தொடர்ந்து 30 ஆண்டுகள் மே.வங்கத்தை ஆண்டதாக பெருமை பேசும் சி.பிஎம். சொல்லுமா? பல மாநில அரசுகள் ஏன் ஈஎம் எஸ் ஆட்சி கூட மைய அரசோடு முரண்பட்டதால் கலைக்கப்பட்டதுண்டு, அது போன்ற அவல நிலைக்கு மே.வங்க கூட்டணி அரசுக்கு வரவில்லையே?
அந்த அளவுக்கு மைய அரசின் கொள்கைகளோடு இணக்கம், பாராளுமன்ற பாதை வழியே அதிகாரத்தைக் கைபற்றும் கொள்கையை தழுவி, இடது முன்னணி என்ற இ.மு மூலம் 1967-ல் மேற்க்கு வங்கத்தில் ஆட்சியை அமைத்தது சி.பி.எம்.
நீண்ட காலமாகவே நிலவுடைமை சுரண்டல் கொடுமைகளை எதிர்த்து போரிட்டு வந்த விவசாயிகள், தங்களின் கட்சி ஆட்சியைப் பிடித்து விட்டது, இனி நமக்கான ஆட்சி என்ற அடிப்படையில் விவசாயிகள் நிலவுடைமை வர்க்கத்தை எதிர்க்கத் தொடங்கினர்.
உழுபவ்னுக்கே நிலம் சொந்தம் என்ற முழக்கத்தால் அதுவரை பயிற்று விக்கப்பட்டு வந்த விவசாயிகள், நிலப் பிரப்புகளிடம் குவிந்துள்ள நிலங்களை பறித்தெடுக்கும் செயலில் இறங்கினர்.
சி.பி.எம். அரசாங்கம் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்ற பெயரில் பாட்டாளிகளை சுட்டுக் கொன்றது… இவையே நக்சல்பாரி கிராம மக்களின் ஆயுதம் தாங்கி போராட வைத்தது… சி.பி.எம்மின் வேசம் அம்பலமாகி கட்சி உடைந்தது… மா-லெ கட்சி உருவானது இவை ஜோதி பாசு அரங்கேற்றிய வரலாறு.
40 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே காட்சிகள், வேறுவிதமாக நந்தி கிராமத்தில் நடந்தது. 14 விவசாயிகள் படுகொலை, நூற்றும் கணக்கானோர் படுகாயம், டாட்டாவுக்கும், பன்னாட்டு கம்பெனிக்காகவும் விவசாயிகளின் நிலத்தை அரசாங்கம் பறித்தெடுத்தது.எதிர்ப்போரை கடுமையாக ஒடுக்கியது.
தொடரும்.