
இதனை விரிவாகவே பார்ப்போம்…..
இந்த தனியார் மய தாராள மய உலக மய கொள்கையால் ஊழல் மட்டுமே கொள்கையாக கொண்டுள்ள ஆட்சி முறை பற்றியதே இந்தப் பதிவு…
சில நாட்களாக சொப்னா என்ற பெண் கேரள தங்க கடத்தலில் ஈடுபட்ட அல்லது உதவியை அவர் மீதான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் பின்னணியில் பிஜேபி காங்கிரஸ் ஆளும் சிபிஎம் மீது குற்றச்சாட்டு வைக்கிறது அதிலிருந்து சிபிஎம் மை காப்பாற்ற பல தோழர்கள் சிபிஎம் இதில் ஈடுபட்டு இருக்காது என்று தங்கள் கருத்துகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன இவர்கள் செய்யும் மிகவும் தவறான கணிப்பு என்பது இந்த ஊழல் முறையும் கடத்தல் முறையும் எங்கிருந்து வருகிறது இவை இந்த ஆட்சியில் ஆம் இந்த ஆட்சியாளர் தங்களுடைய நிர்வாகத்தின் கீழ் நடைபெறும் பல்வேறு விதமான சுரண்டல் முறைகளை கண்டு கொள்ளாமலேயே வளர்த்தெடுக்கும் முறைதான் இன்றைய புதிய காலனிய நிலையில் தாராளமயம் உலகமயம்.
எப்படியெல்லாம் மக்கள் வதை பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறியாமலேயே ஆட்சி புரியும் ஆட்சியாளர்கள், இதில் எந்தக் கட்சியாக இருந்தாலும் இதிலிருந்து தப்ப முடியாது. இந்த அரசு எந்திரம் ஊழல் மயமாகி விட்ட பின் யார் ஆட்சியில் இருந்தால் என்ன? இதில் இடதுசாரி ஆட்சி என்றும் இடதுசாரிகள் கூட்டாட்சி என்றும் ஏமாற்றுவது உகந்தது அல்ல
இந்த ஆட்சி முறையை ஒழித்துக கட்டாமலே சீர்திருத்தம் இதைதான் தரும் என்பது கண் கூடானவை… தொண்ணூறுகளின் பிறகு உலகமயமாக்கல் தொடங்கியதோ அப்போதே இங்கே ஊழலும் கொள்ளையும் கடத்தலும் தொடங்கிவிட்டது அதற்கு முன்னிருந்த மறைந்து செயல்பட்ட பல்வேறுவிதமான மக்கள் விரோத செயல்கள் இன்று அப்பட்டமாக நேரடியாகவே செயல்படுகிறது இதற்கு காரணம் அறியாமல் மூடி மறைப்பதனால் பயன் ஏதும் இல்லை