நமது இலக்கு- 1
நமது இலக்கு- 1

நமது இலக்கு- 1

தோழர்களே நான் எழுத நினைத்த தொடர் பதிவு “நமது இலக்கு” என்ற தலைப்பின் கீழே எழுத உள்ளேன். அவை நமது முன் உள்ள பணியும் கடந்தகால படிப்பினைகளும் இருக்கும். அரசியல் ரீதியான தவறுகளை அவசியம் சுட்டிக் காட்டலாம் தோழர்களே…. எதிர்கால தவறுகளை தவிர்க்க கடந்தகால தவறுகளிலிருந்து படிப்பினை பெறுவோம் தோழர்களே.அன்புத் தோழர்களே நாடோ பலவகையான ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகிக் கொண்டுள்ளது அதனை அரசியல் ரீதியாக மக்களை தயார் படுத்த வேண்டிய நாம் என்ன செய்துக் கொண்டுள்ளொம்? சரி இன்றைய பதிவு…ரசிய சோசலிசப் புரட்சியின் பீரங்கி முழக்கம் சீனாவுக்குள் சோசலிச கருத்துகளைக் கொண்டு கொண்டுவந்தது என மாவோ கூறியது போல் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு நக்சல்பாரி வசந்தத்தின் இடிமுழக்கம் திரிப்புவாத புதை சேற்றில் அமுக்கி வைக்கப்பட்டிருந்த மார்க்சிய லெனினியத்தை வெளியே கொண்டு வந்தது. புரட்சிகரப் போக்கை நிகழ்ச்சி நிரலில் வைத்தது. இன்றுநக்சல்பாரி எழுச்சி பெற்று 50 ஆண்டு கடந்த பிறகும் நாடு தழுவிய அளவில் ஒரு புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியை இந்திய பாட்டாளி வர்க்கம் பெற்றிருக்கவில்லை.மார்க்சிய லெனினியர்களும் உழைக்கும் மக்களுக்கும் தலைமைதாங்கும் முன்னணிப் பாத்திரத்தை ஆற்றவும் இயலவில்லை. மார்க்சிய லெனின்யவாதிகள் பல குழுக்களாக பல போக்குகளை கொண்டவர்களாக இருந்து வருவதால் இத்தகைய பலவீனம் உள்ளது . குழுக்களின் நிலவும் தவறான விலகல் போக்குகளுக்கு எதிராக போராடி சித்தாந்த ஒற்றுமை அடைவதென்பது புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தை சீர் அமைப்பதற்கு உடனடியான அவசியமானதாகும். புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி கட்டும் பணியை சாதிக்க வேண்டுமானால் மார்க்சிய ஆசான்களின் வழிநின்று போராடினால் மட்டுமே சாத்தியம்.இதனை புரிந்துக் கொள்ளசீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம்++++++++++++++++++++++++++++++வெற்றிகரமாக புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி முடித்த சீன கம்யூனிஸ்ட் கட்சி தன் அனுபவத்தை கூறுகிறபோது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு லெனின் எதிர்ப்பட்ட நிலைமை சீனாவில் இல்லை.|).ரஷ்ய போல்ஷ்விக்குகள் வெற்றி பெற்று உயிருள்ள உதாரணத்தை உருவாக்கி வைத்த பிறகு கட்டப்பட்டது 2). இரண்டாம் அதிலத்தின் சித்தாந்த ரீதியாகவும் அமைப்பு ரீதியாகவும் செல்வாக்கிற்கு உட்படவில்லை. 3). ஐரோப்பாவைப் போன்று சீனாவில்தொழிலாளி வர்க்கம் சமாதானமான சட்டசபை போராட்டங்களில் பங்கு எடுத்துக் கொள்வதற்கு அனுமதிக்கப்படும் சமாதானமான முதலாளித்துவ வளர்ச்சி கட்டத்தை கண்டதே இல்லை அன்றியும் ஐரோப்பாவில் இருப்பதைப் போன்று சீனாவில் தொழிலாளர்கள் சலுகை பெற்ற பகுதி என்றும் உருவாகவில்லை.4). லெனினிய முறைப்படி அமைந்த ஒரு கட்சியை ஆரம்பத்திலிருந்து கட்டுவதற்கு உதவிற்று புத்தி பூர்வமாக நாம் லெனின் வகுத்து வைத்து போன கோட்பாடுகளிலிருந்து இம்மியளவும் பிறழாது நடந்து கொண்டோம் ஆரம்பத்திலிருந்தே கட்சி கண்டிப்பான சுயவிமர்சனமும் உட்கட்சிப் போராட்டம் நடத்தி வந்துள்ளது. (உட்கட்சி போராட்டம் பற்றி – லியோசோசி).லெனினிய கோட்பாடுகளும் சுயவிமர்சனம் உட்கட்சி போராட்டமும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுமானத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது என்பதை கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் ஆகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.LikeCommentShare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *