Vchinnadurai Durai
AtSpScprironiuslcu 22, 2ndout0ret19Slgds ·

என் உரை : நக்சல்பாரி அமைப்புகளை அரசுமட்டுமா அழித்தது ? டாக்டர் ராமதாசிற்கும்,டாக்டர் தொல்திருமாவளவனுக்கும் அவரது சகா ரவிக்குமாருக்கும் சமமான பங்குண்டு.போராட்டத்திலே சாவதெல்லாம் நம்ம இளைஞர்கள் தலைமையிலிருந்துகொண்டு பெயர்வாங்குவது , பேட்டிக்கொடுப்பதெல்லாம் மேல்சாதி இந்துக்கள் என்று பரஸ்பர குற்றம் சுமத்தி தத்தமது சாதி இளைஞர்களுக்கு நக்சல்பாரிகள் மீது சந்தேகத்தையும் ,அவநம்பிக்கையையும் உண்டுபன்னியவர்கள் இந்த நிஜ டாக்டர்கள்.கூடி நின்று நக்சல்பாரி இயக்கங்களை அழித்து தெவசம் கொடுத்துவிட்டு இப்போது நக்சல்பாரிகள் இருந்திருந்தால் கலவரம் நடந்திருக்காது என்று ஆருடம் சொல்வது சரியில்லை.ஞாயமில்லை.இனிதான் வாட்சப்பதிவு.“#நக்சல்பாரிகளுக்குப்_பயந்து#எங்ககிட்ட_எந்த_வம்புதும்பும்_இல்லாம_இருந்தாங்க. அந்தக்கட்சி காலப்போக்கில இல்லாமல் போனதும், இளவரசன் கல்யாணத்தை சாக்கா வெச்சு இப்படிப் பண்ணிட்டாங்க”இது தருமபுரி தாக்குதல் பற்றி ஆனந்த விகடன் வெளியிட்டிருந்த கட்டுரையில் தாக்குதலுக்கு ஆளான அண்ணாநகரைச் சேர்ந்த வசந்தா என்ற பெண் அப்போது கூறியிருந்தது. “நக்சல்பாரி இயக்கம் ஒடுக்கப்பட்டதனால்தான் சாதிய அமைப்புகள் தலையெடுத்திருக்கின்றன” என்று அச்சம்பவத்தை ஒட்டி பல பத்திரிகைகளும் அப்போது எழுதியிருந்தன. பொன்பரப்பியில் இன்றைய நிலையை பாருங்கள். நக்சல்பாரிகள் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடந்தால் அதை எதிர்த்து போராடுபவர்களில் ஆதிக்க சாதியை சார்ந்த வாட்டாக்குடி இரணியன்கள், சீனிவாசராவுகள் போன்ற தலைவர்களும் தோழர்களும்தான் முன்ணனியில் நிற்ப்பார்கள்.என்றைக்குமே அனைத்து சாதியிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, உயர்சாதி திமிர் ஒழித்து, உழைக்கும் மக்களாய் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் இழந்த உரிமைகளை பெறமுடியும் என அப்போது அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதை வென்றும் காட்டினார்கள். நக்சல்பாரிகள்தான் உழைக்கும் மக்களின் நண்பர்கள், உண்மையான சாதி எதிர்ப்பாளர்கள் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தததால் அவர்கள் புரட்சியாளர்களை நம்பினார்கள். நக்சல்பாரி இயக்கத்தில் திரண்டார்கள். பிறப்பால் தலித்தாகவே இருந்தாலும், பிழைப்புவாதிகளை நிராகரித்தார்கள். நக்சல்பாரிகளும் அவர்களை அப்போது காப்பாற்றினார்கள்.இன்று பாருங்கள். நிலைமை அப்படியே தலைகீழ். ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு கட்சி. தருமபுரியில் மட்டுமல்ல; தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் எந்த ஊரிலும் ஏன் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு செலுத்துவதில்லை? அந்த இடத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனுங்களும், அடையாள அரசியலை உயர்த்தி பிடிக்கும் அமைப்புகளும், பாமக போன்ற சாதிவெறி கட்சிகளும்தான் இருக்கின்றன.ஏனென்றால் எதை, எப்போது, யாரை எப்படி ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அரசுக்கு தெரியும். தொண்டு நிறுவனங்களுக்கு தெரியும். சாதிவெறி அமைக்களுக்கு தெரியும். ஒடுக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வு பெறுகிறார்களா உடனே அவர்களை ஆண்ட பரம்பரை பெருமை கொள்ள வை, ஒவ்வொருத்தரையும் தனக்கு கீழ் இருப்பவர்களை ஒடுக்க வை. சண்டை மூட்டு. குடிசையை கொழுத்து, பின் கொஞ்சம் சலுகை கொடு. தேவையற்ற தத்துவங்களை, அமைப்புகளை தலையில் ஏற்றிவிடு. தேர்தல் அரசியலுக்குள் இழு. மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு செல்.இதுதான் 1980களில் நக்சல்பாரிகள் பின்னடவை சந்தித்ததிலிருந்து இப்போதுவரை தமிழகத்தில் நடக்கும் பிராசஸ். இதில் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் இயங்கி கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகளை குறை சொல்ல ஒன்றுமில்லை. அவர்கள் அவரவர்கள் எல்லைக்குள்தான் இயங்க முடியும். ஒருபோதும் நக்சல்பாரிகளைபோல ஆதிக்க சாதி அமைப்புகளுக்கு மரண பயத்தை உண்டாக்காது.திரும்பவும் சீனிவாசராவ் சொன்னதைத்தான் சொல்கிறேன்..அடித்தால் திருப்பி அடி. இனி ஒருபோதும் உன்மேல், உன் குடிசைமேல் கை வைக்க முடியாதபடி அடி. தனியாக சென்று அடிக்காதே. உடன் வன்னிய, தேவர், கவுண்ட ஆதிக்க சாதியை சேர்ந்த உழைக்கும் மக்களையும் அழைத்து சென்று அடி..Courtesy: வினவு.