தலித் விடுதலை பற்றி
தலித் விடுதலை பற்றி

தலித் விடுதலை பற்றி

தலித் விடுதலை பற்றிய வேறு தோழர்களின் விவாதங்களுக்கு பதில் தரும் முகமாக இந்த பதிவு… சில தோழர்களின் எழுத்தை தொகுத்து வழங்குகிறேன் அதற்கான லிங்கை கீழே பதிவிட்டுள்ளேன்….சாதி ஒழிப்பு என்பது வர்க்கப்போராட்டம்தான், அதற்கு தேவையாயிருப்பது ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் அணிசேர்க்கைதான்…வர்க்கபோராட்டத்தை மறுத்தஅம்பேத்கரின் வாதம் அவரது காலத்திலேயே முறியடிக்கப்பட்டது!1946 – 1951 ஆண்டு காலத்தில் தலித்துகள், இசுலாமியர்கள், ஒடுக்கப்பட்ட அனைத்து மக்கள், இவர்களோடு இணைந்து உயிரை தியாகம் செய்த ஆதிக்க சாதி உழைக்கும் மக்கள் அனைவரும் சேர்ந்து நாட்டையே உலுக்கிய “வீரத்தெலுங்கானா” போராட்டம் ஆகட்டும்; 1943-இல் “அடித்தால் திருப்பி அடி” எனும் முழக்கத்தோடு தஞ்சையில் பிறந்த சாதி ஒழிப்பு போராட்டங்கள் ஆகட்டும் அனைத்துமே சாதி ஒழிப்பிற்கு வர்க்க அணிசேர்க்கையையும், அதன் மூலமான வர்க்கப்போராட்டத்தையும் தவிர வேறு வழி எதுவும் இல்லையென்பதையே நிரூபித்தது.இவையனைத்தும் அம்பேத்கரின் காலத்திலேயே நடந்தது. அவருக்கு சாதி ஒழிப்பை முன்னெடுத்து சென்ற வர்க்க அணிசேர்க்கையும், வர்க்கப்போராட்டமும், வர்க்க அரசியலும் கசந்தது. அவருக்கு மட்டுமல்ல, அவர் சட்ட அமைச்சராக இருந்த 1950-இல் இந்தியாவிற்கு வந்த அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசனுக்கும் கசந்தது.அம்பேத்கருக்கும் ஆளும்வர்க்கத்திற்கும் இருந்த ஒரே வேறுபாடு என்னவென்றால், அம்பேத்கர் உண்மையை ஒத்துக்கொள்ள மறுத்து கசப்பை வெளிப்படுத்தினார். ஆளும்வர்க்கம் உண்மையை ஒத்துக்கொண்டு தனது கசப்பை வெளிப்படுத்தியது.இந்தியாவின் சமூகச்சூழல்களை ஆய்வு செய்த அமெரிக்காவின் ஃபோர்டு பவுண்டேசன் தலித்துகள், பெண்கள், பழங்குடியினங்கள் ஆகியப் பிரிவினரிடையே கம்யூனிசம் எளிதாக காலூன்றும் என அனுமானித்தது. ஆளும்வர்க்கத்தை தூக்கியெறியும் கம்யூனிசத்துக்கு மாற்றாக, இவர்களிடையே ஆளும்வர்க்கத்துக்கு சேவை புரியும் சீர்த்திருத்த அரசியலையும், அதற்கான இயக்கங்களையும் கொண்டு சேர்க்க முடிவு செய்தது.அம்பேத்கரின் காலத்தில் ஃபோர்டு பவுண்டேசன் முன்வைத்த இந்த முடிவுகளை அவர் எதிர்க்கவில்லை. தனது கண்டுபிடிப்பான ‘இந்தியாவில் வர்க்கப்போராட்டம் நடக்காது, கம்யூனிசம் காலூன்றாது’ என்பதை முன்வைத்து வாதாடவில்லை.அம்பேத்கர் அப்படி வாதம் செய்திருப்பாரேயானால் இந்தியாவெங்கும் பற்றிப்படர்ந்து கொண்டிருந்த கம்யூனிச நெருப்பின் நிலையினை ஆதாரங்களுடன் முன்வைத்து ஆளும்வர்க்கமே அவரை வாயடைக்க செய்திருக்கும்.அம்பேத்கரின் வாதம் அவரது காலத்திலேயே உழைக்கும் மக்களின் போராட்டங்களாலும், அதைக்கண்டு நடுங்கிய ஆளும்வர்க்கத்தாலும் முறியடிக்கப்பட்டது. ( நன்றி தோழர் திருப்பூர் குணா மற்றும் பாவெல் சக்தி)விரிவான விளகங்கள் கீழ்காணும் பகுதில் உள்ளன தேவைப் படுவோர் வாசித்து வாருங்கள் விவதிக்கலாம்..http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33372-2017-06-26-04-15-49http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/27477-n-g-ohttps://inioru.com/ngos-the-burning-world/https://m.facebook.com/story.php?story_fbid=170199283830967&id=100025226886479

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *