திருத்தல்வாதம் எதிர்ப்போம்-1
திருத்தல்வாதம் எதிர்ப்போம்-1

திருத்தல்வாதம் எதிர்ப்போம்-1

இந்திய பொதுவுடைமை இயக்கம் பற்றிய ஒரு அறிமுகம்-16

தோழர்களே இவை நான் தோழர் Jaya Raman க்காக 26/07/2016 அன்று எழுதிய பதிவு இன்றும் அவருக்கு பதிலளிக்கும் முகமாக சிறிது சுருக்கமாக கீழ் தருகிறேன்…….

நான் தொடர்சியாக வரலாற்றை எழுத முடியாமைக்கு வருந்துகிறேன், நான் நேற்று கேட்டகபட்ட கேள்விக்கு பதிலளிக்கும் முகமாகவே இந்த பதிவை எழுதி கொண்டுள்ளேன். CPI,CPM தோழர்கள் சிந்திக்க நான் கேள்விகளை அடுக்கி கொண்டும் வரலாற்று நிகழ்வுகளை துணை கொண்டும் விளக்கவே இப்படி கையாலும் நிலை. சில CPI,CPM தோழர்கள் மா-லெ அமைப்பே தகற்ந்துவிட்டது நீங்கள் எழுத என்னவுள்ளது என்றெழுதியுள்ளானர். CPI லிருந்துதான் CPM ம் CPM லிருந்துதான் CPI(ML)ம் உருவாகின இவை தத்துவார்த்த ரீதியாக வளர்ச்சி போக்கில் திருத்தல்வாதிகளிலிருந்து பலர் நாளை உண்மையான தத்துவார்த்ததை தூக்கிபிடித்து மார்க்சிய லெலின்ய மாசெதுங்க் சிந்தனை பாதையில் கட்சியை வளர்த்தெடுக்கலாம் ஆகையால் வரலாற்றில் தவறுகளை விமர்சன பூர்வமாக அணுகி உண்மையான கம்யூனிஸ்டாக வாழ முயற்சிப்போம் இன்று மார்க்சின் 202 பிறந்த நாளில் ….சி.பி

எப்போதும் மக்கள் போராட்டங்களுக்குத் துரோகமிழைக்கும் திருத்தல்வாதிகள் ‘நூல் இழையில்’ மறைக்கும் பகுதிகளை நாம் சொல்லியாக வேண்டும். ஆம் இவர்கள் குருசேவ் பாதையில் கட்சியை சீரழித்ததுடன் மார்க்ச்சியதையே “மண்ணுகேற்ற மார்க்ச்சியம்” என்று ஏமாற்றி பிழைக்கும் நிலை, நேருவும் காந்தியும் இவர்கள் தலைவர்கள் ஆகும்போது இவர்கள் எந்த வர்க்கத்தை சார்ந்தவர்கள் என்பது அறிவது மிக சுலபம். ஆனால் அன்றைய வீரஞ்செறிந்த கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கப் போராட்டத்தை, தலைமறைவு இயக்கத்தில் கம்யூனிச போராளிகள் செய்த தியாகம், அர்ப்பணிப்பை வர்க்க உணர்வு கொப்பளிக்க செறிவாக அளித்திருக்கலாம். விவசாயிகள் இயக்கத்தின் வரலாறை, அதன் வர்க்கப் போராட்ட வீச்சை இடது, வலது  எனும் திருத்தல்வாதிகள் இன்னும் முழுமையாக, ஆழமாக மக்களிடம் துலக்கமாக எடுத்துக்காட்டாததன் மர்மம்தான் என்ன?

அப்படிப்பட்ட சமரசமற்ற களப்போராட்டத்தைக் காட்ட ஆரம்பத்தில் சீனிவாசராவ், களப்பால் குப்பு, கரம்பயம் சுப்பையா வரிசையில் அதிகார புரோக்கர்களான  இ.எம்.எஸ்யும், சுர்ஜித்தையும், ஜோதிபாசுவையும், இந்திரஜித் குப்தாவையும் …. காணச் சகிக்க முடியாது. CPI மிலிருந்து வெளியேறிய CPM  எதோ மார்க்ச்சியத்தை காப்பது போல் புறப்பட்ட வேகத்திலே மார்க்ச்சிய-லெனின்யத்தை தூக்கிபிடித்து உலுபவனுக்கே நிலம் உழைப்பவனுக்கே அதிகாரம் என்று 1967 ல் வெடித்த மக்கள் போராட்டங்களை தனது போலிசுடன் மத்திய அரசு படை பலத்தால் கொன்றொழித்த கைவர்கள் இன்றும் மார்க்ச்சியத்தின் பெயரால் வாழ்ந்து கொண்டிருக்கும் கம்யூனிச துரோகிகள். அசலை வெளிக் கொணர்ந்தால் நகல் நகைப்பிடமாகும்.

கீழத்தஞ்சையின் வர்க்கப் போராட்டத்தின் முழுப் பரிமாணத்தையும், வரலாற்றையும் மக்களிடம் கொண்டு சென்றால், பாராளுமன்றத்துக்கு உள்ளே பதவி நாற்காலியிலும், வெளியே கட்சி ஆபிசிலும் பணபட்டுவாட போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் திருத்தல்வாதிகளின்  குட்டு உடைந்து விடும். 48, 50-களில் போராடியவர்கள் கம்யூனிஸ்டுகள் என்றால்; தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்கு முறைக்கு எதிராக ஐம்புலன்களையும் அடக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் யார் என்ற கேள்வி எழுந்துவிடும்.

ஆதிக்கச் சாதியினரின் அடக்கு முறைக்கு சாதி வெறிக்கு எதிராக அன்றைய கம்யூனிஸ்டு கட்சி  டீக்கடையில் அமர்வோம், கோயிலில் நுழைவோம் என்று நுழைந்து காட்டியது. இன்றோ மேல் சாதியின் மனம் மாறாமல் மேற்கொண்டு எதுவும் செய்ய இயலாது என்கின்றனர் திருத்தல்வாதிகள்.

டீக்கடை பெஞ்சில் உட்கார உரிமை கோரிப் போராடிய சீனிவாசராவ், தனுஷ்கோடி எங்கே? பிரதமர் நாற்காலியில் குந்த கட்சியிடம் உரிமை கோரி ‘போர்க் கொடி’ தூக்கிய ஜோதிபாசு எங்கே?

 “சாதி ஒடுக்கு முறைக்கெதிராக என்ன செய்தார்கள் கம்யூனிஸ்டுகள்?” என்ற அவதூறுக்குத் தன் ரத்தத்தால் பதில் சொல்லியிருக்கிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம். பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் சீனிவாசராவையும், இரணியனையும் தனுஷ்கோடியையும் இன்னும் ஆயிரக்கணக்கானோரையும் செங்கொடி தந்தது. மற்ற இன்றைய சாதி கட்சிகள்  தராதது ஏன்?

கண்ணெதிரே நடந்த பண்ணையடிமைத்தனத்திற்கெதிரான போராட்டத்தில் களத்திலிறங்காமல், அரசு சன்மானங்களைப் பெறவும், அதிகாரத்தைப் பங்கு போடவும் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டவர்களின் அரசியல் பிழைப்புவாதத்தை அறிந்து கொள்ள அன்றைய சமகால வரலாற்றைப் புரட்டிப் பார்க்கக் கோருகிறது கீழத்தஞ்சை விவசாயிகள் இயக்கம்.

இதை வலது, இடது கம்யூனிஸ்டுகள் இன்று கோர மாட்டார்கள்; கிளற மாட்டார்கள். அன்றைய விவசாயிகள் இயக்கம் அவர்களது தொண்டையில் முள்ளாய் சிக்கியிருக்கிறது. அந்த இறந்த காலத்தைத் தட்டியெழுப்பினால் அது இவர்களது நிகழ்காலத்தைக் கொன்று விடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இவையோ முந்திய வரலாறு என்றால், இப்போது ஆட்சி கட்டிலில் அமர்ந்து கொண்டு என்ன செய்து கொண்டுள்ளனர்?.

மே.வங்கத்தில் நடந்தது என்ன? சில நிகழ்வுகளை பார்ப்போம்; ஒவ்வொரு முறையும் சட்டமன்ற – நாடாளுமன்ற – உள்ளாட்சித் தேர்தல்களில், ஏழைகளின் நண்பனாகக் காட்டிக் கொள்ளும் இடதுசாரிக் கூட்டணி கட்சிகளுக்கே அவர்கள் வாக்களித்தார்கள். வாக்குறுதிகள் வீசப்பட்டனவே தவிர, அவை லால்கார் வட்டார மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. வறுமை ஒழிப்புக்காகவும், வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் ஒதுக்கப்பட்ட நிதி அவர்களைச் சென்றடையவும் இல்லை.

புரட்சி பேசும் திருத்தல்வாதிகள், ஆளும் வர்க்கங்களின், மேட்டுக்குடி கும்பல்களின், அவர்களின் ஊதுகுழல்களான ‘தேசிய’ பத்திரிகைகளின் வாதம். பழங்குடியின மக்களைப் போலீசார் இழுத்துச் சென்று வதைத்தாலும், பொய் வழக்குப் போட்டுச் சிறையிலடைத்தாலும் அவை வன்முறையோ, பயங்கரவாதமோ அல்ல. சி.பி.எம். குண்டர்கள் மற்றும் போலீசின் அடக்குமுறையின் கீழ் அவர்கள் இருத்தி வைக்கப்பட்டாலும், அது வன்முறை அல்ல; புதிய விசயமும் அல்ல.

வறுமையையும் அடக்குமுறையையும் சகித்துக் கொண்டு அமைதியாக இருந்த பழங்குடியின மக்கள் மெதுவாக விழித்தெழுந்து போராடத் தொடங்கினால், அது சட்டம் – ஒழுங்கைச் சீர்குலைக்கும் வன்முறை! பழங்குடியினக் கிராமங்களைச் சுற்றி வளைத்துச் சூறையாடி விடிய விடிய வதைத்த போலீசாரின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடி, போலீசாரை அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தால், அது பயங்கரவாதம்!

இதற்கு முன்னதாக, நந்திகிராமம் – கேஜூரி பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரசு வெற்றி பெற்றதும், ஹேதியா நகரிலுள்ள சி.பி.எம். வட்டாரக் கமிட்டி அலுவலகம் ஜூன் 9-ஆம் தேதியன்று திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. அரசு அதிகாரத்தைக் கொண்டும் குண்டர் படைகளைக் கொண்டும் தேர்தலின் போது வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்ட சி.பி.எம். உள்ளூர் தலைவர்களது வீடுகளும் கட்சி அலுவலகங்களும் நந்திகிராமம் பகுதியில் அடுத்தடுத்து திரிணாமுல் காங்கிரசு கட்சியினரால் தாக்கப்பட்டுத் தீயிடப்பட்டன.

இவற்றை அரசியல் வன்முறை என்று சாடும் சி.பி.எம் கட்சி, லால்கார் மக்கள் போராட்டத்தை மட்டும் பயங்கரவாத வெறியாட்டம் என்று குற்றம் சாட்டுகிறது..

(தகவல்கள் வினவு பகுதியின் அடிப்படையில் சுருக்கம் என்னுடையவை)

இப்படி சீரழிவு பாதையில் பயணித்து கொண்டிருக்கும் இவர்கள் மக்கள் விரோதிகளாக ஆட்சிக்காக எதையும் செய்யும் கீழ்தரமான நிலையில்.. மற்றவை நாளை தொடருவேன்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *