தேசியம் =இந்தியா தேசியத்தின் வளர்ச்சி

தேசியம் என்பது நவீன காலத்திய சமூக நிகழ்வாக ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள தேசிய இனம் தமக்குரிய வரலாற்று வளர்ச்சியுடன் தம்மை ஒரு தேசத்தினராக உருவாக்கிக் கொள்ளும் இத்தகைய நிகழ்ச்சிப் போக்கில் அவர்களின் அரசியல் ,பொருளாதாரம், பண்பாடு ஆகிய துறைகளில் ஏற்படும் மாற்றங்களின் தொகுப்பே தேசியமாகும். இது தனக்கென ஒரு தேசிய அரசை முன் நிபந்தனையாக கொண்டது .
தேசியம் முதல் முதலில் முதலாளிய நாடுகளில் தோன்றியது. அதற்கு முந்திய சமூக அமைப்புகளில் தேசியம் என்பது கருத்தளவில் கூட கிடையாது இதனாலே தேசியத்தை பிரெஞ்சு புரட்சியின் குழந்தை என்று சொல்வர். பிரஞ்சு புரட்சி தொடர்ந்து உலகில் ஏற்பட்ட பல்வேறு தேசிய பிரச்சினை காலகட்டத்தில் தேசியம் குறித்த பார்வையும் பரிமாணமும் அகன்று விரிந்தன .
எனினும் உலகில் உள்ள அனைத்து தேசங்களிலும் தேசியத்தின் தோற்றம் ஒரே அச்சில் வார்க்கப்பட்ட தாக இராது. இது அந்த தேசத்தின் அரசியல் பொருளாதார சமூக நிலைமைகளை ஒட்டியே அமைவதாகும் .இந்த விதத்தில் பார்த்தால் மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் ஜப்பானிலும் தோன்றிய தேசியத்துக்கும் ஜப்பான் தவிர பிற ஆசிய நாடுகளில் தோன்றிய தேசியத்திற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஐரோப்பிய நாடுகளில் தேசியம் தேசிய இனங்கள் தமக்கு ஒரு சுய அரசை ஏற்படுத்திக்கொள்ளும் விருப்பத்திலும் தேசிய இனங்களுக்கு இடையிலான மோதல்களில் நாளும் தோன்றியது எனக் குறிப்பிடுவர் ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய தேசியத்தை அந்த நாடுகளின் முதலாளிகள் சமூக அமைப்பின் தோற்றத்தோடு இணைத்து காண்பர்.
ஆக முதலாளிய தேசியத்தின் வகைப்பாட்டு நாம் அப்படியே ஆசிய ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயன்படுத்தலாகாது என இதன் மூலம் அறிகின்றோம் இன்னும் விளக்கமாக சொன்னால் குடியேற்ற நாடுகளின் தேசியத்தை விளக்கு இது போதாது குடியேற்ற நாடுகளின் தேசியம் வேறுபட்டதாக இருக்கும்.