அண்மை காலமாக ட்ராட்ஸ்கி புரட்சியாளர் அவர் புரட்சிக்கு தலைமை பாத்திரம் அளித்தார் அவரை ஸ்டாலின்ஸ்ட்டுகள் ஒதுக்கி தள்ளுகின்றனர் என்று அதன் அடிபொடிகள் சண்டையிடுகிறனர்… உண்மையில் ட்ராட்ஸ்கியின் நிலைபாடும் அவரின் செயலையும் நாம் கணக்கில் கொண்டால் மட்டுமே அவரின் இன்றைய தேவையை உணர்ந்துக் கொள்ள முடியும் தோழர்களே.
1936 டிசம்பர் 22 ந் தேதி சோவியத் சதி வழக்கில் விசாரணையின் போது ராடக் கூறியது, ட்ராட்ஸ்கி தனக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்டாலின் அரசாங்கத்தை நீக்குவது முடியாத காரியம் ஆகவே ஜெர்மன் மற்றும் ஜப்பான் உதவியுடன் முதலாளித்துவ மனோபாவத்தை பூரணமாக கைவிடாத மக்களையும் கூட்டு பண்ணையில் அதிருப்தி அடைந்துள்ள மக்களையும் மேலும் குலாக்குகளுக்கு கூட்டு பண்ணைகளை விட்டு வெளியேற துடிக்கும் மிராசுதாரர்களையும் பயன்படுத்தி ஜெர்மன் ஜப்பான் உதவியுடன் ஒப்பந்தம் அடிப்படையில் சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் திட்டத்தை வெளிபடுத்தியுள்ளதை வெட்டவெளிச்சமாக்குகிறார்.அடுத்த சாட்சி பிளாட்கோவுடன் 1935 டிசம்பரில் பேசிய போது ட்ராட்ஸ்கி ஜெர்மன் நாஜிக் கட்சியின் தலைவர் ஒருவருடன் செய்துள்ள ஒப்பந்தம், ஜெர்மனுக்கு சோவியத்தின் சில பகுதிகளை கொடுக்கவும், ஜெர்மன் முதலாளிகள் ரஸ்யாவில் தொழில் தொடங்க சலுகைகள் அளிக்க, யுத்த காலத்தில் ஜெர்மனியின் தேவைகேற்ப்ப சோவியத்துக்கு எதிரான பணிகளை செய்தல் என சோவியத் மக்களுக்கு எதிரான சதிகள் வெளிபடுத்தினர்.இன்று 4ம் அகிலம் ட்ராட்ஸ்கிசம் என்றால் அவை மார்க்சியமாகுமா? மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி உயிர் வாழும் பாசிஸ்த்தை ஆரத் தழுவிய ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியே அல்ல இவன் எதிர் புரட்சியாளனே….
லெனின் உடல் நலம் குன்றி படுக்கையில் இருந்த பொழுது லெனினிக்கு எதிரானவர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து எதிர் கோஸ்டியை ட்ராட்ஸ்கி உருவாக்கி கட்சியில் தனி கும்பல் செயல்பட அனுமதி வேண்டும் என்று கூச்சலிட்டார் மேலும் பொருளாதார நெருக்கடி வருமென்று ஜோசியம் சொன்ன அதற்க்கான தீர்வென்று எதையையும் வைக்கவில்லை. அவருக்கு தேவை கட்சியை கலைப்ப்து மட்டுமே. கட்சியின் மீது பல குற்றசாட்டுகளை சாட்டி கடிதம் வெளியிட்டார். இதனை கண்டித்து 1924 ம் ஆண்டு நடந்த 13 வது கட்சி மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேறியது. இதனை தொடர்ந்தும் ட்ராட்ஸ்கி திருந்தவில்லை 1924 வசந்த காலத்தில் கட்சியையும் லெனினையும் தூற்றி கடிதம் எழுதினார், இதனை ஏகாதிபத்தியங்களும் கம்யூனிச எதிரிகளும் பயன்படுத்தி கொண்டனர்.
1925 ம் ஆண்டு புதி பொருளாதார கொள்கை முடிவடைந்தது. சோசலிச பொருளாதாரத்தை கையாள வேண்டிமென்றும், புதிய தொழிற்சாலைகளை ஏற்படுத்தி சோசலிச பாதையில் புக வேண்டுமென்றும் கட்சி தீர்மானித்தது. ட்ராட்ஸ்கி இதை எதிரிர்த்து தனது 1905 ம் ஆண்டின் நிரந்தர புரட்சி கோட்பாட்டை முன் வைத்து பிரச்சினையை உருவாக்கினார்.
லெனினின் சொன்னவை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், இந்த வர்க்க அமைப்பான முதலாளித்துவத்தை பாதுகாக்கும் அமைப்பை தூக்கி போட்டால் மட்டுமே ஒடுகப் பட்ட மக்களுக்கு விடிவு கிடைக்கும் என்றார் இதனை செய்து காட்டினார் லெனின் 1917 ல் ட்ராட்ஸ்கியின் வாதம் தோற்று போனது , ட்ராட்ஸ்கி, ஜினோவியேவ் போன்றோர் இவ்வெற்றிக்குப் பின்பும் தங்களைத் திருத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டனர், ஆனால் மார்க்ஸ் சொன்ன ஒற்றை வார்த்தையை பிடித்து கொண்ட ட்ராட்ஸ்கி மார்க்சியத்தை உள்வாங்காமலே (இதனை பற்றி கட்டுரை ஆசிரியரின் பகுதி மிக விரிவாக உள்ளதால் அதனை தனி ஒரு பதிவாக எழுதுகிறேன் இங்கு ட்ராட்ஸ்கியின் செயல் குறித்தவற்றை முதலில் காண்போம்).
.
1925 டிசம்பர் 18 அன்று 14 ஆவது கட்சிக் காங்கிரஸ் துவங்கியது. கட்சிக்குள் பதற்றமும் இனக்கமற்ற போக்கும் இருந்தது. ஸ்டாலின் அறிக்கை சமர்ப்பித்தார். லெனினது வழிகாட்டுதல் எவ்வளவு பொருத்தமானது என்பதையும் அதனை எதிர்ப்பது பொருத்தமற்றது என்பதையும் வெளிப்படுத்தினார்..
கட்சியின் பெயர் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) என்று மாற்ற காட்சியின் 15 ஆவது காங்கிரஸ் 1926 அக்டோபர் 26 முதல் நவம்பர் 3 முடிய நடைபெற்றது. கட்சியில் ஒற்றுமை வேண்டும் லெனினியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கருத்தைக் கட்சி அங்கத்தினர்களில் பெரும்பான்மையினர் ஏற்றனர். முதலாளித்துவ நாடுகளின் சோவியத் விரோத போக்கு, ரசியாவின் வளர்ச்சியை கண்டு அஞ்சினர் அதனை சீர்குழைக்க விளைந்தது முதலாளித்துவ நாடுகள் அதற்க்கு ரசிய மக்களின் ஒற்றுமையோடு கட்சியின் ஒற்றுமையும் அவசியமானதாக இருந்தது. ட்ராட்ஸ்கியும் அவரது கூட்டாளிகளும் கட்சிக்கு துரோகம் செய்யமாட்டோம் என்று வெளிப்படையாக சொல்லிக் கொண்டே இரகசியமாக கட்சியை குலைப்பதற்க்கு வேண்டிய எல்லா வெலையையும் செய்தனர்.
கட்சி ட்ராட்ஸ்க்கு ஒரு எச்சரிக்கை கொடுத்தது, அதர்க்கு ட்ராட்ஸ்கி ஆதர்வாளர்கள் மற்றும் ட்ராட்ஸ்கி உட்பட் இனிமேல் அவ்வாறு செய்வதில்லை என்று கையொப்பம் இட்டு கட்சிக்கு அறிக்கை சம்ர்ப்பித்தனர்.
1926 ம் ஆண்டு நவம்பர் மாதம் அகிலம் ட்ராட்ஸ்கிய வாதிகளின் கட்சி துரோகத்தை கண்டித்தது.
ட்ராட்ஸ்கி, ஜினோவியேவ் போன்றோர் இதற்க்கு பின்பும் தங்களைத் திருத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டனர் இது ஏகாதிபத்திய ஆதரவாக மாறியது மார்க்சியத்தை கைவிட்டு முதலாளித்துவத்திடம் சரண் அடைந்தது ட்ராட்ஸ்கியம். இவர்களைப் பெரிய தியாகிகள் ஆகவும் ஸ்டாலின் பெரும் சர்வாதிகாரி என்றும் செய்திகளைப் பரப்பினர். இன்றளவும் அதனை வெளியிடுகின்றனர்.
ட்ராட்ஸ்கிவாதிகள் பலவகையில் சூழ்ச்சி செய்தும் தங்களின் வேலை பலிக்காமல் போகவே பல நாச வேலைகளுடன் கொலைகளையும் செய்யத் தொடங்கினர்….
தோழர்களே ட்ராட்ஸ்கி என்ற மார்க்சிய விரோதியை பற்றி நான் இரண்டு ஆண்டுக்கு முன் சில நூல்களின் துணைக் கொண்டு எழுதினேன். அவை முழுமையல்ல எனக்கு தெரியும் இன்று பல முன்னால் புரட்சியாளர்கள் இன்னால் ட்ராட்ஸ்கியவாதிகளாக எதிர் புரட்சியாளர்களாக களமிறங்கி உள்ள போது அவர்களின் பதிலுரையாக நமது ஆசான் லெனின் வார்த்தைகளில் ட்ராட்ஸ்கியின் மீதான விமர்சனங்கள் அவரின் நூலில் இருந்தே எழுதிக் கொண்டுள்ளேன். இதற்க்கான நூல்கள் ஆங்கிலத்தில் உள்ளது தேவைப் படும் தோழர் மாபெரும் சதியை வாசித்தால் இந்த அயோக்கியன்(ட்ராட்ஸ்கி) யார் என்று தெளிவாகி விடும் இவை நீண்ட பதிவு தேவைக் கருதி சுருக்காமல் உள்ளது… தோழர் வாசித்து தெரிந்துக் கொள்க.இனி பதிவுக்கு செல்வோம் தோழர்களே..ட்ராட்ஸ்கி உலக மக்களின் விடுதலைக்கு (புரட்சிக்கு) வேலை செய்தாரா அப்படியெனில் இதனை தெரிந்து கொள்வது அவசியமாகிறது. இதனை தெரிந்து கொள்ள 1917 ல் நடந்த ரசிய புரட்சி மற்றும் அந்த கால கட்டத்தில் கட்சிக்குள் ட்ராட்ஸ்கியின் பணி தெரிந்துக் கொண்டால் புரிந்துக் கொள்வோம்.போல்ஸ்விக் கட்சியையும் சோவியத் அமைபையும் அழிபதற்க்கு ட்ரொட்ஸ்கி செய்த பல சதிகள் உண்மை பக்கத்தை வாசித்து தெரிந்துக் கொள்ளுங்கள் தோழரளே.ஒரு புரட்சிகாரர் எப்படி துரோகியாக முடியும் என்பதுதானே கேள்வி. ட்ராட்ஸ்கி போல்ஸ்வியத்தைச் சிதைக்கிறார் ஏனெனில் ரஷ்ய முதலாளி வர்க்க புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பாத்திரம் பற்றி திட்டவட்டமான கண்ணோட்டங்கள் எதையும் உருவாக்குவதற்கான ஆற்றல் அவரிடம் ஒரு போதும் இருந்ததில்லை லெனின் தொ.நூல் 16 பக்கம் 380. மார்க்சியத்தின் முக்கியப் பிரச்சினைகள் எதிலும் ட்ராட்ஸ்க்ஸி ஒரு போதும் ஒரு உறுதியான கருத்தை கொண்டு இருந்தது இல்லை எந்தக் கருத்து வேறுபாடும் உள்ள விரிசல்களில் நுழைந்து கொள்ள எப்போதும் அவர் கடும் முயற்சி செய்கிறார். ஒரு சாராரை கைவிட்டு இன்னொரு சாரார் உடன் சேர்ந்து கொள்கிறார்.(லெனின் தொ.நூல் 20 பக்கம் 447).1905 ஆம் ஆண்டில் இடையறாத புரட்சி என்ற தத்துவத்தில் லெனின் வகுத்த போது அதற்கெதிராக நிரந்தரப் புரட்சி என்ற தமது சொந்த தத்துவத்தை முன்வைத்தார் ட்ரொட்ஸ்கி இந்த நிரந்தரப் புரட்சி என்பது மார்க்சிடமிருந்து கடன் வாங்கப்பட்ட சொல்லாகும் ட்ரொட்ஸ்கியின் தத்துவம் கூறுவது,” ஜாரை தூக்கி எறிந்து உள்ள பாட்டாளி வர்க்கம் உழவர் வர்க்கத்தின் மக்கள் திரளினருடன் மோதலை எதிர்கொள்ள வேண்டிவரும், மேற்கு நாட்டு பாட்டாளி வர்க்கத்தி அரசு ஆதரவு இல்லாமல் அதாவது மேற்கில் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சி ஏற்படாமல் ரஷ்ய பாட்டாளி வர்க்கம் தன்னை அதிகாரத்தில் வைத்து பேணிப் பாதுகாத்துக் கொள்ள இயலாது இந்தக் கோட்பாட்டை இணங்க ப்ரெஸ்ட்-லிடோவ்ஸ்க் என்ற இடத்தில் நடந்த சமாதான பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு காண மறுத்தார் ட்ரொட்ஸ்கி அதற்கு அவர் கூறிய காரணம் ஜெர்மானிய ஏகாதிபத்தியவாதிகளின் சமாதான ஒப்பந்தம் கொள்வது ஜெர்மனியில் வரப்போகிற புரட்சியை காட்டி கொடுப்பதாகும் என்றார் இதை “ஒரு விந்தையான வக்கரித்துப் போன முடிவு ” என்று லெனின் வர்ணித்தார்( லெனின் தொ.நூல் 27 பக்கம் 68). மேலும் புரட்சிகரமான வாய் சொல் என்ற ஒரு நூல் தமிழில் உள்ளது இந்த அயோகியனை பற்றி லெனின் நீண்ட கட்டுரை அவை.ரஷ்யாவில் புரட்சி தோல்வி அடையலாம் என்பதை லெனின் ஒப்புக் கொண்டார், ஆனாலும் அது தோல்வி அடைந்தாலும் கூட உலகப் புரட்சிக்கான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் வளர்ச்சியை குறிக்கவே செய்யும் முற்றிலும் வெற்றிகரமாக இல்லாத இதை அடுத்தடுத்த முயற்சிகளில் மூலமாகவே உலக சோஷலிசத்தின் அறுதி வெற்றி உறுதி செய்யப்படும் என்பதையும் லெனின் வலியுறுத்தினார்.தொழிலாளி வர்க்க வரலாற்றில் பல புரட்சியாளர்கள் முதாலாளி வர்க்க கோஸ்டியின் குலாம்களாக (அடிமைகளாக) மாறியிருக்கிறார்கள். இத்தாலிய பாசிஸ்ட் முசோலினி ஒரு காலத்தில் இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியின் இடதுசாரிகளுடைய தலைவனாக் இருந்தான். பின்னர் முதலாளிகளின் கையாளாக மாறி தன்னுடன் பணி புரிந்த பல தோழர்களை சித்தரவதை செய்தான், பிரான்ஸில் டோரியட் என்பவன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பாசிச கூட்டத்தில் போய்ச் சேர்ந்து பின் பிரெஞ்ச் பாஸிஸ்ட் தலைவனாகிறான். 1914 ஆம் ஆண்டு பல சோசலிஸ்ட் தலைவர்கள் ஏகாதிபத்திய கும்பலின் கையாட்களாக மாறித் தன் சக தோழர்காளை கொன்றொழிக்க (கொலை) செய்திருக்கிறார்கள். இவை வரலாற்று புரிதலுக்கு.இப்படி நிலைமை இருக்க ட்ராட்ஸ்கியை புரிந்துக் கொள்ளுங்கள்.இனி சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க ட்ராட்ஸ்கி செய்த துரோகங்களை பார்ப்போம்.அடுத்தடுத்த கட்சி விரோத செயல்களால் ட்ராட்ஸ்கியையும் அவரது ஆதரவாளர்களையும் 1926 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ந்தாவது காங்கிரஸில் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டனர். 1934ம் ஆண்டு கட்சியின் முன்னணித் தலைவர் கிரோவ்வை படுகொலை செய்யப் படுகிறார், இதிலிருந்தே அவர்களின் அரசியல் தேவை தெரிந்தவையே.1936 டிசம்பர் 22 ந் தேதி சோவியத் சதி வழக்கில் விசாரணையின் போது ராடக் கூறியது, ட்ராட்ஸ்கி தனக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஸ்டாலின் அரசாங்கத்தை நீக்குவது முடியாத காரியம் ஆகவே ஜெர்மன் மற்றும் ஜப்பான் உதவியுடன் முதலாளித்துவ மனோபாவத்தை பூரணமாக கைவிடாத மக்களையும் கூட்டு பண்ணையில் அதிருப்தி அடைந்துள்ள மக்களையும் மேலும் குலாக்குகளுக்கு கூட்டு பண்ணைகளை விட்டு வெளியேற துடிக்கும் மிராசுதாரர்களையும் பயன்படுத்தி ஜெர்மன் ஜப்பான் உதவியுடன் ஒப்பந்தம் அடிப்படையில் சோவியத் ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் திட்டத்தை வெளிபடுத்தியுள்ளதை வெட்டவெளிச்சமாக்குகிறார்.அடுத்த சாட்சி பிளாட்கோவுடன் 1935 டிசம்பரில் பேசிய போது ட்ராட்ஸ்கி ஜெர்மன் நாஜிக் கட்சியின் தலைவர் ஒருவருடன் செய்துள்ள ஒப்பந்தம், ஜெர்மனுக்கு சோவியத்தின் சில பகுதிகளை கொடுக்கவும், ஜெர்மன் முதலாளிகள் ரஸ்யாவில் தொழில் தொடங்க சலுகைகள் அளிக்க, யுத்த காலத்தில் ஜெர்மனியின் தேவைகேற்ப்ப சோவியத்துக்கு எதிரான பணிகளை செய்தல் என சோவியத் மக்களுக்கு எதிரான சதிகள் வெளிபடுத்தினர்.இன்று 4ம் அகிலம் ட்ராட்ஸ்கிசம் என்றால் அவை மார்க்சியமாகுமா? மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்கி உயிர் வாழும் பாசிஸ்த்தை ஆரத் தழுவிய ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியே அல்ல இவன் எதிர் புரட்சியாளனே….இன்னும் எழுதுவேன்