தோழர் சாரு மஜூம்தார் இடது திருத்தல்வாதியா?-சி.பி
தோழர் சாரு மஜூம்தார் இடது திருத்தல்வாதியா?-சி.பி

தோழர் சாரு மஜூம்தார் இடது திருத்தல்வாதியா?-சி.பி

தோழர் தா.சிவகுமார் அவர்களின் சாரூ மஜூம்தார் இடது திருத்தல்வாதி என்ற முக நூல் பதிவுக்கு பதிலளிக்கும் முகமாக இந்தப் பதிவை எழுதுகிறேன்.
அன்புத் தோழர் தா சிவக்குமார் அவர்களுக்கு இந்த விவாதத்தை தொடங்கி வைத்தமைக்கு நன்றி.

எதிர்கால தவறுகளைத் தவிர்ப்பதற்காகக் கடந்த காலத் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த காலத்தைத் தெரிந்துக் கொள்வதற்காக மட்டுமே நாம் கடந்த காலததைப் பற்றிய அக்கறை கொண்டிருக்கவில்லை. கடந்த காலத்தில் இருந்து கற்றுக் கொண்டு, அது தற்போதைய காலத்திற்க்கும் எதிர்காலத்திற்க்கும் சேவை செய்ய வேண்டும் என்பதையே விரும்புகிறோம்.

தனி நபர்களுடன் நாம் கடப்பாடு கொண்டிருக்கவில்லை: மாறாக இந்திய மக்களின் விடுதலை என்ற இலட்சியத்துடன் தான் நாம் கடப்பாடு கொண்டுள்ளோம். எனவே, நமது தலைவர்கள் மீது நாம் வைத்துள்ள மதிப்பு விமர்சனத்திற்க்கு அப்பாற்பட்டதல்ல.
கட்சியின் கொள்கையில் நிலவிய எதிர்மறைக் கூறுகளை ஆய்வதில் நமது உணர்வுகள் நம்மை தடுத்திட இயலாது.
அவர்களுடைய கொள்கைகள், மற்றும் நடவடிக்கைகள், அவர்களுடைய குறைப்பாடுகள் மற்றும் எல்லைகள் ஆகியவற்றை நாம் மூடி மறைக்கப் போவதில்லை. அதற்க்கு மாறாக, யாருடைய உணர்வும் புண்பட்டு விடக் கூடாது எனக் கருதாமல், அவற்றை முழுமையாக வெளிப்படுத்துவோம்.

நமது தலைவர்கள் பின்பற்றிய தவறான கொள்கைகளை விமர்சிப்பதன் மூலம் நாம் நமது சொந்த சுய விமர்சனம் மேற்கொள்கிறோம்.

மாவோ கூறியது போல,”கடந்த காலத்தில் மக்களுக்கு இருந்த அனுபவமின்மை காரணாமாக”இடது” விலகல் பிரச்சினை எழுந்தது . அனுபவம் இல்லையெனில் தவறுகளைத் தவிர்ப்பது கடினமாகும். அனுபவமின்மையிலிருந்து அனுபவம் பெறுவது என்ற நிகழ்ச்சி போக்கின் ஊடாகத் தான் ஒருவர் பயணிக்க வேண்டும்.

நக்சல்பரி மக்களிடையே நம்பிக்கையை விதைத்தது, நமது மக்களை ஒடுக்குமுறையிலிருந்தும் சுரண்டலிலிருந்தும் காப்பாற்றுவது பற்றிய நம்பிக்கை, அந்த நம்பிக்கை இன்னமும் நனவாகாமல் உள்ளது. எவ்வளவு நீண்ட , இடர்பாடு மிக்க பாதையாக இருப்பினும், எவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளப்படினும் புரட்சியானது வெற்றிப் பெற்றே தீரும்; நம்பிக்கை நனவாகும் என்பதில் நாம் உறுதிக் கொள்வோம்.

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏறத்தாழ 100 ஆண்டுகள் நிறைவுறப் போகிறது ஆனால் அவை தனது இலக்கை அடையாமல் பல்வேறு சிக்கல்களில் சிக்குண்டு தவிக்கிறது. அதனை பற்றிய ஒரு தேடுதலே இந்தப் பதிவு….

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியானது 1951 ஆம் ஆண்டுவரை ஒரு முழுமையான வேலை திட்டத்தை உருவாக்கவேயில்லை ஏறத்தாழ 30 ஆண்டுகள் வேலைதிட்டத்தின் வழிகாட்டுதல் இல்லாமலே கழிந்துவிட்டது. CPI(ML) தொடங்கப் பட்ட போதே வேலை திட்டம் வைத்திருந்தது அதன் அடிப்படையில் கட்சி இயங்கவே இல்லை.

ரசியாவில் புரட்சிகர கட்சியை கட்டுவதற்க்கு முன்பே பல்வேறு புரட்சிகர குழுக்கள், மார்க்சிய வாசகர் வட்டங்கள் தோன்றியிருந்தன, 1895-ல் தொழிலாளர் விடுதலைக்கான போராட்ட குழு லெனினால் தோற்றிவிக்கப் படுகிறது. பல குழுக்கள் ஏதேசதிகாரத்தை தனித் தனியாக போராடி ஒன்றும் சாதிக்க முடியாது் என்றும் ஒன்றுபட்ட ரசிய புரட்சிகர கட்சியால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் முடிவுக்கு வரும் லெனின், பலம் வாய்ந்த கட்சியை கட்ட புரட்சிகர குழுக்கள் சமூக ஜனநாயக சக்திகள் இவ்வாறு பல்வேறு குழுக்களை ஒற்றுமை படுத்த நிலவும் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தீர்த்து , சித்தந்த ஒற்றுமை என்பது கட்சியின் வேலை திட்ட அடிப்படையில் அடைய வேண்டும்., என்று கூறுகிறார் லெனின்.

கட்சி கட்டப் பட்ட பின்னரே கட்சிக்குள் பல்வேறு போக்குகள் வருவதை தடுக்க லெனின் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி நாம் பேசுகிறோம் ஆனால் இங்கோ இன்று வரை கட்சி கட்டப் படவேயில்லை என்னே செய்ய… அதற்க்கான முயற்ச்சியில் ஈடுபடும் பலரும் புற நிலை எதற்த்ததை கணக்கில் கொள்வ்தாக புரியவில்லை.

1917 அக்டோபர் புரட்சிக்கு பின் உலகில் பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி உதயமானது, 1925 ல் இந்திய கம்யூனிச கட்சியும், சீன கம்யூனிச கட்சியும் ஏறக்குறைய அதே காலக் கட்டத்தில் உருவானது, இரண்டு கட்சிகளுக்கும் மூன்றாம் அகிலம் தொடர்சியாக வழிகாட்டுதலை அளித்தது. கம்யூனிஸ்ட் அகிலத்தின் வழிகாட்டலை சீன கம்யூனிஸ்ட் கட்சி சரியாக புரிந்து கொண்டு அதை தனது நாட்டின் சூழலுக்கு பொருத்தி மக்கள் ஜனநாயகம் படைத்தது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகிலத்தின் வழிகாட்டுதலை அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி, ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளை தூக்கி எறிந்து மக்கள் ஜனநாயக அரசை நிறுவும்படியும், அதற்க்கு உடனடியாக பிரிந்துகிடக்கின்ற கம்யூனிச குழுக்களையும், தனி நபர்களையும் இணைத்து பலம் வாய்ந்த ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவும் படி திரும்ப திரும்ப வலியுறுத்தியது. ஆனால் இன்றுவரை இந்தப் பணி நிறைவேறவில்லை.

CPI,CPM கட்சிகள் கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை புறகணித்து அதாவது மூன்றாம் அகிலத்தின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டன அதாவது அகிலத்தின் வழி காட்டுதலை புறகணித்தது. பொருளாதார போராட்டங்களும், முதலாளித்துவ தேர்தலுக்கு மட்டுமே தயாரிப்பு செய்வதாகும். இவர்கள் மக்களை அரசியல் படுத்தாமல் வெறும் ஓட்டு சீட்டிற்க்காக என்பதாகி போனது.

பல ஆண்டுகள் CPM திரிபுவாதத்திற்கு எதிராக போராடி நக்சல்பாரி என அறியப் பட்ட இ.க.க (மா-லெ) தொடங்கப் பட்டது. மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைத்து, ஒடுக்கப் பட்ட மக்களுக்கு புரட்சிகர கட்சியின் தலைமையளிக்க சாருமஜீம்தார் முன்கையெடுத்தார். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடித்து, புரட்சியின் மூலம் சுரண்டும் வர்க்க அரசைத் தகர்ப்பது, சோசலித்துக்கான அமைதிவழி மாற்றத்தை நிராகரித்து, புரட்சிகர பலாத்காரத்தை ஏற்றல், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றியமைத்தல், புதிய ஜனநாயகப் புரட்சி,தொழிலாளி, விவசாயிகள் கூட்டணி அமைத்தல் போன்ற அரசியல் நிலைப்பாடுகளை அங்கீகரித்தது.
ஆனால்
வலது திருத்தல்வாத போக்குகளுக்கு சித்தாந்த ரீதியில் பலத்த அடி கொடுக்காமலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்குவதற்க்கான நெறிமுறைகள் மூன்றாம் அகிலத்தினால் உருவாக்கப் பட்டத்தை கவனத்தில் கொள்ளாமலும் கட்சி தொடங்கிய காலத்தில் குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவப் போராட்டமான மாபெரும் விவாதத்தின் நிலைப்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமலும் கட்சி கட்டப் பட்டது. கொரிலாப் போரைத் தவிர மற்ற எல்லா போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் நிராகரிக்கப்பட்டன. இடது குறுங்குழுவாதத்தை புரட்சி வழியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது.
இன்று ஒரு கட்சிக்கு பதிலாக பல குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அனுபவத்தின் வாயிலாகவும், அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக் கொண்டதன் மூலம் இன்று அறியப் படும் நிலைப்பாடுகள்.
எந்த ஒரு அமைப்பும் உண்மையான மார்க்சியத்தை கடைபிடிக்கிறாதா என்பதே கேள்வியாக உள்ளது அவற்றிக்கு காரணம் முன்னோடியின் குறுங்குழுவாத போக்கே முரண்பாடுகளை பற்றி தெளிவில்லாத இயக்க மறுப்பியலே.

விருப்பங்களிலிருந்து அல்லாமல் தமக்கு அப்பால் நிலவும் புறவய உண்மைகளிலிருந்து விசயங்களை பார்க்க வேண்டும் என்று மார்க்க்சியம் போதிக்கிறது. இந்த அரிச்சுவடி பாடத்தை இந்தியப் பொதுவுடைமை இயக்கம் குறிப்பாக மா-லெ என்று அறியப்படும் நக்சல்பாரி இயக்கம் புறக்கணித்து விட்டது, இன்று குழுக்களாக நீடிக்கிறது.

அனைத்து நாடுகளின் ஜனநாயகக் கட்சிகளுடைய ஐக்கியத்துக்காகவும், உடன்பாட்டுக்காகவும் கம்யூனிஸ்டுகள் பாடுபடுகின்றனர்.இங்கோ ஒரு அமைப்பே பல குழுக்கலாக சிதறுண்டு போய் கொண்டுள்ளது.

கம்யூனிஸ்டுகள் தங்கள் கருத்துக்களையும் நோக்கங்களையும் மூடிமறைப்பதை இழிவாகக் கருதுகின்றனர். இன்றுள்ள சமூக நிலைமைகள் அனைத்தையும் பலவந்தமாக வீழ்த்தினால் மட்டுமே தம் இலட்சியங்களை அடைய முடியும் என்பதைக் கம்யூனிஸ்டுகள் வெளிப்படையாக அறிவிக்கின்றனர். கம்யூனிசப் புரட்சியைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கட்டும். பாட்டாளிகளிடம் இழப்பதற்கு ஏதுமில்லை, அவர்தம் அடிமைச் சங்கிலிகளைத் தவிர. அவர்கள் வெல்வதற்கோ ஓர் உலகம் இருக்கிறது.
உலகத் தொழிலாளர்களே, ஒன்றுசேருங்கள்!
(கம்யூனிஸ்டு கட்சி அறிக்கையில் இருந்து)….

சரி திருத்தல்வாதம் தான் என்ன?

ரஷ்யா, சீனாவிலுள்ள சோஷலிச அரசுகள் வீழ்த்தப்பட்டு பலம்வாய்ந்த ரஷ்ய, சீனக் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கலைப்பதில் ஏகாதிபத்தியவாதிகள் வெற்றி பெற்றுவிட்டார்கள்.
நிலைமை இப்படி இருக்க
ஆயுத பலத்தோடு மக்கள் செல்வாக்குப் பெற்ற சில மா.லெ.குழுக்களின் உள் நுழைந்து அதனை சிதைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஆளும் வர்க்கம் இதனை கருத்தில் கொண்டே மேலே செல்வோம்.

இந்தியாவில் புரட்சிக்கான ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இன்னமும் கட்டப்படதா நிலையில் எத்தனை எத்தனை போலி புரட்சியாளர்கள் ஆங்காங்கே காணப் படும் இந்தச் சூழ்நிலையில் பலம்வாய்ந்த கட்சிகளையே ஒழித்துக் கட்டுவதில் வெற்றி பெற்ற ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவில் நிலவுகின்ற குழுக்களைக் கலைப்பதற்கு எந்த அளவிற்குச் செயல்படுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு புரட்சியின் லட்சியம் பல புரட்சியாளர்கள் உண்மையில் ஏகாதியபத்திய சீடர்களாக மக்கள் தவறியும் வர்க்கமாக அணி சேராமல் தவிர்க்க எத்தனை எத்தனை போலி புரட்சிகர அமைப்பு, ஒரு நாடு என்றால் நாட்டிற்க்கு ஒரு கட்சி வேண்டும் அப்படியெனில் இங்கு நடந்துக் கொண்டிருப்பவை என்ன? அதனை விரிவாக வேறொரு நேரத்தில் பேசுவேன்.
இப்படி பட்ட சூழ்நிலையில் தோழர் சிவக்குமார் கூறும் திருத்தல் வாதம் பற்றி நுழையும் முன் மார்க்சிய ஆசான்கள் கூறிய விளக்கங்கள் கீழ் காண்போம்:-

திரிபுவாதம் என்பது தொழிலாளி வர்க்க இயக்கத்தில் இருக்கும் முதலாளித்துவ போக்கே ஆகும் – லெனின்.
திரிபுவாதம் முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஒரு வடிவம் என்றார் மாவோ.
இது உதட்டளவில் மார்க்சியம் பேசுகிறது. உண்மையில் மார்க்சியத்தின் புரட்சிகர சாராம்சத்தை தூக்கி எறிந்து விடுகிறது. தொழிலாளி வர்க்க இயக்கத்தில் புரட்சிகர நடவடிக்கைகளையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கைவிட்டு, பாராளுமன்ற வாதத்தையும், சட்டவாத்த்தையும் சீர்திருத்தவாத மற்றும் பொருளாதார வாத்த்தையும் பிரசாரம் செய்கிறது.

இரண்டாம் அகிலத்தில் சந்தர்ப்பவாததின் பொருளாதார அடிப்படையை விவரித்த லெனின் , அதன் அரசியல் உள்ளடக்கத்தை பின்வருமாறு தொகுத்து அளித்தார்; வர்க்கங்களின் ஒத்துழைப்பு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை மறுத்தல், புரட்சிகர நடவடிக்கைகளை மறுத்தல், முதலாளித்துவ சட்டமுறையை நிபந்தனை இன்றி ஏற்றுக் கொள்ளுதல், பாட்டாளி வர்க்கத்திடம் நம்பிக்கையின்மையும் முதலாளி வர்க்கத்திடம் நம்பிக்கை போன்றவை என்றும் சந்தர்ப்பவாத முதலாளித்துவ சோசலிசமள அன்றிபாட்டாளி வர்க்கம் சோஷலிஸம் அல்ல.

திருத்தல்வாதம் பற்றி மார்க்சிய ஆசான்கள் கருத்து தொடர்ச்சியாக…

இரண்டாவது அகிலத்தில் சந்தர்ப்பவாத ஏகாதிபத்தியத்திற்கும் இருந்த ஒற்றுமை பற்றியும் லெனின் கூறினார், ஏகாதிபத்தியம் என்பதும் சமூக ஏகாதிபத்தியம் என்பதும் சொல்லில் சோசலிசம் பெயரில் ஏகாதிபத்தியம், சந்தர்ப்பவாதம் சீர்திருத்த வாதம் என்பது சமூக ஏகாதிபத்தியம் அல்லது சமூக தேசியவெறி என்ற நிகழ்வாக வளர்கிறது.

குருசேவ் திருத்தல்வாத கும்பல் லெனினாலும் ஸ்டாலினாலும் கட்டி வளர்க்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியையும் சோவியத் சோசலிச நாட்டையும் கைப்பற்றி அதிகாரத்துக்கு வந்ததன் மூலமாக சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியை திருத்தல்வாத கட்சியாக, சோசலிஸ ரஷ்யாவை சமூக ஏகாதிபத்தியம் மாற்றியமைத்தது, எவ்வாறாயினும் இரண்டுக்கும் சலுகை பெற்ற பிரபு குல வர்க்க அடிப்படை என்பதும் இரண்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் புரட்சி நடவடிக்கைகளை கைவிட்டு முதலாளி வர்க்கத்துடன் மிகப் பெரும்பான்மையான மக்களுக்கு எதிராக கூட்டுச் சேர்ந்து கொண்டவை என்பதிலும் வேறுபாடு இல்லை. எனவே தான் லெனின் இரண்டாம் அகில சந்தர்ப்பவாதிகளையும் மாவோ ரஷ்ய குருசேவ் புரட்டல்வாத கும்பலையும் முதலாளி வர்க்கத்தினர், என்றும் வர்க்க விரோதிகள் என்றும் அடையாளம் காட்டினார்.

சோஷலிச நாடுகளில் திரிபுவாதம் முதலாளித்துவ பாதைக்காக போராடுகிறது. மீண்டும் முதலாளித்துவத்தை மீட்டெடுக்க முயல்கிறது. சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் குருசேவ் புரட்டல்வாதத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தபோது உள்நாட்டில் முதலாளித்துவப் பாதையை அதற்கெதிரான போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மாவோ கூறினார், திரிபுவாதிகள் சோசலிசத்துக்கும் முதலாளித்துவம் இடையிலான வேறுபாட்டை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கும் முதலாளித்துவ சர்வாதிகாரத்தை இடையிலான வேறுபாட்டை மறுக்கிறார்கள் .
முதலாளித்துவப் பாதையை சோசலிசப் பாதை என்றும் கூறுகிறார்கள். முதலாளித்துவப் பாதை என்பது சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்தையும் பார்க்க பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிடுவதாகும் .

கலாச்சாரப் புரட்சியின் போது அதிகாரத்திலிருந்து முதலாளித்துவப் பாதையை மேற்கொள்ளும் நபர்கள் சுட்டிக்காட்டிய அவர்களை அகற்றி விட்டு பாட்டாளி வர்க்கப் புரட்சி அரைக்கூவல் விட்டார் மாவோ.

தோழர் தா சிவக்குமாரின் விமர்சனம் இவை…இடது திருத்தல்வாதம் 1967 இல் விவசாயிகளின் ஜனநாயக கோரிக்கையான நிலச்சீர்திருத்த திற்காக எழுந்த ஆயுதம் தாங்கிய விவசாயிகளின் எழுச்சியை புரட்சி என்று தவறாக புரிந்து கொண்டு அந்தப் புரட்சியை நாடு முழுமைக்கும் உரிய புரட்சியாக விரிவுபடுத்திய சாரு மஜும்தாரும் அவருடன் இணைந்த தோழர்களால் 1970இல் உருவாக்கப்பட்ட சிபிஐ எம்எல் கட்சியும் அதன் கட்சி திட்டமும் மார்க்சிய லெனினிய அடிப்படைகளின் படி ஓர் இடது திருத்தல் வாதம் என்றால் மிகையில்லை. லெனின் தனது மார்க்சியமும் திருத்தல் வாதமும் எனும் நூலில் மார்க்சியத்திற்குள் இருக்கும் எந்தெந்த போக்குகள் திருத்தல் வாதம் என்று சொன்னாரோ திருத்தல் வாதத்தின் குண அடையாளங்களாக எதை எதையெல்லாம் சொன்னாரோ அவை அனைத்தும் இந்த மாலெமா இயக்கங்களுக்கும் மிகச் சரியாக பொருந்தும். லெனின் “லத்தீனிய நாடுகளில் புரட்சிகர சிண்டிகலிச வாதத்தால் உருவாகியுள்ள அந்த இடது திருத்தல் வாதமும் கூட தன்னை மார்க்சியத்திற்குத் தகவமைத்து மார்க்சியத்தை திருத்தி வருகிறது” என்று சொல்கிறார். லெனின் இடது திருத்தல் வாதம் என்று சொன்ன புரட்சிகர சிண்டிகலிசத்திற்கும் இந்த மாலெமா இயக்கத்திற்கும் சாராம்சத்தில் பல ஒற்றுமைகளைக் காண முடியும். சிண்டிகலிஸ்டுகள் செய்த முதன்மையான திருத்தம் என்னவென்றால் புரட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பாத்திரத்தை மறுப்பது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் புரட்சி நடத்தாமல் தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் பொது வேலைநிறுத்தம் மூலம் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து உற்பத்தியின் மீதான கட்டுப்பாட்டை கைப்பற்றி விட முடியும் என்பது சிண்டிகலிஸ்டுகளின் இடது திருத்தல் வாதம் ஆகும். சி பி ஐ எம் எல் கட்சியும் சாரு மஜூம்தாரும் புரட்சிக்கு ஒரு புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சிதான் தலைமை தாங்க முடியும் என்பதையும் அந்தக் கட்சி லெனினிய அடிப்படையில் ஜனநாயக மத்தியத்துவ கோட்பாட்டின் அடிப்படையில் தொழிலாளி வர்க்க கட்சியாக கட்டி அமைக்கப்படவேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் பொருள் அது தேவையில்லை என்று அவர்கள் வாய்மொழியாக அறிவித்தார்கள்

அப்படியெனில் உண்மைதான் என்ன?

சாரம்சத்தில் தோழர் தா. சிவக்குமார் உலக புற நிலையை காண மறுக்கிறார், ஏனெனில் உலக கம்யூனிட் கட்சி ஒருபுறம் திருத்தல்வாத குருசேவ் மறுபுறத்தில் மார்க்சிய லெனின்யத்தை காக்க திருத்தல்வாதத்தை எதிர்த்து மாவோ, இவ்வாறு இரு அணிகளாக பிரிகின்றது ஒருபுறம் திருத்தல்வாதிகளும் இன்னொறுபுறம் திருத்தல்வாதத்தை எதிர்போரும்.அதில் திருதல்வாதி குருசேவை தாங்கி நின்ற சிபிஅய், சிபிஎம் சமாதான சக வாழ்வு என்ற முதலாளித்துவ பாதையை பின் பற்றி திருத்தல்வாதிகளாகி போன நிலையில் மாவோவின் பின்னால் திருத்தல்வாதத்தை எதிர்த்த போராட்ட களத்தில் சாரு மஜூம்தார் உறுதியுடன் நின்றார்.

