“தத்துவஞானத்தின் அடிப்படைப் பிர்ச்சினை”
“தத்துவஞானத்தின் அடிப்படைப் பிர்ச்சினை”

“தத்துவஞானத்தின் அடிப்படைப் பிர்ச்சினை”

அன்பு மார்க்சிய மேடைத் தோழர்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் இன்றைய தலைப்பான “ இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்” உப தலைப்பு “தத்துவஞானத்தின் அடிப்படைப் பிர்ச்சினை” தோழர்களே -சி.பி.

நான் இன்றைய வகுப்பில் நடத்தும் முன்னர் சில வற்றை விளக்கவும் மேலும் இந்திய தமிழக தத்துவம் பற்றி தேடுதலுடன் இன்றைய பதிவின் தலைப்பையும் பேசவுள்ளேன் தோழர்களே.

இந்த வகுப்பின் அவசியம் என்ன?

ஜார்ஜ் பொலிட்சரின் வார்த்தைகள் கீழே….

வர்க்கப் போராட்டத்தைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் சோறு கிடைக்க போராடினால் போதும் அரசியல் போராட்டம் தேவை இல்லை என்று சிலர் நினைக்கின்றனர். புரட்சிகரமான தெருச் சண்டை நடத்தினால் போதும் நிறுவனம் கட்சி ஒன்றும் தேவையில்லை என்று சிலர் நினைக்கின்றனர். அரசியல் போராட்டம் ஒன்று தான் இந்த வர்க்கப் போராட்ட பிரச்சினைக்கு பரிகாரம் தொழிற்சங்க இயக்கம் முதலான மற்றவை வேண்டியதில்லை என்று சிலர் எண்ணுகின்றனர்.ஆனால் ஒரு மார்க்சியவாதி இந்த வர்க்கப் போராட்ட எப்படிப் பார்க்கிறான் மூன்று அம்சங்களை கொண்ட ஒரே ஒரு பிரச்சினையாக பார்க்கிறான்.

1).பொருளாதார போராட்டம்

2).அரசியல் போராட்டம்

3).தத்துவ அறிவுப் போராட்டம் என்ற மூன்று அம்சங்களைக் கொண்ட வர்க்கப் போர் என்று மார்க்சியவாதி கருதுகிறான்.

தத்துவ போராட்டம் பிரசாரம் என்ற உருவத்தில் நிலவுகிறது ஆகவே இந்த தத்துவ போர் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அது அரசியல் பொருளாதார நிலைமைகளில் நிச்சயமாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

வர்க்கப் போர் என்பது ஒரு மகத்தான பிரச்சினை அதன் ஒவ்வொரு தனி அம்சங்களையும் நாம் பார்க்க வேண்டும் அத்துடன் அதை முழுமையாக பரிசீலிக்க வேண்டும் அப்படி பார்க்காமல் வர்க்கப் போரின் எந்த தனி அம்சத்தையும் பற்றியும் நாம் முடிவு கட்ட முடியாது .ஆகவே மூன்று முனைகளிலும் போராடும் திறமை பெற்றிருந்தால் மட்டும் தான் இயக்கத்தில் சிறந்த முறையில் இயங்க முடியும்.

வரலாற்று வழியில் தத்துவ ஞானம்

தத்துவத்தின் பொதுவான வளர்ச்சிப்போக்கில் உண்மையான பொருளாதார வாழ்வில் ஏற்படும் மோதல்கள் தத்துவத் தளத்தில் சமரசமின்றி நடத்தப்பட்டன.  இந்த மோதல்கள் இல்லாத எந்த கட்சியும்* சாராத தத்துவம் என்பது எதுவும் இல்லை அது தத்துவத்தின் வரலாறு நெடுகிலும் காணக்கிடைக்கிறது. (கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாத பிரிவைதான் கட்சி என சுருக்கி கொடுக்கப் பட்டுள்ளது).

வேளாண்மையின் வளர்ச்சியோடு ஏற்பட்ட வேளாண் வர்க்கங்களின் சமூகம் அரசு மதம் ஆகிய சமூக மேற்கட்டுமானம் சுரண்டலும் ஒடுக்குமுறையும் நியாயப்படுத்தல் இந்தக் கருத்தியலும் கருத்துமுதல்வாதம் வளர்க்க முற்பட்ட போது அறிவியல் வளர்ச்சி தடைபட்டது. (சாதியம் மேலோங்கிய காலத்தில்).

பொருள்முதல்வாதம் வேட்டையாடப்பட்டது இந்நிலையில் வளர்க்கப்பட்ட பொருள்முதல்வாதமும் வரலாற்றின் இடைக்கால மெங்கும்  இயக்க மறுப்பு பொருள் முதல்வாதமாக இருந்தது. பொருளை இயக்கத்தில் உள்ளதாக பார்க்காமல் மேம்போக்காகப் பார்த்தது இந்த இயக்கப் போக்கை தந்தை பெரியாரின் பகுத்தறிவோடு பொறுத்தி பார்ப்போம் இறுதியாக.

 முதலில் இந்திய தத்துவமும் தமிழர் தத்துவம் பற்றி பார்ப்போம்.

தத்துவ ஞானத்தின் அடிப்படை பிரச்சினைகள்

சிந்தனை மனித வரலாற்றின் படைப்பு எனும் அறிவியல் சிந்தனை மூன்று அடிப்படைகளில் கொண்டு பிறந்தது.

முதலில் மெய்யில் கருத்துகள் வளர்க்க வகை செய்யப்படும் நோக்கில் அறிவு உரிமை பெறல்.

இரண்டாவதாக அவை தோன்றுவதற்கான சமூக வளர்ச்சி பின்புலம்.

மூன்றாவதாக இயற்கை மனிதன் சமூகம் என்பவற்றின் தேவைகளைப் பற்றிய அறிவை தொகுத்துக் காணல்.

இந்த நிகழ்ச்சிப் போக்கில் கருத்துகளும் நடைமுறையும் முக்கிய இடம்பெறுகின்றன. மெய்யில் குறிப்பிட்டதொரு நாட்டில் எப்போது பிறந்தது என்பதனை அறுதியிட்டு கூறல் கடினமான ஒன்றே.

மனிதனின் இயற்கையை பற்றிய அறிவு நம்பிக்கைகள் நெறிமுறைகள் என்பன வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு வடிவங்களில் பிறக்கின்றன.

பழையன புதியன நல்லன தீயன என வரையறுற்கும் காலமும் பின்புலமும் வேறுபடுகின்றன. எனவே நாட்டுக்கு நாடு நிலம் சார்ந்த மெய்யியல் பிறக்கும் காலமும் வேறுபடுகிறது. இருப்பினும் உலகில் மெய்யியல் சிந்தனையாளர்கள் என இக்காலத்தில் அறியப்பட்ட பலரும் கிரேக்கம் சீனம் இந்தியா என்ற நாடுகளில்தான் மெய்யியல் கருத்துகள் சமுதாய வளர்ச்சி நிலை மாற்றங்களை ஒட்டி முதல் முதலில் இருந்தன என்பதை ஏற்கின்றனர்.

உலகம் தோன்றிய காலம் தொட்டு எது முதல் என்னும் வினா எழுந்து வந்துள்ளது. பொருளே முதல் என்றோர் பொருள் முதல் வாதிகள் எனவும் ஆன்மா அல்லது கடவுள் முதல் என்றோர் கருத்துமுதல் வாதிகளையும் பிரிக்கப்பட்டனர். இது எல்லா நாடுகளிலும் உண்டான நிகழ்ச்சிப் போக்கு ஆகும்.

தத்துவம் அறிதலின் பொது ஒழுங்காக அமையப்பெற்றது சமூக உற்பத்தி முறையில் வர்க்கங்களும் வர்க்க மோதல்களும் அவற்றை ஒட்டிய சமூக மேற்கட்டுமானம் உருவான காலத்தில் தான் இதன் காரணமாகவே தத்துவ அமைப்புகளுக்கு சமூக வர்க்க சார்பு தன்மை ஏற்பட்டு விடுகிறது, இதன் காரணமாகவே தத்துவ உலகில் முகாம்களுக்குள் மோதல்கள் சமரசமின்றி நடைபெறுகின்றன.

கருத்துமுதல்வாதம் பொருள்முதல்வாதம் என்ற இரு பெரும் பிரிவினூடே அனைத்து நாடுகளின் தத்துவப் பிரிவுகளும் ஓய்வு இன்றி செயல்படுவது வரலாறு உறுதி செய்துள்ளது. இவை இரண்டும் தமக்கே உரித்தான சமூக உணர்வு மானிட உள்ளக் கிளர்ச்சியைத் தத்துவார்த்த தரத்தில் மனிதர்களிடையே வளர்ப்பதில் அக்கறை காட்டுகின்றன.

இயற்கையில் புற நிலைத்தன்மையை ஆதாரமாகக் கொண்டு மானுட இருத்தலை ஆய்வதும் மானுட வாழ்நிலையிலிருந்து மானுட ஆன்மா அதாவது உணர்வு ஆக்கம் பெறுவதை அறிவியல் ரீதியாக கண்டறிதலை அடிப்படையாகக் கொண்டு விளக்குவதும் பொருள்முதல் வாதத்தின் இயல்புகளாகும். பொருள்முதல்வாதம் நடைமுறையும், அறிவியலையும் ஆதாரமாகக் கொண்டது.

மானுட உணர்வை ஆதாரமாகக் கொண்டு பொருள் இயக்கத்தை மானுட வாழ்நிலையை விளக்கி மானுட உணர்வின் வழியே மட்டும் புறநிலை  எதார்த்தங்களை விளக்கிக் கொள்வதும் , வாழ் நிலைக்குக் காரணமாய் உணர்வை முன்வைப்பதும் கருத்துமுதல் வாதத்தின் வழிமுறையாகும் .இது ஆன்மீக வாதத்துக்கு வழி ஏற்படுத்துகிறது. அறிவியல் தன்மையான மானுட பரிசோதனைகளையையும் உண்மை அறிதலையும் மறுக்கிறது. ஆன்மீகம் நம்பிக்கை மட்டும் ஆதாரமாகக் கொண்டது.

வாழ்வின் அடிப்படைக் கேள்விகளாக வரலாற்றின் வழிநெடுகிலும் தொடர்ந்து வரும் துன்பம் மரணம் போன்றவர்களுக்கு தத்துவம் பதில் சொல்ல வருகிறது இவை குறித்த உலகப்பார்வை ஒன்றிணைந்து தத்துவரீதியாக குறைவாகவோ மிகுதியாக கொண்டிராத மனிதன் எவனும் இல்லை. இந்த அடிப்படையில் எந்த ஒரு மனிதனும் தத்துவ ஞானியே.

தத்துவ ஞானியாக இல்லாத மனிதன் எவனும் இல்லை . தனிமனிதனில் செயல்படும் தத்துவம் அவனுள் செயல்படும் சமூக வர்க்க உணர்வே ஆகும் . இந்த சமூக உணர்வு வரலாற்று பூர்வமாக வளர்ச்சியடைகிறது. இது ஏறத்தாழ 3000 ஆண்டுகால வரலாறு ஆகும்.

தத்துவஞான பொருள்முதல்வாதம் இந்த 3000 ஆண்டுகளில் பல கட்டங்களை தாண்டி மார்க்சிய பொருள்முதல்வாதம் என்ற தற்போதைய அறிவியல் யுகத்துத் தத்துவஞானமாக வளர்ச்சி அடைந்துள்ளது. வர்க்க சமூக ஆக்கத்துக்கு முந்தைய சமூக அமைப்புகளில் உருவான முன்னிலை பொருள்முதல்வாதம் அல்லது ஆதி பொருள்முதல்வாதம் இயற்கையின் மாற்றங்களையும், அவை மீதான மானுட  நடவடிக்கைகளை ஆதாரமாகக் கொண்டது.

அறிவியல் துறைகளும் தத்துவமும் நம்பிக்கையும் ஒன்றாக செயல்பட்ட நிலையில் முன்னிலை பொருள்முதல்வாதம் மய(MYTHIC) தன்மைகளை கொண்டதாக விளங்கியது.

உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியோடு இணைந்து சமூக மானுட அறிவின் வளர்ச்சி வரலாற்றில் இடைக்காலத்தில் சுரண்டலும் ஒடுக்குமுறையும் மடைமையும் பழைமையையும் மனித மனங்களில் பதித்து நம்பிக்கை அமைப்புகளை கருவியாகக் கொண்டு தத்துவார்த்த ரீதியில் புத்தமைக்கப்பட்ட இவற்றை எதிர்த்த கலகங்களின் தத்துவங்கள் அடித்தள மக்களிடமிருந்து வெடித்தன. அவை அரசு மதங்கள் ஜாதி போன்ற பொதுவான இயந்திரங்களை தாக்கின மானிட மேன்மையை போற்றின.

அதே சமயத்தில் நம்பிக்கை அமைப்புகளை உடைக்கும் அளவு வளர்ச்சி அடையாமல் இருந்தது அந்நாளைய பொருள்முதல்வாதம். நம்பிக்கை என்ற கூட்டுக்குள் மட்டுமே செயல்பட முடிந்தது.

ஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி தொழில் புரட்சியும் இந்த தேக்கத்தை உடைத்து பகுத்தறிவு இயக்கம் மலர்ந்தது அது கடவுளின் மரணத்தை பிரகடனப்படுத்தியது. மனிதனை முதன்மையாகக் கொண்ட அறிவியல்  வழியிலான பொருள்முதல்வாதம் வளர்ந்தது.

அரசு மதம் ஆகிய சமூக மேற்கட்டுமானம் சுரண்டலும் ஒடுக்குமுறையும் நியாயப்படுத்தல் காண கருத்தியலும் கருத்துமுதல்வாத வளர்க்க முற்பட்ட போது அறிவியல் வளர்ச்சி தடைபட்டது.

பொருள்முதல்வாதம் வேட்டையாடப்பட்டது இந்நிலையில் வளர்க்கப்பட்ட பொருள்முதல்வாதமும் வரலாற்றின் இடைக்கால மெங்கும்  இயக்க மறுப்பு பொருள் முதல்வாதமாக இருந்தது. பொருளை இயக்கத்தின் உள்ளதாக பார்க்காமல் சசுவதனமாகப் பார்த்தது. மறுமலர்ச்சி காலத்துக்குப்பின் மனித அறிதலில் அறிவியல் தலையீட்டால் இந்த நிலை மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பொருள்முதல்வாதம் இயக்கவியல் தன்மையோடு தத்துவார்த்த பொருள்முதல்வாத வளர்க்கப்பட்டன.

மார்க்சிய தத்துவ ஞானங்கள் அறிவியலின் கண்டுபிடிப்பால் ஆக்கத்திற்கும் ஆதாரமாக அமைந்தன தற்போது அறிவியல் புரட்சி யுகத்தில் தத்துவ ஞானம் மார்க்சியம் மட்டுமே திகழ முடியும் என்பதை நமது சமகால அரிய பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி உறுதி செய்கிறது. அறிவியல் அறிதலுக்கான தத்துவயியலை மார்க்சியம் முரணின்றி முன் வைக்கிறது.  அறிவியல் யுகது மானிட உலகை பார்வையாக மார்க்சியமே திகழ முடியும்.

 நிகழ்ச்சிகளை அவன் கட்டுப்படுத்தி அவற்றால் அவன் கட்டுப்படுத்த படாமல் இருக்க வேண்டுமானால் ஒரு கம்யூனிஸ்ட் நன்கு சிந்திக்க பட்டதும் உறுதியுடன் கடைபிடிக்கப்பட்டது  உலக கண்ணோட்டம் தேவை என்றும் நமது மார்க்சிய ஆசான் கூறியுள்ளர்.

இந்திய தத்துவ ஞான போக்கு பற்றி

புராண சாத்திர நூல்கள் கூறும் கருத்துக்கள் அல்ல நம்பிக்கை நமது அறிவின் தன்மை பற்றியதாகும் அதாவது சில பொருட்களின் தோற்றம் முடிவு ஆகியவற்றை நம்மால்  அறியவியலாது என்பது சித்தாந்த சாத்திரங்கள் மட்டுமன்றி இக்கால அறிஞர்கள் எழுத்துக்களிலும் காணப்படுகிறது.

அடி முடி தேடுவதும் ஒரு பொருளின் காரண காரியத்தை அறிவதும் தொடர்புடையது ஆகவே அடி முடி தேடுவது ஆகாது என்பது காரண காரியத்தை அறிவதும் கூடாது என்பதாகும்.

இது ஒரு தனிப்பட்டவரின் குறைபாடு என்று கூறுவதில் அர்த்தமில்லை அத்தகைவரை குறை கூறியும் பயனில்லை. நமது சமூகத்தில் ஆழப் பதிந்துள்ள ஒரு தத்துவத்தின் உலக நோக்கின் வெளிப்பாடு இதுவென கொள்ளுவது சாலப்பொருந்தும் அவ்வாறு விளக்கம் கண்டாலே அர்த்தத்தின் அடியையும் முடியையும் ஆராய்வதற்கு  வழி பிறக்கும்.

ஒரு தனிப்பட்டவரின் திரிப்புணர்ச்சி அல்லது மருள்(illusion) இரங்கத் தக்கதாயினும் அஞ்சத் தேவையில்லை ஆனால் ஒரு கூட்டதவரது அல்லது சமூகத்தினரது பொய்மை(illusion) அச்சமூகத்தவருக்கு மாத்திரமல்லாது பிறருக்கும் பேரபத்தை விளைவிக்க கூடியதாகும்.

ஜெர்மானியர் ஆரியர் என்றும் உலகை ஆளப் பிறந்தவர் என்றும் இரண்டு ஒரு எழுத்தாளர் இயற்றிய மயக்க மொழிகள் நாஜிக்களின் ஆக்கபூர்வமான தத்துவமாகிய பொழுது சாதாரணமான ஜெர்மானியர் மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் அதை நம்பினர்.

விஞ்ஞானிகள் சிலரும் அதை உண்மை என ஏற்றுக்கொண்டனர் அதன் விளைவு உலகம் நன்கு அறிந்ததே.

 அதைப்போலவே இரண்டாம் உலகப் போருக்குப் பல ஆண்டுகள் முன்னிருந்த ஜப்பானிய ஆளும் வர்க்கத்தினர் அந்நாட்டு அரசர் கடவுளின் குமாரர் என்று ஐதீகத்தை தேசத் தத்துவமாக காத்து பேணி வந்தனர். இது மாபெரும் பொய்யாகும் ஆயினும் அதை நம்பிய பல்லாயிரக்கணக்கான சாதாரண போர் வீரர்கள் தாம் கடவுளுக்காக இறப்பதாக எண்ணிக் கொண்டு இறுதிவரை போரிட்டு மடிந்தனர் போன்ற உதாரணங்கள் ஏராளம் உண்டு.

இத்தகைய அமைப்பில் உள்ள பேராபத்து யாதெனில் ஒத்துப்போதல் எனும் கொள்கையின் அடிப்படையில் எதிரான அல்லது மாறுபட்ட சிந்தனைகளை அடக்கி ஒடுக்குவது அமெரிக்காவில் பொதுவுடைமைக் கட்சி சட்டவிரோதமாக பட்டது. இவ்வடிப்படையில் ஆகும். சில நம்பிக்கைகள் இடைவிடாத பிரசாரத்தின் விளைவாக தேசிய (பொது) உண்மைகளாய் அமைக்கப்பட்டு விடுகின்றன. பகுத்தறிவின் அடிப்படையில் சமய சடங்குகள் மறுக்கப்படும் அதே வேளையில் புதிய ஐதிகங்கள் நிலைநாட்ட படுகின்றன.

கருத்துக்களும் நம்பிக்கைகளும் ஒவ்வொரு காலச் சமுதாயத்தின் அடிப்படையாய் பிறந்து நிறுவுவன. அவ்வவ்ச் சமுதாயத்துக்குப் பக்க பலமாயமைவன. அவற்றை மாற்றுவது இலகுவான காரியமில்லை. அடிப்படையான சமுதாய மாற்றம் ஏற்படும் பொழுதுதான் அவற்றை மாற்றி அமைக்க கூடிய சூழ்நிலை உருவாகிறது. அங்கும் கூட அரசியற் பொருளாதார நிறுவனங்கள் மாற்றப்படும் வேகத்தை விட குறைந்த வேகத்திலேயே சிற்சில எண்ணங்கள் மறைகின்றன. எனவே தாம் பிறந்த சமுதாயத்தின் பௌதிக தன்மை மாறிய பின்னரும் நீடித்து நிற்க்கும்  ஆற்றல் கருத்துகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் உண்டு. அதனால் தவறான கருத்துகளை எதிர்க்கத் தக்க அதே வேளையில் கருத்துகளை கருத்துகளால் மட்டுமே வெல்ல முடியாது என்பதனை மனதில் கொள்ள வேண்டும்.

