நக்சல்பரி முன்னும் பின்னும் சுனிதி குமார்
நக்சல்பரி முன்னும் பின்னும் சுனிதி குமார்

நக்சல்பரி முன்னும் பின்னும் சுனிதி குமார்

எதிர்கால தவறுகளைத் தவிர்ப்பதற்காகக் கடந்த காலத் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தைத் தெரிந்துக் கொள்வதற்காக மட்டுமே நாம் கடந்த காலததைப் பற்றிய அக்கறை கொண்டிருக்கவில்லை. கடந்த காலத்தில் இருந்து கற்றுக் கொண்டு, அது தற்போதைய காலத்திற்க்கும் எதிர்காலத்திற்க்கும் சேவை செய்ய வேண்டும் என்பதையே விரும்புகிறோம்.
தனி நபர்களுடன் நாம் கடப்பாடு கொண்டிருக்கவில்லை: மாறாக இந்திய மக்களின் விடுதலை என்ற இலட்சியத்துடன் தான் நாம் கடப்பாடு கொண்டுள்ளோம். எனவே, நமது தலைவர்கள் மீது நாம் வைத்துள்ள மதிப்பு விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டதல்ல.
கட்சியின் கொள்கையில் நிலவிய எதிர்மறைக் கூறுகளை ஆய்வதில் நமது உணர்வுகள் நம்மை தடுத்திட இயலாது.
அவர்களுடைய கொள்கைகள், மற்றும் நடவடிக்கைகள், அவர்களுடைய குறைப்பாடுகள் மற்றும் எல்லைகள் ஆகியவற்றை நாம் மூடி மறைக்கப் போவதில்லை. அதற்க்கு மாறாக, யாருடைய உணர்வும் புண்பட்டு விடக் கூடாது எனக் கருதாமல், அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவோம்.
நாம், ” எதிர்கால தவறுகளைத் தவிர்ப்பதற்காகக் கடந்த காலத் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்” நமது தலைவர்கள் பின்பற்றிய தவறான கொள்கைகளை விமர்சிப்பதன் மூலம் நாம் நமது சொந்த சுய விமர்சனம் மேற்கொள்கிறோம்.
மாவோ கூறியது போல,”கடந்த காலத்தில் மக்களுக்கு இருந்த அனுபவமின்மை காரணாமாக”இடது” விலகல் பிரச்சினை எழுந்தது . அனுபவம் இல்லையெனில் தவறுகளைத் தவிர்ப்பது கடினமாகும். அனுபவமின்மையிலிருந்து அனுபவம் பெறுவது என்ற நிகழ்ச்சி போக்கின் ஊடாகத் தான் ஒருவர் பயணிக்க வேண்டும்.
நக்சல்பரி மக்களிடையே நம்பிக்கையை விதைத்தது, நமது மக்களை ஒடுக்குமுறையிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் காப்பாற்றுவது பற்றிய நம்பிக்கை, அந்த நம்பிக்கை இன்னமும் நனவாகாமல் உள்ளது. எவ்வளவு நீண்ட , இடர்பாடு மிக்க பாதையாக இருப்பினும், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளப்படினும் புரட்சியானது வெற்றிப் பெற்றே தீரும்; ந்ம்பிக்கை நனவாகும் என்பதில் நாம் உறுதிக் கொள்வோம்.
நக்சல்பரி முன்னும் பின்னும் சுனிதி குமார் கோஷின் நூலின் முன்னுரையிலிந்து. இன் நூலானது நக்சல்பரியின் நினைவூட்டல்கள் , குறிப்பிடுவது மற்றும் மதிப்பீடு உண்மையில், இந்த புத்தகம் இன்னும் அதனை பேச வேண்டியவர்களுக்கு ஆம் மார்க்சியம் லெனினியம் மாவோ சிந்தனையை தூக்கி பிடிக்கும் அணிகள் இதனை வாசிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நேர்மையான, முழு அளவிலான விமர்சனத்தோடு நடைமுறை தவறுகளை சுட்டிக் காட்டி நிகழ்வுகளை முன்னிருத்தியுள்ளார்.
தேவையை கருதி தொடர்ந்து எழுதுவேன்……

(https://www.epw.in/node/146699/pdf)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *