தன்னியல்பு போராட்டம்
தன்னியல்பு போராட்டம்

தன்னியல்பு போராட்டம்

நேற்று நடந்த விவாதம் மற்றும் அதற்க்கு பதிலளிக்கும் முகமாக நான் இந்தப் பதிவினை எழுதுகிறேன். அந்த நிகழ்ச்சியில் கருத்து பறிமாற்றம் மற்றும் தவறான கருத்துகளை சுட்டிக் காட்டுவதோடு சரியானவை என்னவென்றும் எழுத நினைக்கிறேன்.நாம் வாழும் வர்க்க சமூகத்தில் எதிரி யார் சுரண்டுபவன் யார் என்பதனை சொல்லத்தேவையில்லை ஏனெனில் அவனின் சுரண்டலுக்காக ஒட்டு மொத்த சமூகமும் அல்லல் பட்டுக் கொண்டிருப்பதை கண் கூடாக கண்ட பின்னரும் நிழலோடு சண்டை போடும் அந்த தோழர்களுக்கும் சேர்த்தே இந்தப் பதிவு.இந்த அரசு எந்திரம் எந்த வர்க்க தேவைக்காக வேலை செய்கிறது அதாவது தெரிந்து பேசுங்கள் தோழர்களே.இன்றைய சமூகத்தில் மக்கள் பல்வேறு போக்குகள் அவை ஏன் எப்படி என்று தெரிந்துக் கொள்வோம் மேலும் அந்த விவாதத்தின் முழு கருபொருளுக்கும் தொடர்ந்து பதில் எழுதுவேன் தொடராகஇனி இன்றைய பதிவுஉலகமயம் 1980இல் உருவாக்கியது இது ஒரு பன்முக நிகழ்ச்சிப் போக்கு.பொருளாதார சமூக அரசியல் பண்பாட்டுத் தளங்களில் உலகமயம் ஒரு குறிப்பிட்ட திசைவழியில் செயல்படுகிறது . எல்லாவற்றையும் தீர்மானிக்கும் காரணியாக உலகமய காலத்திய பொருளாதார மாற்றங்களை விளங்குகின்றன. இது முதலாளித்துவ உலகமயம். இன்றைய ஏகாதிபத்திய உலகமயம் . இது முதலாளித்துவத்தின் வரலாற்றில் ஒரு புதிய கட்டம்.உலகமயம் பற்றிய அரசியல் பொருளாதார ஆய்வை முதலாளித்துவத்தின் இயல்புகளில் ஒன்றாக அணுகி விளக்கியவர்கள் காரல் மார்க்ஸ் எங்ககெல்ஸ் மட்டுமே. உற்பத்தி கருவிகளை தொடர்ந்து மேலும் மேலும் உற்பத்தி திறன் உள்ளதாக மாற்றி அதன் விளைவாக உற்பத்தி உறவுகளை மாற்றி நிர்வாக முறைகளில் மாற்றி இவற்றுடன் சமுதாயத்தின் மொத்த உறவுகளையும் மாற்றினால் ஒழியே முதலாளித்துவத்தால் வாழவே முடியாது என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை முதலாளித்துவத்தை பற்றி விளக்குகிறது.நவீன உற்பத்திப் பொருள்களுக்கு வேண்டி சந்தை, சந்தையை தேடி உலகப் பயணம். விளைவு, உற்பத்தியும், விநியோகமும் நுகர்வும் உலகெங்கும் முதலாளித்துவ தன்மையானதாக மாற்றப்பட்டு விட்டது.செய்தித் தொடர்பு சாதனங்கள் மிகப்பரந்த அளவில் மேம்பாடு அடைந்தால் முதலாளித்துவ வர்க்கமானது எல்லா நாடுகளையும் மிகவும் பின்தங்கிய நாகரிக நாடுகளிலும் கூட நாகரிகத்துக்கு கட்டி இழுத்து வருகிறது. அதன் உற்பத்தி பண்டங்களின் மலிவான விலையில் சீனச் சுவர் போன்ற பெரும் தடை சுவர்களை தகர்த்தெறியும் பீரங்கிகள். அவை வேற்று நாட்டில் நாகரிக மக்கள் கொண்டுள்ள மிகப் பிடிவாதமாக மூலதனத்தை கூட மண்டியிட செய்கின்றன , ஏற்காவிடில் அழிவது உறுதி என்று அச்சுறுத்துகிறார்கள். எல்லா நாடுகளையும் முதலாளித்துவ பொருளுற்பத்தி முறை ஏறக்க வற்புறுத்துகிறது . அவர்கள் நாகரிகம் என்று எதை கருதுகிறதோ அதை அவர்களிடம் புகுத்துகிறது அதாவது தாமும் முதலாளி ஆகிவிட செய்கிறது.மக்கள்தொகையும் உற்பத்தி சாதனங்களும் சொத்தும் சிதறுண்டு கிடக்கும் நிலைக்கு முதலாளித்துவ வர்க்கம் மேலும் மேலும் முடிவு கண்டு வருகிறது அது மக்களை ஓர் இடத்தில் குவித்துள்ளது. உற்பத்தி சாதனங்களை மையப்படுத்தி உள்ளது. ஒரு சிலர் கைகளில் சொத்தை குவித்துள்ளது. இதன் இயல்பான கட்டாய முடிவாக அரசியல் அதிகாரமும் ஒரு மையத்தில் குவிக்கப்பட்டு விட்டது( கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை).இது வர்க்கப் போராட்டத்தை விதியாக்கிவிடுகிறது. மூலதன குவியல் செல்வத்தை சிலரிடம் குவிப்பதும் . வறுமையை பெருமளவு மக்களுக்கு பரிசாக அளிப்பதுமே ஆகும். முதலாளித்துவம் மூலதன குவியல் என்ற அடித்தளத்தையே ஆதாரமாக கொண்டுள்ளது.அமெரிக்கா தலைமையிலான ஓர் உலகம் என்ற கற்பனைக்கு தடை ஏற்பட்ட நிலையில், உலகையே ராணுவ மிரட்டலில் வைக்கவும், அரசியல் பொருளாதார சிந்தனைகளை இராணுவ மயமாக்கவும், பாசிசத்தை உலகமயமாக்கமும் ஏகாதிபத்தியம் தயங்கவில்லை.சீர்திருத்தம் என்ற பெயரில் நிதி மூலதன உலகமயத்தின் ஏஜென்சிகளாக மாறிய அரசுகளும் மக்களுக்கும் இடையிலான முரண்பாடுகள் வளர்த்தல் போன்ற பலவும் உலகமயத்தின் முதலாளித்துவ அமைப்பு நெருக்கடியை புதிய கட்டத்திற்கு தள்ளி வருகின்றன.இந்தப் பகுதி தொடரும் மேலும்சாதியம் தோற்றம் மறைவு ஒரு சிறிய புரிதலுக்கு++++++++++++++++++++++++++++++++++++++நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலத்தின் மேல் பரம்பரையாக உரிமை கொண்டவர் தம்மை உயர்ந்த ஜாதி ஆக்கிக் கொண்டனர். அவர்களது நிலத்திலே உழைப்பவர் அவர்களது பிற சேவைகளை கவனித்தவர் யாவரும் சேவையின் அத்தியாவசியத்தை ஒட்டி பல்வேறு சமூக அமைப்பினர் ஆக பல படிகளில் பிரிக்கப்பட்டனர் . சொத்துடையவர்க்கு மதிப்பு உழைக்க வேண்டியதில்லை. உடல் உடலுழைப்பாளர் குறைவாக கருதப்படுகின்ற இது ஜாதி அமைப்பின் அடிப்படை நோக்கம் உழைப்புச் சுரண்டலே, கிராமங்களில் ஒடுக்கப்பட்டவர்கள் உற்பத்தி சாதனங்களை கொண்ட நிலப்பிரபுக்களின் தயவில் வாழ நேரிட்டது. தன் குட்டிகளைப் பிரித்து பரம்பரை பரம்பரையாக குறிப்பிட்ட வேலையில் நிலப்பிரபு செய்வித்தான் ஜாதி அமைப்பிலேயே குடிப் பழக்கம் இன்றும் தொடர்கிறது தனித்தனி சமூக அமைப்பாக வாழ்கின்றனர்.நிலப்பிரபுத்துவம் உடைந்தும் இக்காலத்திலும் தனி சமூக அமைப்பாகவே ஜாதிகள் கருதப்படுகின்றன நடைமுறையில் ஆதிக்கம் குறைந்த போதும் சிந்தனை பாகுபாடு இன்றும் நிலவுகிறது.தொழிலாளர்களாக சுரண்டப்படுவது மட்டுமல்ல சாதியின் பெயராலும் இவர்கள் சுரண்டப்படுகின்றனர் அடக்கி ஒடுக்கப் படுகின்றனர்.இயந்திர உற்பத்தி வளர்ச்சி ஒன்றே சாதி அமைப்பு ஓரளவு குறைக்க வல்லது பின்னர் முதலாளி தொழிலாளி என்ற பிரிவில் சுரண்டல் நடைபெறும் அதன் பின் நடைபெறும் சோசலிச புரட்சி ஒன்றே சாதி அமைப்பிற்கும் முடிவுகட்ட கூடியது அங்கும் இக்கருத்தை ஒழிக்க பல ஆண்டுகள் ஆகலாம் ஏனெனில் இது சிந்தனையுடன் ஒன்றி இருப்பதாகவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *