கொள்கையளவில் கடும் எதிரிகளான பாஜகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மேற்குவங்க மாநில உள்ளாட்சி தேர்தலில், எதிரியான மம்தா பானர்ஜியை வீழ்த்துவதற்காக கைகோர்த்துள்ளனர்.இவை பல இந்திய பத்திரிகையில் வெளியான செய்தி, இதனை அடுத்து முகநூலில் பல பகுதிகளில் விவாதம் நடந்தது அவை கீழே லிங்க் கொடுத்துள்ளேன், இவற்றை ஏற்கப் பல CPM தோழர்கள் தாயார் இல்லை அல்லது கடந்த கால வரலாற்று போக்கில் மக்கள் விரோத பல சட்டங்களை அரசியல் தேவை கருதி சிபிஎம் ஏற்றுள்ளதை சுட்டி காட்டினாலும் ஏற்காமல் முரட்டு பிடிவாதம்… சரி என் கல்கத்தாவில் உள்ள சிபிஎம் நண்பரை தொடர்பு கொண்டேன் அவரின் வார்த்தைகள் கீழே உள்ள செய்தியே… (தோழரின் வாய்ஸ் ரெக்கார்ட் வேண்டுமெனில் அனுப்பி வைக்கிறேன் கேட்டு பதில் சொல்லுங்கள் தோழமைகளே)…இனி உண்மையில் மேற்கு வங்கத்தில் நடப்பதுதான் என்ன?தோழர் நா கூசுகிறது இதை சொல்ல என்ன கேடுகெட்ட தனம் இந்த நிலை புரியவில்லை என்று தொடங்கி… திரிணமுல் காங்கிரஸூக்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்துடன், இருகட்சிகளும் ‘தொகுதி பகிர்வு’ செய்துள்ளது, சில தொகுதிகளில் பாஜகவினர் தங்கள் தரப்பில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. வேறு சில இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்த இடங்களில் பாஜகவினர் சில தொகுதிகளை விட்டுக்கொடுத்து வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.இதுபோலவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஆளும் கட்சியின் எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பெரும்பாலான கிராம பஞ்சாயத்துகளில் கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவதில்லை. சுயேட்சை சின்னத்திலேயே அனைவரும் போட்டியிட வேண்டும். எனவே கூட்டணி என்ற பிரச்சினை எழவில்லை. கட்சியின் ஆதரவுடன் போட்டி என்பதால் கூட்டணி குறித்த பிரச்சினை இல்லை என்ற செய்திகளை உறுதி படுத்தி பேசினார், இனி இவர்களுக்கு நான் சொல்ல ஒன்றுமே இல்லை…நேற்றைய விவாதங்கள் பற்றிய லிங்க்…https://m.facebook.com/story.php?story_fbid=1653570714738042&id=100002553890383https://m.facebook.com/story.php?story_fbid=2085185755086840&id=100007863064460https://www.facebook.com/thefinancialexpress/posts/2101568793219006https://m.facebook.com/story.php?story_fbid=150840795766816&id=100025226886479https://m.hindustantimes.com/india-news/cpi-m-bjp-tie-up-to-counter-trinamool-in-nadia-ahead-of-bengal-panchayat-polls/story-OoFdUYg05Zt6Q9gefVpozJ.htmlhttps://m.facebook.com/story.php?story_fbid=1737116926385312&id=100002610636036