ஆனால் மார்க்சிய லெனினியம் காக்க புறப்பட்ட சிபிஅய்(எம் எல்) என்ற கட்சி தலைமை பொருப்பு இல்லை என்பது உங்களின் அபத்தமான வாதமே தோழர். 70 திட்டம் பற்றிய விமர்சன நூல் என்னிடம் உள்ளது உங்களுக்கு அனுப்புகிறேன் வாசித்து என் நிலையை அறிந்துக் கொள்ள ஆனால் 70 திட்டம் கட்சி திட்டம் அப்படியெனில் கட்சி இருந்தது கட்சி இருந்தது என்றால் அதனை தலைமை தாங்கும் தலைவரும் இருந்தார் தலைவர் இருந்தார் என்றால் அவரின் பங்களிப்பு உண்டல்லவோ தோழரே? நீங்கள் சொல்வது போல் தலைமை பங்காற்றவில்லை என்பது அபத்தமே தோழர்.

இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் இயக்கங்களில் நக்சல்பாரி இயக்கம்தான் பல்லாயிர்க் கணக்கிலான ஊழியர்களின் இன்னுயிர்களை மக்களின் மற்றும் புரட்சியின் நலங்களுக்காக இழந்தது. இத்தகைய அர்ப்பணிப்பை எந்த ஒரு அரசியல் இயக்கமும் கடந்த காலத்திலும் சரி, இனி வரும் காலத்திலும் சரி, காணப் போவதில்லை. இத்தகைய அர்ப்பணிப்பை கொண்டிருந்தாலும் 70 ல் தொடங்கப் பட்ட கட்சி சிறிது காலமே நீடித்தது பிறகு துண்டு துண்டானது இன்றளவும் அவை நீடிக்கவே செய்கிறது. முதல் மாநாடு கூட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆனப் பின்னும் அனைத்து புரட்சிகர் (மா-லெ) குழுக்களையும் இணைத்து “ஒற்றுமை மாநாடு” எந்த ஒரு தத்துவத் தலைமையும் முயலவில்லை. சில குழுக்கள் இணைந்து மையக் குழுவை அமைத்துக் கொள்வதன் மூலமாக தாங்கள் மட்டுமே உண்மையான புரட்சிக்கான கட்சி என்று கூறிக் கொண்டு ஒடுக்கப் பட்ட உழைக்கும் மக்களை அமைப்பாக்கமல் பிரச்சாரம் இன்றி குழுக்கள் உள்ளே முடங்கி கிடக்கும் நிலை.

விருப்பங்களிலிருந்து அல்லாமல் தமக்கு அப்பால் நிலவும் புறவய உண்மைகளிலிருந்து விசயங்களை பார்க்க வேண்டும் என்று மார்க்க்சியம் போதிக்கிறது. இந்த அரிச்சுவடி பாடத்தை இந்தியப் பொதுவுடைமை இயக்கம் குறிப்பாக மா-லெ என்று அறியப்படும் நக்சல்பாரி இயக்கம் புறக்கணித்து விட்டது, இன்று பல குழுக்களாக நீடிக்கிறது.

திருத்தல்வாதத்தை எதிர்த்த போராட்ட களத்தில் சாரு மஜூம்தார் உறுதியுடன் நின்றார். அவர் திருத்தல்வாதி அல்ல அவர் மீதான சில விமர்சனங்கள் ஏற்புடையவையே தனி நபர் அழித்தொழிப்பே புரட்சி என்றும் கொரிலா போரே புரட்சியை நடத்திவிடும் என்றும் அதி தீவிரவாத இடது போக்கு தானே ஒழிய திருத்தல்வாதம் அல்ல என்பதே என் முடிவு தோழர் தா.சிவக்குமார். (தேவையெனில் தொடருவேன் நன்றி)

திருத்தல்வாதம் பற்றி லெனின். http://www.padippakam.com/padippakam/document/M_Books/m000061.pdf

இவைதான் இன்றைய நிலை… சி.பி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *