இன்று ட்ராட்ஸ்கிய வாதிகள் ட்ராட்ஸ்கிதான் புரட்சியில் அதை செய்தார் இதை செய்தார் என்று கூச்சல் போடும் கும்பல் உண்மையில் வரலாற்று அடிப்படையில் அறிந்துக் கொள்ள முற்படுவதில்லை அவர்களுக்கானதே இந்தப் பதிவு…..ட்ராட்ஸ்கியின் வரலாற்றை அறிந்துக் கொள்ள தேடிய பொழுது கிடைத்த நூல், “மாபெரும் சதி” இதனுடைய தமிழாக்கம் முழுமையில்லை என்று தோழர் பார்த்த சாரதி சொன்னதோடு ஆங்கில நூலின் PDF version ம் அனுப்பி வைத்து விட்டார் அன்நூல் என் கை வசம் உள்ளதால் அதில் லிருந்து சில எழுத்துகள் கீழே…ஆங்கிலத்தில் உள்ளவை தேடுதலுக்கு சில பகுதியை இணைதுள்ளேன்.தொழிலாளி வர்க்க வரலாற்றில் பல புரட்சியாளர்கள் முதாலாளி வர்க்க கோஸ்டியின் குலாம்களாக (அடிமைகளாக) மாறியிருக்கிறார்கள். இத்தாலிய பாசிஸ்ட் முசோலினி ஒரு காலத்தில் இத்தாலிய சோசலிஸ்ட் கட்சியின் இடதுசாரிகளுடைய தலைவனாக் இருந்தான். பின்னர் முதலாளிகளின் கையாளாக மாறி தன்னுடன் பணி புரிந்த பல தோழர்களை சித்தரவதை செய்தான், பிரான்ஸில் டோரியட் என்பவன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பாசிச கூட்டத்தில் போய்ச் சேர்ந்து பின் பிரெஞ்ச் பாஸிஸ்ட் தலைவனாகிறான். 1914 ஆம் ஆண்டு பல சோசலிஸ்ட் தலைவர்கள் ஏகாதிபத்திய கும்பலின் கையாட்களாக மாறித் தன் சக தோழர்காளை கொன்றொழிக்க (கொலை) செய்திருக்கிறார்கள். இவை வரலாற்று புரிதலுக்கு.இப்படி நிலைமை இருக்க ட்ராட்ஸ்கியை புரிந்துக் கொள்ளுங்கள். கட்சி ட்ராட்ஸ்க்கு ஒரு எச்சரிக்கை கொடுத்தது, அதர்க்கு ட்ராட்ஸ்கி ஆதர்வாளர்கள் மற்றும் ட்ராட்ஸ்கி உட்பட் இனிமேல் அவ்வாறு செய்வதில்லை என்று கையொப்பம் இட்டு கட்சிக்கு அறிக்கை சம்ர்ப்பித்தனர்.1926 ம் ஆண்டு நவம்பர் மாதம் அகிலம் ட்ராட்ஸ்கிய வாதிகளின் கட்சி துரோகத்தை கண்டித்தது.ட்ராட்ஸ்கி, ஜினோவியேவ் போன்றோர் இதற்க்கு பின்பும் தங்களைத் திருத்திக் கொள்ளவில்லை. தொடர்ந்து சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டனர் இது ஏகாதிபத்திய ஆதரவாக மாறியது மார்க்சியத்தை கைவிட்டு முதலாளித்துவத்திடம் சரண் அடைந்தது ட்ராட்ஸ்கியம். இவர்களைப் பெரிய தியாகிகள் ஆகவும் ஸ்டாலின் பெரும் சர்வாதிகாரி என்றும் செய்திகளைப் பரப்பினர். இன்றளவும் அதனை வெளியிடுகின்றனர்.ட்ராட்ஸ்கிவாதிகள் பலவகையில் சூழ்ச்சி செய்தும் தங்களின் வேலை பலிக்காமல் போகவே பல நாச வேலைகளுடன் கொலைகளையும் செய்யத் தொடங்கினர்….தேவை இன்னும் வரும்+6
1VChinnadurai Durai