தலித்தியத்தை தேடி-1+++++++++++++++++இந்தியாவில் தலித்தியம் என்றும் இலங்கையில் இரட்டைத் தேசியம் என்றும் அறிமுகமாகின்ற கோட்பாட்டினைப் பற்றிய அறிதலானது சமூக மாற்றத்தை வேண்டுபவர்களுக்கு அவசியமாகின்றது. இங்கு தன்னியல்புசார்ந்த அரசியல் வழிமுறைகளை வெவ்வேறு பெயர்களில் புகுத்தப்படுகின்றது. இவ்வாறான புதிய கோட்பாடுகள் வெவ்வேறு விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்திக் கொள்கின்றன. தலித்தியம் பற்றி அறிந்து கொள்ள தமிழகத்தின் வரலாற்றுப் போக்கோடு பொருத்தி நின்று தான் ஆராய முடியும் முயற்சிப்போம் சற்றேனும். சமூக வளர்ச்சிப் போக்கில் முன்னைய சிந்தனையில் இருந்து பெற்ற அறிவு முதிர்ச்சியை நமக்கு கற்றுத் தருகின்றது. மார்க்சியம் மனிதர் தன்னிலையை அறிந்து கொள்ளவும், இந்தச் சமூகத்தை எவ்வாறு மாற்ற முடியும் என்பதையும் கற்பிக்கின்றது. ஒவ்வொருவருடைய உறுதியான முதுகெலும்பைக் கொண்ட மக்களாக உருவாக்கின்றது. மற்றைய தத்துவங்கள் மனிதர்களின் மேல் ஏறி சவாரி செய்ய நித்தம் முயற்சிக்கின்றன. இதுவே மற்றைய தத்துவங்களுக்கும் மார்க்சீயத்திற்கும் உள்ள வித்தியாசமாகும். பொருள்முதல்வாதம் அனைத்து விதமான கருத்துமுதல்வாத குப்பைகளையும், மதம் கற்பிற்கும் புரட்டுகளையும் எதிர்த்து நிற்கும் ஒரே தத்துவம். மூடநம்பிக்கைளை எதிர்த்து நிற்பது பொருள்முதல்வாதம். விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மார்க்சியத்தின் தத்துவத்தினை நிரூபிக்கின்றன. இயக்கவியல் என்பது மிகமிக முழுமையான, ஆழமான, ஒரு தலைப் பட்சமில்லாத வடிவத்தில் வளர்ச்சியைப் பற்றி விளக்கும் போதனையாகும். நிரந்தரமாக வளர்ச்சியற்ற வண்ணமுள்ள பருப்பொருளை தமக்கு பிரதிபலித்துக் காட்டும் மனித அறிவின் சார்பு நிலையை வலியுறுத்தும் போதனை என லெனின் விளக்கின்றார். இயற்கை என்பதே வளர்ச்சி பெற்றுக் கொண்டிருக்கும் பருப்பொருள். சுயமாக இயங்கிக் கொண்டே இருக்கின்றது. இந்த இயற்கையை மனித அறிவில் பிரதிபலிக்கின்றது. இது பொருளாதார அமைப்பினைப் பொறுத்து பிரதிபலிக்கிக்கின்றது. மனிதர்கள் உருவாகுவதற்கு முன்னரே உயிரிணங்கள் தோண்றியிருக்கின்றன. இவைகள் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டங்களையும் பல்வேறு பரிமாணங்களையும் போராட்டத்தின் ஊடாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.அரசியல் பொருளாதாரத்தினை விளங்கிக் கொள்ள உற்பத்திச் சக்தியின், உற்பத்தி உறவிற்கு மேல் கட்டப்பட்ட பொருளாதார அமைப்பினை பற்றிய போதிய முன்னறிவு அவசியமானதாகும். பொருளாதார அமைப்புச் சார்ந்து உற்பத்தி முறை, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை ஆராயும் முறையை வெளிப்படுத்துகின்றது. பொருளாதார அமைப்புமுறை என்ற அத்திவாரத்தின்[அஸ்திவாரத்தின்] மீதுதான் அரசியல் மேல்கட்டுமானம் கட்டப்படுகின்றது. முதலாளித்துவ பொருளாதாரவாதிகள் மதிப்பு பற்றிய உழைப்புத் தத்துவத்தை வெளிக் கொண்டு வந்தார்கள். மார்க்ஸ் ஒவ்வொரு பண்டத்தின் மதிப்பும் அதை உற்பத்தி செய்வதில் செலவழிக்கப்பட்ட சமுதாய ரீதியான அவசியமான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுதாக விளக்கினார் என்கின்றார் லெனின். பொருட்களுக்கு இடையேயான பரிமாற்றம் மனிதர்கள் இடையிலான உறவு நிலவுவதை மார்க்ஸ் விளக்கினார். பணம் தனிப்பட்ட உற்பத்தியளவில் பொருளாதார வாழ்வை இறுகப்பிணைக்கின்றது. மூலதனம் இந்த பிணைப்பை வளர்ச்சியுறுவதை குறிக்கின்றது. மனிதனின் உழைப்புச் சக்தியே ஒரு பரிமாற்றப் பண்டமாகி விடுவதை நிறுவினார். தொழிலாளி உற்பத்தி சாதனத்தைக் கொண்ட உரிமையாளனிடம் தனது உழைப்புச் சக்தியை விற்கின்றார்கள். அவர்கள் பெறும் கூலியைக் கொண்டு தமது வாழ்விற்கான செலவைப் பெறமுடிகின்றது. மறுபகுதியை ஊதியமின்றியே உழைத்து முதலாளிக்கு உபரிமதிப்பை உண்டாக்குகின்றனர். இந்த உபரிமதிப்புத் தான் இலாபத்துக் தோற்றுவாய் இதுதான் முதலாளியின் செல்வத்திற்கான தோற்றுவாய். உபரி பற்றி வெளிப்படுத்திய கோட்பாடு மார்க்சீயத்தின் முக்கிய கண்டுபிடிப்பாகும். மார்க்சீயம் ஒன்றே கூலி அடிமைமுறையை ஈவிரக்கமின்றி எதிர்க்கும் ஒரே தத்துவம் என்று லெனின் நிரூபித்தார். மார்க்சின் மூன்றாவது உள்ளடக்கக் கூறானது வர்க்கப் போராட்டமாகும். வர்க்கப் போராட்டம் தான் எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாகவும் உந்து சக்தியாகவும் விளங்குகின்றது. சமூக அமைப்பில் உள்ள முரண்பாடுகளை வர்க்கப் போராட்டத்தின் ஊடாகவே தீர்த்துக் கொள்ள முடியும். இதுவரையில் அனைத்துப் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் ஊடாக மனித சரித்திரம் கடந்து வந்துள்ளது. மனிதர்களின், இயற்கையின் வளர்ச்சி என்பது முரண்பட்டதாகவும், இரசாயன மாற்றத்திற்கு உற்பட்டதாகவும் இருந்திருக்கின்றது. பரிணாம வளர்ச்சி என்பது கூட ஒன்றையொன்று போராடி விழுங்கியே வந்திருக்கின்றது. வர்க்கங்களை உள்ளடக்கியதே சாதியச் சிந்தனையும், அதனைப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பொருளாதார அமைப்புமாகும்.வர்க்கக் கண்ணோட்டத்தைக் கொண்டே தலித்தியம் பற்றி பார்க்கப்படுகின்றது. தலித்தியம் என்பதே சாதியை முன்னிறுத்துகின்றதுயன்றி வர்க்கத்தை முன்னிறுத்துவது இல்லை. ஒரு நேர் எதிர்மாறான கண்ணோட்டத்திற்கு பதிலாக இன்னொரு மாற்றுக் கண்ணோட்டம் கொண்டே தலித்தியம் பற்றி ஆராயப்படுகின்றது.(மூலம் தோழர் வேலனின் இணையத்திலிருந்து) தொடரும்……………….இந்தப் படத்திற்க்கும் பதிவிற்க்கும் தொடர்பு இல்லை.