தோழர்.எல்.அப்பு. குன்றா பெரு நெருப்பு. அவரை தெரியுமா உங்களுக்கு?
கம்யூனிஸ்டுகளுக்கு சுயசரித்திரம் ஒன்றும் பெரிதில்லைதான், என்றாலும் ஓர் இயக்கத்தின் முதுகெலும்பாய் வீற்றிருக்கும் அப்புவின் வாழ்வினை விரிவாக பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். ஏனெனில் நக்சல்பாரி குறித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருத்தல்வாதம் குறித்தும் அவரின் வாழ்கை பேசும். புரட்சிகர இயக்கங்களில் பங்கெடுக்கும் பல தோழர்கள் அவரின் அர்பனிப்பு செயல் இதுநாள் வரையிலும் அறிந்து செயல்படாமை ஏன் என்பது வேதனை மிக்க ஒன்றாகும்.
நக்சல்பாரி இயக்கத்தின் தமிழ்நாட்டுத் தலைவர் தோழர் அப்புவின் மரணத்தைப்போலவே மறைக்கப்பட்டுவிட்டது அவரின் புரட்சிகர தியாக வரலாறும்.
கோவையை பூர்வீகமாமக் கொண்ட தோழர் அப்புவுக்கு அற்புதசாமி என்பதே இயற்பெயர். அற்புதசாமி பிறகு அப்புவாக மாறினார். கோவை கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த இவர் இளமை காலம்தொட்டே பொதுவுடைமைவாதி.
தொழிற்சங்களில்….
தோழர்அப்புமுனிசிபல்தொழிலாளர்சங்கம், மோட்டார்தொழிலாளர்சங்கம், ஓட்டல்பணியாளர்சங்கம்மில்தொழிலாளர்சங்கம்எனபல்வேறுதொழிற்சங்கங்களில்பங்கெடுத்துஅவற்றுக்குமுன்னணிபொறுப்பாளரானார். நிலமீட்சிப்போராட்டம், பஞ்சாலைப்போராட்டம்எனபல்வேறுபோராட்டங்களுக்குதலைமைதாங்கிசிறைசென்றார். அவர்மாநிலஅளவில்முன்னோடியானதொழிற்சங்கசெயல்பாட்டாளரானார்.
கட்சி மீது அதிருப்தி.
1.’இந்தியாவின் சுதந்திரம் போலியானது‘என்ற தோழர். இராஜேஸ்வரராவ் கால 1950 ம் ஆண்டைய பழைய வரையரைகளை காற்றில் பறக்கவிடப்பட்டு 1955-ம் ஆண்டுக்குள்ளாக சி.பி.ஐ. இந்தியாவை முழு சுதந்திரம் படைத்த இறையாண்மையுடன் கூடிய நாடு என ஏற்றுக் கொண்டது.
2.தரகு, தேசியம் என எந்த வரையரையும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய உள்நாட்டு முதலாளிகளையும் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் என வகைபடுத்தியது.
3.மக்கள் ஜனநாயகத்தை அடையவும், பிறகு சோசலிசத்தை எட்டவும் பராளுமன்ற பாதையை தீர்மானித்தது.
கட்சியின் இப்போக்கினால் மெல்ல மெல்ல புகையத் தொடங்கிய உட்கட்சிப் பூசல் 1962ம் ஆண்டு வாக்கில் வெடிக்கத் தொடங்கியது. 101உறுப்பினர்களைக் கொண்ட ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பேரவை உறுப்பினர்களில் ஒருவராக அப்பு அப்போது இருந்தார். அப்பு, கட்சியின் திரிபுவாதப் போக்கை கட்சி அணிகள் மத்தியில் கொண்டுபாேகும் தீவிர முயற்சியில் செயல்பட்டு வந்தார். 1962 ம் ஆண்டு பாலக்காடு சென்று ஏ.கே. கோபாலனைச் சந்தித்து அதிருப்தியாளர்கள் சார்பாக ஓர் பத்திரிக்கையை கொண்டுவர விரும்புவதாக தெரிவித்தார். அப்புவுடன் (பின்னாளில் என்.சி.பி.எச். மேலாளராக பொறுப்பு வகித்த) தோழர். கீதானந்தனும் உடனிருந்தார். ஏ.கே.கோபாலன் சாத்தியமிருந்தால் பத்திரிக்கை நடத்துங்கள் என ஆலாசனை வழங்கினார். கோவை திரும்பிய தோழர்.அப்பு; ராமுண்ணி, கண்ணாக்குட்டி , பூபதி, உள்ளிட்ட தோழர்களின் உதவியோடு பத்திரிக்கைக்காக நிதி திரட்டலில் ஈடுபட்டார்.
பத்திரிக்கை தொடங்குவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்த வேளையில்தான் நேரு தலைமையிலான இந்திய அரசு இந்திய– சீனப்போரில் தேசதுரோகம் இழைத்துவிட்தாகக் கூறி கம்யூனிஸ்டுகளை கைது செய்யத் துவங்கியது.
நாடு முழுவதும் சுமார் 1000 த்துக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்டுகள் கைதுசெய்யப்பட்டனர். தமிழகத்தில் 80 தோழர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் தோழர் அப்புவும் ஒருவர். சுமார் ஓர் ஆண்டுகாலம்வரை சிறையில் இருந்த தோழர் அப்பு, வெளிவந்த பிறகு கோவை தொழிலாளர்களிடம் நிதி திரட்டினார். அவரின் முன்முயற்சியால் ‘கோவைத் தொழிலாளர் வர்க்கம் கொடுத்த செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடுவோம்’ எனும் வாசகத்தோடு தீக்கதிர் வார இதழ் 1963-ம் ஆண்டு ஜுன் 29-ம் தேதியன்று அப்புவை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்தது. சி.பி.ஐ. அமைப்பு ரீதியாக பலமுறை பத்திரிக்கையை நிறுத்தக் கோரியும் அதை ஏற்காது அப்பு தொடர்ந்து நடத்திவந்தார்.
இன்னும் வரும்…