தோழர் தா.சிவக்குமார் பதில்
தோழர் தா.சிவக்குமார் பதில்

தோழர் தா.சிவக்குமார் பதில்

தோழர் தா.சிவக்குமார் அவர்களின் “சாரு மசூம்தார் ஒரு திருத்தல்வாதி ” என்ற பதிவுக்கு பதிலளிக்கும் முகமாக இந்தப் பதிவு ஒரு முன்னுரையே அவரின் மற்றவாதங்களை நான் இப்பொழுது எதிர் கொள்ளவில்லை அவரின் “சாரூ” மீதான விமர்சனங்களை மட்டுமே பதிலளிக்க முனைகிறேன் தோழர்களே மார்க்சிய தோழர்கள் தங்களின் கருத்துகளை பதிவிடலாம்.
http://ieyakkam.blogspot.com/2020/08/blog-post.html

இன்று நம் கண் முன் :-

ரஷ்யா, சீனாவிலுள்ள சோஷலிச அரசுகள் வீழ்த்தப்பட்டு பலம்வாய்ந்த ரஷ்ய, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கலைப்பதில் ஏகாதிபத்தியவாதிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
நிலைமை இப்படி இருக்க
ஆயுத பலத்தோடு மக்கள் செல்வாக்குப் பெற்ற சில மா.லெ.குழுக்களைக் களின் உள் நுழைந்து அதனை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆளும் வர்க்கம் இதனை கருத்தில் கொண்டே மேலே செல்வோம்.

இந்தியாவில் புரட்சிக்கான ஒரு கம்யுனிஸ்ட் கட்சி இன்னமும் கட்டப்படதா நிலையில் எத்தனை எத்தனை போலி புரட்சியாளர்கள் ஆங்காங்கே காணப் படும் இந்தச் சூழ்நிலையில் பலம்வாய்ந்த கட்சிகளையே ஒழித்துக் கட்டுவதில் வெற்றி பெற்ற ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவில் நிலவுகின்ற குழுக்களைக் கலைப்பதற்கு எந்த அளவிற்குச் செயல்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இப்படி பட்ட சூழ் நிலையில் தோழர் சிவக்குமார் கூறும் திருத்தல் வாதம் பற்றி நுழையும் முன் மார்க்சிய ஆசான்கள் கூறிய விளக்கங்கள் கீழ் காண்போம்:-

திரிபு வாதம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இருக்கும் முதலாளித்துவ போக்கே ஆகும் – லெனின்.
திரிபுவாதம் முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஒரு வடிவம் என்றார் மாவோ.
இது உதட்டளவில் மார்க்சியம் பேசுகிறது. உண்மையில் மார்க்சியத்தின் புரட்சிகர சாராம்சத்தை தூக்கி எறிந்து விடுகிறது. தொழிலாளி வர்க்க இயக்கத்தில் புரட்சிகர நடவடிக்கைகளையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கைவிட்டு, பாராளுமன்ற வாதத்தையும், சட்டவாத்த்தையும் சீர்திருத்தவாத மற்றும் பொருளாதார வாத்த்தையும் பிரசாரம் செய்கிறது.

இரண்டாம் அகிலத்தில் சந்தர்ப்பவாததின் பொருளாதார அடிப்படையை விவரித்த லெனின் , அதன் அரசியல் உள்ளடக்கத்தை பின்வருமாறு தொகுத்து அளித்தார்; வர்க்கங்களின் ஒத்துழைப்பு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுத்தல், புரட்சிகர நடவடிக்கைகளை மறுத்தல், முதலாளித்துவ சட்டமுறையை நிபந்தனை இன்றி ஏற்றுக் கொள்ளுதல், பாட்டாளி வர்க்கத்திடம் நம்பிக்கையின்மையும் முதலாளி வர்க்கத்திடம் நம்பிக்கை போன்றவை என்றும் சந்தர்ப்பவாத முதலாளித்துவ சோசலிசமே அன்றிபாட்டாளி வர்க்கம் சோஷலிஸம் அல்ல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *