“ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியா?-சிபி-1
“ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியா?-சிபி-1

“ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியா?-சிபி-1

“ட்ராட்ஸ்கி மார்க்சியவாதியா?” என்ற பதிவு.31/07/2019 அன்றிலிருந்து தொடங்கி ஏழு பதிவு என் முகநூல் பகுதியில் எழுதியிருந்தேன். அதிலிருந்து. “ட்ரொட்ஸ்கிசம் அன்றே குழி தோண்டி புதைக்கப் பட்டது தொடங்கி இடத்திலேயே” இன்று இங்கே நாம் பேசும் பொருளாக உள்ள காரணம் முதற்கண் அறிவோம்.ஹெர்பெரெட் மார்கோஸ் 1972 ல் எழுதிய “எதிர்ப் புரட்சியும் கலகமும்”(Counter Revolution and Revolt) என்ற நூலில் கீழ்கண்டவாறு எழுதினார்:- மேற்குலகம் ஒரு புது வளர்ச்சி நிலை அடைந்துள்ளது, ஏகாதிபத்தியம்(என் கருத்து) தங்களை காத்துக் கொள்ள உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதிர்புரட்சியை ஒருங்கிணைத்து நடத்த வேண்டியுள்ளது. இவர்கள் உச்ச கட்டமாக நாஜியின் கோரமான முறைகளையும் கூட கடைபிடிக்கப்படுகின்றன. பல்வேறு விளிப்பு நிலை நாடுகளில் கம்யூனிஸ்டுகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்கள் ஏகாதிபத்தியய் நாடுகளிடம் மண்டியிட்டு தங்கள் மக்களையே கொத்துக் கொத்தாக கொல்ல காரணமாக உள்ளனர். மதத்தை மையமாகக் கொண்ட யுத்தங்கள் மீளெழுகின்றது, ஏழை நாடுகளுக்கு ஓயாமல் ஒடுக்குமுறைக்கான எல்லா உதவிகளும் ஆயுதமும் தங்குதடையின்றி அனுப்ப படுகிறது. ரசிய புரட்சியின் நூற்றாண்டில் எதிர் புரட்சிகர சக்திகள் மேலோங்கி நிற்கிறது, வலுவாக இருந்த விடுதலை இயகங்கள் யாவும் தோல்வியை சந்தித்து கொண்டுள்ளது. இருந்தும் இன்று ஏகாதிபத்திய முரண்பாடுகள் என்றுமில்லாத வகையில் கூர்மையடைந்துள்ளது, நிதி நெருக்கடி என்றுமில்லத அளவில் வளர்ச்சியினமை பேரழிவை நோக்கி செல்லும் அரசியல் பொருளாதார நிலைமைகள் எதிர்காலமே காரிருள் சூழும் நிலையில் உள்ளது.”.எகாதிபத்திய எதிர்புரட்சி வெற்றியை தெரிந்து கொள்வதோடு, இனி புரட்சிக்கு ஏற்படும் தடங்கள்களையும் அலசிப்பார்த்தால் விடை கிடைக்கும் ஆகவே எனது இந்த தேடல் தொடரும்..

‘இடது’ மற்றும் வலது விலகல்கள்

============================

சோவியத்தில் புற சூழலை விட அக சூழல் அதாவது புரட்சியின் அகநிலை சக்திகளில் ஒற்றுமையின்மை தலைமை வெளிப்படையாக பிரிந்து கிடந்தது. லெனினின் தலைமையிலும் பின்னர் ஸ்டாலினாலும் தலைமை தாங்கப்பட்ட கட்சியை எதிர்த்து ட்ரொட்ஸ்கி, புகாரின் மற்றும் பலரால் தலைமை தாங்கப்பட்ட குழுக்கள் பெரும்பாலும் தங்களுக்குள் பிளவுபட்டு இருந்தாலும்,லெனின் மற்றும் ஸ்டாலின் எதிர்ப்பில் ஓரணியில் நின்றனர்.

ட்ரொட்ஸ்கி தலைமையிலான எதிர்ப்பின் முக்கிய  மேற்க்கு நாடுகளில் புரட்சி நடக்காவிட்டால் புரட்சி தடைபடுமென்றும், மற்றொன்று புகாரின், அவர்

குலக்குகளை கட்டாயப்படுத்தக்கூடாது, ஆனால் ‘வளர அனுமதிக்க வேண்டும்.

அமைதியாக சோசலிசத்திற்குள் செல்ல வேண்டும் ‘. இந்த இரண்டு போக்குகளும் ‘இடது’ மற்றும் வலதுசாரி சந்தர்ப்பவாதங்கள்.

1905 இல், லெனின் “இடையறாத புரட்சி” என்ற தனது கோட்பாட்டை உருவாக்கியபோது, ட்ரொட்ஸ்கி ‘நிரந்தர புரட்சி’ என்ற தனது சொந்த கோட்பாடு முன்வைத்தார் அதாவது பாட்டாளி வர்க்கம், ஜார்ஸைத் தூக்கியெறிந்தது,ஆனால்

விவசாயிகளின் வெகுஜனங்களுடன் முரண்படுவார் மற்றும் சோவியத் அதிகாரத்தில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது

மேற்கு நாடுகளின் பாட்டாளி வர்க்கத்தின் அரச ஆதரவு இல்லாமல்,

அதாவது, மேற்கில் பாட்டாளி வர்க்க புரட்சி இல்லாமல் என்றார் ட்ரொட்ஸ்கி.

பிரெஸ்ட்-லிட்டோவ்ஸ்கில் நடைப்பெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் ட்ரொட்ஸ்கி ஏற்க்க மறுத்துவிட்டார், அவர் கூறிய காரணம் ஜெர்மன் ஏகாதிபத்தியவாதிகளுடன் சமாதானம் செய்ய வேண்டும் எனில் ஜெர்மனியில் வரவிருக்கும் புரட்சியைக் காட்டிக் கொடுப்பதாக இருக்கும் என்றார். இதை லெனின்  ‘விந்தையான வக்கரித்த முடிவு’ என்று விவரித்தார் (LCW 27..68).

 ரஷ்யா புரட்சி தோல்வியடையக்கூடும் என்பதை லெனின் உணர்ந்தார் ஆனால் அது தோல்வி அடைந்தாலும் கூட உலகப் புரட்சிக்கு வித்திடும், இது இன்னும் உலகில் புரட்சிக்கான முன்னேற்றத்தைக் குறிக்கும் என்றார்.

நமது பொருளாதார ‘சக்திகளுக்கும்’ நமது அரசியல் வலிமைக்கும் இடையே ஒரு வேறுபாடு உள்ளதால் நாம் அரசியல் அதிகாரத்தை கைபற்றி இருக்கக் கூடாது என்று அறிவிப்பது ஒரு அபாயகரமான தவறாகும். எப்போதுமே இதுபோன்ற ‘முரண்பாடு’ இருக்கும், அதுதான் இயற்கையின் வளர்ச்சியில் எப்போதும் உள்ளது

சமூகம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, ஒவ்வொன்றும் தொடர்ச்சியான முயற்சியால் மட்டுமே மாற்ற முடியும். (LCW 32,339.)

‘நிரந்தர புரட்சி’ என்ற ட்ரொட்ஸ்கியின் கோட்பாட்டுக்கும் மார்க்சின் கோட்பாட்டிற்க்கும் பெயர் ஒற்றுமையை தவிர வேறு பொது அம்சம் எதுவும் இல்லைஎன்பதும் “ஒரே நேரத்தில் நிகழும் தனமை” என்பது மட்டுமே இரண்டுக்கும் உள்ள பொதுவான அமசம் என்பதும் இது தவறானது என்பதை நடைமுறையில் மெய்பிக்கப் பட்டு விட்டது என்பதும் அறிந்தவையே.

ட்ரொட்ஸ்கி இரண்டு நிலைகளையும் வேறுபடுத்துவதில் தோல்வியுற்றார்

புரட்சியில் விவசாயிகளுக்கு உள்ள புரட்சிகர பங்கை மறுத்தது இது மென்ஷெவிக் நிலைப்பாடு. 1905 க்குப் பிறகு விவசாயிகள் மேலும் புரட்சியின் பால் ஈர்க்கப்பட்டனர். விவசாயிகள் நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்துடன் நெருக்கமாக வளர்வதை வரலாறு சொல்கிறது., அதே நேரத்தில் சாரிஸத்திற்கு எதிரான போராட்டத்தில்முழு விவசாயிகளும், மிகவும் தீவிரமாகி வருகின்றனர்:

உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற,நிகரற்ற தலைவன்
தோழர் ஸ்டாலின் பாசிசத்தை வீழ்த்தினார் என்பது தான் வரலாறு.

எப்படி தோழர் ஸ்டாலினால் பாசிசத்தை வீழ்த்த முடிந்தது?
பாட்டாளிவர்க்க தலைமையில் சோசலிச அரசு இருந்தது.

செஞ்சேனை இருந்தது.

அதனால் பாசிசத்தை வீழ்த்த முடிந்தது.

அது போலத்தான்
தோழர் மாவோ சீன நாட்டில்
பாட்டாளிவர்க்க தலைமையில் வலிமை மிக்க

பாட்டாளிவர்க்க_கட்சி இருந்தது.

விடுவிக்கப்பட்ட செந்தளப் பிரதேசங்கள் இருந்தது.
வலிமை மிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் செம்படை இருந்தது.
சீனாவில்
சீன வகை பாசிசம்

கருவருக்கப்பட்டது.

புதிய ஜனநாயக அரசு மலர்ந்தது.

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் வெளிச்சத்தில் தான்….

1.சீன நாட்டின் பபாசிச ஆட்சி ஒழித்துக் கட்டப் பட்டது.

2.அல்பேனியாவில்

3.பல்கேரியாவில்

4.கியூபாவில்

5.செக்கோஸ்லோவாக்கியாவில்

6.ஜெர்மனியில்

7.ஹங்கேரியில்

8.கொரியாவில்

9.மங்கோலியாவில்

10.போலந்தில்

11.ருமேனியாவில்

12.வியட்நாமில்

பாசிச ஆட்சிகள் ஒழித்துக் கட்டப் பட்டது.

ஆனால் இப்படிப்பட்ட புதிய ஜனநாயக அரசுகள்,சோசலிச அரசுகள் ஒழித்துக் கட்ட வழிகாட்டிய துரோகிகள் தான்
ட்ராட்ஸ்கிய வாரிசுகள்,குருசேவ்கள்,டெங்சியோ பிங்குகள்,பிரசண்டாக்கள்….

இவர்களின் கள்ளக் துரோக பிள்ளைகள் தான் ஏகபோகநிதிமூலதன கும்பலின் எச்சில் காசிலுக்காக எந்த ஒரு நாட்டிலும் புரட்சி வந்து விட கூடாது என்பதற்காகத் தான் முகநூலில் ஸ்டாலின் மீது அவதூறு பொழிகிறார்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *