நண்பர்களும் எதிரிகளும்- வர்க்கம் அறிதலுக்கு
நண்பர்களும் எதிரிகளும்- வர்க்கம் அறிதலுக்கு

நண்பர்களும் எதிரிகளும்- வர்க்கம் அறிதலுக்கு

ஒரு கடலின் மத்தியில் பெரிய மீன்களும், சிறிய மீன்களும் இருந்தன.

சிறிய மீன்கள் தன்னிச்சையாக அங்குமிங்கும் திரியும்போது பெரிய மீன்கள் அவற்றைப் பிடித்துத் தின்றுவந்தன.
பெரிய மீன்களுக்கு சிறிய மீன்கள் ஒவ்வொரு நாளும் இரையாகிக் கொண்டு வந்தன. பெரிய மீன்களின் இந்தக்கொடுமையால் சிறிய மீன்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வரத் தொடங்கின. பெரிய மீன்கள் பக்கம் அவை செல்வதில்லை. பெரிய மீன்களைத் தம் எதிரிகளாக எண்ணிக்கொண்டன. இதனால் பெரிய மீன்களுக்கு இரை கிடைப்பது பெரும் கஷ்டமாகிவிட்டது. சில காலம் சென்றது.
சிறிய மீன்கள் பார்க்கின்றபோது, பெரிய மீன்கள், சிறிய மீன் களைப்போல் பாசிகளையும். அழுக்குகளையும் நின்றுகொண்டிருந்தன. இதைக்கண்ட சிறிய மீன்கள், பெரிய மீன்களும் எங்களைப்போல் மீன்கள்தானே என உள்ளுக்குள் எண்ணிக்கொண்டன. கொஞ்சம் கொஞ்சம் பெரிய மீன்களுக்குப்பக்கமாகச் செல்லத்தொடங்கின. பெரிய மீன்கள் சிறிய மீன்களை நெருங்கி 'நாங்கள் எல்லாம் மீன்கள்; எங்களுக்குள் வேற்றுமை இல்லை. நாம் எல்லாம் ஒன்று.  நம்மைக் கொல்லுகின்ற எதிரிகளை நாம் எதிர்க்கவேண்டும். மீன்களின் எதிரிகளை நாம் கொல்லவேண்டும்' என்று அடிக்கடி கூறிக்கொண்டன. இதனால் சிறிய மீன்களும் பெரிய மீன்களுடன் ஒன்றாக வாழத் தொடங்கின.
இதை பார்த்த ஒரு மடையனான பெரிய மீனுக்குப் பிடிக்கவில்லை. அதற்கு சிறிய மீன் களைப் பிடித்துத் 'தின்பதுதான் ஒரே நோக்கமாக இருந்தது. அது மற்றப் பெரிய மீன்களைப் பார்த்துக் கேட்டது:
"நாம் எல்லாம் மீன்கள், மீன்களைப் பிடித்தத் தின்னும் எதிரிகளை எதிர்ப்போம் என்று கூறுகிறீர்களே. நாம் இனி சிறிய மீன்களை இரையாக்குவதில்லையா?" என்று கேட்டது.
அதற்கு மற்றப் பெரிய மீன்கள்

“மடையனே! எங்கள் இரையே சிறிய மீன்கன்தான். இரையை நாம் மாற்றப்போவதில்லை" என்று கூறின. இதைக்கேட்ட மடையஞன பெரிய மீனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
"அது எப்படி? நாங்கள்தானே கூறுகிறோம். நாங்கள் எல்லாம் மீன்கள், எங்களைக் கொல்பவர்களை எதிர்ப்போம் என்று" என்று கேட்டது.
"இப்பொழுது சிறிய மீன்கள் எங்களை எப்படி நம்பிக்கொண் டிருக்கின்றன?"
நண்பர்கள் என்று!"
'தங்கள் எதிரிகள் யார் என்று அவை நம்பிக்கொண்டிருக்கின்றன. பெரிய மீன்கள் என்றா?"
"இல்லை, வேறு யாரோ என்று'
இப்பொழுதுதான் நமக்கு வாசதி. இனி நாம் சிறிய மீன்களை இலகுவாக இரையாக்கலாம்" என்று மற்றப் பெரிய மீன்கள் கூறின. இதைக்கேட்ட மடையனான பெரிய மீன், அவை கூறுவதில் நம்பிக் கையில்லாமல், ஒரு சிறிய மீனே ரகசியமாக பிடித்து விழுங்கிவிட்டது. சிறிய மீன்கள், பெரிய மீன்களிடம் ஓடிவந்து “பாருங்கள், எங்களில் ஒருவனே எங்கள் எதிரிகளில் யாரோ ஒருவன் பிடித்துத் நின்றுவிட்டான்' என்று கூறின.
அதைக் கூறும்போது பெரிய மீன்கள் பாசிகளையும் அழுக்குகளையும்  தின்றுகொண்டிருந்ததை, அவை கண்டன. அதைக் கேட்ட பெரிய மீன்கள்:
"உடன்பிறப்புக்களே! நமது எதிரிகளை நாம் சும்மாவிடக் கூடாது. நாம் எப்படியும் மீன் எதிரிகளை கொன்று தீர்ப்போம்" என்று கூறி, சிறிய மீன்களை விட ஆவேசமாகப் பேசின.
சிறிய மீன்கள் சந்தோச்மடைந்தன. இதைப் பார்த்துக் கொண்டிருந்த மடையனான பெரிய மீன் , மற்றப் பெரிய மீன்களி டம் 'நான்தான் மடையனாக இருந்துவிட்டேன், நீக்கள் கூறுவது தான் சரி, சிறிய மீன்களுக்கு தமது எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்று தெரியாதவரை, தமது காரியத்தைத் தொடர்ந்து நடத்தலாந்தான்" என்று சந்தோஷத்துடன் கூறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *