தோழர் தா.சிவக்குமார் அவர்களின் “சாரு மசூம்தார் ஒரு திருத்தல்வாதி ” என்ற பதிவுக்கு பதிலளிக்கும் முகமாக இந்தப் பதிவு ஒரு முன்னுரையே
இரண்டாம் பதிவு…
திருத்தல்வாதம் பற்றி மார்க்சிய ஆசான்கள் கருத்து தொடர்ச்சியாக…
இரண்டாவது அகிலத்தில் சந்தர்ப்பவாத ஏகாதிபத்தியத்திற்கும் இருந்த ஒற்றுமை பற்றியும் லெனின் கூறினார், ஏகாதிபத்தியம் என்பதும் சமூக ஏகாதிபத்தியம் என்பதும் சொல்லில் சோசலிசம் பெயரில் ஏகாதிபத்தியம், சந்தர்ப்பவாதம் சீர்திருத்த வாதம் என்பது சமூக ஏகாதிபத்தியம் அல்லது சமூக தேசியவெறி என்ற நிகழ்வாக வளர்கிறது.
குருசேவ் திருத்தல்வாத கும்பல் லெனினாலும் ஸ்டாலினாலும் கட்டி வளர்க்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியையும் சோவியத் சோசலிச நாட்டையும் கைப்பற்றி அதிகாரத்துக்கு வந்ததன் மூலமாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை திருத்தல்வாத கட்சியாக, சோசலிஸ ரஷ்யாவை சமூக ஏகாதிபத்தியம் மாற்றியமைத்தது, எவ்வாறாயினும் இரண்டுக்கும் சலுகை பெற்ற பிரபு குல வர்க்க அடிப்படை என்பதும் இரண்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் புரட்சி நடவடிக்கைகளை கைவிட்டு முதலாளி வர்க்கத்துடன் மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக கூட்டுச் சேர்ந்து கொண்டவை என்பதிலும் வேறுபாடு இல்லை. எனவே தான் லெனின் இரண்டாம் அகில சந்தர்ப்பவாதிகளையும் மோவோ ரஷ்ய குருசேவ் புரட்டல்வாத கும்பலையும் முதலாளி வர்க்கத்தினர், என்றும் வர்க்க விரோதிகள் என்றும் அடையாளம் காட்டினார்.
சோஷலிச நாடுகளில் திரிபுவாதம் முதலாளித்துவ பாதைக்காக போராடுகிறது. மீண்டும் முதலாளித்துவத்தை மீட்டெடுக்க முயல்கிறது. சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் குருசேவ் புரட்டல்வாதத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தபோது உள்நாட்டில் முதலாளித்துவப் பாதையை அதற்கெதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மாவோ கூறினார், திரிபுவாதிகள் சோசலிசத்துக்கும் முதலாளித்துவம் இடையிலான வேறுபாட்டை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை இடையிலான வேறுபாட்டை மறுக்கிறார்கள் .
முதலாளித்துவப் பாதையை சோசலிசப் பாதை என்றும் கூறுகிறார்கள். முதலாளித்துவப் பாதை என்பது சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தையும் பார்க்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவதாகும் .
கலாச்சாரப் புரட்சியின் போது அதிகாரத்திலிருந்து முதலாளித்துவப் பாதையை மேற்கொள்ளும் நபர்கள் சுட்டிக்காட்டிய அவர்களை அகற்றி விட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சி அரைக்கூவல் விட்டார் மாவோ.
தொடரும்