டெல்லி செல்லோ-3

விவசாயிகள் போராட்டத்தை வழி நடத்த தவறியது இடதுசாரிகள் என்றால் ஆளும் வர்க்கம் எல்லா போராட்டங்களையும் ஒரே பாணியில் அடக்குவதுதான் வெட்க்க கேடு . ஒரே விதமான போக்கு, பொய்யான செய்தியை உருவாக்கிய ஆளும் கும்பலின் அதையையே வழி மொழியும் ஊடகங்கள் சற்றும் கூச்சமின்றி அந்த பொய்யையே வியாபாரம் செய்வதை மக்களும் நம்பும் மூடதனம்.சரி இனி பதிவுக்கு வருவோம்.26 ஜனவரி போராட்டம் பற்றி விவசாயிகள் அறிவித்த நிலையில் அதனை ஏற்று கொண்ட போலீஸ் துப்பாக்கி சூடு நடத்த வேண்டியவைக்கு கூறும் காரணங்கள் சிறு பிள்ளைதன மானவை மேலும் இன்று உடகங்கள் பரப்பும் பொய்களை எதிர்த்து உண்மையான செய்திகள் சில கிடைத்தாலும் அவை எல்லோரிடமும் போய் சேர்ந்ததாக தெரியவில்லை.

 இந்திய விவசாயிகள் மற்றும் பிற உழைப்பாளர்களின் போராட்டத்தை இணைத்து செயலாக்க முடியாதவையே இந்திய இடதுசாரி இயக்கத்தின் சாபக் கேடு. நிலைமை அப்படி இருக்க இன்றுடெல்லியில் விவசாயிகளின் போராட்டமானது கடும் குளிரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி, வெளியில் முகாமிட்டு, ஆளும் பாஜகவை ஆட்டி விட்டு கொண்டிருப்பது வரவேற்க்கும் அதே வேளையில் இதன் தேவையான திசை வழியை இடதுசாரிகள் அளிக்கவில்லை என்பது வருத்தம்ளிக்கிறது.

பாராளுமன்றத்தில் அரசியலமைப்பற்ற முறையில் நிறைவேற்றப்பட்ட மூன்று விவசாயிகள் விரோத சட்டத்தை எதிர்க்கின்ற விவசாயிகளை இந்த அமைப்பு முறைக் குறித்து அரசியல் படுத்த வேண்டிய நேரமல்லவா இவை?.

கொரோனா தொற்றால் மக்கள் வேலை இழந்து வாழ வழியற்று இறந்துக் கொண்டுள்ளனர் ஆனால் உலக முதலாளித்துவம் இந்த தொற்று நோய் காலத்திலும் பெரும் லாபம் ஈட்டி உள்ளனர். அம்பானி அதானி போன்றோரின் வளர்ச்சியை கணக்கில் கொண்டு பாருங்கள் அதே போல உலக பெரிய நிறுவனங்களான ஆப்பிள், டெஸ்லா, அமேசான் போன்றவை தங்கள் பங்குகளை முன் எப்போதும் இல்லாத உயரத்திற்கு உயர்ந்துள்ளன.

பாட்டாளிகள் உழைப்பாளர்கள் ஏழை எளிய மக்க வாழ வழியற்று கிடக்கும் பொழுது உலகெங்கும் அரசாங்கங்கள் முதலாளிகளுக்கு பெருமளிவிலான சலுகைகளை வாரி வழங்கி அவர்களின் இடர்பாடுகளிலிருந்து வெளியேற உதவி புதிய புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்தவும் தீவிரப்படுத்தவும் முதலாளிகளின் நலனில் கண்ணும் கருத்துமாக இருப்பதை காணலாம்.

இந்த செயல்கள் அனைத்தும் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டவை. எடுத்துக்காட்டாக, இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு வேளாண்மை தொடர்பான சட்டங்கள் மாநில அரசுகளால் மட்டுமே செய்யப்பட வேண்டும்.

விவசாயிகள் எதிர்ப்பு லட்சக்கணக்கான விவசாயிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து டெல்லியில் இறங்கி தேசிய தலைநகரை முற்றுகையிட்டுள்ளனர். அவர்கள் இன்னும் பேருந்துகள் மற்றும் டிராக்டர்களில் வந்து தில்லி எல்லையில் முகாமிட்டுள்ளனர். பல எதிர்ப்புத் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. போராட்டம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைகளுக்காக மட்டுமல்லாமல், ஜனநாயகத்தின் சாராம்சத்துக்காகவும், சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்களை மோசடி செய்வதிலிருந்து இந்திய மக்களின் உரிமைகளை தக்கவைத்துக்கொள்வதற்காகவும் உள்ளது.

இந்த இயக்கத்திற்கு ஆதரவாக உலகெங்கிலும் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுத்துக் கொண்டுதான் உள்ளது.

மேலும் அடுத்தப் பதிவில் தொடரும்… சி.பி