தனியார்மயமாகும் இந்திய இராணுவத்தளவாடங்கள்- ராகுல் வர்மன்
தனியார்மயமாகும் இந்திய இராணுவத்தளவாடங்கள்- ராகுல் வர்மன்

தனியார்மயமாகும் இந்திய இராணுவத்தளவாடங்கள்- ராகுல் வர்மன்

தனியார்மயமாகும் இந்திய இராணுவத்தளவாடங்கள்- ராகுல் வர்மன்

தனியார்மயமாகும் இந்திய இராணுவத்தளவாடங்கள்- ராகுல் வர்மன் அவர்களின் நூலை குறித்த என் விமர்சனம் என்பதைவிட இராணுவத்தின் உள் நிலையை என்னால் புரிந்தவரை விளக்கி எழுதுவேன்.

தேசபக்தியின் பெயரால் நாடே சூராவளியில் சிக்கி உள்ளது ஆம் காவிகளின் ஆட்சி மத்தியில் அமைந்த பிறகு தனது கபடதனமான மக்களுக்கு விரோத எல்லா செயல்களையும் மூடிமறைக்க அவர்களின் சிறந்த ஆயுதம் இராணுவத்தை பயன்படுத்தி கொள்வது. மக்களுக்காக நடிக்கும் இந்த பாசிஸ்ட்களை அறிய இதோ அவர்களின் உண்மை முகம் :- ஒருபுறம் மக்களுக்கு தேவையான உணவு, இருப்பிடம், சுகாதாரம் பேண அரசிடம் பணம் இல்லை மறுபுறமோ இராணுவ செலவானது நாட்டின் அதாவது மைய அரசின்  ஆண்டு வரவு-செலவில் ஆறில் ஒரு பகுதிக்கு மேல் இராணுவத்துக்காக செலவு செய்ய படுகின்றது. இதனை கீழ்கணும் வரைப்படம் மூலம் அறியலாம்.

வரைப்படம் ஒப்பீட்டு செலவினங்களோடு பாதுகாப்புக்கான வரவு செலவு திட்டம் ஆண்டு 2015-2016[ ரூ கோடிகளில்].

ஆளும் கும்பலின் எல்லா ஊழல்களும் தேசபக்தி என்ற ஏமாற்றும்திறனால் மூடி மறைக்கபடுகின்றன. காவிகளின் தேவைக்காக தேசபக்த்த ராகங்கள் ஏற்ற இறக்கமாக பாடப்படுகின்றன அதுவும் அவர்கள் பிரச்சினையின் அடியொற்றி, அப்பாவி இஸ்லாமியர்களும் தலித்துகளும் தேச மத நலன் காக்க அடிக்கடி கொல்லப்படுவது இந்த காவிபடையின் விளக்கம் கேவலமானது பாஸிஸத்தின் உச்சம்.  இராணுவத்தினர் உயிர் பறிப்பு நாட்டின் இறையாண்மைக்கு ஏற்பட்ட சவலாக மொத்த மனிதம் காவுகொள்ளபடவேண்டும் என்று எல்லா ஊடகங்கலும் தேசபக்த பஜனையில் மூழ்கடித்துவிடுகின்றது, இன்றோ ஏகாத்தியபத்திய கொள்ளையர்கள் நாட்டின் மொத்த செல்வங்களையும் சுரண்டி செல்ல அனுமதிக்கவே பல தேசபக்த்த கூத்துகள். இதை அறியாத அப்பாவிகள் இராணுவத்தின் மீதான எந்த எதிர்ப்பையையும் நாட்டின் புனிதம் “தேசபக்தி மீதான” தாக்குதலாக உருவகபடுத்தி சில பெரு முதலாளிகளின் நலன் முன் நிருத்தும் ஏமாற்று வேலையை செய்கின்றனர் என்பதனை விரிவாக பார்கலாம்.

ராகுல் வர்மனின் -தனியார் மயமாக்கபடும் இராணுவதளவாடங்கள் நூல் வாசித்த பின் இராணுவம் அதன் பன்முகத்தை தெரியபடுத்தபடுதல் அவசியம் ஆகவே நான் தேசபக்த்த உண்மை முகங்களை அலச வேண்டியுள்ளது. ஆளும் வர்க்க நலன் காக்க அப்பாவி மக்களின் மீதான சுமையை அறிவது அவசியம்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *