டெல்லி செல்லோ-7
டெல்லி செல்லோ-7

டெல்லி செல்லோ-7

இன்று நாம் வாழும் உலகம் இணைய தொடர்பாலும் தொழிற் நுட்பத்தாலும் சுருங்கி ஒர் இடத்தில் எல்லாம் பெரும் திறன் படைத்துள்ளோம்.இந்த நேரத்திலும் நமது பல புத்திஜீவிகள் மார்க்சிய முகமூடியில் ஏமாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை ஏனெனில் அன்று மார்க்சின் எழுத்துகளை காணும் பொழுது.காரல் மார்க்ஸ் வரலாற்றில் ஓர் அரிதினும் அரிய மனிதர் ஏனெனில் அவர் மறைந்த முதல் நூற்றாண்டுகளுக்குள்ளகவே அவரது சித்தாந்த கோட்பாடுகள் உலகத்தை தீவிரமாக மாற்றி விட்டன. உலகில் மூன்றில் ஒன்றுக்கு மேலான பகுதியில் மனிதனை மனிதன் சுரண்டும் முறை ஒழித்துக் கட்டியது மீதமுள்ள பகுதியில் அதன் தாக்கத்தை உருவாக்கியது. அதேபோல் அவரின் தீர்க்க தரிசனம் பல நடைமுறையில் உலகம் கண்ப் பட்டன.1789 இல் நடந்த பிரெஞ்சு புரட்சியில் புரட்சியில் ஈடுபட்டோர் தனது நேச சக்தியான விவசாயிகளை ஒரு கணமேனும் நட்டாற்றில் விட்டு விடாமல் கிராமப்புறத்தில் நிலப்பிரபுத்துவத்தை நொறுக்கித் தள்ளி ஒரு சுதந்திரமான நிலம் படைத்த விவசாயி வர்க்கத்தை படைப்பது தனது ஆட்சி அடிப்படை என்பதை அந்த முதலாளி வர்க்கம் அறிந்திருந்தது. ஆனால் 1848 ஜெர்மனி முதலாளி வர்க்கம் தனது நேச சக்திகளான ரத்தத்தின் ரத்தமான விவசாயிகளை – அந்த விவசாயிகள் இல்லையேல் தன்னால் நிலபிரபுத்துவ வர்க்கத்தை எதிர்த்து ஏதும் செய்ய முடியாது என்கிற நிலையிலும் – கடுகளவேனும் மன உறுத்தலின்றி காட்டிக் கொடுத்தது. ( லெனின் தொ.நூல் 1.பக்கம்-523).இதனை கணக்கில் கொண்ட மார்க்ஸ், நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்துவத்தையும் தூக்கியெறிந்து சோசலியசத்தையும் கம்யூனிசத்தையும் நிலை நாட்ட நடக்கும் புரட்சிப் போராட்டத்தில் தொழிலாளி வர்க்கத்தின் நெருங்கிய நேச சக்தியாக மார்க்ஸ் விவசாயிகளை கண்டார்.எனவே தொழிலாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் தொழிலாளி விவசாயிக் கூட்டணி என்பது புரட்சியை நடத்தி முடிக்பதற்க்குரிய யுத்த தந்திரக் கூட்டணியின் அச்சாணி ஆகிவிட்டது.இந்தியா பற்றி ஆழ்ந்த ஆய்வுக் குறிப்புகளை அளித்துள்ளார். அவை தொலை நோக்கு கொண்ட தீர்க்க தரிசனம்.”இந்தியச் ஸ்முதாத்தின் கட்டமைப்பு முழுவதையும் இங்கிலாந்து நொறுக்கித் தள்ளிவிட்டது. ஆனால் மறு நிர்மானத்திற்க்குரிய அறிகுறிகள் எதுவும் இன்னும் வெளிப்படவில்லை”.மேலும்”பிரிட்டனிலேயே இன்றுள்ள ஆளும் வர்க்கங்களை விலக்கி பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைபற்றும் வரையிலோ பிரிடிஸ் நுகத்தடியை தூக்கியெறியும் அளவுக்கு இந்தியர்கள் போதிய வலிமை பெறும் வரையிலோ பிரிடிஸ் முதலாளி வர்க்கத்தினர் தூவியுள்ள புதிய சமூதாய கூறுகளை இந்தியர்கள் அறுவடை செய்யப் போவதில்லை”.ஆங்கில ஆட்சியாள்ர்கள் பற்றி மார்க்ஸ் மூலதனம் தொகுதி-3ல் பக்கம் 333-334 தில் குறிப்பிட்டுள்ளதாவது,” விவசாயிகளின் நிலம் பல வந்தமாக் பறிமுதல் செய்யப் பட்டு வெவ்வேறு வகையான நிலப்பிரபுக்களிடம் ஒப்படைக்கப் பெற்றது,….”” பிரிட்டிசார் இந்திய கைத்தொழில் துறையை அழித்தனர். அதன் விளைவாக் பெரும் எண்ணிக்கையிலானநெசவாளர்கள் பட்டினியால் செத்து மடிந்தனர் தப்பித்தவர்கள் விவசாய கூலிகளாகி போனர்.”( இந்தியா பற்றி மார்க்ஸ் பக்கம் 88). உழைக்கும் மக்களின் உழைப்பு வீணடிக்கப் பட்டது இன்றும் வளர்ச்சி சம சீரற்று மீள முடியாத நிலை.இந்தியர்களிடம் பிரிட்டிசார் அடித்த கொள்ளை அன்றைய இந்திய தொழிலாளிகள் விவசாயிகளின் ஆண்டு வருமானத்தை விட பல மடங்கு அதிகமாகும்”.(மார்க்ஸ் எங்கெல்ஸ் கடிதத் தொகுப்பு பக்கம் 317).மேலும் பிரிட்டிசாரின் தொழில் தேவைக்கான நிர்பந்த விவசாயம் செய்ய இந்திய விவசாயிகள் நிர்பந்திக்கப் பட்டன்ர். அதானால் இந்திய மக்கள் உணவு பற்றாக் குறையால் கடும் இன்னலுக்கு ஆளனர். கொள்ளையடிக்க மட்டுமே ..(மேல் நூல் பக்கம் 76-77).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *