நமது இலக்கு. தொடர்
நமது இலக்கு. தொடர்

நமது இலக்கு. தொடர்

நமது இலக்கு.
கம்யூனிஸ்டுகள் மக்களிடம் வேரூன்றி அவர்களே அரசியல் படுத்தி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் மாபெரும் புரட்சிக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பதை எல்லா பொதுவுடமை இயக்கங்கள் ஒப்புக் கொள்கின்றனர் ஆனால் திருத்தல்வாதிகளாகி ஆகிப்போன இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(CPI, CPM) மக்களி டையே பணியாற்றுவது என்ற பெயரால் உழைக்கும் மக்களை அணிதிரட்டி உடனடி பொருளாதார கோரிக்கைகளுடன் வரம்பிற்குட்பட்ட அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் புரட்சிகரப் போராட்டங்களை புறக்கணித்து அதற்கேற்ப ஓட்டுப் பொறுக்கும் பிழைப்பு வாதத்தையே தமது நடைமுறையை மாற்றிக் கொண்டனர்.
திருத்தல் வாதத்தை தனது புரட்சியாக கையிலெடுத்த சிபிஅய், சிபிஎம் அதனை புறக்கணித்த புரட்சி யின் இலக்கான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை தூக்கிப பிடித்த புரட்சியாளர்கள் இன்று இடது வலது சந்தர்ப்பவாத போக்கில்
இன்று மாலெ அமைப்புகளின் தோல்விகளும் தேக்கமும் பின்னடைவும் பல்வேறு கேள்விகளை உள்ளடக்குகின்றன அவர்களை தேடியே நமது பயணமாக இருக்கும் மேலும் இன்றைய நிலையில்,
மக்கள் என்னும் கடலில் மீன்களாக நீந்தி வரும் கம்யூனிசப் புரட்சியாளர்களுக்கு ம் புரட்சிகர அணிகளுக்கும் மக்களிடையே ஆற்றவேண்டிய புரட்சிப் பணிகளைப் பற்றி ஒருங்கிணைந்த கண்ணோட்டம் புரிதலையும் உருவாக்குவதே நமது கடமையாக இருக்கின்றது, முயல்வோம்.
மார்க்சியவாதிகள் இயக்க இயல் பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தை தங்கள் அணிகளுக்கு மட்டுமன்றி பரந்துபட்ட திரளான மக்களுக்குப் பிரச்சாரம் செய்ய வேண்டும். உழைக்கின்ற பெரும் திரள் மக்கள் இந்தக் கண்ணோட்டத்தை பற்றிக்கொண்டு முதலாளித்துவ கண்ணோட்டத்தை (திரிப்புவாதிகளையும்) நிராகரிக்காத வரையில், எதிரியை தோற்கடிப்பது என்பது அசாத்தியமாகும்.

அரசியல் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடே சமுதாயத்தை உந்தி முன்தள்ளி செல்வதற்கு தலையாய காரணமாகும். இம்முரண்பாட்டுத் தீர்வே ஒரு புதிய சமுதாயம் எழ வழிவகுக்கிறது.இம் முரண்பாட்டின் பிரதான அம்சம் உற்பத்தி சக்திகள் ஆகும் .

இந்த உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்தி இருப்பதான் இந்திய சமுதாயத்தை பின் தங்கிய நிலையிலே வைத்திருக்கிறது. பிற்போக்கு சக்திகளின் தளைகளில் இருந்து உற்பத்தி சக்திகள் விடுபடும் பொழுது ஒரு புதிய சமுதாயம் உருவாகிறது. அப்படி என்றால் இந்த உற்பத்தி சக்திகளில் தலையாய மற்றும் பிரதானபிறக்கிறது.
அது பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் உள்ள உழைப்பே அன்றி வேறல்ல எனவே மக்கள் திரள் அதாவது உழைக்கும் மக்கள் பின்தங்கிய உற்பத்தி உறவுகளின் தலைகளில் இருந்து விடுபட்ட உடன் புதிய உற்பத்தி உறவுகளை கொண்ட ஒரு முற்போக்கான புதிய சமுதாயம் பிறக்கிறது.
22/10/20
“பொருள்களின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணம் அப்பொருளுக்கு வெளியே இல்லை; ஆனால், அவற்றிற்குள்ளேயே அவற்றின் உள் முரண்பாடுகளிலேயே உள்ளது” என்று இயற்கை இயல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.
மூலதனத்துடனான உழைப்பின் மோதல், அவை இரண்டுக்கும் இடையிலான கடுமையான போராட்டத்தின் மூலம் தான் தீர்க்கப்படுகிறதே ஒழிய அவற்றிற்கு வெளியில் உள்ள சக்தியால் அல்ல.
மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் – அதாவது அரசு எந்திரத்தைத் தலையாய அங்கமாகக் கொண்டிருக்கிற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் – அடங்கியுள்ளது. அதுபோலவே, உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே -அதாவது பாட்டாளி வர்க்கக் கட்சியைத் தலையாய அங்கமாக கொண்டுள்ள அதன் ஒட்டு மொத்த அமைப்பின் பலத்தில்- அடங்கியுளநடத்துவது
ஆனால், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், உழைப்பாளரில் ஒரு பகுதியினரைக் கொண்டதே பொதுவுடைமைக் கட்சி. எனவே சமூதாயத்தை மாற்ற புரட்சி நடத்துவது என்பது கட்சி மட்டுமே செய்ய கூடியது அல்ல;
உழைப்பாளர் அனைவரும் ஒட்டுமொத்தமாக செய்வதாகும்; பொதுவுடமைக் கட்சி புரட்சிக்கு சித்தாந்த தலைமை அளிக்கிறது. ஆனால், அது தனது சொந்த பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது ஒருபோதும் முடியாது. எனவே பொதுவுடமைக் கட்சி என்ற தேர் ஆனது மக்கள் திரள் என்ற
அச்சாணியை உறுதியாக கொண்டிருக்க வேண்டும் . ஒரு பொதுவுடமை கட்சி அல்லது மார்க்சிய குழு பரந்துபட்ட மக்களின் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு பணியாற்றுமானால் அது அச்சாணி அற்ற தேர் போன்றதாகும் , அதன் இதர பகுதிகள் எவ்வளவு அழகாக மிகச் சரியாக இருந்தாலும் உண்மையான பொருளில் அது தேர் ஆகாது. அதாவது, பரந்துபட்ட மக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்பட்ட ஒரு கட்சி பொதுவுடமைக் கட்சியே அல்ல.
23/10/20

“ஒரு தத்துவம் மக்களால் பற்றி கொள்ளப்பட்டு விட்டால் அது ஒரு பௌதிக சக்தியாகி விடுகிறது”என்று மார்க்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தொழிலாளி வர்க்க சித்தாந்த்தால் மக்கள் திரளை ஆயுதபாணியாக்கும் இக் கடமைதான் எந்த ஒரு நேர்மையான பொதுவுடமைக் கட்சியும் மேற்கொள்ள வேண்டிய கடமை ஆகும். பரந்துபட்ட மக்கள் தமக்குச் சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொண்டு அதன்படி நடக்க துணியும் போது தமது குருதியை உறிஞ்சி கொண்டிருக்கும் அட்டைகளையும் நச்சு கிருமிகளையும் சீறி எழுந்து ஒரே அடியாக அழித்தொழிப்பர். கட்சி மக்களிடம் இருந்து பிரிந்து தனிமைப் பட்டிருந்தால் இது சாத்தியமில்லை.
ஏனெனில் மக்கள் தாமாகவே தமக்கு சொந்தமான தத்துவத்தைப் பற்றி கொள்ள முடியாது. மக்களுக்கு அவர்களுடைய வர்க்கத்தின் நலன்களைப் பற்றி போதிப்பதும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களை அமைப்பாக திரட்டுவதும் ஆன இந்த இமாலயப் பணியையே நாம் மக்களிடையேயான பணி என்கிறோம்.
மக்களிடையேயான பணியின் பாத்திரம் தத்துவார்த்த ரீதியில் நிலைநாட்டப்பட்ட பின் சில நடைமுறைப் பிரச்சினைகளை எழுகின்றன. அவையாவன:
(1). மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?
(2). மக்களிடம் ஒரு கம்யூனிஸ்ட் கடைப்பிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்கவேண்டும்?.
(3). மக்களை பயிற்றுவிப்பதிலும் அமைப்பாகத் திரட்டுவதிலும் என்ன முறைகள் கையாளப்பட வேண்டும்?.
தொடரும் தோழர்களே…..
26/10/20
மக்கள் என்று நாம் யாரை குறிப்பிடுகின்றோம்?

பொதுவாக மக்கள் என்று நாம் குறிப்பிடும் போது உற்பத்தியில் ஆக்கப்பூர்வமாக பங்கேற்கும் அடிப்படை வர்கங்களையே அதாவது தொழிலாளர்கள் விவசாயிகளை யே குறிப்பிடுகின்றோம். எனவே,
இவ்வர்கங்கள் மத்தியிலேதான் மக்களிடையேன பணி அடிப்படையாகச் செய்யப்படவேண்டும் இருந்த போதிலும் இன்றைய புரட்சி கட்டம் புதிய ஜனநாயகப் புரட்சி கட்டமாகதனால் புதிய ஜனநாயகப் புரட்சியை வென்றெடுக்க ஆதரிக்கின்ற அதற்காக வேலை செய்ய முன் வருகின்ற எந்த ஒரு சமூக தட்டு அல்லது குழுவும் மக்கள் என்ற பிரிவில் அடங்குவர் என கவனிக்கத்தக்கது.
அடுத்து எழும் கேள்வி என்னவெனில் மக்களின் எந்த பிரிவினரிடையே வேலை செய்வது மிக முக்கியம் இப்பிரச்சினை வேறு எந்த பிரச்சினை போலவே இயங்கியல் பொருள்முதல்வாத கண்ணோட்டத்திலிருந்து நோக்க வேண்டுமே ஒழிய நெகிழ்வற்ற வறட்டுத்தனமான ஒரு பக்க கண்ணோட்டத்துடன் நோக்கக்கூடாது.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களிடையே பணியாற்றுவது முதன்மையானது என்பதை கோட்பாட்டு ரீதியாக சரியானது என்று கூற வேண்டியதில்லை ஆனால் உடனடி நடைமுறை என்ற கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் பொழுது குறிப்பிட்ட நிலைமைகளில் பொருத்துமாறு வேலை செய்ய வேண்டும் அப்படி அல்லாமல் நெகிழ்வட்டு ஒருபக்க அணுகு முறையை கைக் கொண்டால் எல்லா வேலைகளுக்கும் கிராமப்புறங்களில் தான் விவசாயிகளை பிரதான சக்தி என்பதாக அல்லது எல்லா வேலைகளையும் தொழில்துறை பாட்டாளிகள் தான் முன்னணி சக்தி அதுதான் என்பதாக தவறான முடிவுகளுக்கு கொண்டு செல்லலாம் இதுபோன்ற ஒரு பக்கப் பார்வை நெகிழ்வுப் போக்கு மிகவும் ஊறு விளைவிக்கும்
உடனடியான நடைமுறையை கணக்கில் எடுத்து நோக்கும் போது ஒரு பகுதிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பது மற்ற பகுதிக்கும் பொறுமை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை ஆனால் எந்தப் பகுதியிலும் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுக்கும் முன்னர் ஒவ்வொரு அம்சமும் அதற்குத் தொடர்புடைய மற்ற அம்சங்களையும் மிக ஆழமாக பரிசீலிக்க வேண்டும் ஒன்று அல்லது இரண்டு பொதுவான முக்கிய அம்சங்களை பரிசளித்துவிட்டு கொள்ளக் கூடாது
ஆரம்பக் கட்டங்களில் அதாவது நாடுகளில் அளவில் இல்லாது இருக்கிற மாற்றுக் குழுக்களை மட்டுமே கொண்டிருக்கிற நன்கு வளர்ச்சி பெற்ற மக்கள் திரள் இயக்கங்களை குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே கொண்டிருக்கிற ஆரம்ப கட்டங்களில் ஒரு விஷயம் நாம் தீர்மானகரமான சொல்லலாம் தனிநபர்களுக்கும் குழுக்களுக்கும் நமக்கு மிகவும் பரிச்சயமான மற்றும் திறம்பட பணியாற்ற கூடிய துறைகளில் பணியாற்ற வேண்டும் அவ்வாறு இன்றி ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கும் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு இயந்திர ரீதியில் எடுத்து பொருத்தக் கூடாது.
28/10/20
மக்களிடையே ஒரு கம்யூனிஸ்ட் கடைபிடிக்க வேண்டிய போக்கு எவ்வாறு இருக்க வேண்டும்?
ஏற்கனவே குறிப்பிட்டது போல, மக்கள் தான் புரட்சியைக் கொண்டு வருகிறார்கள். கோடிக்கணக்கான இந்தப் பரந்துபட்ட மக்கள் தான் புரட்சியை விசுவாசமாக ஆதரித்து அதற்காகப் பணிபுரிவார்கள். தோழர் மாவோ குறிப்பிடுவது போல் “மக்கள் தான் உண்மையான இரும்புக்கோட்டை , இதை உலகில் எந்த சக்தியாலும் தவிர்ப்பது சாத்தியமாகாது”.
ஆனால் இந்த இரும்புக் கோட்டையை உருவாக்கும் இரும்பு கற்கள் தனித்தனியாகவும் ஒன்று சேர்க்கப்பட்டு பூசப்படும் படாமலும் உள்ளது. இந்த இரும்பு கற்களை அடுக்கி பூசி உலகிலுள்ள எந்த சக்தியாலும் மறுக்கப்பட முடியாத அளவிற்கு ஒரு சக்திவாய்ந்த இரும்புக் கோட்டையாக நிறுவவேண்டும்.

இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க கடமையை மேற்கொள்வதுதான் கம்யூனிஸ்டுகளின் முக்கிய பணி. ஆனால் இந்தப் பணியை கம்யூனிஸ்டுகள் எவ்வாறு ஏற்று நடத்துவது மக்களிடம் எவ்விதமான அணுகுமுறையை கொண்டு கம்யூனிஸ்டுகள் இந்த பணிகளை நிறைவேற்றுவது மக்களிடம் இவர்களை முந்திச் செல்லும் உஉள்ளுணர்வு விருப்பமும் எண்ணமாக இருக்க வேண்டும்?.
வெறும் தலைவர்களாக வேண்டும் என்ற ஆசையுடன் மக்களிடம் செல்வதா இல்லை அவர்கள் மக்களிடையே மார்க்சியவாதிகள் உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு செல்ல வேண்டுமா இல்லை அல்லது மக்களை அவர்களது தொழில்களிலும் சங்கங்களிலும் முன்னணி கட்டும் நோக்கத்தோடு செல்வதாக இல்லை கம்யூனிஸ்டுகளும் மக்களிடையே செல்வதற்கான ஒரே நோக்கம் உந்து சக்தியும் அவர்களுக்கு உளமார தொண்டு செய்வதுமே ஆகும்.
மக்களுக்குத் தொண்டு செய்வதன் பொருள் அவர்களுக்கு பரோபகாரியாக இருப்பதல்ல; மாறாக அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் இந்த ஒடுக்கப்பட்ட மக்களில் கம்யூனிஸ்டுகள் முழுமையிலும் பொருந்திய ஒரு பகுதியினராவர், உண்மையாக நன்மை கிடைக்கும் வகையில் பணியாற்றுவதாகும். மக்களின் நலனுக்காக விசுவாசமாக பாடுபடுவது என்பதன் பொருள் உண்மையில் மக்கள் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருட்டு அவர்களுக்கு பயிற்றுவிப்பது பயிற்சி அளிப்பதும் அவர்களை அமைப்பாகத் திரட்டுவது மேயாமேதாவி
03/11/20
‌திமிரான போக்கு கம்யூனிஸ்டுகளை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி விடும் பணிவான போக்கு பெரும் மதிப்பை தேடித்தரும் . மக்களிடம் கம்யூனிஸ்டுகள் அதி மேதாவி
‌போக்கை கடைபிடிக்கக் கூடாது மக்கள் கலந்து ஆலோசித்து எந்த நடவடிக்கையும் செயலையும் செய்யவேண்டும் கம்யூனிஸ்டுகள் அரசியல் அறிவில் ஏகபோகமாக முற்படாமல் மக்களுக்கு தொடர்ந்து பயிற்றுவித்து அவர்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்க முயலவேண்டும் மக்கள் முன் முழுக்கவும் வெளிப்படையாக திறந்த மனதுடனும் அடக்கத்துடனும் தவறுகளை ஒப்புக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் உத்தரவிடும் போக்குகள் எப்போதும் தவிர்க்க வேண்டும் எல்லா கருத்துக்களையும் அதை முற்போக்காக இருந்தாலும் பிற்போக்காக இருந்தாலும் சுதந்திரமாக பேச அனுமதிக்க வேண்டும் அப்போதுதான் எது சரி எது பிழை என்பதை எடுத்துக் கூறி மக்களை ஒப்புக்கொள்ள செய்ய முடியும்.
‌எதார்த்த நோக்கில் மக்கள் அனைவரின் உணர்வு மட்டமும் சீராக ஒன்று போல் இருக்கும் என்று கருதுவது சரியானது அல்ல மாவோ கூறியுள்ளதாவது “குறிப்பிட்ட எந்த இடத்துப் பொது மக்கள் மத்தியிலும் ஒப்பீட்டு வகையில் ஊக்கமானவர்கள் நடுநிலையாளர்கள், ஒப்பீட்டளவில் பின்தங்கியவர்கள் என்ற மூன்று பிரிவினர் இருப்பர். எனவே தலைவர்கள் சிறிய தொகையினராக உள்ள ஊக்க மானவர்களை தலைமையைச் சூழ அய்க்கிய படுத்தி அவர்களை முதுகெலும்பாக கொண்டு நடுநிலையாளர்களின் தரத்தை உயர்த்தி பின் தங்கியவர்கள் வென்றெடுப்பதில் தேர்ச்சி பெற வேண்டும்.
‌நடைமுறையில் நிகழக்கூடியது என்னவெனில் தோழர்கள் முன்னேறிய சக்திகளின் மீது மட்டும் கவனத்தை செலுத்துவது மற்றவர்களை பற்றி மறந்து விடுவதும் ஆகும் இது சரியல்ல மற்றவர்களை உணர வைப்பதுதான் மிகவும் கடினமானதும் சிக்கலானதும் ஆகும் விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அனைவரது மத்தியிலும் பிரசாரம் மற்றும் கிளர்ச்சியை நடத்துவதும் அவர்களுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வதும் அவசியம் மக்களை எப்போதும் பிளவு படுத்தாதீர் அய்க்கிப்படுத்துவீராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *