், பொதுமக்களிடையேயும் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
1925 டிச. 25,26 தேதிகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தொடக்க அமைப்பு மாநாடு நடைபெற்றது.
” இந்தியாவில் நிலவும் அரசியல், பொருளாதார, சமூக நிலைகளை ஆராயவும், மக்களின் வாழ்வை முன்னேற்ற நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிடவும் கூடியுள்ளோம்” – என்று வரற்புக்குழுத் தலைவர் ஹசரத் மொகானி குறிப்பிட்டுப் பேசினார்
தொடரும்.
நமது இலக்கு-7(15/10/20)
தோழர்களே இன்று நாடு புரட்சிக்கு ஏங்குகிறது புரட்சியாளர்களோ அதனை தேடிக் கொண்டே உள்ளனர் என் பதிவின் நோக்கம் கடந்த காலத்தை அறிந்து எதிர்காலத்தை சரி செய்வோம் ஆகவே கடந்தகால படிப்பினைகளில் நாம் கற்றவை பெற்றவையே இனி இன்றைய பதிவில்
இ.க.க அகிலத்தின் அறிவுறுத்தலின் பேரில் 1925 ல் துவங்கப்பட்டது.1942 வரை கட்சி தலைமறைவாக செயல்பட்டது. லாகூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு, கான்பூர் சதி வழக்கு என சதி வழக்குகள் போடப்பட்டு, துவக்கத்திலேயே கடும் அடக்குமுறைக்கு உள்ளானது. ஆனாலும் நாடு முழுக்க தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், அறிவாளிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அதில் இருந்தனர்.கடற்படை, தரைப்படை, விமானப்படை என இராணுவத்திலும் கூட அதற்கு கட்சி கிளைகள் இருந்தது. நாட்டில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கியது. வோர்லி பழங்குடியினர் கலகம், கையில் விவசாயிகள் போராட்டம், தெபகா இயக்கம், மெய் மென்கிங்கில நடந்த ஆயுதம் ஏந்திய போராட்டம் என பல போராட்டங்களை வழி நடத்தியது.தெலுங்கானா போராட்டம் ஒரு பகுதியில் ஆட்சி அதிகாரத்தை நிறுவ கொரில்லா போராட்டமாக வளர்த்தது இதில் 4000 தோழர்கள் புரட்சிக்காக தியாகியாயினர். 3000 கிராமங்களும், 10,000 ஏக்கர் நிலமும் மக்கள் கட்டுப்பாட்டில் வந்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் திசை வழியை புரிந்துக் கொள்வதிலும் அமுல்படுத்துவதிலும் இந்திய கம்யூனிசட் கட்சி சிக்கல்களை எதிர் கொண்டது. தங்களுக்கான திட்டத்தை முன் வைத்து எல்லா ஏகாதிபத்தியய் எதிர்ப்பு சக்திகளையும் தன் தலைமையில் ஒருங்கிணைத்து புதிய ஜனநாயக இந்தியாவை படைக்க தயாரற்ற நிலையில் இருந்தது. ஏனெனில் அது கருத்தியல் அரசியல் ரீதியில் பலவீனமாக இருந்தது. நீண்ட காலம் விஞ்ஞனப் பூர்வமான வேலை திட்டம் இல்லாமலேயெ செயல்பட்டது. “புரட்சிகரமான தத்துவம் (வேலை திட்டம்) இல்லையேல் புரட்சி இல்லை” எனற தோழர் லெனின் புரிதல் கைவிடப்பட்டது. இதன் விளைவு கட்சிக்குள் கோஸ்டிவாதம், பிராந்தியவாதம், பிளவு நடவடிக்கை, சுயநல அடிப்படையில் குழுக்கள் அமைத்தல் போன்ற போக்குகள் கட்சிக்குள் நிலவியது.இன்னிலையில் (1933ல்) சீன கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிட் கட்சியின் பரிதாப நிலையிலான குழப்பங்கள் பிளவுகளுக்கு முடிவு கட்டி வலுமைமிக்க ஒன்றிணைந்த கட்சியை கட்டும் பணியில் முன்னேறும் படி CPI க்கு வேண்டுகோள் விடுத்தது. ஆனாலும் CPI சில சமயம் இடதுசாரி தந்திரத்தையும் சில சமயம் வலதுசாரி தந்திரத்தையும் பின்பற்றியே வந்துள்ளது. சரியான வழி முன் வைக்கப்படும் பொழுது அது நிராகரிக்கப்பட்டது.
தொடரும் ….
நமது இலக்கு-8(16/10/20)
1917 அக்டோபர் புரட்சிக்கு பின் உலகில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது, 1925 ல் இந்திய கம்யூனிச கட்சியும், சீன கம்யூனிச கட்சியும் ஏறக்குறைய அதே காலக் கட்டத்தில் உருவானது, இரண்டு கட்சிகளுக்கும் மூன்றாம் அகிலம் தொடர்சியாக வழிகாட்டுதலை அளித்தது. கம்யூனிஸ்ட்அகிலத்தின் வழிகாட்டலை சீன கம்யூனிஸ்ட் கட்சி சரியாக புரிந்து கொண்டு அதை தனது நாட்டின் சூழலுக்கு பொருத்தி மக்கள் ஜனநாயகம் படைத்தது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகிலத்தின் வழிகாட்டுதலை அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி, ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளை தூக்கி எறிந்து மக்கள் ஜனநாயக அரசை நிறுவும்படியும், அதற்க்கு உடனடியாக பிரிந்துகிடக்கின்ற கம்யூனிச குழுக்களையும், தனி நபர்களையும் இணைத்து பலம் வாய்ந்த ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவும் படி திரும்ப திரும்ப வலியுறுத்தியது. ஆனால் இன்றுவரை இந்தப் பணி நிறைவேறவில்லை.இந்தியாவின் அன்றைய நிலையை நோக்குவோமானால், ஒருபுறம் பிரிட்டிஷ் இந்தியாவில் முதலாளிய உறவுகள் அதிக வளர்ச்சி பெற்றவையாக இருந்தன, பெரும் முதலாளிகள் அய்க்கியப்பட்டு ஏகாதிபத்திய அரசுடன் பிணைக்கப்பட்டிருந்தனர். மற்றொரு புறம் பாட்டாளி வர்க்கம் உழைக்கும் வர்க்கத்துடன் நேச அணியை நிறுவ தவறியது.இவ்வாறாக சீனாவை காட்டிலும் இங்கு எதிர்பரட்சி சக்திகள் கூடுதல் பலமும் புரட்சிகர சக்திகள் கூடுதல் பலவீனமும் பெற்றிருத்தன. இதன் விளைவாக தேசிய இயக்கத்தின் தலைமையை முதலாளி வர்க்கம் தக்க வைத்து கொண்டு நிலபிரபுத்துவம், ஏகாதிபத்தியம் ஆகியவற்றுடன் சமரசம் செய்து கொண்டது.CPI க்குள் பிரதானமாக புரட்சியின் பாதை பற்றிய விவாதங்களே இருந்தது. புரட்சியை நடத்துவதற்கு தேவைப்படும் திட்டம், யுத்த தந்திரம் செயல் தந்திரம் பற்றிய புரிதல் இல்லை.கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் எழும்பொழுது, அதை விவாத சுதந்திரம், செயல் ஒற்றுமை என்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில் தீர்க்கப்படவே இல்லை.கருத்து வேறுபாடுகள் மேலும் சிக்கலான பொழுது அரசியல் தலைமை குழுவான தோழர்கள் டாங்கே, ராஜேஸ்வர ராவ், பசவபுன்னையா அடங்கிய மூவர் குழுவை அனுப்பி சர்வதேச தலைமையான தோழர் ஸ்டாலினை சந்தித்தது.சர்வதேச தலைமை பின்வரும் ஆலோசனைகளை முன் வைத்தது.
(1).சர்வதேச அளவில் நடைப்பெறும் தேசிய விடுதலை போராட்டங்களில் இருந்தும், சீன புரட்சியின் அனுபவங்களில் இருந்தும் படிப்பினை பெற வேண்டும்.
(2). பிரிட்டிஷ் அமெரிக்க ஏகாதிபத்தியங்களை ஆதரிக்கும் முதலாளிகள், நிலபிரபுக்களுக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களை ஒன்றுபடுத்தி, சுதந்திரம், விடுதலை அடைவதற்கான பொதுவான அடிதளம் உருவாக்க வேண்டும்.
(3). இந்தியாவின் குறிப்பான நிலைமைகளுக்கு ஏற்றவாறு பாதை தீர்மானிக்க வேண்டும்.
(4). அது அமைதி பாதையாக இருக்காது.இவைகளை கவனத்தில் எடுத்துக் கொண்டதாக வரலாற்று பக்கங்கள் சொல்லவில்லை என்பதே வருத்தமான விசியம்…
உலக கம்யூனிஸ்ட் கட்சிகளின் மோதல்சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம் சோவியத் திருத்தல்வாதத்திற்கு எதிராக சமரசமின்றிப்போராட வேண்டிய நிலைவந்தது. ஆனால் சோவியத் ரஷ்யாவில் திருத்தல்வாதம் வெற்றி பெற்றதன் விளைவாக உலக அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகளில் திருத்தல்வாதம் பலப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும் திருத்தல்வாதம் பலப்பட்டது. திருத்தல்வாதத்திற்கு எதிரான போராட்டம் உலக அளவிலும் இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவைக் கொண்டுவந்தது. மாசேதுங் தலைமையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தொடுத்த திரிபுவாதத்திற்குஎதிரான போராட்டத்தின் அடிப்படையில்தான் உலக கம்யூனிஸ்ட் இயக்கம் பிளவுகளை சந்தித்தது.ஏப்ரல் 1956-ல் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் நடைபெற்ற சி.பி.ஐ.யின் நான்காவது பேராயம் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது பேராயத்தை “மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி” என்றுபோற்றிப் புகழ்ந்தது. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பேராயம் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்த அஜாய்கோஷ் மார்க்சிய -லெனினியத்திற்கு முரணாக மேற்கொள்ளப்பட்ட இருபதாவது பேராயத்தின் கோட்பாடுகள் அனைத்தையும் வரவேற்றார். அதில்அவர் கூறியதாவது:“இங்கு சில குறிப்பிட்ட பழைய கோட்பாடுகள் இயக்கங்களின் வளர்ச்சிப் பாதையில் தடைக்கற்களாக இருந்துவருகின்றன. தற்போதைய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும், வருகின்ற புதிய வரலாற்றுச் சூழலுக்குப் பொருந்தும் வகையிலும் முன்னெப் போதையும் விட இயக்கத்தை விரைவாக எடுத்துச் செல்வதற்கு ஏற்றவகையிலும் இருபதாவது மாநாடு சில பழைய கோட்பாடுகளை மாற்றி புதிய கோட்பாடுகளை உருவாக்கியுள்ளது” என்று கூறி குருச்சேவின் திருத்தல்வாதத்தை ஆதரித்தார்.பாலக்காடு பேராயத்தில் மேற்கொள்ளப்பட்ட அரசியல்தீர்மானம் இந்தியா அரசியல் சுதந்திரமடைந்துவிட்டது என்பதை பின் வருமாறு கூறியது:“அமைதியையும், சுதந்திரத்தையும் பேணிக் காப்பதற்கான இறையாண்மை கொண்ட சுதந்திரக் குடியரசாக இந்தியா உருவெடுத்த நிகழ்ச்சியானது உலகில் பெரும் முக்கியத்துவம்வாய்ந்த கூறாக விளங்குகிறது” .
சி.பி.ஐ -யின் சிறப்புப் பேராயம் ஒன்று ஏப்ரல் 1958-ல்அமிர்தசரசில் கூடியது. கட்சியின் அமைப்பு விதிகளில் பின்வரும் நிலைபாடு சேர்க்கப்பட்டது: “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது அமைதியான வழிகளில் முழுமையான ஜனநாயகத்தையும் சோசலிசத்தையும் அமைப்பதற்குப் பாடுபடும்” என்று அந்தத் திருத்தம் கூறியது.CPI,CPM கட்சிகள் கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை புறகணித்து அதாவது மூன்றாம் அகிலத்தின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டன அதாவது அகிலத்தின் வழி காட்டுதலை புறகணித்தது. பொருளாதார போராட்டங்களும், முதலாளித்துவ தேர்தலுக்கு மட்டுமே தயாரிப்பு செய்வதாகும். இவர்கள் மக்களை அரசியல் படுத்தாமல் வெறும் ஓட்டு சீட்டிற்க்காக என்பதாகி போனது.
தொடரும் தோழமைகளே..
நமது இலக்கு-9(17/10/20)
சில தோழர்களின் முந்தைய பதிவுகளுக்கு பதிலளிக்கும் முகமாக மேலும் சில வரலாற்று நிகழ்வுகளை தெளிவுப் படுத்தவதே இந்தப் பதிவின் நோக்கம்.இனி பதிவிலிருந்து.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)யானது, 1925 டிசம்பர் 25 அன்று கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கிறது. ஆனால் சி.பி.எம். கட்சியோ, 1920-ல், அன்றைய சோவியத் ஒன்றியத்தில் ஓர் அங்கமாக இருந்த உஸ்பெகிஸ்தானின் (துருக்கேஸ்தான்) தலைநகர் தாஷ்கண்டில் அக்டோபர் 17-ம் தேதி நடந்த கூட்டம்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்ட நாளாகும் என்று அறிவிக்கிறது. இவற்றில் எது சரியானது என்ற குழப்பம் இந்திய கம்யூனிச இயக்கத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. ஆனால் வரலாற்று ஆதாரங்களின்படி, 1925 டிசம்பர் 25-ல் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும்.அன்றைய பிரிட்டிஷ் காலனியாட்சியில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல கம்யூனிசக் குழுக்கள் இரகசியமாக இயங்கி வந்தன. வங்கத்தில் அனுசீலன் சமிதி, ஜுகந்தர், முசாபர் அகமது குழு முதலான குழுக்களும், மும்பையில் டாங்கே தலைமையிலான குழுவும், சென்னையில் சிங்காரவேலர் தலைமையிலான குழுவும், ஐக்கிய மாகாணத்தில் சௌகத் உஸ்மானி தலைமையிலான குழுவும், பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணத்தில் குலாம் உசைன் தலைமையிலான குழுவும் இயங்கி வந்தன. அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசானது எல்லா வகையான கம்யூனிசக் குழுக்களையும் முற்றாகத் தடை செய்ததோடு, குறிப்பாக, லெனின் தலைமையிலான “போல்ஷ்விக்” சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட கம்யூனிஸ்ட் குழுக்களைத்தான் மிகத் தீவிரமாக ஒடுக்கியதுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், கட்சியின் முதலாவது பொதுச் செயலாளராகவும் பணியாற்றிய எஸ்.வி. காட்டே 1950-களில் அளித்த விரிவான பேட்டியானது, பின்னர் “ஃபிரண்ட்லைன்” இதழில் மறுபதிப்பாக வெளிவந்தது. அதில் அவர், “தாஷ்கண்ட் நகரிலோ அல்லது வேறிடத்திலோ இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அது முறையாக இயங்கவில்லை. இந்திய கம்யூனிச இயக்கத்திற்கான ஒரு அடித்தளம் உருவாக்கப்பட்டது என்றுதான் இதனைக் குறிப்பிட முடியும். பல்வேறு கம்யூனிஸ்டு குழுக்களை ஒன்றிணைத்து கான்பூர் நகரில் நடத்தப்பட்ட மாநாடுதான், இந்திய கம்யூனிஸ்டு கட்சி உண்மையாகத் தொடங்கப்பட்டதை அறிவித்தது.ஒரு கம்யூனிஸ்டு குழு தாஷ்கண்ட் நகரில் கூடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாக அறிவிக்கலாம் எனினும், அது நீடித்து நின்று செயல்படவேயில்லை. ஏனெனில், அதன் தொடக்ககால உறுப்பினர்களில் சிலர் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டார்கள். இந்நிலையில் ஒரு கட்சியாக அது செயல்பட்டிருக்க அடிப்படையே இல்லை.“கான்பூர் நகரில் சத்யபக்தா என்பவர்தான் கம்யூனிஸ்டு கட்சியைத் தொடங்க வேண்டுமென்ற நோக்கத்துடன், பல கம்யூனிஸ்டு குழுக்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் “பிரதாப்” என்ற பத்திரிகையின் உதவியுடன் நாடெங்குமுள்ள கம்யூனிஸ்டுகளை அறைகூவி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அதைப் பார்த்து, நாங்கள் அந்த மாநாட்டுக்குப் புறப்பட்டோம்.“அங்கே நாங்கள் சத்யபக்தாவுடன் விவாதித்தோம். அவர் தேசியவாத கம்யூனிசக் கட்சியை – இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்ட வேண்டுமென்றார். அகிலத்தின் பொது வழிகாட்டுதலை மட்டும் ஏற்கலாம்; மற்றபடி, இந்திய நிலைமைக்கேற்ப கட்சியின் பெயரும் கொள்கையும் அமைய வேண்டுமென அவர் வாதிட்டதை நாங்கள் நிராகரித்தோம். அகிலத்தின் வழிகாட்டுதலின்படி, சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான ஒரு அங்கமாகவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India) அமைய வேண்டுமென்று எங்கள் கருத்தைப் பிரச்சாரம் செய்து மாநாட்டில் பெரும்பான்மை முடிவாக்கினோம். சிங்காரவேலர் அன்று நடந்த கூட்டத்துக்குத் தலைமை தாங்கி உரையாற்றினார். இந்தியா மட்டுமின்றி, வெளிநாட்டு கம்யூனிஸ்டு கட்சிகளின் பார்வையாளர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்” என்று அக்கால நிகழ்வுகளை தனது நினைவிலிருந்து காட்டே விளக்கியுள்ளார். (Frontline , Volume 29 – Issue 09, May 05-18, 2012)இந்த வரலாற்று ஆதாரங்களின்படி, 1925-ம் ஆண்டு டிசம்பர் 25, 26, 27 தேதிகளில் கான்பூரில் நடந்த மாநாட்டில்தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டது என்பதே சரியான முடிவாகும். சி.பி.எம். கட்சி வறட்டுத்தனமாகவும் வீம்புக்காகவும் 1920-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடங்கப்பட்டதாகக் கூறுவது தவறானதும், அணிகளைக் குழப்புவதுமாகும்.1925-ல் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் தொடக்க மாநாட்டுக்குப் பிறகு, எஸ்.வி. காட்டேவுக்குப் பின்னர் ஜி. அதிகாரி, பி.சி. ஜோஷி ஆகியோர் கட்சியின் பொதுச் செயலாளர்களாகப் பணியாற்றினர். 1933-ல்தான் அகில இந்திய அளவில் மத்தியத்துவப்படுத்தப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி கட்டப்பட்டுள்ளதாக அறிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியானது கம்யூனிச அகிலத்தில் உறுப்பு நாடாக இணைந்தது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1925-ல் தொடங்கப்பட்ட போதிலும், ஏறத்தாழ 25 ஆண்டுகளாக கட்சிக்குத் திட்டமோ, போர்த்தந்திர – செயல்தந்திரங்களோ, அமைப்பு விதிகளோ இல்லாமல்தான் அது இயங்கி வந்துள்ளது. திரிபுவாதத் தலைமையின் வலது சந்தர்ப்பவாத துரோகத்தனமும் புரட்சிகர அணிகளின் அளப்பரிய தியாகமும் நிறைந்ததுதான் இந்திய கம்யூனிச இயக்கத்தின் கடந்தகால வரலாறாக உள்ளது. பின்னர் 1964-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திரிபுவாதத்தை எதிர்ப்பதாகக் கூறி, தனிக் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உருவானபோதிலும், விரைவிலேயே அது நவீன திரிபுவாதக் கட்சியாகச் சீரழிந்தது.(இதனை பின் தேவைப்பட்டால் எழுதுவேன்).நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு, திரிபுவாத – நவீன திரிபுவாதப் பாரம்பரியங்களை நிராகரித்து, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உதயமாகி, இந்திய கம்யூனிச இயக்கம் புரட்சிகரப் பாதையில் அடியெடுத்து வைத்தாலும், இடது சந்தர்ப்பவாதப் பாதையில் சறுக்கி விழுந்து பெரும் பின்னடைவையும் இழப்பையும் சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் மீண்டும் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உருவாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும், நாடு தழுவிய ஐக்கியப்பட்ட புரட்சிகர கட்சியாக வளரவில்லை (தேவைப்பட்டால் பின்னர் எழுதுவேன்).
தொடரும் தோழர்களே…..
நமது இலக்கு-11(19/10/20)
நமது நோக்கம்:
இன்றைய சமுதாயத்தில் நிலவும் அரசியல் பொருளாதார, கலாச்சார முரண்பாடுகளை விஞ்ஞான பூர்வ கண்ணேட்டத்தில் அணுகி மார்க்சிய புரட்சிகர அரசியல் அதிகாரத்திற்கான தத்துவப்பயிரை நாட்டுவதும், நடைமுறை நீரை ஊற்றுவதும், வளர்ப்பதும், மார்க்சிய அறிவியலை எளிமைப்படுத்தி புரட்சிகர மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையினை நமது நாட்டுச் சூழ்நிலைகளுக் கேற்ப்ப அரசியல், பொருளாதார, கலாச்சார தத்துவார்த் தளங்களை உருவாக்கி “சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சித் திசைவழியைக் காட்டுவதே யாகும்”.
இன்றைய பதிவு கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டமும் அதன் பிரகடனமும்..
நவம்பர் 1967-ல் நடைபெற்ற கூட்டம் முதல் உருவான முன்னேற்றங்கள் குறித்து மே, 1968-ல் நடந்த கூட்டத்தில் மீளாய்வு செய்த மைய ஒருங்கிணைப்புக் குழுவானது ஒரு புதிய பிரகடத்தை வெளியிட்டது.
இந்திய நாடு “பல்வேறு ஏகாதிபத்திய சக்திகளின் நவ காலனியாகவும், முதன்மையாக அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியத்தின் நவகாலனிய நாடாக மாறியுள்ளதை” அது சுட்டிக்காட்டியது.
“மனித குலத்தின் மிகக் கொடிய எதிரியாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், இந்திய மக்களின் தீவிர எதிரிகளாவர்.” என்று அது குறிப்பிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் திரிபுவாதம், இந்தியப் பெரு நிலவுடமையாளர்கள் மற்றும் தரகு முதலாளித்துவ வர்க்கம் ஆகியோர் தான் இந்திய மக்களின் முதன்மையான எதிரிகளாவர் என்று அது கூறியது.
இந்திய மக்களுடைய ஜனநாயகப் புரட்சியின் முதன்மையான சக்தியாகவும், தங்களுடைய எதிரிகளின் நேரடியான மற்றும் மறைமுகமான ஆட்சியைத் தூக்கியெறிவதற்கான முன்னணி சக்தியாகவும் விவசாயிகள் வர்க்கம் விளங்கும் என்று அதில் குறிப்பிட்டிருந்தது.உழைக்கும் வர்க்கத்தின் தலைமையின் கீழ் விவசாயிகள் வர்க்கமானது விவசாயிகள் புரட்சியை நிறைவேற்றுவதற்காக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்து, கிராமப்புறங்களில் புரட்சிகரத் தளப்பகுதிகளை அமைக்கும்.
நீண்டகால ஆயுதப் போராட்டத்தைக் கடைபிடித்துக் கிராமப்புறப் பகுதிகளிலிருந்து நகரங்களைச் சுற்றி வளைத்து, அவற்றைக் கைப்பற்றி, நாடு தழுவிய வெற்றிக்கு நடத்திச் செல்லும்.உழைக்கும் வர்க்கத்திற்கும் விவசாயிகள் வர்க்கத்திற்கும் இடையிலான உறுதிமிக்க கூட்டணிதான் உழைக்கும் வர்க்கம், விவசாயிகள் வர்க்கம், குட்டி முதலாளித்துவ வர்க்கம் மற்றும் தேசிய முதலாளித்துவ வர்க்கம் ஆகியவற்றைக் கொண்ட ஐக்கிய முன்னணியை உருவாக்குவதற்கான அடிப்படையாக அமையும்.
மாசேதுங் சிந்தனைதான் புரட்சியின் வழிகாட்டியாகவும், அதைப் பரவலாகக் கொண்டு செல்வதுதான் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களின் முதன்மையான கடமையாகவும் இருக்கும்.
“வெகுமக்கள் பாதையைப் பின்பற்றினால் மட்டுமே இந்திய மக்களின் எதிரிகள் வீழ்த்தப்படுவார்களே தவிர சதி வேலைகளால் அல்ல” என்று அந்தப் பிரகடனம் எச்சரித்தது.
சித்தாந்தப் பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்காக பர்த்வானில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் நிறை பேரவைக் கூட்டத்திற்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சிக்குள் இனிமேலும் உள்கட்சிப் போராட்டத்தை தொடருவதற்கான வாய்ப்பு புரட்சியாளர்களுக்கு இல்லை என்று அது கூறியது.மார்க்சிஸ்ட் கட்சிக்குள் புரட்சியாளர்கள் தொடர்ந்து நீடிப்பார்களேயானால் அது மக்களிடையே மாயைகளைத் தோற்றுவித்து அவர்களை ஒன்றுபட வைப்பதிலிருந்து தடுத்து நிறுத்தும்.
தனித்தனிக் குழுக்களைக் கலைத்து அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவுக்குள் தங்களை ஒன்றிணைத்துக் கொள்ளுமாறும், உண்மையான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்புமாறும், மாசேதுங் சிந்தனை மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் அந்தப் பிரகடனம் வேண்டுகோள் விடுத்தது.
(நக்சல்பாரி முன்பும் பின்பும் நூலிலிருந்து– நூலாசிரியர் சுனிதிகுமார் கோஷ்
(தொடரும்)
நமது இலக்கு-12
++++±+++++++±+++
அன்புத் தோழர்களே,
பொருள்களின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணம் அப்பொருளுக்கு வெளியே இல்லை; ஆனால், அவற்றிற்குள்ளேயே அவற்றின் உள் முரண்பாடுகளிலேயே உள்ளது” என்று இயற்கை இயல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.
மூலதனத்துடனான உழைப்பின் மோதல், அவை இரண்டுக்கும் இடையிலான கடுமையான போராட்டத்தின் மூலம் தான் தீர்க்கப்படுகிறதே ஒழிய அவற்றிற்கு வெளியில் உள்ள சக்தியால் அல்ல.
மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் – அதாவது அரசு எந்திரத்தைத் தலையாய அங்கமாகக் கொண்டிருக்கிற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் – அடங்கியுள்ளது. அதுபோலவே, உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே -அதாவது பாட்டாளி வர்க்கக் கட்சியைத் தலையாய அங்கமாக கொண்டுள்ள அதன் ஒட்டு மொத்த அமைப்பின் பலத்தில்- அடங்கியுளநடத்துவது
ஆனால், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், உழைப்பாளரில் ஒரு பகுதியினரைக் கொண்டதே பொதுவுடைமைக் கட்சி. எனவே சமூதாயத்தை மாற்ற புரட்சி நடத்துவது என்பது கட்சி மட்டுமே செய்ய கூடியது அல்ல;
உழைப்பாளர் அனைவரும் ஒட்டுமொத்தமாக செய்வதாகும்; பொதுவுடமைக் கட்சி புரட்சிக்கு சித்தாந்த தலைமை அளிக்கிறது. ஆனால், அது தனது சொந்த பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது ஒருபோதும் முடியாது. எனவே பொதுவுடமைக் கட்சி என்ற தேர் ஆனது மக்கள் திரள் என்ற
அச்சாணியை உறுதியாக கொண்டிருக்க வேண்டும் . ஒரு பொதுவுடமை கட்சி அல்லது மார்க்சிய குழு பரந்துபட்ட மக்களின் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு பணியாற்றுமானால் அது அச்சாணி அற்ற தேர் போன்றதாகும் , அதன் இதர பகுதிகள் எவ்வளவு அழகாக மிகச் சரியாக இருந்தாலும் உண்மையான பொருளில் அது தேர் ஆகாது. அதாவது, பரந்துபட்ட மக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்பட்ட ஒரு கட்சி பொதுவுடமைக் கட்சியே அல்ல.
தொடரும்…
நமது இலக்கு-13
“ஒரு தத்துவம் மக்களால் பற்றி கொள்ளப்பட்டு விட்டால் அது ஒரு பௌதிக சக்தியாகி விடுகிறது”என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிலாளி வர்க்க சித்தாந்த்தால் மக்கள் திரளை ஆயுதபாணியாக்கும் இக் கடமைதான் எந்த ஒரு நேர்மையான பொதுவுடமைக் கட்சியும் மேற்கொள்ள வேண்டிய கடமை ஆகும். பரந்துபட்ட மக்கள் தமக்குச் சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொண்டு அதன்படி நடக்க துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சு கிருமிகளையும் சீறி எழுந்து ஒரே அடியாக அழித்தொழிப்பர். கட்சி மக்களிடம் இருந்து பிரிந்து தனிமைப் பட்டிருந்தால் இது சாத்தியமில்லை.
ஏனெனில் மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொள்ள முடியாது. மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலன்களைப் பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பாக திரட்டுவதும் ஆன இந்த இமாலயப் பணியையே நாம் மக்களிடையேயான பணி என்கிறோம்.
மக்களிடையேயான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டப்பட்ட பின் சில நடைமுறைப் பிரச்சினைகளை எழுகின்றன. அவையாவன:
(1). மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?
(2). மக்களிடம் ஒரு கம்யூனிஸ்ட் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்கவேண்டும்?.
(3). மக்களை பயிற்றுவிப்பதிலும் அமைப்பாகத் திரட்டுவதிலும் என்ன முறைகள் கையாளப்பட வேண்டும்?.
தொடரும் தோழர்களே…..
நமது இலக்கு-14
26/10/20
மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொள்ள முடியாது. மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலன்களைப் பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பாக திரட்டுவதும் ஆன இந்த இமாலயப் பணியையே நாம் மக்களிடையேயான பணி என்கிறோம்.
மக்களிடையேயான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டப்பட்ட பின் சில நடைமுறைப் பிரச்சினைகளை எழுகின்றன. அவையாவன:
(1). மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?
(2). மக்களிடம் ஒரு கம்யூனிஸ்ட் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்கவேண்டும்?.
(3). மக்களை பயிற்றுவிப்பதிலும் அமைப்பாகத் திரட்டுவதிலும் என்ன முறைகள் கையாளப்பட வேண்டும்?.
மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?
பொதுவாக மக்கள் என்று நாம் குறிப்பிடும் போது உற்பத்தியில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும் அடிப்படை வர்கங்களையே அதாவது தொழிலாளர்கள் விவசாயிகளை யே குறிப்பிடுகின்றோம். எனவே,
இவ்வர்கங்கள் மத்தியிலேதான் மக்களிடையேன பணி அடிப்படையாகச் செய்யப்படவேண்டும் இருந்த போதிலும் இன்றைய புரட்சி கட்டம் புதிய ஜனநாயகப் புரட்சி கட்டமாகதனால் புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுக்க ஆதரிக்கின்ற அதற்காக வேலை செய்ய முன் வருகின்ற எந்த ஒரு சமூக தட்டு அல்லது குழுவும் மக்கள் என்ற பிரிவில் அடங்குவர் என கவனிக்கத்தக்கது.
அடுத்து எழும் கேள்வி என்னவெனில் மக்களின் எந்த பிரிவினரிடையே வேலை செய்வது மிக முக்கியம் இப்பிரச்சினை வேறு எந்த பிரச்சினை போலவே இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்து நோக்க வேண்டுமே ஒழிய நெகிழ்வற்ற வறட்டுத்தனமான ஒரு பக்க கண்ணோட்டத்துடன் நோக்கக்கூடாது.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடையே பணியாற்றுவது முதன்மையானது என்பதை கோட்பாட்டு ரீதியாக சரியானது என்று கூற வேண்டியதில்லை ஆனால் உடனடி நடைமுறை என்ற கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் பொழுது குறிப்பிட்ட நிலைமைகளில் பொருத்துமாறு வேலை செய்ய வேண்டும் அப்படி அல்லாமல் நெகிழ்வற்ற ஒருபக்க அணுகு முறையை கைக் கொண்டால் எல்லா வேலைகளுக்கும் கிராமப்புறங்களில் தான் விவசாயிகளை பிரதான சக்தி என்பதாக அல்லது எல்லா வேலைகளையும் தொழில்துறை பாட்டாளிகள் தான் முன்னணி சக்தி அதுதான் என்பதாக தவறான முடிவுகளுக்கு கொண்டு செல்லலாம் இதுபோன்ற ஒரு பக்கப் பார்வை நெகிழ்வுப் போக்கு மிகவும் ஊறு விளைவிக்கும்
உடனடியான நடைமுறையை கணக்கில் எடுத்து நோக்கும் போது ஒரு பகுதிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பது மற்ற பகுதிக்கும் பொருத்தமாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை ஆனால் எந்தப் பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுக்கும் முன்னர் ஒவ்வொரு அம்சமும் அதற்குத் தொடர்புடைய மற்ற அம்சங்களையும் மிக ஆழமாக பரிசீலிக்க வேண்டும் ஒன்று அல்லது இரண்டு பொதுவான முக்கிய அம்சங்களை பரிசித்துவிட்டு மற்றவற்றை புறம் தள்ளக் கூடாது
ஆரம்பக் கட்டங்களில் அதாவது நாடு தழுவிய அளவில் இல்லாதிருக்கிற மார்க்ச்சிய குழுக்களை மட்டுமே கொண்டிருக்கிற நன்கு வளர்ச்சி பெற்ற மக்கள் திரள் இயக்கங்களை குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கொண்டிருக்கிற ஆரம்ப கட்டங்களில் ஒரு விஷயம் நாம் தீர்மானமாக சொல்லலாம், தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் தமக்கு மிகவும் பரிச்சயமான மற்றும் திறம்பட பணியாற்ற கூடிய துறைகளில் பணியாற்ற வேண்டும் அவ்வாறு இன்றி ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இயந்திர ரீதியில் எடுத்து பொருத்தக் கூடாது.
தொடரும்…..
நமது இலக்கு-15 (28/10/2020)
++++++++++++++++++++++
அண்மையில் பல்வேறு மா-லெ அமைப்புகள் சீர்குலைந்து போய் கொண்டிருப்பதை பற்றி சிந்திக்க முயற்சிக்கிறேன் தெரிந்த தோழர்கள் சிதைவுக்கு காரணம் தங்களால் முடிந்தளவு விளக்கவும்…
இனி மாவோவின் வார்த்தை கீழே…
நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றுக் கொண்டு உள்ள தொடர்புகளைக் கண்டறிய வேண்டும். மேலும் இதைச் செய்வதற்காக நாம் அகவய கற்பனையையோ, அப்போதைய ஆர்வத்தையோ அல்லது சாரமற்ற புத்தகங்களையோ சார்ந்திருக்கக் கூடாது, புறவயமாக நிலவுகின்ற சூழல்களைத்தான் சார்ந்திருக்க வேண்டும். உரிய வகையில் தகவல்களைச் சேகரித்து, மார்க்சிய-லெனினிய பொதுக்கொள்கை நெறிகளினை சரியாகப் பின்பற்றி அதிலிருந்து முடிவுகளை வகுக்க வேண்டும். இத்தகைய முடிவுகள் வெறும் அ, ஆ, இ, ஈ வரிசையாலான நிகழ்ச்சிப்போக்குகள் நிறைந்த பட்டியல்களோ, பயனற்ற கூற்றுகள் நிரம்பிய எழுத்துக்களோ அல்ல, அவை அறிவியல் பூர்வமான முடிவுகள் ஆகும். இத்தகைய உளப்பாங்கு என்பது மெய் நிகழ்வுகளிலிருந்து பேருண்மையை தேடுவது, வெற்று பசப் புரையிலிருந்து அணுகூலமானதைப் பெறுவது அல்ல. இதுதான் மார்க்சிய-லெனினிய வழியில் தத்துவத்தையும் நடைமுறையையும் இணைப்பதாகும், உயிரோட்டமான கட்சியின் வெளிப்பாடு இதுவே. எந்தவொரு கட்சி உறுப்பினரும் இந்த அணுகுமுறையை மிக குறைந்த அளவிலேனும் கைக் கொண்டிருக்கவேண்டும்.
பயிலும் முறை சீர்திருத்தம், மாவோ ஆற்றிய பகுதி …
1. “மகத்தான போராட்டத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைமை உறுப்புகள் எல்லாவற்றையும், அதன் உறுப்பினர், ஊழியர் அனைவரையும் தமதுமுன்முயற்சியை (முனைப்பை) (initiative) முற்றாக வெளிப்படுத்த வேண்டும் என்று கோருகின்றது. இந்த முன்முயற்சி மட்டுமே வெற்றியை உத்தரவாதம் செய்ய முடியும். இந்த முன்முயற்சி தலைமை உறுப்புகளும் ஊழியர்களும் கட்சி அணியினரும் ஆக்கபூர்வமாக வேலை செய்யும் ஆற்றலிலும், பொறுப்புணர்ச்சியிலும், வேலையில் காட்டும் நிரம்பிய சுறுசுறுப்பிலும், கேள்விகள் எழுப்பி அபிப்பிராயங்கள் தெரிவித்துத் தவறுகள் விமர்சனம் செய்யும் துணிவிலும் திறமையிலும், தலைமை உறுப்புகளையும் தலைமை ஊழியர்களையும் தோழமை பூர்வமாகக் கண்காணிப்பதிலும், பருண்மையாகக் காட்டப்பட வேண்டும். இல்லாவிட்டால் “முன்முயற்சி” என்பது வெறும் வாய்ப்பந்தலாகும். ஆனால் இத்தகைய முன்முயற்சியின் பிரயோகம் கட்சி வாழ்வில் பரவியுள்ள ஜனநாயகத்தைச் சார்ந்திருக்கிறது. கட்சி வாழ்வில் போதிய ஜனநாயகம் இல்லாவிட்டால் இதை முற்றாக வெளிப்படுத்த முடியாது.
ஜனநாயக சூழ்நிலையில் தான் பெருந்தொகையான திறமைசாலிகளை வளர்த்தெடுக்க முடியும்.”
(தேசிய யுத்தத்தல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாத்திரம்- அக்டோபர் 1938)
2. சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? : மாஓ சேதுங் (1963 மே)
சரியான கருத்துக்கள் எங்கிருந்து வருகின்றன? அவை வானத்திலிருந்து விழுகின்றனவா? இல்லை. அவை மனதில் இயல்பாகவே உள்ளனவா? இல்லை. அவை சமூக நடைமுறையிலிருந்து, அதிலிருந்து மட்டுமே, வருகின்றன. அவை மூவகையான சமூக நடைமுறைகளிலிருந்து வருகின்றன: உற்பத்திக்கான போராட்டம், வர்க்கப் போராட்டம், விஞ்ஞானப் பரிசோதனை. மனிதனுடைய சமூக இருப்பே அவனது சிந்தனையைத் தீர்மானிக்கிறது. முன்னேறிய வர்க்கத்திற்குரிய தனிச்சிறப்பான சரியான கருத்துக்கள் வெகுசனங்களாற் பற்றிக் கொள்ளப்பட்டதும் அக் கருத்துக்கள் சமூகத்தையும் உலகையும் மாற்றும் ஒரு பொருண்மையான சக்தியாகின்றன. மனிதர் தமது சமூக நடைமுறையிற் பல வகையான போராட்டங்களில் ஈடுபட்டுத், தமது வெற்றிகளிலிருந்தும் தோல்விகளிலிருந்தும், செழுமையான அனுபவத்தைப் பெறுகின்றனர்.
பார்வை, கேட்டல்;, மணம், சுவை, தொடுகை ஆகியவற்றுக்கான உறுப்புக்களான மனிதனது ஐம்புலன் உறுப்புக்களின் வழியே புற உலகின் எண்ணற்ற இயல்நிகழ்வுகள் மனித மூளையிற் பிரதிபலிக்கின்றன. முதலில் அறிவு புலனணர்வு சார்ந்தது. போதிய அளவு அறிவு திரண்டதும், கருக்துருவ அறிவை, அதாவது சிந்தனையை, நோக்கிய பாய்ச்சல் நிகழ்கிறது. விளங்குதல் என்பதில் இது ஒரு செய்முறையாகும். விளங்குதல் எனுஞ் செயற்பாடு முழுமைக்கும் இதுவே முதற் கட்டமாகும். புறநிலைப் பொருளிலிருந்து அகஞ் சார்ந்த உணர்வுநிலைக்கும் இருத்தலிலிருந்து சிந்தனைக்கும் இட்டுச் செல்லுங் கட்டமாகும். ஒருவரது உணர்வுநிலையோ (கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் உட்பட்ட) கருத்துக்களோ புறநிலையான வெளி உலகின் விதிகளைச் சரியாகப் பிரதிபலிக்கின்றனவா இல்லையா என்பது, அவை சரியானவையா இல்லையா என நிச்சயிக்க இயலாத இந்தக் கட்டத்தில், இன்னமும் நிறுவப்படாதுள்ளது.
அதையடுத்து அறிதலின் இரண்டாவது கட்டமாக உணர்வுநிலையினின்று பொருளுக்குத் திரும்பச் செல்லுவதான, கருத்துக்களிலிருந்து இருப்புக்குத் திரும்பச் செல்லுவதான கட்டம் வருகிறது. இங்கே, கோட்பாடுகளும் கொள்கைகளும் திட்டங்களும் நடவடிக்கைகளும் எதிர்பார்த்த வெற்றியைத் தந்தனவா என உறுதிப் படுத்துவதற்காக, முதலாவது கட்டத்திற் பெறப்பட்ட அறிவு சமூக நடைமுறையிற் பிரயோகிக்கப் படுகிறது. பொதுவாகச் சொன்னால் வெற்றி பெறுபவை சரியானவை தோல்வி பெறுபவை தவறானவை. இயற்கையுடனான மனிதனது போராட்டத்தில் இது சிறப்பாகச் சரியானது.
தொடரும் தோழர்களே…..