அடியும் முடியும் தேடிய கதையானது நமது சமூகத்தில் பலரால் நம்பியோ நம்பாமலோ ஏற்றுக் கொள்ளும் நிலையை காணலாம்.

இந்திய பெரும்பான்மையான கல்வியாளர்களாகட்டும் அரசியல் தலைவர்களாகட்டும் முக்கியமான பிரச்சினைகளுக்கு பண்டைய நூல்களின் ஆதாரங்களை காட்டுகின்றனர். மகாத்மா காந்தி ராஜாஜி ஆகட்டும் கீதையையும் இதிகாசங்களை துணைக்கிழுப்பதை காணலாம் இவர்கள் போலவே பெரும்பான்மையான தமிழ் தலைவர்கள் திருக்குறளை வேதமாக போற்றுவதைக் காணலாம்.

மிகப்பெரிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்டி தமது கூற்றுக்கு அரண் செய்வது இந்திய மெய்யியல் வரலாற்றில் முதன்மை பெற்று வந்திருக்கின்றன.

இந்திய மெய்யியல் வரலாற்றைப் படிப்பவர்கள் குறிப்பாக தோன்றும் ஒரு பண்பு உண்டு. இந்தியாவில் தோன்றிய மெய்யியல் உட்பிரிவுகள் யாவும் வேத உபனிடதங்களையே ஆதாரமாய் கொண்டவை மேலும் இந்தியச் சிந்தனை வடிவங்களில் வேர் விட்டு வளராதது ஒன்றேனும் இல்லை உண்மையில் உலகாயதம் ஒன்றனைத் தவிர.

பல்வேறு சூத்திரங்களினால் ஒரு நூல் இயற்றினார் அதன் பெயர் பிரம்ம சூத்திரம்.

அத்துவைதத்தை நிறுவிய சங்கரர் துவைதத்தை நிறுவிய மத்துவர். விசிட்டத் துவைதத்தை நிறுவிய  இராமானுஜர் என்போரெல்லாம் பிரம சூத்திரத்துக்கு பாடியங்கள் எழுதியோரே.

இதிலிருந்து பெறப்படுவது ஒன்றுதான் இந்திய மெய்யியலைப் பொறுத்தளவில், ஆராய்ச்சி என்றைக்கோ முடிந்து முடிவுகளும் அறிதியிட்டு வெளியிடப் பட்டு விட்டன். பின் வந்த ஞானிகளின் ஆராய்ச்சிகள் யாவும் அம் முடிவுகளிய சரியாக விளங்கிக் கொள்வதன் பொருட்டே மேற்கொள்ளப்பட்டன.

தேவி பிரசாத் சட்டோபாத்யாயா  கூறுவது. சுருக்கமாக,” சமுதாயத்தில் ஒரு பிரிவினர் மறுபிரிவினரின் உழைப்பினல் உண்டாகும் உபரியினால் வாழ்ந்துக் கொண்டும், அதே சமயாம், உற்பத்தியில்  தமக்கு பொறுப்பை செய்யாமல் விலகி வாழ முடியுமானல்,

அதனால் புற உலகத்தின் ஏதாவது தன்னை ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியுமானால் மட்டுமே இத்தகையதொரு தத்துவம் தோன்றியிருக்க முடியும் ஏனெனில் உழைப்பு முறைதான் உணர்வை புறத்திலிருந்து  பாதிக்க வல்லது தெளிவாக சொல்வதானால் கொள்கையை செயலில் இருந்து முற்றிலும் விளக்கப்பட்டு விட்டது முற்றிலும் கொள்கையாகவே நின்றுவிட்டது.சிந்திக்க பட்ட பொருள்கள் வெறும் கருத்துகள் ஆகவே நின்றுவிட்டன. அறிபவன் அதாவது தான் புறவுலக பொருளில் தாக்குதலில்  உருவாவது என்றாலும் அந்தப் பொருட்களை அறியாமை என்றோ அவித்யை(மாயை) என்றோ கூறும் நிலை உண்டாகிவிட்டது. உபநிடத கால இந்தியாவிலும் விவசாயம் கலைகள் எல்லாம் கீழ்மட்ட ஜாதிகளுக்கு ஒதுக்கப்பட்டு விட , ஓய்வுடைய ஜாதியினர் ஆகிய ஷத்திரியர்கள் அதாவது ஆளும் வகுப்பினரும் அவர்களது நேரடி ஆதரவில் வாழ்ந்த பிராமணர்களும் பெரும்பாலும் பிளாட்டோ கூறிய வழியில் தங்கள் சிந்தனைகளை புனரமைத்து கொண்டார்கள் அதாவது அவர்கள் சிந்தனைகள் உழைப்பிலிருந்து விடுபட்டு விட்ட சிந்தனைகள் அதனால் அவை உலக மறுப்பு தத்துவங்களாக இருந்தன”… என்று மனுதர்மத்திறக்கு எதிராக கூறியுள்ளார்.

  இவற்றின் சிகரமாக திகழ்வது பிரம்மஞானம். அது உபநிடதங்களின் உயர் நிலையாக அமைந்தது.

பிரம்ம ஞானம்,  வேதவாக்கு சைவசித்தாந்தம் , இவ்வாறான பல்வேறு போக்குகள் இவை சார்ந்த மரபுகள் தமக்குள் சில வேறுபாடுகளை இருந்தாலும் அறிவு வளர்ச்சிக்கு முள்ளுபோடுபவன,  அதாவது சமுதாயத்தை உள்ளவாறு கட்டிக்காக்கும் நோக்கம் கொண்டவை. எனவே தான் அறிந்தோ அறியாமலோ இவற்றைப் பிரதிபலிக்கும் பல்வேறு தத்துவங்களை நாம் அறிந்து அதிலிருந்து தவறுகளை வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

இயற்கையுடன் நடத்தும் போராட்டங்களில் சரி அல்லது சமுதாய போராட்டத்திலும் சரி எந்திரமாய் பிரித்துப் பார்க்க கூடாது, ஏனெனில் சில வேளைகளில் சரியான கருத்துக்களுக்கு வெற்றி பெறுவதில்லை தோல்வி அடையும் ஆனால் அது உள்ளார்ந்த குறைபாடுகள் என்று புறக்காரணிகளாகும் நடைமுறையில் தவறுகள் திருத்தப்பட்டு சரியான கருத்துக்கள் வெற்றி பெறுகின்றன.

இனி தோழர் தேவ பேரின்பன் நூலில் இருந்து….தமிழரின் முதல் உலகப் பார்வை பொருள்முதல்வாதம் தான் அதன் எதிர்வினையாக பலவகைப்பட்ட கருத்துமுதல்வாதம் தோற்றம் பெற்று இத்தகைய கருத்துமுதல்வாதம் எதிர்கொள்ளும் போராட்டத்தின் வழியே தமிழரின் தத்துவம் அதன் பொருள்முதல்வாத வளர்ச்சி பெற்றது.

இதற்கு தமிழர்களின் உலகத் தொடர்பு பேராக்கம் புரிந்தது வரலாற்றின் இடைக்காலத்தில் வைதீகமும் அரசும் கைகோர்த்து கொண்டு, அரசு சாதி ஏற்பாட்டின் மூலம் மத விதிகள் வழியே தன்னை நிலைநாட்டிக் கொண்டபோது எல்லா வகையான பொருள்முதல் வாதிகளும் கொடூரமாக வேட்டையாடப்பட்டனர். பொருள்முதல்வாதம் இழி நிலைக்கு தள்ளப்பட்டது.

இதை எல்லாம் கடந்து பொருள்முதல்வாதம் தனது தத்துவக் கருத்துகளை வளர்ப்பதில் சாதனைகளை புரிந்தது. மானுட வாழ்வின் உண்மைகளை பொருள்முதல்வாத வழியில் விளக்கியது .அதேசமயத்தில் உலகெங்கும் இடைக் காலத்தில் நிலவிய பொருள்முதல்வாத தத்துவத்தின் பொது பலவீனம் தமிழர் வளர்த்த பொருள்முதல்வாத தத்துவத்திலும் நிலவியது.

இடைகால பொருள்முதல்வாதம் பொருளின் தன்மையை வலியுறுத்தியது பொருளின் இயக்கத்தை வலியுறுத்தியது பொருளை மாற்ற முடியும் என்று கூட வாதிட்டது அதே சமயத்தில் பொருள் இயக்கத்தின் இயக்கவியலை வளர்த்து எடுக்கவில்லை , பொருள் இயக்கத்தின் அங்கமாக விளங்கும் உணர்வும் செயல்படும் பாத்திரத்தை ஏற்கவில்லை உணர்வின் செயல்பாட்டை பொருள்முதல்வாத வழியில் விளக்கவில்லை.

பொருளின் இருப்பு வாழ்நிலைதான்  அங்கமாக உணர்வை வைத்துப் பொருள்முதல்வாதம் வளர்க்கப்பட்டது மார்க்சியத்தின் வழியேதான்.

மார்க்சும் எங்கெல்சும் முன்பே பொருள்முதல்வாதமு மெய்ஞ்ஞானம் பல இருந்து வந்துள்ளன பல காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் இருந்து வந்துள்ளன என்ற போதிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் விஞ்ஞானங்கள் வெகுதூரம் முன்னேறியதை ஒட்டி  மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாத்த்தை புதிதாக உருவாக்கினர். அவர்கள் அதற்கு விஞ்ஞானங்களை அடிப்படையாகக் கொண்டனர்.  நவீன கால   பொருள் முதல் வாதத்தை நமக்குத் தந்தார்கள் அதன் பெயர்தான் இயற்கையியல் பொருள் முதல்வாதம் அதுதான் மார்க்சியத்திற்கு அடிப்படை.

சரி இவற்றின் ஊடே இன்று பெரிதாக போற்றப் படும் தமிழகத்தில் பேசப் படும் பெரியாரின் பகுதறிவு தத்துவம் பற்றி தெளிவடைவோம்.

.

பெரியாரின் பகுத்தறிவாதம் இயக்க மறுப்பியல்தன்மையிலானதே

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இதனை பெரியாரின் நீண்ட பகுத்தறிவாத இயக்க நடைமுறையில் சில அறிந்துக் கொள்ள பயன்படுத்த நினைக்கிறேன். ஏனெனில் இயக்க மறுப்பியல் என்ன அவை என்ன செய்துக் கொண்டுள்ளது என்பதனை தெளிவடைய பயன்பெறும் என்ற நோக்கில் இதனை பேசுகிறேன் இங்கே பெரியாரின் அரசியலை அல்ல தத்துவத்தை மட்டுமே பேசுகிறேன். என் கருத்தில் முரண்படும் தோழர்கள் அதற்கான சான்றாவணங்களில் இருந்து தெளிவடைந்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.

பெரியாரின் தத்துவ விளக்கமானது மனித அமைப்பு பற்றி பேசும்போது அவர் உலகில் உள்ள பொருள்கள் எல்லாமே பல்வேறு பொருள்களின் கூட்டுப் பொருள் என்றும் அவை அனைத்தும் இயங்குவது இயங்காத ஜீவன் உள்ளது ஜீவன் இல்லாதது என பிரிக்க முடியும் என்றும் கூறுகிறார். இந்த பகுப்பாய்வு முறை மார்க்சிய தத்துவ ஞானம் இயற்கை விஞ்ஞானம் நிரூபித்து உண்மைகளுக்கு எதிரானதாகும் பதினெட்டாம் நூற்றாண்டின் இயந்திர வகைப்பட்ட பொருள்முதல்வாதம் அதாவது இயக்கம் மறுப்பியல் கண்ணோட்டத்திற்கு உட்பட்டது, இதையே நாம் கொச்சை பொருள்முதல்வாதம் இயக்க மறுப்பியல் என்கிறோம்.

பெரியார் மார்ஸ்க்கும் எங்கெல்சுக்கும்  பிந்திய காலத்தைசேர்ந்தவர் அதாவது நமது காலத்தை சேர்ந்தவர். விஞ்ஞான கண்டுபிடிப்புகள் இன்னும் பல படிகள் வளர்ந்த காலத்தை சேர்ந்தவர். என்றாலும் அவர் வளர்ந்த விஞ்ஞான கோட்பாடுகளையோ மார்க்சும் எங்கெல்சும் வகுத்து இயங்கியல் பொருள்முதல்வாத விதிகளையோ அறிந்து கொள்ளவில்லை,  அவரைப் பொறுத்தவரை சமுதாய வரலாற்றில் தத்துவஞான துறையில் ஏற்பட்ட வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொள்ளாமல் பதினெட்டாம் நூற்றாண்டின்  நிலையில் தன்னைப் பின் தள்ளி இருக்கச் செய்து கொண்டார்.  இதனால் அவருடைய தத்துவக் கண்ணோட்டம் முழுவதும் கொச்சை பொருள்முதல்வாத அடிப்படையில் அமைவது தவிர்க்கவே முடியாதவையே.

கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே உருவாக்கப்பட்ட அந்த நம்பிக்கைகளை ஒழிப்பது சாத்தியமா?

இன்றைய மத நம்பிக்கை மனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்துகிறது அதாற்க்கு ஆளும் வர்க்கம் துணைப்போகிறது அப்படியெனில் வெறும் கருத்தால் மதம் கடவுள் நம்பிக்கைகளை ஒழித்து விட முடியுமா?

 முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்பட வேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகிப்பதன் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ளும் போது அதாவது சமுதாயத்தோடு விடுதலை பெற முடியும். அப்போதுதான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனே முடிப்பதாக முடியும். அந்த காலத்தில்தான் மதத்தில் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்ற அந்நிய மயமான அந்த கடைசி சாத்தியம் அறிந்துகொள்வதுடன் மதத்தின் பிரதிபிம்பம் தானே மறைந்துவிடும் ஏனெனில் அதற்கு பிரதிபலிப்பு எதுவும் இருக்காது.

 “ஆனால் இதை சாதிப்பதற்கு அதாவது சமுதாய சக்திகள் சமுதாயத்தின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது வெறும் அறிவு மட்டும் போதாது அதற்கு எல்லாவற்றையும் விட மிகவும் அவசியமான சமுதாய செயல்முறை தான்” என்று ஏங்கெல்ஸ் சுட்டிக்காட்டுகிறார்.

அதாவது உற்பத்தி சாதனங்களில் தனியுடைமை ஒழித்து சமுதாய உடைமையாக்கிக் திட்டமிட்ட பொருள் உற்பத்தியின் கீழ் விடுதலை பெற்ற சமுதாயம் திட்டமிட்ட பொருள் உற்பத்தியில் விடுதலைப் பெற்ற சமுதாயத்தையும் சமுதாயத்தின் அங்கத்தவர்களையும் வழிநடத்துவதற்கு வெறும் அறிவு மட்டும் போதாது மாறாக தனியுடைமை சக்திகளுக்கு எதிரான போராட்டம் வர்க்கப் போராட்டம் என்ற சமுதாய செயல்முறை அவசியமாகும். முதலாளித்துவத்தை வர்க்கத்தை எதிர்த்து அதை தூக்கி எறிந்து முற்றாக ஒழித்துக் கட்டும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தின் கீழ் மட்டுமே அதை சாதிக்க முடியும் இதுதான் அந்த சமுதாய செயல்முறையாகும்.

ஆனால் இங்கே பெரியாரின் நிலை சீர்திருத்தம் மட்டுமே உண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறார்.

பதினெட்டாம் நூற்றாண்டின் பொருள்முதல்வாதம் பெரும்பாலும் இயந்திர வகைப்பட்டதாக இருந்தது ஏனென்றால் அப்பொழுது உயிரியல் ரசாயன  விஞ்ஞானங்கள் குழந்தைப் பருவத்தில் இருந்தது. இயந்திரவியல் அடிப்படையில் தத்துவஞானிகள் விளக்கம் அளித்தனர். இவை இயக்க மறுப்பியலை அடித்தளமாக கொண்டிருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் விஞ்ஞானம் பல துறைகளிலும் வளர்ச்சி அடைந்தது குறிப்பாக மூன்று முக்கியமான மகத்தான கண்டுபிடிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன 1). உயிர்ச் செல் பற்றிய கண்டுபிடிப்பு, 2). சக்தி இடைவிடாது மாறிக் கொண்டே  இருக்கிறது. 3). பரிணாம கோட்பாடு டார்வின் கண்டுபிடிப்பு,  இவை இயந்திர வகைப்பட்ட பொருள் முதல்வாத குறைபாடுகளை களைந்து இயக்கவியல் பொருள்முதல்வாத கோட்பாடுகளை மார்க்சும் எங்கெல்சும் உருவாக்குவதற்கு இக் கண்டுபிடிப்புகள் இடமளித்தன.

பெரியாரின் தத்துவக் கண்ணோட்டம் இயந்திர வகைப்பட்ட பொருள்முதல்வாதம் என்று சொன்னோம் அவர் மனிதனின் உயிரியல் பண்பையும் சமூகவியல் பண்பையும் அறியாதவராக மனித உயிரின் இயக்கம் மனிதனின் குணாம்சம் மனிதனின் உணர்வு பேச்சு மற்றும் சிந்தனை பற்றி தத்துவ விளக்கம் அளிப்பது இதற்கு மேலும் சான்றாகும்.

மனிதன் பிறப்பில் இருந்து வேறுபடும் ஒரு உயிர் பிராணி அவன் பிற பொருள்களில் இருந்து வேறுபடும் ஒரு இயக்கம் வடிவத்தை உயிரியக்க வடிவத்தை கொண்டிருக்கிறான் உயிரில் இயக்கம் என்பது வளர்சிதை மாற்றம் கொண்டது இனப்பெருக்க சக்தி கொண்டது உறுத்துணர்ச்சியும்(Irritability) உலகின் மீது விளைவும் எதிர்வினையும் கொண்டது. இப்பண்புகள் எவையும் இயந்திர இயக்கத்தில் இல்லை, எனவே பெரியாரின் இயந்திர இயக்கத்தினோடு உயிருள்ள மனிதனை சமன்படுத்திய பண்பானது இயக்கியலை புரிந்துக் கொள்ளாத போக்கே ஆகும்.

 பெரியார் கூறுகிறார் “உயிர் என்பது பொருள் தன்மையற்றது பொருள் தன்மையற்றது என்றால் இயங்கும் தன்மையுடையதாகும். இயங்கும் தன்மை உடையது என்றால் அதற்கு வேலை செய்து கொண்டிருக்கும் இயந்திரத்தை அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் தன்மை சொல்லலாம் .எது போல என்றால் ஒரு கடிகாரம் ஓடிக்கொண்டே இருப்பது போலவும் ஒரு எஞ்சின் ஓடிக் கொண்டிருப்பது போலவும் ஒரு எஞ்சின் இயங்கிக் கொண்டிருப்பது போலவும் அசைவின் காரணமாக அதனுடன் இணைக்கப்பட்ட பல இயந்திர சாதனங்கள் இயங்குவது போல இயங்கும் தன்மை உயிருக்கு இருப்பதாக….” ( பெரியாரின் தத்துவ விளக்கம் பக்கம் 35-38).

பெரியாரைப் பொருத்தவரை ஒரு இயந்திரம் பல்வேறு பாகங்களை உருவாக்கப்பட்டிருப்பது போல மனிதன் ஒரு சரீர கூட்டமைப்பு ஆகும் இயந்திரங்கள் மின்சாரம் அல்லது டீசல் மூலம் இயங்குவது போல மனிதனின் ஆகராதிகள் மூலம் இயங்குகின்றன அவ்வளவுதான் பெரியாரின் தத்துவ கண்ணோட்டத்தில் மனிதன் உயிரியல் இயக்க வடிவம் எவ்வித முக்கியத்துவம் பெறவில்லை .அது மட்டுமன்றி மனிதனின் சமூகவியல் இயக்கம் கூட பெரியாரின் தத்துவ கண்ணோட்டத்தில் எவ்வித முக்கியத்துவம் பெறுவதில்லை மனிதன் பிற பொருள்களில் இருந்து வேறுபட்ட ஒரு உயிரினம் என்பது மட்டுமல்ல பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்ட ஒரு சமூக பிரியாணியும் ஆவான் .அவன் ஒரு சமூக வாழ்க்கை வாழ்கிறான் அவனுடைய வாழ்க்கை உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரமாகி அவனுக்கே உரிய பண்புகள் ஆகும்.

அவனுடைய சமூக வாழ்க்கை பொருளாதார வாழ்க்கை கலாச்சார ஆன்மீக வாழ்க்கை என இரு பக்கங்களாக கொண்டிருக்கிறது. மனிதன் ஒரு உயிர் பிரியாணி என்ற முறையில் அவன் உயிரற்ற பிற பொருள்கள் இருந்து வேறுபட்ட முறையில் உயிரியக்க வடிவத்தை கொண்டிருப்பது போல அவன் ஒரு சமூக பிரியாணி என்ற முறையில் பிற உயிரினங்களிடமிருந்து வேறுபட்ட முறையில் சமூகவியல் இயக்க வடிவத்தையும் கொண்டிருக்கிறான்.

பெரியார் கூறுகிறார், “இன்றைய தினம் மனித சமுதாயத்திற்கு ஒன்று கூடி வாழ்வதற்கு அரசனும் சட்டமும் தண்டனையும் இல்லாவிட்டால் பாதுகாப்புடனும் சாந்தியும் சமாதானமும் சிறிதாக இருக்க முடியுமா நாம் யாவரும் இந்த அளவுக்கு வாழ்வது அரசாங்கம் சட்டம் தண்டனை ஆகியவை பாதுகாப்பு நிலை மனித சமுதாய கூட்டு வாழ்க்கைக்கு இவை போதும் என்றாலும் ஒரு அளவுக்குதான் போதுமானதாகும்….( பெரியாரின் தத்துவம் நூல் பக்கம்..(17-19)

பகை வர்கங்கள் தத்தம் நலனுக்காக மோதிக் கொண்டதன் விளைவாக குறிப்பாக சுரண்டும் ஆதிக்க வர்க்கங்கள் எதிராக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் மோதி இதன் விளைவாக சமுதாயம் மேலும் மேலும் வளர்ச்சி அடைந்து வந்திருக்கிறது என்பதே வரலாறு. ஆண்டைகளின் நலனுக்கு எதிராக அடிமைகள் மோதி இதன் விளைவாக ஆண்டான் அடிமை சமுதாயம் வீழ்ந்தது அதனை விட உயர்வான நிலப்பிரபுத்துவ சமூகம் தோன்றியது நிலப்பிரபுக்களுக்கு எதிரான பண்ணை அடிமைகளின் போராட்டத்தால் நிலப்பரப்பு சமூகம் வீழ்ந்தது அதனிடத்தில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றியது.

முதலாளி வர்க்கத்தை எதிர்த்து பாட்டாளி வர்க்கம் போராட்டம் இதன் விளைவாக முதலாளித்துவ சமுதாயம் வீழ்ந்து சோசலிச சமுதாயம் மலர்ந்தது, இங்கெல்லாம் நாம் காண்பது என்னே அடிமைகளும் பண்ணையடிமைகள் தொழிலாளி வர்க்கமும் போராடியதன் விளைவாக ஓர் உயர்வான சமூகம் மலர்ந்தது. இவை கேடு விளைவிப்பதாக இல்லை எனலாம்.

மனிதனை அச்சுறுத்தி நேர் பாதையில் செலுத்துவதற்காக கடவுளையும் மதத்தையும் சமுதாய நலனில் அக்கறை கொண்ட பெரியோர்கள் படைத்தார்கள் என்று கூறும் பெரியார் வாழ்நாள் முழுவதும் கடவுளுக்கும் மதத்திற்கும் தீவிரமான எதிரியாக திகழ்ந்தார் ஆனால் பெரியாரின் கடவுள் மறுப்பு கடவுள் மதம் தோன்றுவதற்கு நிலவும் காரணமாக இருக்கும் அடிப்படைகளுக்கு எதிராகத் இல்லை. ஏன் அதைப் புரிந்து கொண்டதாக கூட தெரியவில்லை.

கடவுளும் மதமும் சில பெரிய மனிதர்களால் படைக்கப்பட்டு பரப்பப்பட்டது என்று அதன் தோற்றம் வளர்ச்சி பற்றி பெரியார் கருதுகிறார் எனவே அதற்கு எதிரான பிரசாரங்கள் மூலமே கடவுளையும் மதத்தையும் ஒழித்துவிட முடியும் என அவர் நம்புகிறார் ஆனால் கடவுளும் மதமும் தோன்றுவதற்கும் அது நிலவுவதற்கான காரணம் அவ்வளவு எளிமையானது அல்ல.

“எல்லா மதங்களும் மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை கட்டுப்படுத்தும் புற சக்திகளைப் பற்றி அவர்களின் மனதில் ஏற்படும் வினோதமான பிரதிபிம்பமே மண்ணுலக சக்திகள் இயற்கை கடந்து சக்திகளின் வடிவத்தை ஏற்க்கும்  ஒரு பிரதிபிம்பம்” என்று எங்கெல்ஸ் கூறினார்.

எனவே கடவுள் மத நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டுமானால் மனிதனாலேயே மதம் உருவாக்கப் பட்டது என்றாலும் மனிதனுக்கு அன்னியமாக நின்று மனிதன் மீது ஆதிக்கம் செலுத்திவரும் முதலாளித்துவ உற்பத்தி முறை ஒழிக்கப்படவேண்டும் உற்பத்தி சாதனங்களில் தனி உடைமையை ஒழித்து எல்லா உற்பத்தி சாதனங்களையும் சமுதாயமே தன் உடைமையாக்கிக் அவற்றை திட்டமிட்ட அடிப்படையில் உபயோகத்தின் மூலம் சமுதாயம் தன்னை தானே விடுவித்துக் கொள்ள வேண்டும் அப்போதுதான் சமுதாயத்தின் அங்கத்தினர்களும் சமுதாயத்தோடு விடுதலை பெறமுடியும் அப்போது தான் மனிதன் வெறுமனே நினைப்பதோடு மட்டுமல்லாமல் நினைப்பதை அவனை முடிக்க முடியும் அந்த காலத்தில்தான் மதம் இன்னும் பிரதிபலித்துக் கொண்டிருக்கும் என்ற  கடைசி சக்தியும் மறைந்துவிடும்.

எனவே உண்மையிலேயே கடவுளையும் மதத்தையும் ஒழிக்க விரும்புபவர் ஒருவர் தனியுடமை ஒழித்து பொதுவுடமை சமூகத்தை படைப்பதையே நோக்கமாகக் கொண்டு முதலாளி வர்க்கத்திற்கு எதிரான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தை கட்டமைப்பதாக இருக்க வேண்டும்.

ஆனால் பெரியாரை பொருத்த வரையில் அவருடைய நிலை இதற்குத் தலைகீழானதாகும் அவர் பல சமயங்களில் தனியுடமை ஒழிப்பிலும் சமூக தர்மத்திலும் நம்பிக்கையும் ஆர்வம் தெரிவித்து இருக்கிறார் என்பது உண்மை என்றாலும் , புதிய சமுதாயத்திற்கான வர்க்கப் போராட்டத்தை கடவுள் மத ஒழிப்புக்கான முன்நிபந்தனையாக எங்கும் கருதவில்லை மாறாக கடவுள் மத ஒழிப்பைப் மட்டுமே போராட்ட வடிவமாக கொள்வதன் மூலம் உண்மையில் வர்க்கப் போராட்டத்தை புறக்கணித்து விடுகிறார்.

இதனால்தான் பெரியாரின் பொருள்களைப் பற்றிய விளக்கம் “ஒவ்வொரு பொருளும் அவற்றின் உள் முரண்பாடுகளின் சுயமாக இயங்கிக் கொண்டும் மாறிக்கொண்டு உயிரியல்  பண்பை பெற்றிருப்பதைக் காணமுடிகிறது மனிதன் உழைப்பு உற்பத்தி செய்யும் முறை உணர்வுபூர்வமான பாத்திரம் மாற்றுவது ஆகியவற்றால் மற்ற உயிரினங்களை விட வளர்ந்தும் வேறுபட்டும் ஒரு சமூக வாழ்க்கை பெற்றிருப்பது” காண மறுக்கிறது.

இந்த இயக்க மறுப்பியல் சிந்தனை போக்கே பெரியாரை சாதியதை பார்ப்பனர்கள் படைத்தாகக் கருதிக் கொண்டு, அதன் தோற்திற்கான பொருளாதாரப் போக்கை முறியடிப்பதற்கு முயலாமல், தோன்றிய சாதியத்தைக் காப்பாற்றும் பார்ப்பனர்களை முதன்மைப்படுத்தி அவர்களை ஒழிக்க வேண்டும் என்று கூறுகிறார். இதன் மூலம் பணம் படைத்தவர்களின் சுரண்டலை நீடிக்கச் செய்கிறார், அதாவது காப்பாற்றுகிறார்.

இன்றைய வர்க்க முரணுக்குக் காரணமான தனிச்சொத்துடைமையை ஒழிக்க முயற்சிக்காமல், அந்தத் தனிவுடைமையைக் காப்பாற்றுகிற சிந்தனையை முதலில் ஒழிக்கப் பெரியார் முயற்சிக்கிறார். கம்யூனிசத்தை வந்தடைதல் என்பது அறிவு வளர்ச்சியாகப் பார்க்கிறார். அதற்கான பொருளாதார வளர்ச்சியும், அதனை ஒட்டிய தத்துவப் போக்கையும் பெரியார் கண்டுகொள்ளவே இல்லை.

இன்றும் மக்களி வறுமைக்கும் பசி பட்டினிக்கும் காரணமான ஆளும் வர்க்கத்தை கேள்வி கேட்க்காமல் பார்பனர்களை குறைக்கூறி வாழ்ந்து வருகின்றனர். இவை சமூக வளர்ச்சிப் போக்கை கணக்கில் கொள்ளாமையே என்பேன்.

இந்தப் பகுதியை தெரிந்த தோழரோடு விவாதித்த பொழுது அவரின் விளக்கம் பின் வருமாறு.

நீங்கள் அனுப்பி வைத்த பெரியார் பற்றிய கருத்து பார்த்தேன். பெரியாரின் நாத்திகம்  இயக்க மறுப்பியல் கண்ணோட்டத்தை கொண்டது என்பது சரியே. கடவுள், மதம் ஆகியவற்றை திட்டமிட்டு மனிதர்கள் உருவாக்கினார்கள் என்ற அவரது கருத்து அபத்தம் .மனிதன் உற்பத்தி நடைமுறையில் ஈடுபடும்போது இயற்கை விதிகளை புரிந்து கொள்ளாதபோது உண்டானது கடவுள் நம்பிக்கை.  அந்த மூட நம்பிக்கையை பலப்படுத்தி மனிதனை தனக்கு அடிமையாக்க சுரண்டும் வர்க்கமும் ஆளும் வர்க்கங்களும் மதத்தை உருவாக்கின என்பதே உண்மை. இந்தியாவில் பார்ப்பனர்கள் அதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பதும் உண்மை.  ஆனால் கடவுள் நம்பிக்கையை அவர்கள்தான் உருவாக்கினார்கள்  இல்லையென்றால் மக்களுக்கு கடவுள் நம்பிக்கையே வந்திருக்காது என்பது அபத்தம். ஏற்கத்தக்கதல்ல.

மனிதனின் கடைசி புகலிடம் மதம் என்று மார்க்ஸ் கூறுவதன் அர்த்தம் என்ன? மனிதன் தான் நினைத்தது நடக்காத போது வேறுவழியின்றி கடவுளைநாடிச் செல்கிறான் என்பதே இதன் அர்த்தம். அப்படி தேவைகள் பூர்த்தியாகி அவன் நினைத்தபடி நடக்கும் போதும் அவன் கடவுளை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றுதானே இதற்கு அர்த்தம்.

மனிதனின் தேவை நிறைவு பெற்று அவன் நினைத்தபடி வாழ்க்கை அமையும்போது அவன் கடவுளை நாடவேண்டிய அவசியம் இருக்காது. இயற்கை விதிகளை புரிந்து கொள்ளும் பொழுது மூடநம்பிக்கையும் ஒழிந்து போகும்.ஆகவே மூடநம்பிக்கை, கடவுள், மதம் ஆகியவை ஒழிந்து போக பார்ப்பானை ஒழித்துவிட்டால் ஒழிந்து போகாது. மனித வாழ்க்கைக்கு உகந்த சோசலிச  சமுதாய மாற்றமே  இதற்கு தீர்வாகும்.

இன்றைய  வகுப்பை இதனோடு நிறைவு செய்ய நினைக்கிறேன் தோழர்களே… இன்னொரு வகுப்பில் மீண்டும் சந்திப்போம் தோழர்களே.

இந்த தொடரில் நான் பயன்படுத்திய நூல்கள்

1). தமிழர் தத்துவம் –தேவ பேரின்பன்

2). அடியும் முடியும்- க. கைலாசபதி 

3). மார்க்சிய மெய் ஞானம்-ஜார்ஜ் பொலிட்சர்

4). பெரியார் தத்துவம்

5). பெரியார் தத்துவம் மார்க்சிய விமர்சனம்- கார்முகில்.

6). பெரியார் ஒரு பொருள்முதல்வாதி-ப.செங்குட்டுவன் =================================================================================================

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *