தேசம், தேசிய இனம் என்றால் என்ன?
தேசம், தேசிய இனம் என்றால் என்ன?

தேசம், தேசிய இனம் என்றால் என்ன?

தேசம், தேசிய இனம் என்றால் என்ன?
ஸ்டாலின் வரையறைப்படி, “ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, பொதுவான வாழும் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகம்”. இது மனித குல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தைச் சேர்ந்த வகையினம் – அதாவது முதலாளித்துவமும் சரக்கு உற்பத்தியும் தோன்றியபின்தான் தேசங்கள் தோன்றின. அவற்றின் வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்தன. அவற்றின் முடிவில் அதாவது முழு பொது உடமை சமுதாயத்தில் தேசங்களும் மனிதர்களுக்கிடையே தேசிய இன வேறுபாடுகளும் மறைந்துவிடும் என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. முதலாளித்துவத்திற்கு முன்பு தேசங்கள் இல்லையா என்றால் பண்டைய பழங்குடி சமூகங்களீன் அழிவில் தேசிய இனங்களுக்கான சில கூறுகள்தாம் தோன்றி நாளாவட்டத்தில் வளர்ந்து வந்தன. நிலப்பிரபுத்துவத்தின் இறுதியில் அதாவது முதாலாளித்துவம் வளர்ச்சியடையும் கட்டத்தில்தான் மக்கள் தேசங்களாக உருவாகின்றனர். தேசிய இயக்கங்கள் தோன்றுகின்றன. தேசிய இயக்கங்கள் முதலாளித்துவத்துடனும் சரக்கு உற்பத்தியுடனும் தொடர்புடையது என்றும் தேசம் என்பது இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்தைச் சேர்ந்த வகையினம் என்றும் ஏன் கூறுகிறோம்? சரக்கு உற்பத்தியும் சரக்கு பரிவர்த்தனையும் துரிதமாக நடந்தேறுவதற்கு மக்களுக்கிடையே நெருங்கிய தொடர்புகளும், ஸ்தல சந்தைகள் ஒன்றோடொன்றுடன் பிணைக்கப்படுதலும் அவசியம். மனித உறவுகளுக்கு மிக முக்கிய சாதனம் மொழியாதலால் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களிடையே பரிவர்த்தனை உறவுகள் மிக விரைவில் வளர வாய்ப்புள்ளது. எனவே சரக்கு உற்பத்தி வளரத் தொடங்கியதும் அது ஒரு மொழிப் பகுதியில் பற்றி படர்கிறது. ஒரு குறிப்பிட்ட மொழிப் பகுதி அரசாங்க ரீதியில் ஐக்கியப்பட்டதாக வழியிருந்தால் சரக்கு உற்பத்தியின் பெருக்கத்திற்கும் அப்பெருக்கத்தை அடிப்படையாக கொண்ட வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தின் அபிவிருத்திற்கும் மிகவும் உகந்தது. எனவே முதலாளித்துவம் தனது சந்தை நலன்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை கைப்பற்ற விரும்புவதுடன் அப்பகுதி அரசாங்க ரீதியில் ஐக்கியப்பட்டதாகவுமிருக்க விரும்புகிறது. அம்மொழியின் ஐக்கியத்தையும் அதன் தங்குதடையற்ற வளர்ச்சியையும் விரும்புகிறது. ஆகவேதான் எல்லா இடங்களிலும் தேசிய இயக்கங்களும் தேசிய அரசு அமைத்தலுக்கான முயற்சிகளும் முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளன. தேசிய இயக்கங்களின் பொருளியல் அடிப்படையைப் பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்.”உலக முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்சுவாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக்கொண்ட அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட்ட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறது. மனித உறவுகளுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணிகத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், இறுதியாக மார்க்கெட்டுக்கும் ஒவ்வொரு சிறிய, பெரிய உடமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து வதற்கும் மிக மிக முக்கியமானத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர்ச்சியும்தான்.”(லெனின்-தேசிய இயக்கங்களின் சுயநிர்ணய உரிமை)

இனி தேசிய இன பிரச்சனை என்றால் என்ன? அது ஏன் எழுகிறது என பார்ப்போம். ஒரு தேசிய இனத்தின் பொருளாதார வாழ்வு, மொழி, கலாச்சாரம் இவற்றின் தங்குதடையற்ற வளர்ச்சி அனுமதிக்கப்படவில்லையெனில் அங்கு தேசிய இன பிரச்சனை எழுகிறது. ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அங்கு ஜனநாயகத்தை அனுமதிக்கவில்லையெனில், ஜனநாயகமற்ற அரசமைப்பைக் கொண்டு சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்போது அந்நாட்டில் தேசிய இன ரீதியில் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளும் இருக்குமேயானால் அப்பொழுது அங்கு நிலவுகின்ற ஜனநாயகமற்ற ஆட்சிமுறையானது அத்தேசிய இனங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது; அதன் மூலம் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கே விலங்கிடுகிறது. அப்போது தேசிய இன ஒடுக்குமுறையும் அதனை எதிர்த்து தேசிய இக்கங்களும் தோன்றுகின்றன. இம்முரண்பாட்டையே தேசிய இன பிரச்சனை என்கிறோம். எனவே இம்முரண்பாட்டிற்கு அடிப்படையாக தீர்க்கமான பொருளாதார காரணிகள் இருப்பதைப் பார்க்கமுடியும். வளரும் உற்பத்தி சக்திகளுக்கு உகந்த உற்பத்தி உறவுகள் நிலவுகின்றனவா இல்லையா, அந்நாட்டின் அரசமைப்பு முறை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையுறாக இருக்கின்றதா இல்லையா என்ற விஷயங்கள் இப்பிரச்சனை தோன்றுவதற்கு அடிப்படையாக விளங்குகின்றன.

தேசிய இன பிரச்சனையானது வரலாற்று ரீதியில் மூவகையாக தீர்க்கப்பட்டுள்ளது. முதலில் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் உதித்த காலகட்டம். இக்கட்டத்தில் நிலப்பிரபுத்துவ உறவுகள் முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதுடன் நிலப்பிரபுத்துவ அரசமைப்பு முறைகள் ஒருங்கிணைந்த தேசிய சந்தைகள் உருவாவதை தடுக்கின்றன. தேசிய இன ஐக்கியத்தை தடுக்கின்றன. ஆகவே வெற்றியடைந்த முதலாளித்துவ வர்க்கங்கள் அனைத்தும் நிலப்பிரபுத்துவ அமைப்புகளை தகர்த்துவிட்டு ஜனநாயக அரசுகளை நிறுவின. இந்நிகழ்ச்சிப்போக்கில் தனித்தனி தேசிய அரசுகள் அமைந்தன. இவ்வாறு இப்பிரச்சனை பழையவகைப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் பகுதியாக தீர்க்கப்பட்டன. ஒரே அரசின் எல்லைக்குள் பல தேசிய இனங்கள் வாழும்போதுகூட அங்கு ஜனநாயக அரசு நிலவினால் தேசிய இனங்கள் அமைதியாக சேர்ந்து வாழ முடியும் அல்லது அமைதியாக பிரிய முடியும் என முதலாளித்துவம் நிரூபித்தது. (உம். சுவிட்சர்லாந்து, நார்வே) அடுத்து தாமதமாக முதலாளித்துவம் வளரத் தொடங்கிய கிழக்கு ஐரோப்பாவில் அதாவது முதலாளித்துவ ஜனநாயகபுரட்சிகள் நிறைவு பெறாதிருந்த நாடுகளில் பல தேசிய அரசுகள் நிலவிய இடங்களிலெல்லாம் அந்த ஜனநாயகமற்ற அரசமைப்புமுறைகளுக்கும் முதலாளித்துவம் வளர்ந்துவந்த தேசிய இன பரப்புகளுக்குமிடையே முரண்பாடு கூர்மையடைந்தது (உ.ம். ஜாரிச ரஷ்யாவில் போலந்து, உக்ரேன்) இம்முரண்பாடுகள் தேசிய இனப் பிரச்சனையாக உருவெடுத்தன. அதே சமயம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்துவிட்டபடியால் முதலாளித்துவம் புரட்சிகர குணத்தை இழந்து பிற்போக்காக மாறிவிட்டபடியால், உலக முதலாளித்துவ புரட்சிக் கட்டம் முடிவுக்கு வந்து உலக பாட்டாளி வர்க்க புரட்சிக்கட்டம் தொடங்கிவிட்டது. எனவே பழைய வகை முதலாளித்துவ புரட்சி கட்டத்தின் போது தீர்க்கப்படாதிருந்த புரட்சிக்கடமைகளை பாட்டாளிவர்க்கம் எடுத்து நிறைவேற்றுகிறது. ஆகவே தேசிய இனப்பிரச்சனைகளும் உலக பாட்டாளி வர்க்க புரட்சியின் பகுதியாக மாறுகின்றன. அக்டோபர் புரட்சியினால் தீர்த்துவைக்கப்பட்டன. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் பிரிந்து செல்லும் ஜனநாயக உரிமை உத்திராவாதம் செய்யபடுகின்ற ஜனநாயக அமைப்பில் பல தேசிய இனங்கள் சமத்துவமாக வாழ முடியும், இன ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என பாட்டாளி வர்க்கம் நிரூபித்தது. முன்பு முதலாளித்துவத்தின் கீழ் விதிவிலக்காகயிருந்த இன சமத்துவ அரசுகள் தற்போது பொது விதியாக மாறுகின்றன.

அடுத்து ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இன பிரச்சனை வேறொரு வடிவத்திலும் எழுந்தது. முதலில் வளர்ந்த ஏகாதிபத்திய அரசுகள் பின் தங்கியிருந்த ஏராளமான நாடுகளை தமதுகாலனி, அரைக்காலனி நாடுகளாக மாற்றின. இதன் மூலம் அக்காலனி, அரைக்காலனி நாடுகளின் சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சியையும், பொருளாதார, சமூக வளர்ச்சியையும் தடுத்தன. உலக முழுவதும் ஒடுக்கும் நாடுகளாகவும், ஒடுக்கப்படும் நாடுகளாகவும் பிரிந்தன. இவ்வாறு தேசிய இன பிரச்சனையானது காலனி, அரைக்காலனி நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்குமிடையேயான முரண்பாடாக வடிவெடுத்தது. இதனை எதிர்த்து காலனி, அரைகாலனி நாடுகளில் தேசவிடுதலை இயக்கங்கள் தோன்றின. ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்க சகாப்தமாக இருப்பதால் அந்த தேச விடுதலை இயக்கங்களுக்கு அந்தந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கங்கள் தலைமை தாங்க முடியவில்லை. ஆகவே இவ்வியக்கங்கள் உலக பாட்டாளி வர்க்க சோசலிச புரட்சியின் பகுதியாக அந்தந்த நாடுகளில் நடைபெறும் புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாகமாறின, இப்புரட்சி முற்றுப் பெற்ற இடங்களில் இத்தேசியயின பிரச்சனைகளுக்குத் தீர்வுக்காணப்பட்டன. (உ-ம். மக்கள் சீனம்) இந்த மூன்றாவது காலகட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. உலக ஏகாதிபத்திய அமைப்பு முடிவுக்கு வரும்போதுதான் இக்கட்டம் முடிவுக்கு வரும்.

இம்மூன்று கட்டங்களிலும் பொதுவாக ஒரு விஷயம் காணப்படுகிறது. ஜனநாயகமற்ற ஆட்சிமுறை நிலவுவதால்தான் தேசிய இனப்பிரச்சனை எழுகிறது. ஆகவே அரசை ஜனநாயக ரீதியில் சீரமைப்பைதில் அதாவது ஜனநாயகப் புரட்சியின் வெற்றியில்தான் இப்பிரச்சனையின் தீர்வு அடங்கியுள்ளது. தேசிய இனப் பிரச்சனையை புரட்சியின் வெற்றிப் பிரச்சனையிலிருந்து தனித்துப்பார்க்காமல் அப்பிரச்சனையிலிருந்து பிரிக்க முடியாத தொடர்புடையதாக புரட்சியின் பொதுவான பிரச்சனையின் பகுதியாக பார்க்க வேண்டும். (ஸ்டாலின் – மீண்டும் தேசிய இன பிரச்சனை குறித்து) அத்துடன் ஜனநாயகத்தை பூர்த்தி செய்ய விரும்புகிற பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் தேசிய இன ஒடுக்குமுறையை அது எந்த வடிவத்தைலிருந்தாலும் விட்டுக் கொடுக்காது எதிர்க்க வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. தேசிய இன ஒடுக்குமுறை, ஒடுக்கப்பட்ட இனத்து முதலாளித்து வர்க்கத்தை மட்டுமல்ல அனைத்து மக்களது மொழியுரிமை, எழுத்துரிமை, மற்ற ஜனநாயக உரிமைகளையும் கட்டுப்படுத்துகிறது. அனைத்து வர்க்கங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது. ஒடுக்கப்பட்ட இனத்தின் பொதுவான சமூக வளர்ச்சியே பாதிக்கப்படுகிறது. இவை மட்டுமின்றி பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பகுதியினரை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசைதிருப்பி வர்க்க ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கிறது. எனவே பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இன சமத்துவத்தை உயர்த்தி பிடிக்கவேண்டும்.

சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? ஒரே அரசின் கீழ் உள்ள பல தேசிய இனங்கள் அதே அரசின் கீழ் வாழ்வதா, பிரிந்துசென்று தனியரசு அமைத்துக் கொள்வதா என அந்தந்த இனத்து மக்கள் தாமாகவே முடிவெடுக்கும் உரிமையிது. ஒரு தேசிய இனம் ஒரு அரசிலிருந்து பிரிந்து செல்ல விரும்பினால் அவ்வாறு பிரிந்து செலவதற்கு அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமையிது. சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வாழ்வதால் அங்கு பிரிந்து செல்லும் உரிமை நிலவும் போதுதான் இன சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். இத்தகைய இன சமத்துவம் என்ற இடைக்கட்டத்தின் மூலம்தான் தேசங்களின் பரிபூரண ஐக்கியத்தை நோக்கி முன்னேறமுடியும். அனைத்து இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடுவது முதலாளி வர்க்கத்தின் நோக்கமல்ல. அது தனது ‘தேசிய உரிமைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும். பாட்டாளிவர்க்கம் மட்டுமே அனைத்து இனங்களின் சமத்துவத்தை, முரண்பாடற்ற ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டது. எந்த அரசின் கீழ் இருப்பது என்பது மக்களின் விருப்பங்களின்படி தீர்மானிக்கபடுவதாகவும் விரும்பினால் பிரிந்து போகவும் உரிமை இருக்கக்கூடிய நிலையில்தான் தேசிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் யதார்த்தமாகின்றன. அத்தகைய ஜனநாயக ரீதியில் அமையப்பெற்ற அரசு நிறுவப்படுவது ஜனநாயக புரட்சியை பூர்த்தி செய்து சோசலிசத்திற்கு முன்னேறுவதற்கு கூட முன்னிபந்தனையாகும். ஆகவே பாட்டாளிவர்க்கம் புரட்சிக்கு முன்பு மட்டுமல்ல. புரட்சிக்கு பின்பும் சோசலிசத்தின் கீழும்கூட சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; இனசமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் அத்துடன் இது ஏகாதிபத்திய சக’ப்தமாகியிருப்பதால், பழைய வகைப்பட்ட உலக முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டு உலகப் பாட்டாளிவர்க்க புரட்சிக்காலம் தொடங்கிவிட்ட படியால் தேசிய இனப் பிரச்சனை உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகளின் பகுதியாக ஆகிவிட்டது.

தேசிய இனப்பிரச்சனையும் முதலாளித்துவ தேசியவாதமும்தேசிய இன சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையும் முதலாளித்துவ தேசிய வாதமும்
திருச்சி மாவட்ட முற்போக்கு இளைஞர் அணி என்ற பெயரால் “இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்கு சரியான தீர்வு தமிழீழ நாடு பெறுவது! தமிழீழ நாடு பெறுவது ஆயுதப் போராட்டத்தின் மூலமே!” என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தேசிய இனப் பிரச்சனைப் பற்றிய பல தவறான கருத்துக்கள் வைக்கப்படுள்ளன. குறிப்பாக ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப்பிரச்சனை புரட்சிக்கு புதிய எல்லைகளை வகுத்து தருவதாகவும், எனவே ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனி அரசாக பிரிவதும், தொழிலாளர் வர்க்க கட்சி, இன அடிப்படையில் தனித்தனியாக கட்டப்படுவதும், இச்சகாப்பத்தத்தில் செய்யப்பட வேண்டியவை என்றும் அது கூறுகிறது. இக்கருத்துக்கள் மார்க்சிய – லெனினியத்திற்கும் முற்றிலும் புறம்பானவை. பாட்டாளி வர்க்க நலனுக்கு விரோதமானவை இது எவ்வாறு என்று பரிசீலிக்கும் முன்பாக தேசிய இனப் பிரச்சனை பற்றியும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இனப் பிரச்சனை எவ்வாறு கையாளப்பட வேண்டும் என்பது பற்றியும் பொதுவான மார்க்சிய – லெனினிய கண்ணோட்டம் என்ன என்பதைப் பார்ப்போம். முதலில் தேசம், தேசிய இனப் பிரச்சனை என்றால் என்ன. சுயநிர்ணய உரிமை கோரிக்கை ஏன் எழுகிறது, அதன் பொருளென்ன என்பவற்றைப் பார்ப்பது அவசியம் அடுத்து தேசிய இனப்பிரச்சனையில் லெனினிய அணுகுமுறை என்ன என்பதையும் ஏகாதிபத்திய சகாப்தத்தில் இப்பிரச்சனை என்ன வடிவம் எடுக்கிறது, அது எவ்வாறு தீர்க்கப்படுகிறது, இப்பிரச்சனையில் பாட்டாளி வர்க்கம் என்ன நிலை மேற்கொள்ளவேண்டும், பாட்டாளி வர்க்க கட்சி எவ்வாறு கட்டப்பட்ட வேண்டும் என்பனவற்றையும் மார்க்சிய – லெனினிய மாவோ சிந்தனை வெளிச்சத்தில் பார்ப்போம். இறுதியாக திருச்சி முற்போக்கு இளைஞர் அணி பெயரால் வெளியிடப்பட்டுள்ள பிரசுரத்தில் காணப்படும் தவறான கருத்துக்களை விமர்சனத்திற்கு எடுத்துக்கொள்வோம்.

தேசம், தேசிய இனப்பிரச்சனை என்றால் என்ன? தேசம், தேசிய இனம் என்றால் என்ன?
ஸ்டாலின் வரையறைப்படி, “ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, பொதுவான வாழும் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகம்”. இது மனித குல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தைச் சேர்ந்த வகையினம் – அதாவது முதலாளித்துவமும் சரக்கு உற்பத்தியும் தோன்றியபின்தான் தேசங்கள் தோன்றின. அவற்றின் வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்தன. அவற்றின் முடிவில் அதாவது முழு பொது உடமை சமுதாயத்தில் தேசங்களும் மனிதர்களுக்கிடையே தேசிய இன வேறுபாடுகளும் மறைந்துவிடும் என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. முதலாளித்துவத்திற்கு முன்பு தேசங்கள் இல்லையா என்றால் பண்டைய பழங்குடி சமூகங்களீன் அழிவில் தேசிய இனங்களுக்கான சில கூறுகள்தாம் தோன்றி நாளாவட்டத்தில் வளர்ந்து வந்தன. நிலப்பிரபுத்துவத்தின் இறுதியில் அதாவது முதாலாளித்துவம் வளர்ச்சியடையும் கட்டத்தில்தான் மக்கள் தேசங்களாக உருவாகின்றனர். தேசிய இயக்கங்கள் தோன்றுகின்றன. தேசிய இயக்கங்கள் முதலாளித்துவத்துடனும் சரக்கு உற்பத்தியுடனும் தொடர்புடையது என்றும் தேசம் என்பது இவ்வாறு ஒரு குறிப்பிட்ட வரலாற்று காலகட்டத்தைச் சேர்ந்த வகையினம் என்றும் ஏன் கூறுகிறோம்? சரக்கு உற்பத்தியும் சரக்கு பரிவர்த்தனையும் துரிதமாக நடந்தேறுவதற்கு மக்களுக்கிடையே நெருங்கிய தொடர்புகளும், ஸ்தல சந்தைகள் ஒன்றோடொன்றுடன் பிணைக்கப்படுதலும் அவசியம். மனித உறவுகளுக்கு மிக முக்கிய சாதனம் மொழியாதலால் ஒரு குறிப்பிட்ட மொழி பேசும் மக்களிடையே பரிவர்த்தனை உறவுகள் மிக விரைவில் வளர வாய்ப்புள்ளது. எனவே சரக்கு உற்பத்தி வளரத் தொடங்கியதும் அது ஒரு மொழிப் பகுதியில் பற்றி படர்கிறது. ஒரு குறிப்பிட்ட மொழிப் பகுதி அரசாங்க ரீதியில் ஐக்கியப்பட்டதாக வழியிருந்தால் சரக்கு உற்பத்தியின் பெருக்கத்திற்கும் அப்பெருக்கத்தை அடிப்படையாக கொண்ட வர்க்கமான முதலாளித்துவ வர்க்கத்தின் அபிவிருத்திற்கும் மிகவும் உகந்தது. எனவே முதலாளித்துவம் தனது சந்தை நலன்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை கைப்பற்ற விரும்புவதுடன் அப்பகுதி அரசாங்க ரீதியில் ஐக்கியப்பட்டதாகவுமிருக்க விரும்புகிறது. அம்மொழியின் ஐக்கியத்தையும் அதன் தங்குதடையற்ற வளர்ச்சியையும் விரும்புகிறது. ஆகவேதான் எல்லா இடங்களிலும் தேசிய இயக்கங்களும் தேசிய அரசு அமைத்தலுக்கான முயற்சிகளும் முதலாளித்துவத்தின் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டுள்ளன. தேசிய இயக்கங்களின் பொருளியல் அடிப்படையைப் பற்றி லெனின் பின்வருமாறு கூறுகிறார்.”உலக முழுவதிலும் முதலாளித்துவமானது நிலப்பிரபுத்துவத்தின் மீது இறுதி வெற்றி கொள்ளும் காலகட்டம் தேசிய இயக்கங்களுடன் இணைந்துள்ளது. சரக்கு உற்பத்தியின் முழுவெற்றிக்கு உள்நாட்டு மார்க்கெட்டைப் பூர்சுவாக்கள் கைப்பற்ற வேண்டியது அவசியம்; ஒரே மொழி பேசும் மக்களைக்கொண்ட அரசாங்க ரீதியில் ஐக்கியப்படுத்தப் பட்ட நிலப்பரப்புகள் அதற்கு வேண்டும். அம்மொழியின் வளர்ச்சிக்கும் அதன் இலக்கியம் உருப்பெற்றுத் திகழ்வதற்கும் முட்டுக் கட்டையாக உள்ள தடைகள் அகற்றப்பட்ட வேண்டும். இங்கேதான் தேசிய இயக்கங்களின் பொருளியல் அடித்தளம் இருக்கிறது. மனித உறவுகளுக்கு மிகமிக முக்கியமான சாதனம் மொழி. நவீன முதலாளித்துவத்துக்கு ஏற்ற அளவில் உண்மையிலேயே சுதந்திரமான, விரிவான வாணிகத்துக்கும், மக்கள் சுதந்திரமாகவும் விரிவாகவும் பல்வேறு வர்க்கங்களாக அமைவதற்கும், இறுதியாக மார்க்கெட்டுக்கும் ஒவ்வொரு சிறிய, பெரிய உடமையாளனுக்கும், விற்போருக்கும் வாங்குவோருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்து வதற்கும் மிக மிக முக்கியமானத் தேவையான சூழ்நிலைகள், மொழியின் ஐக்கியமும் தடையற்ற வளர்ச்சியும்தான்.”(லெனின்-தேசிய இயக்கங்களின் சுயநிர்ணய உரிமை)

இனி தேசிய இன பிரச்சனை என்றால் என்ன? அது ஏன் எழுகிறது என பார்ப்போம். ஒரு தேசிய இனத்தின் பொருளாதார வாழ்வு, மொழி, கலாச்சாரம் இவற்றின் தங்குதடையற்ற வளர்ச்சி அனுமதிக்கப்படவில்லையெனில் அங்கு தேசிய இன பிரச்சனை எழுகிறது. ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அங்கு ஜனநாயகத்தை அனுமதிக்கவில்லையெனில், ஜனநாயகமற்ற அரசமைப்பைக் கொண்டு சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்போது அந்நாட்டில் தேசிய இன ரீதியில் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளும் இருக்குமேயானால் அப்பொழுது அங்கு நிலவுகின்ற ஜனநாயகமற்ற ஆட்சிமுறையானது அத்தேசிய இனங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது; அதன் மூலம் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கே விலங்கிடுகிறது. அப்போது தேசிய இன ஒடுக்குமுறையும் அதனை எதிர்த்து தேசிய இக்கங்களும் தோன்றுகின்றன. இம்முரண்பாட்டையே தேசிய இன பிரச்சனை என்கிறோம். எனவே இம்முரண்பாட்டிற்கு அடிப்படையாக தீர்க்கமான பொருளாதார காரணிகள் இருப்பதைப் பார்க்கமுடியும். வளரும் உற்பத்தி சக்திகளுக்கு உகந்த உற்பத்தி உறவுகள் நிலவுகின்றனவா இல்லையா, அந்நாட்டின் அரசமைப்பு முறை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையுறாக இருக்கின்றதா இல்லையா என்ற விஷயங்கள் இப்பிரச்சனை தோன்றுவதற்கு அடிப்படையாக விளங்குகின்றன.

தேசிய இன பிரச்சனையானது வரலாற்று ரீதியில் மூவகையாக தீர்க்கப்பட்டுள்ளது. முதலில் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் உதித்த காலகட்டம். இக்கட்டத்தில் நிலப்பிரபுத்துவ உறவுகள் முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையூறாக இருப்பதுடன் நிலப்பிரபுத்துவ அரசமைப்பு முறைகள் ஒருங்கிணைந்த தேசிய சந்தைகள் உருவாவதை தடுக்கின்றன. தேசிய இன ஐக்கியத்தை தடுக்கின்றன. ஆகவே வெற்றியடைந்த முதலாளித்துவ வர்க்கங்கள் அனைத்தும் நிலப்பிரபுத்துவ அமைப்புகளை தகர்த்துவிட்டு ஜனநாயக அரசுகளை நிறுவின. இந்நிகழ்ச்சிப்போக்கில் தனித்தனி தேசிய அரசுகள் அமைந்தன. இவ்வாறு இப்பிரச்சனை பழையவகைப்பட்ட முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் பகுதியாக தீர்க்கப்பட்டன. ஒரே அரசின் எல்லைக்குள் பல தேசிய இனங்கள் வாழும்போதுகூட அங்கு ஜனநாயக அரசு நிலவினால் தேசிய இனங்கள் அமைதியாக சேர்ந்து வாழ முடியும் அல்லது அமைதியாக பிரிய முடியும் என முதலாளித்துவம் நிரூபித்தது. (உம். சுவிட்சர்லாந்து, நார்வே) அடுத்து தாமதமாக முதலாளித்துவம் வளரத் தொடங்கிய கிழக்கு ஐரோப்பாவில் அதாவது முதலாளித்துவ ஜனநாயகபுரட்சிகள் நிறைவு பெறாதிருந்த நாடுகளில் பல தேசிய அரசுகள் நிலவிய இடங்களிலெல்லாம் அந்த ஜனநாயகமற்ற அரசமைப்புமுறைகளுக்கும் முதலாளித்துவம் வளர்ந்துவந்த தேசிய இன பரப்புகளுக்குமிடையே முரண்பாடு கூர்மையடைந்தது (உ.ம். ஜாரிச ரஷ்யாவில் போலந்து, உக்ரேன்) இம்முரண்பாடுகள் தேசிய இனப் பிரச்சனையாக உருவெடுத்தன. அதே சமயம் முதலாளித்துவம் ஏகாதிபத்தியமாக பரிணமித்துவிட்டபடியால் முதலாளித்துவம் புரட்சிகர குணத்தை இழந்து பிற்போக்காக மாறிவிட்டபடியால், உலக முதலாளித்துவ புரட்சிக் கட்டம் முடிவுக்கு வந்து உலக பாட்டாளி வர்க்க புரட்சிக்கட்டம் தொடங்கிவிட்டது. எனவே பழைய வகை முதலாளித்துவ புரட்சி கட்டத்தின் போது தீர்க்கப்படாதிருந்த புரட்சிக்கடமைகளை பாட்டாளிவர்க்கம் எடுத்து நிறைவேற்றுகிறது. ஆகவே தேசிய இனப்பிரச்சனைகளும் உலக பாட்டாளி வர்க்க புரட்சியின் பகுதியாக மாறுகின்றன. அக்டோபர் புரட்சியினால் தீர்த்துவைக்கப்பட்டன. பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் பிரிந்து செல்லும் ஜனநாயக உரிமை உத்திராவாதம் செய்யபடுகின்ற ஜனநாயக அமைப்பில் பல தேசிய இனங்கள் சமத்துவமாக வாழ முடியும், இன ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டுவர முடியும் என பாட்டாளி வர்க்கம் நிரூபித்தது. முன்பு முதலாளித்துவத்தின் கீழ் விதிவிலக்காகயிருந்த இன சமத்துவ அரசுகள் தற்போது பொது விதியாக மாறுகின்றன.

அடுத்து ஏகாதிபத்திய சகாப்தத்தில் தேசிய இன பிரச்சனை வேறொரு வடிவத்திலும் எழுந்தது. முதலில் வளர்ந்த ஏகாதிபத்திய அரசுகள் பின் தங்கியிருந்த ஏராளமான நாடுகளை தமதுகாலனி, அரைக்காலனி நாடுகளாக மாற்றின. இதன் மூலம் அக்காலனி, அரைக்காலனி நாடுகளின் சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சியையும், பொருளாதார, சமூக வளர்ச்சியையும் தடுத்தன. உலக முழுவதும் ஒடுக்கும் நாடுகளாகவும், ஒடுக்கப்படும் நாடுகளாகவும் பிரிந்தன. இவ்வாறு தேசிய இன பிரச்சனையானது காலனி, அரைக்காலனி நாடுகளுக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்குமிடையேயான முரண்பாடாக வடிவெடுத்தது. இதனை எதிர்த்து காலனி, அரைகாலனி நாடுகளில் தேசவிடுதலை இயக்கங்கள் தோன்றின. ஏகாதிபத்தியம் மற்றும் பாட்டாளி வர்க்க சகாப்தமாக இருப்பதால் அந்த தேச விடுதலை இயக்கங்களுக்கு அந்தந்த நாட்டு முதலாளித்துவ வர்க்கங்கள் தலைமை தாங்க முடியவில்லை. ஆகவே இவ்வியக்கங்கள் உலக பாட்டாளி வர்க்க சோசலிச புரட்சியின் பகுதியாக அந்தந்த நாடுகளில் நடைபெறும் புதிய வகைப்பட்ட ஜனநாயகப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதிகளாகமாறின, இப்புரட்சி முற்றுப் பெற்ற இடங்களில் இத்தேசியயின பிரச்சனைகளுக்குத் தீர்வுக்காணப்பட்டன. (உ-ம். மக்கள் சீனம்) இந்த மூன்றாவது காலகட்டம் இன்னும் முற்றுப் பெறவில்லை. உலக ஏகாதிபத்திய அமைப்பு முடிவுக்கு வரும்போதுதான் இக்கட்டம் முடிவுக்கு வரும்.

இம்மூன்று கட்டங்களிலும் பொதுவாக ஒரு விஷயம் காணப்படுகிறது. ஜனநாயகமற்ற ஆட்சிமுறை நிலவுவதால்தான் தேசிய இனப்பிரச்சனை எழுகிறது. ஆகவே அரசை ஜனநாயக ரீதியில் சீரமைப்பைதில் அதாவது ஜனநாயகப் புரட்சியின் வெற்றியில்தான் இப்பிரச்சனையின் தீர்வு அடங்கியுள்ளது. தேசிய இனப் பிரச்சனையை புரட்சியின் வெற்றிப் பிரச்சனையிலிருந்து தனித்துப்பார்க்காமல் அப்பிரச்சனையிலிருந்து பிரிக்க முடியாத தொடர்புடையதாக புரட்சியின் பொதுவான பிரச்சனையின் பகுதியாக பார்க்க வேண்டும். (ஸ்டாலின் – மீண்டும் தேசிய இன பிரச்சனை குறித்து) அத்துடன் ஜனநாயகத்தை பூர்த்தி செய்ய விரும்புகிற பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் தேசிய இன ஒடுக்குமுறையை அது எந்த வடிவத்தைலிருந்தாலும் விட்டுக் கொடுக்காது எதிர்க்க வேண்டும் என்பதும் இதிலிருந்து பெறப்படுகிறது. தேசிய இன ஒடுக்குமுறை, ஒடுக்கப்பட்ட இனத்து முதலாளித்து வர்க்கத்தை மட்டுமல்ல அனைத்து மக்களது மொழியுரிமை, எழுத்துரிமை, மற்ற ஜனநாயக உரிமைகளையும் கட்டுப்படுத்துகிறது. அனைத்து வர்க்கங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது. ஒடுக்கப்பட்ட இனத்தின் பொதுவான சமூக வளர்ச்சியே பாதிக்கப்படுகிறது. இவை மட்டுமின்றி பாட்டாளிவர்க்கத்தின் பெரும்பகுதியினரை வர்க்கப் போராட்டத்திலிருந்து திசை திருப்பி வர்க்க ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கிறது. எனவே பாட்டாளிவர்க்கம் எல்லாவிடங்களிலும் சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். இன சமத்துவத்தை உயர்த்தி பிடிக்கவேண்டும்.
-( நன்றி சமரன் )

சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? ஒரே அரசின் கீழ் உள்ள பல தேசிய இனங்கள் அதே அரசின் கீழ் வாழ்வதா, பிரிந்துசென்று தனியரசு அமைத்துக் கொள்வதா என அந்தந்த இனத்து மக்கள் தாமாகவே முடிவெடுக்கும் உரிமையிது. ஒரு தேசிய இனம் ஒரு அரசிலிருந்து பிரிந்து செல்ல விரும்பினால் அவ்வாறு பிரிந்து செலவதற்கு அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமையிது. சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வாழ்வதால் அங்கு பிரிந்து செல்லும் உரிமை நிலவும் போதுதான் இன சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். இத்தகைய இன சமத்துவம் என்ற இடைக்கட்டத்தின் மூலம்தான் தேசங்களின் பரிபூரண ஐக்கியத்தை நோக்கி முன்னேறமுடியும். அனைத்து இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடுவது முதலாளி வர்க்கத்தின் நோக்கமல்ல. அது தனது ‘தேசிய உரிமைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும். பாட்டாளிவர்க்கம் மட்டுமே அனைத்து இனங்களின் சமத்துவத்தை, முரண்பாடற்ற ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டது. எந்த அரசின் கீழ் இருப்பது என்பது மக்களின் விருப்பங்களின்படி தீர்மானிக்கபடுவதாகவும் விரும்பினால் பிரிந்து போகவும் உரிமை இருக்கக்கூடிய நிலையில்தான் தேசிய ஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் யதார்த்தமாகின்றன. அத்தகைய ஜனநாயக ரீதியில் அமையப்பெற்ற அரசு நிறுவப்படுவது ஜனநாயக புரட்சியை பூர்த்தி செய்து சோசலிசத்திற்கு முன்னேறுவதற்கு கூட முன்னிபந்தனையாகும். ஆகவே பாட்டாளிவர்க்கம் புரட்சிக்கு முன்பு மட்டுமல்ல. புரட்சிக்கு பின்பும் சோசலிசத்தின் கீழும்கூட சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; இனசமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் அத்துடன் இது ஏகாதிபத்திய சக’ப்தமாகியிருப்பதால், பழைய வகைப்பட்ட உலக முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டு உலகப் பாட்டாளிவர்க்க புரட்சிக்காலம் தொடங்கிவிட்ட படியால் தேசிய இனப் பிரச்சனை உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகளின் பகுதியாக ஆகிவிட்டது.
இந்த கண்ணோட்டம் மேற்குறிப்பட்ட திருச்சி முற்போக்கு இளைஞர் அணி என்ற பெயரால் வெளியிடப் பட்டுள்ள பிரசுரத்தில் தென்படவில்லை, அது தேசிய இன பிரச்சனைகளை தனித்துப் பார்ப்பதுடன் ஒவ்வொரு இனமும் தனித்தனியாக பிரிவது மட்டுமே ஒரே தீர்வாக கருதுகிறது. ஒவ்வொரு நாடுகளுக்குமுள்ள சிறப்பியல்புகளைக் கணக்கில் கொள்ளாமல் தனித்தேசிய அரசுகள் என்பதை உலகப்பொது விதியாக்குகிறது. ஆகவே இது பற்றிய லெனினிய அணுகுமுறை என்ன என்பதையும் அப்பிரசுரம் ஏகாதிபத்திய சகாப்த்திற்கான தீர்வாக பேசுவதால் அச்சகாப்த்தத்தில் இப்பிரச்சனையின் தீர்வு பற்றிய மார்க்சிய லெனினிய கருத்தோட்டத்தையும் பார்ப்போம்.
தேசிய இனப்பிரச்சனையில் லெனினிய அணுகுமுறைமுதலில் எந்த ஒரு நாட்டின் இனச்சிக்கலையும் பற்றி ஆராயும்போது அதைத் திட்டவட்டமான வரலாற்று எல்லைக்குள் வைத்து அதாவது அந்தநாடு எந்த வரலாற்றுக் கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது என்ற பின்னனியில் ஆராயவேண்டும். ஒரு நாட்டிற்கு ஒரு கட்டத்தில் பொருந்திய தீர்வு இன்னொரு கட்டத்தில் பொருந்திவராது.ஒரே வரலாற்றுக் கட்டத்திலுள்ள இரு நாடுகளில் ஒரு நாட்டை இன்னொரு நாட்டிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் சிறப்பியல்புகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும்.தேசிய இயக்கங்களை பொறுத்தவரையில் முதலாளித்துவத்தின் இரு காலக்கட்டங்களை வேறு படுத்தி பார்க்க வேண்டும்.பல்வேறு நாடுகளின் தேசிய சிக்கல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது சம்பந்தப்பட்ட நாடுகளின் வளர்ச்சிக் கட்டங்கள் ஒப்பிடக் கூடியவைதானா என பார்க்க வேண்டும். ஒரு நாட்டுக்கு பொருந்திய தீர்வு அப்படியே வேறொரு நாட்டுக்குப் பொருந்தாது.ஏகாதிபத்திய சகாப்த்தத்தில் தேசிய இன பிரச்சனைமுதலாளித்துவம் ஏகாதிபத்தியம் என்ற வளர்ச்சிக் கட்டத்தை அடைந்த பின் முதலில் வளர்ச்சி அடைந்த முதலாளித்துவ நாடுகளே பிறநாடுகளை ஒடுக்கும் ஏகாதிபத்தியங்களாக மாறிவிட்டன. ஆகவே உலகம் முழுவதும் ஒடுக்கும் தேசங்களாகவும், ஒடுக்கப்படும் தேசங்களாகவும் பிரிந்து விட்டன. ஆகவே காலனி, அரைக்காலனி நாடுகள் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடையும் பிரச்சனையும் சுயநிர்ணய உரிமைப் பிரச்சனையே.தேசிய விடுதலை யுத்தங்கள் உள்நாட்டு நிலப்பிரபுத்துவத்தை மட்டுமின்றி ஏகாதிபத்தியங்களையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.எந்தகாலனி, அரைக்காலனி நாடுகளிலும் நடக்கும் புரட்சிகளும் பழையவகைப்பட்ட பூர்சுவா ஜனநாயகப் புரட்சியல்ல. புதியவகைப்பட்ட ஜனநாயக்ப் புரட்சியே பாட்டாளி வர்க்கத் தலைமையில் நடக்கும் உலக சோசலிச புரட்சியின் பகுதியே. எனவே காலனி, அரைக்காலனி நாட்டு தேசிய இனப்பிரச்சனைகள் புதிய ஜனநாயகப் புரட்சியின் பிரச்சனையாக அதன் பகுதியாக மாறி விடுகின்றன.காலனி, அரைக்காலனி நாடுகளின் தேசிய இனப்பிரச்சனைகள் இரு அம்சங்கள் கொண்டவையாக மாறுகின்றன. அந்த குறிப்பிட்ட நாடு முழுவதும் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலையடைவதும் அந்நாட்டு எல்லைக்குள் உள்ள அனைத்து தேசிய இனங்களும் சமத்துவம் அடைவதும் என்பவையே அந்த இரு அம்சங்கள். லெனின் ஏகாதிபத்தியத்தின் விதிகளைப் பற்றி ஆய்வுகளை முடிக்கும் முன்பாக போல்சுவிக்குகள் தேசிய இனப்பிரச்சனையை பாட்டாளி வர்க்க புரட்சியின் பகுதியாக பாராமல் பழைய பூர்சுவா – ஜனநாயக புரட்சியின் பகுதியாகப் பார்த்தனர் என்றும், ஏகாதிபத்திய யுத்தமும் ருசியாவில் அக்டோபர் புரட்சியும் தேசிய இனப் பிரச்சனை பழைய பூர்சுவா ஜனநாயகப் புரட்சியின் பகுதியாகயிருந்த நிலையை மாற்றி பாட்டாளிவர்க்க சோசலிச புரட்சியின் பகுதியாக ஆக்கிவிட்டன என்றும் ஸ்டாலின் ‘மீண்டும் தேசிய இனப்பிரச்சனை குறித்து’ என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். அக்டோபர் புரட்சியானது “தேசிய இனப் பிரச்சனையின் எல்லையை விரிவுபடுத்திற்று. ஐரோப்பாவில் தேசிய ஒடுக்குமுறையை எதிர்த்தல் என்ற குறிப்பான பிரச்சனையாக இருந்ததை மாற்றி ஒடுக்கப்பட்ட மக்கள், காலனிகள், அரைக்காலனிகளை ஏகாதிபத்திடமிருந்து விடுவிக்கும் பொதுவான பிரசனையாக ஆகிவிட்டது என ஸ்டாலின் கூறுகிறார்.மேற்கூறிய லெனினதும் ஸ்டாலினதும் ஆய்வுகளின் அடிப்படையில் மாவோ சீனாவில் தேசிய இனப் பிரச்சனைப் பற்றி ஒரு திட்டவட்டமான கொள்கையை உருவாக்கினார். சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி ஏகாதிபத்தியத்திடமிருந்து சீனாவை விடுவித்தல் என்ற தேசிய வடிவத்தை எடுப்பதை அவர் பார்த்தார். அத்துடன் சீன நாட்டினுள் சிறுபான்மை தேசிய இனங்கள் சிறு அளவிலே இருப்பினும் அவற்றின் பிரச்சனையையும் அவர் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறவில்லை. சீனாவின் தேசியத்திற்கு இரு அம்சங்கள் உண்டு என அவர் கூறுகிறார். “ஒன்று சீன தேச விடுதலை, இரண்டாவது சீனாவிலுள்ள தேசிய இனங்கள் அனைத்தின் சமத்துவம். சீனாவிலுள்ள அனைத்து தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு சுதந்திர ஐக்கியப்பட்ட சீனக் குடியரசு (அனைத்து தேசிய இனங்களின் சுதந்திர ஐக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்பு யுத்த பிரபு – எதிர்ப்பு புரட்சியின் வெற்றிக்குப்பின் ஸ்தாபிக்கப்படும் என்ற சன்யாட்ச்சனின் விளக்கத்தை அப்படியே மாவோ ஏற்றுக்கொள்கிறார்) (மாவோ தேர்வு நூல் – முன்னுரை பகுதி கூட்டணி அரசாங்கம் பற்றி பக்கம்225) சீனாவிலுள்ள அனைத்து சிறுபான்மை தேசிய இனங்களின் விடுதலையும் சீனத்தேசத்தின் ஒரு அம்சமாகயிருப்பது எவ்வாறெனில் ஏகாதிபத்தியத்திற்கும் காலனி நாடுகளுக்கும் உள்ள முரண்பாடு என்பதும் ஒரு தேசிய இனப் பிரச்சனையாக விளங்குவதால்தான் சாரமாக கூறுவதெனில் ஏகாதிபத்திய காலத்தின் ஆளும் விதிகளை லெனின் முழுமையாக ஆய்வு செய்து வகுத்தபின் அதாவது 1916க்கு பின் இரு முக்கிய முடிவுகளுக்கு வந்து சேருகிறார்.ஏகாதிபத்தியத்திற்கும் காலனி, அரைக்காலனி நாடுகளுக்குமுள்ள முரண்பாடு தேசிய இனப்பிரச்சனையே அந்நாடுகள் விடுதலையடையும் பிரச்சனை சுயநிர்ணய உரிமை பிரச்சனையே (சோசலிச புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும்)மேற்கூறிய தேசிய இனப் பிரச்சனை உட்பட உலகின் அனைத்து தேசிய இனப்பிரச்சனைகளும் சுயநிர்ணய உரிமை கோரிக்கைகளும் உலகப் பாட்டாளிவர்க்க புரட்சியின் ஒருங்கிணைத்த பகுதிகளே பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில்தான் தீர்க்கப்பட முடியும் ஆகவே பாட்டாளி வர்க்கம் இனங்கள் பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமைக்காகவும் இன சமத்துவத்திற்காகவும் போராட வேண்டும். ‘சுயநிர்ணயம் உட்பட பற்பல ஜனநாயக கோரிக்கைகளும் சார்பற்ற முழுமையல்ல; பொதுவான – ஜனநாயக (தற்போது – பொதுவான சோசலிச) உலக இயக்கத்தின் ஒரு சிறு பகுதியே” (சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதத் தொகுப்பு). ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒவ்வொரு தேசிய இனவாரியாக தனித்தனி அணி கட்டுவதே பாட்டாளி வர்க்க கடமையாக திருச்சி பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளதால் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகளாக லெனினியம் போதிப்பது என்ன என்பதையும் பார்ப்போம்.பூர்ஷ்வா ஜனநாயக புரட்சி முற்றுப் பெறாத நாடுகளில் பாட்டாளி வர்க்க கடமை பூர்ஷ்வா ஜனநாயக புரட்சி முற்றுபெறாத நாடுகளில் அரசமைப்பு ஜனநாயக ரீதியில் சீரமைக்கப்படாத நாடுகளில் அதாவது கிழக்கு ஐரோப்பா நாடுகளிலும், ஆசியாவிலும் தேசியக் கொள்கை விஷயத்தில் பாட்டாளி வர்க்கக் கட்சிகளின் பணி இருவகைப்பட்டதாக இருக்க வேண்டும் என லெனின் கூறுகிறார்.எல்லாத்தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்றுக்கொள்வது, பூர்ஷ்வா வர்க்கம் அனைத்துத் தேசிய இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடாது. தொழிலாளி வர்க்க ஜனநாயகமாவது முரண்பாடற்ற முறையில் மனப்பூர்வமாக இனசமத்துவத்திற்காகப் போராட வேண்டும்.ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைக்குள் வாழும் எல்லாத் தேசிய இனங்களின் பாட்டாளி மக்களும் தங்களது வர்க்கப் போராட்டத்தில் நெருக்கமாக பிரிக்க முடியாது ஒன்றுபடுவது. அவ்வரசின் வரலாற்றில் எம்மாறுதல் நிகழ்ந்தாலும், பூர்ஷ்வாக்களால் தனி அரசுகளின் எல்லைகள் எவ்வாறு மாற்றப்பட்டாலும் இந்த ஒற்றுமை நீடிப்பதாக இருக்க வேண்டும். இந்த லெனினிய நிலை ஒவ்வொரு இனமும் தனித்தனியே பிரிதல், தனித்தனி அணி என்ற கருத்துகளை மறுக்கிறது. ஏகாதிபத்திய சகாப்த விதிகளைப் பற்றி லெனின் முழுமையாக ஆய்வு செய்தபின் இந்த மேற்கூறிய கடமைகள் மாறிவிட்டதாகக் கூற முடியுமா? ஒடுக்கும்தேச பாட்டாளிகளது கடமைகளாகவும் ஒடுக்கப்படும் தேச பாட்டாளிகளது கடமைகளாகவும் லெனின் கூறுவது என்ன? 1916ல் லெனின் எழுதிய சோசலிச புரட்சியும் தேசங்களின் சுயநிர்ணய உரிமையும் என்ற கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட அரசின் எல்லைக்குள் ஒடுக்கப் பட்ட தேசங்கள் பலவந்தமாகப் பிடித்து வைத்துக் கொள்ளப்பட்டிருப்பதற்கு எதிராகப் பாட்டாளிவர்க்கத்தால் போராடமல் இருக்க முடியாது. அதாவது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடமல் இருக்க முடியாது. மற்றொரு பக்கத்தில் ஒடுக்கப்பட்ட தேசத்தின் தொழிலாளர்களுக்கும் ஒடுக்கும் தேசத்தின் தொழிலாளர்களுக்கும் இடையிலான முழுமையான நிபந்தனையற்ற ஒற்றுமையை நிறுவன ஒழுங்கமைப்பு உட்பட ஆதரித்துக் காத்து செயல் படுத்துவது ஒடுக்கப்பட்ட தேசத்தைச் சேர்ந்த சோசலிஸ்டுகள் குறிப்பாக செய்ய வேண்டியதாகும் எனத் திட்டவட்டமாகக் கூறுகிறார். ஒடுக்கும் தேசிய இனத்தைச்சார்ந்த பாட்டாளிவர்க்கம் தமது இன சுரண்டும் வர்க்கங்களின் பேரினவாதத்தையும் பிற இனங்கள் மீதான அடக்குமுறையையும் பிற இனங்களை கட்டாயமாக ஒரு அரசில் பிடித்து வைத்திருப்பதையும் பிரதேச விஸ்தரிப்புகளையும் விட்டுக்கொடுக்காது எதிர்க்க வேண்டும். அந்த அரசு எல்லைக்குள் வாழும் அனைத்து இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமையை கோரவேண்டும். இதைச்செய்யாத ஒரு மார்க்சியவாதி சர்வதேசியவாதியல்ல. அதேசமயம் ஒரு ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தைச் சேர்ந்த மார்க்சியவாதி தனது கிளர்ச்சிகளில் தேசங்களின் மனப்பூர்வமான ஐக்கியத்தை வலியுறுத்த வேண்டும். தனது தேசத்தின் அரசில் விடுதலையை ஆதரித்துக் கொண்டே அருகாமையிலுள்ள அரசுடன் ஐக்கியப் படுவதையும் ஆதரிப்பது சாத்தியமே அவர் சிறு தேசிய குறுகிய மனப்பான்மையும், தனித்துவப் போக்குகளையும் எதிர்த்துப் போராடவிட்டால் அவரும் ஒரு சர்வதேசிய வாதியல்ல. “ஒடுக்கும் தேசத்தின் சமூக – ஜனநாயகவாதி பிரிந்து செல்லும் சுதந்திரத்தையும் ஒடுக்கப்பட்ட தேச சமூக ஜனநாயகவாதி ஐக்கியப்படும் சுதந்திரத்தையும் வலியுறுத்துவது முரண்பாடாக தோன்றலாம். ஆனால் சற்று ஆழமாகச் சிந்தித்தால் சர்வதேசத்திற்கும் தேசங்களின் ஒன்றினைப்பிற்கும் வேறெந்த பாதையும் கிடையாது. இருக்க முடியாது என்பது புரியவரும். (லெனின் – சுயநிர்ணய உரிமைப்பற்றி விவாதத்தொகுப்பு) திருச்சி பிரசுரம் பிரிவினை மட்டுமே ஒரே தீர்வாக பேசுகிறது தனித்தனி அணிகளைப்பற்றி பேசுகிறது தேசிய இனப்பிரச்சினையை பாட்டாளி வர்க்கம் எவ்வாறு முதலாளித்துவ வர்க்கத்திடமிருந்து மாறுபட்ட விதத்தில் அணுகவேண்டும் என்ற பாகுபாட்டை மறந்துவிட்டது. ஆகவே தேசிய இனப் பிரச்சினையில் பாட்டாளிவர்க்க கண்ணோட்டமும் பூர்ஷ்வா கண்ணோட்டமும் பற்றி பிரிவினை எந்த சூழ்நிலையில் ஆதரிக்கலாம் என்பதுபற்றி பாட்டாளிவர்க்கக்கட்சி எவ்விதம் கட்டப்படவேண்டும் என்பதுபற்றி லெனினியக் கோட்பாடு களையும் கூறிவிட்டால் தேசிய இனப்பிரச்சனைப்பற்றிய முக்கியமான கருத்துக்களை விளக்கியவர்களாகி விடுவோம்.தேசிய இனப்பிரச்சனையில் முதலாளித்துவ கண்ணோட்டமும் பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டமும் ஒடுக்கப்பட்ட இனங்களில் முதலாளிவர்க்கம் முதல் பாட்டாளிவர்க்கம் வரை பலவித வர்க்கங்களும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றன. முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளிவர்க்கமும் இருவேறு நலன்களிலிருந்து இப்பிரச்சனையை அணுகுகின்றன. தத்தமது வர்க்க அபிவிருத்திப்போக்கில் இதற்கான தீர்வுகளை முன்வைக்கின்றன.எல்லாத்தேசிய விருப்பங்களையும் ஆதரிப்பதுதான் செயல் பூர்வமானது என பூர்ஷ்வா வர்க்கம் கூறுகிறது ஆனால் பாட்டாளிவர்க்கம் தேசிய இனப் பிரச்சினையில் பூர்ஷ்வாக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் ஆதரிப்பதில்லை தேசிய அமைதியைப் பெறுவதற்காக (இந்த அமைதி பூர்ஷ்வாக்களால் பூரணமாக ஏற்படுத்த முடியாது முழு ஜனநாயகம் மூலமே அடைய முடியும்). சம உரிமைகள் பெற வேண்டிவர்க்கப் போராட்டத்திற்கு சிறந்த நிலமைகள் தோற்றுவிக்க வேண்டி தொழிலாளிவர்க்கம் பூர்ஷ்வாக்களை இப்பிரச்சினையில் ஆதரிக்கிறது.தமது தேசிய இனத்திற்கு விசேஷ உரிமைகள், விசேஷ ஆதாயங்கள் இவைதாம் பூர்ஷ்வாவர்க்கம் தேசிய இனப் பிரச்சினையில் அடைய விரும்புவது பாட்டாளி வர்க்கம் எந்த இனமாயினும் அது ஒடுக்கும் இனமாயினும் ஒடுக்கப்பட்ட இனத்திற்கும் விசேஷ உரிமைகள் தனிச் சலுகைகள் அனைத்தையும் எதிர்க்கிறது.பூர்ஷ்வா வர்க்கம் தனது தேசிய கோரிக்கைகளுக்கு எப்போதும் முதலிடம் அளிக்கிறது தமது சொந்த இனத்து குறிக்கோள்களை பாட்டாளி வர்க்கத்தின் குறிக்கோள்களுக்கு மேலானதாக வைத்து அந்த வர்க்கத்து அபிவிருத்தியை தடைசெய்யப் பார்க்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் சுயேச்சையான பாத்திரத்தை தனது தேசிய கோரிக்கைகளுக்கு கீழ்ப்படுத்தப் பார்க்கிறது பாட்டாளிவர்க்கத்திற்கு தேசிய கோரிக்கைகள் வர்க்கப் போராட்டத்தின் நலன்களுக்கு கீழ்ப்பட்டவைதாம் ஜனநாயகப் புரட்சியானது ஒடுக்கப்பட்ட தேசிய இனம் ஒடுக்கும் இனத்திலிருந்து பிரிந்து போவதில் முடியுமா அதனுடன் சம அந்தஸ்து பெறுவதில் முடியுமா என முன்கூட்டியே கூற முடியாது. முடிவு இரண்டில் எதுவானாலும் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் தனது வர்க்கத்தின் அபிவிருத்திக்கு வழி செய்வதுதான் பாட்டாளிவர்க்கத்துக்கு முக்கியமானது ஆகவே பாட்டாளிவர்க்கம் எந்த இனத்திற்கும் உத்திரவாதம் அளிக்காமல் இன்னொரு தேசிய இனத்திற்கு பாதகமான முறையில் எதையும் செய்யாமல் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன் நிறுத்திக் கொள்கிறது.எந்த ஒரு தேசிய இனத்தைச் சேர்ந்த பூர்ஷ்வா வர்க்கத்துக்கும் மற்ற தேசிய இனங்களின் நிலைமை (அல்லது அவர்களுக்கு நேரக்கூடிய பாதகம்) எதுவாயினும் தனது சொந்த நலன்களுக்கு வேண்டிய உத்திரவாதங்கள் மட்டும்தான் தேவை பாட்டாளி வர்க்கத்திற்கு அனைத்து இனங்களின் சமத்துவமும் அனைத்து இனங்களின் விடுதலையுமே குறிக்கோள் சுயநிர்ணய உரிமை என்ற தீர்வுதான் மிகவும் ஜனநாயகமானத் தீர்வைபெற சிறந்த உத்திரவாதமளிக்கிறது. வேறு எந்த குறிப்பிட்ட வளர்ச்சிப் பாதையைப் பற்றியும் உத்திரவாதமளிக்க முடியாது ஏனெனில் சாத்தியமான எல்லாப்பாதைகள் வழியாகவும் பாட்டாளிவர்க்கம் தனது வர்க்க லட்சியத்தை நோக்கி நடைபோடுகிறது.பூர்ஷ்வாக்கள் பாட்டாளிகளுக்கு குந்தகமான முறையில் பிற தேசிய இன பூர்ஷ்வாக்களுடன் உடன்பாட்டுக்கு வர தயாராக இருப்பார்கள் ஆனால் தமது இன பாட்டாளிவர்க்கம் மட்டும் தனது இன பாதகையின் கீழ்தான் அணிதிரளவேண்டும் பிற இன பாட்டாளிகளுடன் ஒன்றுபடக் கூடாது என்பது பூர்ஷ்வாக்களின் நிலை ஒரு முதலாளியுடன் வேறொரு இன முதலாளிக்குள்ள முரண்பாட்டில் அவர்களது கருவியாக செயல்பட பாட்டாளி வர்க்கம் தயாரில்லை தேசிய ஒடுக்கு முறைகளை விட்டுக் கொடுக்காது எதிர்க்கின்ற அதே நேரத்தில் பூர்ஷ்வாக்களுக்கெதிராக அனைத்து இன பாட்டாளி வர்க்க ஒற்றுமையை பலப்படுத்தி முரண்பாடற்ற ஜனநாயகம் சோசலிசம் ஆகிய உணர்வுகளை ஊட்டுகிறது, பாட்டாளி வர்க்கத்திற்கு ஜனநாயகப் புரட்சி முற்றுப்பெற வேண்டுமென்பது மட்டுமல்ல அந்த ஜனநாயக புரட்சி சோசலிச புரட்சிக்கு அஸ்திவாரமாக விளங்கவும் வேண்டும் அனைத்து இன பாட்டாளிகளையும் ஒன்றுபடுத்துவதாக பூர்ஷ்வாக்களின் சதிகளையும் தனித்துவ போக்குகளையும் முறியடித்து சோசலிசத்தை நோக்கி முன்னேற உத்திரவாத மளிக்கிறது.பூர்ஷ்வா வர்க்கத்திற்கு பிற இனங்களின் மீதான அடக்கு முறையைப்பற்றி கவலையில்லை என்பது மட்டுமல்ல தமது இனம் மீதான அடக்குமுறைக்குப் பிரிவினை தனியரசு என்பது மட்டுமே ஒரே தீர்வாக இவர்கள் வைப்பர். ஒரு குறிப்பிட்ட இனம் பிரிந்து போவதற்குச் சரி என்று தெளிவாகப் பதில் சொல்லும்படியும் இதுதான் செயல் பூர்வ நடவடிக்கை எனவும் பூர்ஷ்வாக்கள் கூறுவர் ஒரு குறிப்பிட்ட இனம் பிரிந்து போவது சரி என்று சொல்வதுதான் செயல்பூர்வமான தீர்வு எனக்கூறப்படுவதை பாட்டாளி வர்க்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிர்ந்துபோகும் உரிமை உண்டு என மட்டும் அது கூறுகிறது பாட்டாளி வர்க்கம் அனைத்து இனங்களினதும் விடுதலைக்காக நிற்கிறது பிரிவினை மட்டுமே ஒரே தீர்வு என பாட்டாளி வர்க்கம் கருதவில்லை எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகின்ற உரிமையை ஒப்புக்கொள்வது குறிப்பிட்ட இனம் பிரிந்து போகின்ற பிரச்சனை எழுகின்ற போது எல்லா ஏற்றத்தாழ்வுகளையும், எல்லா விசேஷ உரிமைகளையும் எல்லாத் தனித்துவ போக்குகளையும் நீக்கும் நோக்கத்துடன் அணுகி சீர்தூக்கிப் பார்ப்பது இதுதான் பாட்டாளி வர்க்க நிலைபாடு.பிரிவினை என்ற திட்டவட்டமான கோரிக்கை எழும்போது என்ன நிலை மேற்கொள்வது சுயநிர்ணய உரிமை என்ற கோரிக்கையும் பிரிவினை என்ற கோரிக்கையும் ஒன்றல்ல. தேசிய இனங்கள் ஒரு குறிப்பிட்ட அரசு எல்லைக்குள் வலுக்கட்டாயமாகப் பிடித்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து பிரிந்து சென்று தனியரசு அமைத்து கொள்வதற்கு அரசியல் சுதந்திரம், பிரிந்து செல்லும் உரிமை என்பதே சுயநிர்ணய உரிமை பிரிந்து செல்லும் உரிமை இருக்கிற தென்பதாலேயே பிரிந்துதான் சென்றாக வேண்டு மென்பதில்லை. ஒரு தேசம் விரும்பினால் இவ்வுரிமையை பயன்படுத்திக் கொள்ளலாம், தேசிய இன ஒடுக்குமுறைகளுக்கு எதிரான உத்திரவாதம் இது பாட்டாளி வர்க்கம் தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்கும் அந்த ஒடுக்குமுறைகள் தனது அணியின் ஒற்றுமையைச் சிதைக்காத வண்ணம் பார்த்துக் கொள்ளவும் இந்த உரிமைக்காகப் போராட வேண்டும் அது மட்டுமின்றி பாட்டாளிவர்க்கம் தன் தலைமையிலான அரசை நிறுவிய பின்பும் அரசமைப்பை ஜனநாயக ரீதியில் சீரமைக்கவும் முழுமையான ஜனநாயகத்தை ஏற்படுத்தவும் அந்த அரசின் எல்லைக்குள் வாழும் அனைத்து இனங்களுக்கும் பிரிந்து செல்லும் உரிமையை அளிக்க வேண்டும். இதுதான் இன அடக்கு முறைக்கு முடிவுகட்டி இன சமத்துவத்தை நிலைநாட்டும் வழி. ஆனால் ஒடுக்கப்பட்ட இன முதலாளி வர்க்கம் எல்லா நேரங்களிலும் பிரிவினை ஒன்றே இன ஒடுக்குமுறைக்கு ஒரே தீர்வாக வைக்கிறது. இன விடுதலை என்றாலே தனியரசுதான் என கூறுகிறது. இதுதான் ஒரே தீர்வு என்பதை பாட்டாளிவர்க்கம் ஏற்றுக்கொள்ள முடியாது. சில குறிப்பிட்ட நேரங்களில் ஓர் குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட இனத்தில் பிரிவினைக் கோரிக்கை எழும்போது அவ்வாறு பிரிவது அவ்வினத்து பரந்துபட்ட மக்களின் நலனுக்கும் பொதுவான ஜனநாயக புரட்சி நலனுக்கும் உகந்ததாக இராது என கருதினால் அக்கோரிக்கையை நிராகரிக்கும் அதே சமயம் அந்த இனத்திற்கு பிரிந்து செல்ல உரிமை உண்டு என்பதையும் விடாது முன் வைக்கும். எச்சூழ்நிலையில் பிரிவினைக் கோரிக்கையை பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கலாம் இவ்விஷயத்தில் சர்வதேச அனுபவமும் லெனினியமும் போதிப்பது என்ன? பூகோள பொருளாதார உறவுகளின் முக்கியத்து வத்தையும் பெரிய மார்க்கெட்டில் பெரிய அரசின் அனுகூலங்களையும் பொதுமக்கள் தமது அன்றாட அனுபவத்திலிருந்து நன்கறிவர். எனவே எப்போது தேசிய ஒடுக்கு முறைகளும் தேசிய தகராறுகளும் ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையைச் சகிக்க முடியாத தாக்குகின்றனவோ எந்தவிதப் பொருளாதாரத் தொடர்புகளையும் தடை செய்கின்றனவோ அப்போது மட்டுமே மக்கள் பிரிவினையைக் கையாள்வார்கள். அப்போது பிரிவதனால் முதலாளித்துவ வளர்ச்சியின் நலன்களும் வர்க்க போராட்ட சுதந்திரத்தின் நலன்களும் சிறந்த பயன் பெறுகின்றன. (லெனின் – தேசங்களின் சுயநிர்ணய உரிமை) “வர்க்கப் போராட்டத்தைத் தடையின்றி நடத்துவதற்கு நார்வேயின் சுயநிர்வாக உரிமையானது எந்த அளவுக்கு வகை செய்தது என்பதைப் பற்றியும் அல்லது ஸ்விஷ் உயர்குடி மக்கள் ஆட்சியுடனான முடிவற்ற மோதல்களும் பூசல்களும் எந்த அளவிற்குப் பொருளாதார வாழ்வின் சுதந்திரத்திற்குத் தடையாக விளங்கின என்பது பற்றியும் லெனின் நார்வே சுவிடனிலிருந்து பிரிந்தது பற்றி பேசும் போது குறிப்பிடுகிறார். (தேசங்களின் சுயநிர்ணய உர்மை) அயர்லாந்தைப்பற்றி மார்க்ஸ் குறிப்பிடும்போது ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கத்தின் நேரடியான, நிச்சயமான நலன்களுக்கேற்றது அயர்லாந்துடனான தனது இன்றையத் தொடர்ப்பை அது அறுத்துக் கொள்வதுதான் ஆங்கிலேய தொழிலாளி வர்க்கம் கை ஓங்கி வந்தால் ஐரிஸ் ஆட்சியை ஒழித்துக்கட்டுவது சாத்தியம் என்று நீண்டகாலம் நான் நம்பி வந்தேன் உண்மை இதற்கு நேர் எதிரானது என்று ஆழ்ந்த ஆராய்ச்சி இப்போது என்னைத்திடமாக நம்பச்செய்து விட்டது. அயர்லாந்தை விட்டுத்தொலைக்கும் வரை ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கம் எதையும் சாதிக்க முடியாது எனக் கூறுகிறார். இந்த மார்க்சிய – லெனினிய கருத்துகளிலிருந்தும் சர்வதேச அனுபவங்களிலிருந்தும் பின்வரும் முடிவுகளுக்கு செல்ல முடியும். தேசிய இன ஒடுக்கு முறையும் தேசிய தகராறுக்கும் ஒடுக்கப்பட்ட இனத்தின் வாழ்வையே சகிக்க முடியாததாக்கிவிடும் போது, ஒடுக்கும் இன அரசுக்கும் ஒடுக்கப்பட்ட இனத்திற்குமான முடிவற்ற மோதல்களும் பூசல்களும் ஒடுக்கப்பட்ட இனத்தின் பொருளாதார வளர்ச்சியையும் சமூக வளர்ச்சியையும் தடைசெய்யும் அளவிற்கு வளர்ந்து விட்டபோது,அனைத்து இன பாட்டாளி, பிறமக்களும் ஒன்றுபட்ட வர்க்க போராட்டம் நடந்த இயலாத அளவிற்கு அரசமைப்பு இடையூறாக உள்ளபோது, அதாவது பிரிவதுதான் வர்க்கப்போராட்டத்தின் நலன்களுக்கு சிறந்த பயனளிப்பதாக மாறிவிட்டபோது. இந்த மேற்கூறிய நிபந்தனைகள் அனைத்தும் பூர்த்தியாகும் போது தான் நாம் பிரிவினையை ஆதரிக்க முடியும், அத்துடன் வேறொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும் சுயநிர்ணய உரிமை உட்பட எத்தேசிய இனக் கோரிக்கையும் சார்பற்ற முழுமை அல்ல சுயநிர்ணயம் உட்பட பற்பல ஜனநாயக கோரிக்கைகளும் சார்பற்ற முழுமையல்ல பொதுவான ஜனநாயக (தற்போது பொதுவான – சோசலிச) உலக இயக்கத்தின் ஒரு சிறு பகுதியே. ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் பகுதியானது முழுமைக்கு முரணாக நிற்கலாம் அவ்வாறெனில் அது நிராகரிக்கப்பட வேண்டும் ஒரு நாட்டின் குடியரசு இயக்கம் பிற நாடுகளின் புரோகித அல்லது நிதிக்கும்பலின் கருவியாகமட்டும் இருக்கக்கூடும், அவ்வாறெனில் அக் குறிப்பிட்ட இயக்கத்தை நாம் ஆதரிக்ககூடாது ஆனால் அதற்காக சர்வதேச – சமூக ஜனநாயகத்தின் வேலைத் திட்டத்திலிருந்தே குடியரசுக்கான கோரிக்கையை எடுத்துவிடுவது நகைபிற்குறியது அல்லவா? (லெனின் – சுயநிர்ணய உரிமை விவாதத்தொகுப்பு) இதிலிருந்து என்ன தெரிகிறது? பொதுவானதத்திற்கு குறிப்பானது உட்பட வேண்டும் பொதுவான உலக ஜனநாயக இயக்கத்தின் பல கோரிக்கைகளுள் ஒன்றுதான் சுயநிர்ணய உரிமைக்கோரிக்கையும் எனவே குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் ஒரு குறிப்பிட்ட இனத்து பிரிவினைக் கோரிக்கை பொதுவான ஜனநாயக புரட்சி நலனுக்கு முரண்படுமேயானால் அதனை ஏற்றுக் கொள்ளமுடியாது அவ்வாறு மார்க்ஸ் செக்கோஸ்லேவேகியாவின் தனி நாட்டுக் கோரிக்கையை எதிர்த்தார். போலந்து ஜாராட்சியிலிருந்து பிரிவதை ஆதரித்தார். பின்னர் வரலாற்று நிலைமைகள் மாறிவிட்டபின் லெனின் போலந்து பிரிவினையை எதிர்த்தார் இவை பிரச்சனையை வரலாற்று ரீதியில் ஸ்தூலமாக ஆய்வு செய்ததிலிருந்து பெறப்பட்ட முடிவுகள். அவ்வாறே பாட்டாளிவர்க்கம் ஒவ்வொரு தேசிய இனப்பிரச்சனையையும் வரலாற்று ரீதியில் ஆய்வுசெய்தல் என்ற லெனினிய அணுகு முறையை மேற்கொள்ள வேண்டும்.பல இன அரசின் எல்லக்குள் பாட்டாளி வர்க்கக் கட்சி எவ்வாறு கட்டுப்பட வேண்டும்? நிச்சயமாக ஒரு அரசின் எல்லைக்குள் ஒரே பாட்டாளி வர்க்கக்கட்சி கட்டும்போதுதான் புரட்சியின் வெற்றியை உத்திரவாதம் செய்ய முடியும். அப்போது வெவ்வேறு இன முதலாளிகளும் ஜனநாயக புரட்சியை இறுதிவரை செல்லாமல் தடுக்கச் செய்யும் முயற்சிகளை முறியடிக்க முடியும். அத்துடன் இது சமூக வளர்ச்சியின் தேவையுமாகும் முதலாளித்துவ உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி பல இன மக்களையும் ஒன்று கலக்கச் செய்கிறது. பெரு நகரங்களில் ஏராளமான எண்ணிக்கையில் பல இன பாட்டாளிகள் ஒன்று குவிக்கப்படுகின்றனர். சமூகத்தின் இயல்பான வளர்ச்சி தேசிய இன தடை மதில்களை தகர்ப்பதாக உள்ளது இந்த இயல்பான போக்கிற்கு முட்டுக்கட்டையாக உள்ளது ஒடுக்கும் இனம் ஒடுக்கப்படும் இனம் உட்பட அனைத்து இனங்களையும் சேர்ந்த முதலாளிகளே பிரிந்துபோகும் உரிமையையும் இன சமத்துவத்தையும் உயர்த்தி பிடிக்காவிடில் பேரின பாட்டாளிவர்க்கம் தமது இன ஆளும் வர்க்கங்களின் வாலாகவே முடியும். தனது சுயேச்சைப் பாத்திரத்தை இழந்துவிடும். அதுபோல ஒவ்வொரு இனத்திற்கும் தனித்தனி கட்சிகள் என்ற கொள்கையை ஒடுக்கப்பட்ட இன பாட்டாளி வர்க்கம் ஏற்றுக் கொள்ளுமேயானால் அதுவும் கட்டாயம் தமது இன முதலாளிகளுக்கு வாலாகவே முடியும். சுயேச்சையான பாத்திரத்தை ஆற்றமுடியாது புரட்சியின் கட்டம் சோசலிசப் புரட்சியாகவோ, ஜனநாயக புரட்சியாகவோ எதுவாக இருப்பினும் கட்சியானது பாட்டாளிவர்க்க சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் கட்டப்படுகின்றது. உண்மையான பாட்டாளிவர்க்க கட்சி அனைத்து பாட்டாளிகளையும் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். ஒரு கட்சி எனும் போது அதன் மையம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும்? தனித்தனி தேசிய உறுப்பு கட்சிகளின் ஒருங்கினைப்பு மையமாகவா? கூடாது. கட்சி அவ்வாறு ஒரு சமஷ்டியாக இருப்பது சோசலிசத்தையும் தேசிய வாதத்திற்கு கீழ்ப்படுத்துவதே (லெனின் நூல் தொகுப்பு – 18 பக் 411, 12) “ரஷ்யாவின் பொருளாதார அரசியல் நிலைமைகள் முழுமையும் கோருவது என்னவெனில் சமூக – ஜனநாயகம் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளிகளை விதிவிலக்கின்றி (அரசியல்) தொழிற்சங்கக் கூட்டுறவு, கல்வி நிறுவனம், இன்னும் இது போன்ற அனைத்து பாட்டாளி வர்க்க ஸ்தாபனங்களிலும் நிபந்தனையின்றி ஐக்கியப்படுத்த வேண்டும். கட்சியானது கட்டமைப்பின் சமஷ்டி முறையைக்கொண்டிருக்கக்கூடாது தேசிய – சமூக ஜனநாயக குழுக்களைக் கொண்டதாக இருக்கக் கூடாது.(லெனின் – தேசிய இனப்பிரச்சனை ஆய்வுரைகள்) இவ்வாறு சமஷ்டியாக கட்சியை ஆக்குவது பாட்டாளிகளின் முழுமையான ஐக்கியத்தை விடதமது சொந்த பூர்ஷ்வாக்களுடனான ஐக்கியத்தை மேலானதாக வைப்பதாகிறது. ஆகவே பாட்டாளிவர்க்க கட்சியானது ஜனநாயக மத்தியத்துவத்தின் மீது கட்டப்பட வேண்டும். இதுகாறும் கூறியவையே தேசிய இனப்பிரச்சனையை பற்றிய முக்கிய மார்க்சிய லெனினிய கருத்தோட்டங்கள் ஆகும்.
-( நன்றி சமரன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *