இந்த நாட்டில் தொழிலாளர் இயக்கமும் மார்க்சிய இயக்கமும் முளை விட தொடங்கிய காலம் முதல் டிராட்ஸ்கியவாதம் உடன் பிறந்தே கொல்லும் வியாதிபோல இடதுசாரிஇயக்கத்தின் ஏகோபித்த வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படுத்திகொண்டே வந்திருக்கிறது. டிராட்ஸ்கியவாதத்தை அதன் பிறப்பிலேயே நன்கு அறிந்த ஸ்டாலின்அது இடதுசாரி இயக்கத்துக்குள ஊடுறுவியுள்ள முதலாளிய கண்ணோட்டத்தின் வெளிப்பாடு எனச் சரியாக குறிப்பிட்டார். புலி குணவர்த்தனா முதல் கெல்வின் ஆர்டி செல்வா வரை டிராட்ஸ்கியவாதிகள் இலங்கையில் நமக்கு காட்டி வந்து நிற்கும் சாதனைதான் என்ன? பேச்சில் அதிதீவிரவாதமும் நடைமுறையில் படுமோசமான சரணாகதியும் ஆகும்.—பேராசிரியர்.கைலாசபதி.உண்மையான புரட்சியாளர்கள் மா லெ த்தின் பக்கமே நிற்கமுடியும் பேராசிரியர் கைலாசபதி யும் அவ்வாறே நின்றார் என்பதை அவரது எழுத்துகள் நமக்கு காட்டுகிறது. ஆனாலும் தமிழகத்தில் சமிபகாலமாக சில உதிரிகள் ட்ராட்ஸ்கியத்தை தாங்கிபிடித்து வருகின்றனர். இந்த உதிரிகள் ஓடியாடி வளர்ந்த இடம் மா லெ பாசறையில்தான்.கலைஞர் அவர்கள் நெடுஞ்செழியனை பற்றி குறிப்பிடும் போது அவர்ஒரு கோண தென்னைமரம் என்பார். ஏனென்றால் அதை வைத்து தண்ணீர்ஊற்றி பராமறித்து வளர்த்துவிட்ட பிறகு அதுவளைந்துபோய் அடுத்தவர் தோட்டத்தில் தேங்காய் போட்டதுபோல. ட்ராட்ஸ்கிய உதிரிகளும் அவ்வாறே. நமது ஆசான்களால் முறியடிக்கபட்ட தத்துவபோக்குகள் மீண்டும் மீண்டும்தலைதூக்குவது இயல்புதான். இவற்றை மாலெவாதிகள் ஒன்றுபட்டு முறியடிப்பதுதான் தலையாய கடமை.ட்ரொட்ஸ்கி எழுதிய : “ஆன் லெனின்,” பக். 106, ரஷ்ய பதிப்பு வரலாற்று பக்கங்களைகாணும் பொழுது தன்னை உயர்த்தி நிறுத்த லெனின்னுடன் ஒப்பிட்டு அரேபிய இரவு கதைகளை போல் தனது பொழுதுபோக்குகளை தொகுக்க ட்ரொட்ஸ்கிக்கு தேவைப்பட்டது லெனின் பெயர்? நிச்சயமாக தோழர் லெனின் பெரிதுபடுத்த வேண்டாம், லெனினையத்தை மறுக்கும் போக்கு ஏற்புடையதல்ல.தோழர் லெனின் ஆழ்ந்த மார்க்சியவாதியாகவும் மற்றும் மிகவும் அனுபவம் வாய்ந்த புரட்சியாளர் என்று உலகறிந்த ஒருவர் அவர் நிழலில் கூட ஒதுங்க தகுதியற்ற ட்ரொட்ஸ்கி தனது புத்தகத்திலும் லெனின் மீது கேள்வி தொடுக்கிறார். இவரின் கேள்விகள் எவையும் லெனினியத்தை வளர்க்க அல்ல விமர்சனத்தின் பெயரால் லெனினையும் மார்க்சியத்தையும் கொச்சைப் படுத்தி தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்ட… அக்டோபர் நாட்களில் கட்சிக்கும் சோவியத் மற்றும் அதன் முதுகுக்குப் பின்னால் செய்த வேலைகள் வரலாறு சொல்லும். அதிகாரத்தைக் கைப்பற்ற ட்ரொட்ஸ்கிக்கு மேற்கொண்ட பல நடவடிக்கைகளை நான் இதற்க்கு முன் எழுதிய கட்டுரைகளில் கண்டோம்…