நகர் வலம்
நகர் வலம்

நகர் வலம்

சிறுகதை- செ. கணேசலிங்கன் -
மழை தூறிக்கொண்டிருந்தது. அந்த ஒட்டலின் முன்னே சிறு மழை நீருடன் சாக்கடைநீர் சங்கமமாகிக் கொண்டிருந்தது. கசங்கிய பேப்பரின் மேல் கருகிய பாண் செருவல்கள் மிதந்து கொண்டிருந்தன. அவ்விடத்திலேயே உட்கார்ந்திருத்து அவற்றைப் பொறுக்கி வாயில் திணித்துக் கொண்டிருந்தான் அவன். அரையில் அழுக்கான சாரம் மேலில் கிழிந்த சட்டை, வாராத தலை; அரைத்தாடி, ஐம்பது வயது மதிக்கலாம். அமைதியாக உட்கார்ந்தபடியே அவன் பாண் கருகல்களை பொறுக்கி வாயில் போட்டுக் கொண்டிருந்தான்,
ஒட்டல் வானெலி அறிவித்தலில் வாந்தி பேதியைத் தடுக்கும் முறைகள் பற்றி நண்பர் சுந்தாவின் குரல் ஒலித்துக்கொண்டிருந்தது. அக் காட்சியைப் பார்த்தும் பார்க்காதவர்போல நடைபாதையிலும் தெருவிலும் சுறுசுறுப்பாக் மக்கள் நடந்துகொண்டிருத்தனர் சமுதாயத்தில் இவை சாதாரணம், தவிர்க்கமுடியாதவை என்ற எண்ணமா?
புறக்கோட்டை பஸ் நிலையத்தை அடைந்துவிட்டேன். பிச்சை யெடுப்போரை முன்னரும் இங்கு பார்த்திருக்கிறேன், அவர்கள் வாயி லிருந்து இத்தகைய புதிய குரல்களை நான் கேட்டதில்லை.
மாத்தையா, இரண்டு நாளாய்ப் பட்டிணி, இந்தப் பிள்ளையைப் பாருங்கோ?
ஒட்டி உலர்ந்த குழந்தை, தாயின் சட்டையைப் பிடித்தபடி கத்திக் கொண்டிருந்தது. ஒரு பத்துச் சதத்தை எடுத்துக்கொடுத்தேன். அத்துன்பக்காட்சியிலிருந்து விடுதலை பெற முயன்றேன்.
"குழந்தைக்கு வெறும் தேத்தண்ணி பருக்கவாவது த ர் ம ம் கொடுங்க"
வெறும் தேநீரின் விலை 35 சதம், அதை அவள் நினைவூட்டிய தில் தவறில்லை. பிச்சையெடுப்போரின் நிலையே எத்தனை மோசமாகி விட்டது.
மழைக்கு ஒதுங்கி ஒரு தாழ்வாரத்தில் நின்றேன்.
*மாத்தையா பஸ்ஸிற்கு காசில்லை. ஒரு ரூபா தாருங்கோ?
"நீ பெரிய பிச்சைக்காரணுயிருக்கிருயே. ஒரு ரூபாவை துணிச்ச லோடு கேட்கிருப்"
கிராமத்திலை பட்டிணி இங்கே ஏதாவது வேல் தேடிப் பிழைக் லாமென்று வந்தேன். நேற்றுத் தொடக்கம் சாப்பிடவேயில்லை. ஊருக் குத்திரும்ப காசில்லை."
இப்படியாகப் பிச்சை கேட்கும் பலரைப் பார்த்திருக்கிறேன். அவனது உடற்சோர்வையும் முகத்தையும் பார்த்தபோது அவன் பேசுவதில் பொய் தொனிக்கவில்லை.
*ஏனப்பா கிராமத்தைவிட்டு வாறியள், அங்கே ஏதாவது கூலி வேலை செய்து பிழைக்கலாமே?
*அறுவடை வேளைகளில் தான் ஏதேன் கூலிவேலை கிடைக்கும், மற்ற வேலைகளுக்கெல்லாம் டிராக்டர் இருக்கு.?
'நீ கிராமத்துக்கே போய்விடு, கூப்பனவது இருக்குமே. அரைக் கொத்தரிசியாவது சும்மா கிடைக்கும்."
‘கஞ்சி காய்ச்சவும் அதுபோதாதென்றுதான் அதை அடைவு வைச்சிட்டு இங்கே வந்தேன்'
என் மனத்தை திருப்திப் படுத்த ஒரு ரூபா வைக் கொடுத்துவிட்டு வெளியேறினேன். அரைக் கொத்தரிசி கூட ஏழைக்குப் பயன்படாது போய் விடுகிறதே என்று மனம் ஏங்கியது. இதைக்கூட ஆளும் வர்க் கம் ஏன் வழங்கவேண்டும்? தொழிலாள, விவசாயிகளை அரைப்பட் டினியில் உயிரோடு வைத்து உழைப்பைப் பெறுவதற்கா? அல்லது. அவர்களின் புரட்சியுணர்வை தர்மப்பிச்சை மூலம் மழுங்கடிக்கவா?
நாலாம் குறுக்குத் தெருவால் வந்து கெய்சர் வீதியில் மார்க்கெட் புறமாகத் திரும்பினேன். எதிர் மூலையில் பெரிய பிராமண ஒட்டல். எச்சில் இலைகள் கெய்சர் வீதியில் வீசப்படுவதை நீண்டகாலமாகவே அறிவேன். அத்த எச்சில் இலைகளிடையே மூன்று, நாலு பையன்கள் ஒவ்வொரு இலையாக எடுத்து, துடைத்து எஞ்சிய உணவுகளை சேகரித் துக்கொண்டிருந்தனர். லொறிகளின் உறுமல், சுறுசுறுப்பான மக்கள், பணம் புரளும் வீதிகள் சங்கமிக்கும் இடம். அங்கே இத்தகைய இழி வான நிலையா?
முதலாளித்துவத்தின் மிகப் பெரிய முரண்பாடு பணமும் வறுமை, யும் அருகருகே இருப்பதுதான் என்ற மாக்ஸ்ஸின் கோ ட் பா டு நினைவு வத்தது.
அந்த பேக்கரியின் முன்னே முண்டியடித்துக் கொள்ளும் கியூ வரிசை. அவர்களிடை ஒழுங்கு நிலைநாட்ட பொல்லோடு பொலிசார். காலையிலும் மாலையிலும் கால்கடுக்க மக்கள் கூட்டம். இது அநாக ரிகக் காட்சியாக ஆளும் வர்க்கத்தவருக்குத் தெரியவில்லையா?
கர்ட்டுமிராண்டியாக உணவுக்கலைந்த மனிதன் காலம் அநாகரிக காலம் என்று இன்று பாடசாலை களில் பாடங் கற்பிக்கிருர்களே. உயிர்வாழத் தேவைப்படும் அந்த அடிப்படைத் தேவையையும் நாக ரிகம் பேசும் சமுதாயத்தால் நிவர்த்தி செய்ய முடியவில்லையே.
மார்க்கட் ஊடாக நடந்தேன். மார்க்கட்டில் ஒரே நெருக்கடி. தெருக்களிலே முதன்மையாகக் காட்சியிலிருந்த அரிசியை மட்டும் காண முடியவில்லை.
மாலைபில் வேலை முடிந்து சோண்டர்ஸ் பிளேஸ் வழியாக வந்தேன். வாழைத்தோட்ட பூங்கா எதிரே தெருவோரத்தில் நடைபாதையிலே பலர் படுத்துக்கிடந்தனர். முதல் நான் மழை கொட்டியபோது பஸ் கூட அப்பாதையால் ஓட முடியவில்லை. வெள்ளம் கலக்கி நனைந்த கால்சட்டையுடன் நான் வீடு திரும்பினேன். அதே இடத்தில் எத் தன துணிச்சளோடு அவர்கள் நிரையாகப்படுத்திருக்கிருர்கள். வானம் இருண்டுதான் கிடக்கிறது.
எதிரே மரப்பலகைகளால் அடிக்கப்பட்ட சிறு கடைகளும் குடி சைகளும். அங்கு விபசாரம் பரவலாக ைேடபெறுவதாக முனிசிப்பல் சபை கூட்டத்தில் ஒருவர் கூறியதைப் பத்திரிகையில் படித்த நினைவு வந்தது. இத்தனை துன்பங்களிடையே மக்கள் வாழும் போதும் இது ஒன்றே தான் அவருக்கு அசிங்கமாகவும் அநாகரிகமாகவும் தோன்றி பதை எண்ணிக்கொண்டேன். விபசாரம் அவர்களுக்கும் பொழுது போக்கா? முதலாளித்துவத்திலும் அடிமைகளாக வாழும் பெண்க ளுக்கு விபசாரம் ஒன்றில்தான் நேரடியாகக் கூலி கிடைக்கிறது என்று ஓர் ஆங்கிலப் பெண்மணி எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தது நினை வில் வந்தது. அக்கூலி கூட முழுவதும் கையில் கிட்டாது சிறு முத லாளிகள் சுரண்டிவிடுவார்களா? எப்படியும் பிறதொழிலாளர்கள் போல் உயிர்வாழும் நிலையிலாவது காப்பாற்ற மாட்டார்களா?
இந்தச் சமுதாயம் நிலைப்பதற்கு எவ்வித சமூக நீதியுமில்லை என்ற நினைவோடு தேனீர் குடிக்க ஒரு ஒட்டலை நோக்கி நடந்தேன். மற்ருேர் பிரபல ஒட்டலின் முன்னே இருவர் வாலிப வயதான ஒருவனைப் பிடித்து அடித்துக்கொண்டிருந்தனர். அவனும் தடுத்து போராடிக் கொண்டிருந்தான். சிலர் கூடி இடையில் நின்று சண்டையை தடுத் தனர். சாப்பிட்டுவிட்டுப் பணம் கொடுக்காமல் வெளியேறினணும்.
'ஏனப்பா நீ பணம் கொடுக்காமல் போனுப்?"
அவனைப் பார்த்து ஒருவர் கேட்டார்.
"என்னட்டை காசில்லை'
உண்மையை அவன் துணிச்சலோடு கூறியது என் நெஞ்சை துணுக்கிடச் செய்தது.
"இப்ப இதெல்லாம் ஒரு பெரிய தொல்லையாப் போச்சு. அவன் துணிச்சல் பேச்சைவேறு பாத்தியா' ஒட்டல் மேலாள் குறைபட்டான்.
'இவனைப் பொலிசில்தான் ஒப்படைக்க வேண்டும்' ஒட்டல் காஷியர் கூறினன். 'முடிந்தால் கூப்பிடு உன் காவல் நாயை' அவன் ஓடிவிடவில்லை. எதிர்த்து நின்றன். 'அவன் போகட்டும். ஏன் இந்த வீண் தொல்லை?" ஒட்டல் மேலாள் கூறினன். ஏறுபோல அவன் சாவதானமாக நடந்துகொண்டிருந்ததை நான் நீண்ட நேரம் பார்த்துக்கொண்டு நின்றேன்.
பல சம்பவங்களாலும் சோர்ந்து போயிருந்த நெஞ்சில் ஒரு மின் னல் பளிச்சிட்டது. நசுக்கப்படும்போதெல்லாம் சமுதாயம் தூங்கிவிடு வதில்லை. அதன் புதிய தெம்பை அவன் குரலொலி என் காதில் ஒலித் துக்கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *