தலித்தியம் பற்றி ஒரு தேடுதல்
தலித்தியம் பற்றி ஒரு தேடுதல்

தலித்தியம் பற்றி ஒரு தேடுதல்

அடையாள அரசியலின் ஒரு தன்மை++++++++++++++++++++++++++++சாதீ மதம் முதலாளித்துவ தேவைகானவையே. அப்படி இருக்கும் பொழுது மார்க்சியம் இந்த குப்பைகளை தன்னோடு இணைத்துக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல முடியுமா?மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இங்கே பேசப் படும் சாதிய ஒடுக்கு முறை என்று வரும் பொழுது அதில் வர்க்கமல்ல பிரதானம்; சாதியமைப்புதான் பிரதானமாகயிருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த ஒடுக்கப் பட்ட சாதியின் இயக்கம் மார்க்சிய இயக்கத்திலிருந்து தனிப்பட்டது என்று சொல்லலாம். சாதியம் என்பது மேலிருந்து வந்த அந்த மத்தியதர வர்க்கத்தின் சிந்தனைதான் கட்டமைப்புதான்.பொதுவாகப் பார்ப்பனியம் அல்லது பார்ப்பனிய எதிர்ப்பு அல்லது ஏன் தலித்தியம் என்று பேசும்பொழுது அந்தக் கோட்பாடுகள் எல்லாமே ஒரு மத்தியத்தர வர்க்கத்தினருடைய கோட்பாடுதான். ஏனெனில் ஒவ்வொரு பிரிவிற்குள்ளேயும் இருந்து ஒரு மத்தியத்தர வர்க்கம் உருவாகி வரும்பொழுது அது அதிகாரத்தில் அல்லது பொருளாதாரத்தில் முதன்மை பெறுவதற்கு முயற்சிக்கிறது. எனவே, அந்தப் போட்டியின் அடிப்படையில் தான் தங்களுடைய அடையாளம் பற்றிய பிரச்சனைகளை முன் வைக்கிறார்கள். அதனால் அந்தத் தனி அடையாளம் அல்லது சாதி அடையாளம் அல்லது மத அடையாளம் அல்லது இனத்துவ அடையாளம் இந்த அடிப்படையில் பிரிந்த எல்லா இயக்கங்களையும் பார்த்தால், மத்தியதர வர்க்கத்தினுடைய சிந்தனைப் போக்கிருக்கிறது. அதனை மார்க்சிய வழியில் சொல்வதானால் ஒருவகையான ‘குட்டி முதலாளித்துவச் சிந்தனைகள்’ என்றுசொல்லலாம். அந்தஅடிப்படையில் அந்த மாதிரியான அடையாளம் பற்றிய இயக்கங்கள் பற்றிக் கூர்ந்து பார்க்கும் பொழுது அவற்றிற் குள்ளே மேலிருந்து வரக் கூடிய மத்தியதர வர்க்கத்தின் தேவையை பூர்த்தி செய்யவே இந்த அடையாளங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

தலித்தியம் ஒரு வகையில் முதலாளித்துவத்தைஆதரிக்கிறது. பிறகெப்படி மார்க்சியம் தலித்தியத்தைத் தன்னோடு ணைத்துக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல முடியும்?

மார்க்சியம் வர்க்கப் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. தலித்தியம் என்று வரும் பொழுது இங்கு வர்க்கமல்ல பிரதானம்; சாதியமைப்புதான் பிரதானமாகயிருக்கிறது. அந்தஅடிப்படையில் இந்ததலித்இயக்கம் மார்க்சிய இயக்கத்திலிருந்து தனிப்பட்டது என்று சொல்லலாம். ஆனால் வர்க்கக்கட்டு மானத்தைப்பார்க்கும் பொழுது இந்தியாவைப் பொறுத்தவரையில் தலித்துகள் ஒரு ஒடுக்கப்பட்ட வர்க்கமாக யிருக்கிறார்கள் என்று அடையாளப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தலித்துகளுக்கு உள்ளேயே மத்தியதர வர்க்கம் ஒன்று உருவாகி வந்துள்ளது. தலித்தியம் என்பது மேலிருந்து வந்த அந்த மத்தியதர வர்க்கத்தின் சிந்தனைதான் கட்டமைப்புதான்.

பொதுவாகப் பார்ப்பனியம் அல்லது பார்ப்பனிய எதிர்ப்பு அல்லது தலித்தியம் என்று பேசும்பொழுது அந்தக் கோட்பாடுகள் எல்லாமே ஒரு மத்தியத்தர வர்க்கத்தினருடைய கோட்பாடுதான். ஏனெனில் ஒவ்வொரு இனக்குழுமத்திற்குள்ளேயும் இருந்து ஒரு மத்தியத்தர வர்க்கம் உருவாகி வரும்பொழுது அது அதிகாரத்தில் அல்லது பொருளாதாரத்தில் முதன்மை பெறுவதற்கு முயற்சிக்கிறது. எனவே, அந்தப்போட்டியின்அடிப்படையில்தான்தங்களுடைய அடையாளம் பற்றிய பிரச்சனைகளை முன்வைக்கிறார்கள். அதனால் அந்தத் தனி அடையாளம் அல்லது சாதி அடையாளம் அல்லது மதஅடையாளம் அல்லது இனத்துவஅடையாளம் இந்த அடிப்படையில் பிரிந்த எல்லா இயக்கங்களையும் பார்த்தால், மத்தியதர வர்க்கத்தினுடைய சிந்தனைப் போக்கிருக்கிறது. பழைய மார்க்சியக் கலைச் சொல்லைப் பயன்படுத்திச் சொல்வதானால் அந்த வகையான சிந்தனைகளை ஒருவகையான ‘குட்டிமுதலாளித்துவச்சிந்தனைகள்’ என்றுசொல்லலாம். அந்தஅடிப்படையில் அந்த மாதிரியான அடையாளம் பற்றிய இயக்கங்கள் பற்றிக் கூர்ந்து பார்க்கும் பொழுது அவற்றிற் குள்ளே மேலிருந்து வரக்கூடியமத்தியதரவர்க்கத்தின்வேலைநிமித்தம்தான் அந்தஅடையாளங்கள்முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *