தோழர் அப்பு-2
தோழர் அப்பு-2

தோழர் அப்பு-2

கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி போக்கானது மெல்ல மெல்ல வளர்ந்து கட்சியே பிளவுபடும் சூழலுக்கு இட்டுச் சென்றது. ஏற்கனவே தெனாலியில் கூட்டப்பட்ட அதிருப்த்தியாளர்களின் மாநாட்டில் அறிவித்தற்கு ஒப்ப கலகத்தாவில் 1964- ம்ஆண்டு ஆக்டோபர் 31 முதல் 7 நாட்களுக்கு நடைபெற்ற முக்கியத்துவம் வாய்ந்த பேராயம் கட்சி இரண்டாக பிளவு பட்டதை உணர்த்தியது. “ஒப்பற்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக விளங்கிய நேருவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தோடு தொடங்கியது பேராயம்.

சி.பி. யின் வெளிப்படையான துரோகமும், புதியதாக அழைப்பு விடுத்திருக்கும் தலைவர்களின் உணர்ச்சி மயமான உரைகளும் ஆக்கபூர்வமான தோழர்கள் பலரையும் அதில் இணைத்தது. ஏறத்தாழ சுமார் ஒரு வருடகாலமாக புதியதாக உருவாக்கப்பட்ட கட்சிக்கென தோழர்கள் உழைத்துக் கொண்டிருந்தனர். அப்போதுதான் புதிய கட்சியின்( தொடக்கத்தில் இரு கட்சிகளுக்குமே சி.பி. எனத்தான் பெயர் இருந்தது. சின்னங்கள் ஒதுக்கீடு தொட்பாக எழுந்த சிக்கலில் தேர்தல் கமிஷனின் ஆலோசனைப்படியே சி.பி. .(எம்) என ஆனது.) தலைமைக் குழுவானது 1967-ம் ஆண்டு தேர்தலுக்கு ஆயத்தமாகுமாறும், காங்கிரஸ் அமைச்சரவையை தூக்கியெறியுமாறும் அணிகளுக்கும், மக்களுக்கும் அரைகூவல் விடுத்தது. மேலும் எதிர் கூட்டணி உருவாக்க பிற கட்சிகளோடு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதன்மூலம் ஆயுதம் தாங்கிய வர்க்கப் போராட்டம் என்பதை நடைமுயைில் அது கைவிட்டது. சி.பி..யோடு ஆழமாக கருத்து வேறுபாடுகளோடு வெளிவந்த அப்பு போன்ற தோழர்களுக்கு புதிய கட்சியின் இந்த அழைப்பு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. தேர்தலை சந்தித்த கட்சி எட்டு மாநிலங்களில் காங்கிரஸை தோற்கடித்தது. கூட்டணி மூலம் தமிழகத்தில் தி.மு. ஆட்சிக்கு வந்தது.

கட்சியின் அப்போதைய செயலாளர் சுந்தரையா மத்திய அமைச்சர் குல்சாரிலால் நந்தாவுக்கு சரணாகதி கடிதம் எழுதியது, இ.எம்.எஸ் பாக்கிஸ்தானுக்கு எதிராக போர்செய்த ஜவான்களுக்கு மக்களை இரத்த தானம் செய்யக் கோரியது என படிப்படியாக சி.பி.எம். மின் மீது தோழர் அப்புவுக்கும் இதர புரட்சிகரத் தோழர்களுக்கும் அதிருப்தி தோன்றியது. சாரம்சத்தில் இரண்டு திரிபுவாதிகளுக்கும் இடையே கோட்பாட்டு ரீதியில் எந்த வேறுபாடுகளும் இல்லை என்பதை சி.பி.எம் மின் நடைமுறை உணர்த்தியது. தங்களின் புரட்சிகர நோக்கமானது நவீன திரிபு வாதிகளால் பாழாவது கண்டு மெய்யான புரட்சியாளர்கள் பதைபதைத்தனர். தோழர் அப்புவின் தலைமையில் உட்கட்சியில் நவீன திரிபுவாதம் குறித்தும் அதை அம்பலப் படுத்தியும் போராடினர்.

இன்னும் வரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *