ஜெர்மன் விவசாய போராட்டம் பற்றி எங்கெல்ஸ் குறிப்பிடுள்ளவை,”விவசாய தொழிலாளர்கள் முதன் முதலாக தனகளுடைய உழைப்பு பொருளாகிய நிலத்தைப் பெரிய் விவசாயிகள், இன்னும் அவர்களை காட்டிலும் பெரிய நிலப்பிரபுக்களின் தனி உடைமை என்ற நிலைமையிலிருந்து எடுத்து பொது உடைமையாக மாற்றி விவசாய தொழிலாளார்கள் சங்கங்களில் கூட்டு முறையில் உழுது பயிரிடுவதன் மூலமாக மட்டுமே தங்களுடைய அருவருக்கத்தக்க வறுமையிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்”.
இன்றைய டெல்லி விவசாயிகள் போராட்டமும் நமது புரிதல் என்னவாக இருக்கும் என்பதனை தெளிவடையமார்கஸ்-எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி-5ல் பக்கம் 174 லிருந்து.ஜெர்மன் விவசாய போராட்டம் பற்றி எங்கெல்ஸ் குறிப்பிடுள்ளவை.
விவசாயிகள் போராட்டத்தை வழி நடத்த தவறியது இடதுசாரிகள் என்றால் ஆளும் வர்க்கம் எல்லா போராட்டங்களையும் ஒரே பாணியில் அடக்குவதுதான் வெட்க்க கேடு . ஒரே விதமான போக்கு, பொய்யான செய்தியை உருவாக்கிய ஆளும் கும்பலின் அதையையே வழி மொழியும் ஊடகங்கள் சற்றும் கூச்சமின்றி அந்த பொய்யையே வியாபாரம் செய்வதை மக்களும் நம்பும் மூடதனம்.சரி இனி பதிவுக்கு வருவோம்.26 ஜனவரி போராட்டம் பற்றி விவசாயிகள் அறிவித்த நிலையில் அதனை ஏற்று கொண்ட போலீஸ் துப்பாக்கி சூடு நடத்த வேண்டியவைக்கு கூறும் காரணங்கள் சிறு பிள்ளைதன மானவை மேலும் இன்று உடகங்கள் பரப்பும் பொய்களை எதிர்த்து உண்மையான செய்திகள் சில கிடைத்தாலும் அவை எல்லோரிடமும் போய் சேர்ந்ததாக தெரியவில்லை.
இன்றைய எஸ்ய்தியில் இருந்து தெரிந்துக் கொள்வோம்.
டெல்லி திக்ரி, சிங்கு எல்லைகள், உத்தரப்பிரதேசம் மீரட் எக்ஸ்பிரஸ் சாலை, காஜியாபாத் எல்லையில் விவசாயிகள் போராடும் இடத்தில் ஏராளமான போலீஸார், துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசு தினத்தன்று, டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்பட்டபோது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து விவசாயிகள் போராடும் இடத்தில் போலீஸார், துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லி எல்லையில் பல்வேறு சாலைகளும் மூடப்பட்டு மாற்றுப் பாதையில் செல்ல வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லி மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் பாரதிய கிசான் யூனியனைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை அங்கிருந்து வெளியேற வேண்டும் எனக் கோரி காஜியாபாத் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஜிப்பூரில் உள்ள உத்தரப்பிரதேச கேட் பகுதியில் விவசாயிகள் போராடும் இடத்தில் நேற்று இரவு முதல் தொடர் மின்வெட்டு செய்யப்பட்டு போாரடும் விவசாயிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக விவசாயிகள் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.
டெல்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு போலீஸார் தரப்பிலும், உள்ளூநர் கிராம மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு விவசாயிகளை வெளியேற்ற முயற்சிகள் நடக்கின்றன என்று விவசாயிகள் தரப்பில் தெரிவி்க்கப்படுகிறது
சிங்கு எல்லையில் போராடி வரும் மகிளா கிசான் அதிகார் மஞ்ச் தலைவர் கவிதா குருகந்தி கூறுகையில் “ அனைத்துப் பகுதியிலிருந்தும் அரசாங்கம் நெருக்கடி கொடுத்து எங்கள் போராட்டத்தை முடிக்க முயல்கிறது.
பல்வேறு பகுதிகளி்ல் இருந்து எங்களுக்கு வரும் உணவுப்பொருட்களை வரவிடாமல் தடுக்கிறது. தொலைத்தொடர்பு, இன்டர்நெட் வசதிகள் ரத்து செய்யப்படுகின்றன. உள்ளூர் மக்களை எங்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு எங்களை அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே நேற்று நள்ளிரவரு காஜியாபாத் மாவட்ட ஆட்சியர் அஜய் சங்கர் பாண்டே, காவல்துறை கண்காணிப்பாளர் கலாநிதி நைதானி ஆகியோர் விவசாயிகள் போராடும் இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
விவசாயிகள் போராடும் உ.பி. மீரட் எக்ஸ்பிரஸ் சாலைப்பகுதியில் நேற்று முதல் கலவரத் தடுப்பு வாகனங்கள், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களும், நூற்றுக்கணக்கான போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.