டிராட்ஸ்கியவாதிகள்மூன்றாம் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பேரால்பரப்பிவரும் அவதூறுகள் மீதானவிவாதத்தின் தொடர்ச்சி. தா. சிவகுமார்
டிராட்ஸ்கியவாதிகள்மூன்றாம் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பேரால்பரப்பிவரும் அவதூறுகள் மீதானவிவாதத்தின் தொடர்ச்சி. தா. சிவகுமார்

டிராட்ஸ்கியவாதிகள்மூன்றாம் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பேரால்பரப்பிவரும் அவதூறுகள் மீதானவிவாதத்தின் தொடர்ச்சி. தா. சிவகுமார்

#ஸ்டாலினுக்கு_எதிராக#டிராட்ஸ்கியவாதிகள்மூன்றாம் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பேரால்பரப்பிவரும் அவதூறுகள் மீதானவிவாதத்தின் தொடர்ச்சி.***தோழர்களே,என்னுடைய பின்னூட்டத்தில் உள்ள 1வது லிங்க்கில் உள்ள பதிவில்தோழர் Annupurselvaraj போன்ற டிராட்ஸ்கியவாதிகள் தங்களது முகநூல் பதிவுகளில் ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் பற்றி ஸ்டாலினுக்கு எதிராக பரப்பிவரும்…1) மூன்றாவது அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் முதலாளித்துவ ஜனநாயகத்தை பாதுகாப்பதே இன்றைய பாட்டாளி வர்க்கத்தின் முன் உள்ள கடமை என்று தீர்மானித்தது.2) ஏகாதிபத்திய உலக யுத்தங்களை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற லெனினியத்தை ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் கைவிட்டது. 3) பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி தந்திரத்தை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளில் சர்வ தேசியவாதம் கைவிடப்பட்டு தேசியவாதம் தலைதூக்க செய்தது. 4) ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் முதலாளித்துவ நாட்டு கம்யூனிஸ்டுகள் திட்டவட்டமாக தேர்ந்தெடுக்க வேண்டியது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், முதலாளித்துவ ஜனநாயகம் இரண்டில் ஒன்றை அல்ல. மாறாக முதலாளித்துவ ஜனநாயகம் பாசிசம் இரண்டில் ஒன்றைத்தான் என்று சொல்லி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டது.போன்ற விமர்சனங்கள்/ குற்றச்சாட்டுக்கள் அடிப்படை ஆதாரமற்ற பொய்யான அவதூறுகள் என்பதை நிரூபிக்கும் வகையில் இவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு நேர் எதிரான கருத்துக்களை உள்ளடக்கிய ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் உள்ள பத்திகளை எடுத்துப் பதிவிட்டிருந்தேன். பதிவின் முடிவில்,தோழர் அனுப்பூர் செல்வராஜ், தோழர் உறவு பாலா அவர்களே நீங்கள் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் சொல்லப்பட்டதாக கூறி ஸ்டாலினுக்கு எதிராக செய்துவரும் மேலே கண்ட பொய் பிரச்சாரத்திற்கு நேரெதிரான கருத்துக்களை கொண்ட ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பத்திகளை மேலே கொடுத்துள்ளேன். நீங்கள் உண்மையில் நேர்மையானவர்களாக இருந்தால், நீங்கள் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பெயரில் பரப்பும் ஸ்டாலினுக்கு விரோதமான பொய்ப் பிரச்சாரங்களுக்கு ஆதாரமான ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பத்திகளை (உண்மையில் இருந்தால்) மேற்கொள் காட்டுங்கள். இல்லாவிட்டால் ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் பற்றி ஸ்டாலினுக்கு எதிராக பொய்யான அவதூறு கருத்துக்களை பரப்பி விட்டோம் என்று உங்கள் முகநூல் பக்கங்களில் மன்னிப்பு கேட்கவேண்டும்…என்றும் பதிவிட்டிருந்தேன். அப் பதிவிற்கு எதிர்வினையாக அனுப்பூர் செல்வராஜ் எனது பின்னூட்டத்தில் 2வது லிங்க்கில் உள்ள பதிவில் தனது வாதங்களை முன்வைத்திருந்தார்.அந்த வாதங்களுக்கான எனது பதிலை முன் வைப்பதற்கு முன் இந்த விவாதத்தில் கலந்துகொண்டமைக்காக முதற்கண் தோழர் செல்வராஜ் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.தோழர் செல்வராஜ் அவர்கள் தனது விவாதத்தில் முன்வைத்த வாதக் கருத்துக்களை இரண்டு வகையாக பிரித்து பதில் அளித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.முதலாவதாக ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் ஸ்டாலின் இப்படிச் சொன்னார் அப்படிச் சொன்னார் என்ற யூகங்களின் அடிப்படையில் தோழர் செல்வராஜ் போன்றோர் இதுநாள்வரை முகநூலில் பரப்பி வந்த நான் மேலே குறிப்பிட்டுள்ள அந்த நான்கு விமர்சனங்களுக்கு நேர் எதிரான கருத்துக்களை உடைய ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பத்திகள் பற்றி பற்றிய அவரது பதில் கருத்து என்ன என்பதும் அந்த நான்கு கருத்துக்கள் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் சொல்லப்பட்டதுதான் என்பதை காண்பிப்பதற்காக தீர்மானத்தின் பத்திகள் ஏதேனும் அவர் ஆதாரங்களாக காட்டி இருக்கிறாரா என்பது முதலில் ஆராயப்பட வேண்டும்.இரண்டாவதாக இந்த நான்கு கருத்துக்கள் தவிர இந்த ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் பற்றி தோழர் செல்வராஜ் மேலே சொன்ன அவரது பதிவில் முன்வைக்கும் பொதுவான மதிப்பீடு மற்றும் பிற விமர்சனங்களை பற்றியும் தனியாக விவாதிக்க வேண்டும்.***முதலில், அந்த நான்கு விமர்சனங்களுக்கு நேர் எதிரான கருத்துக்களை உடைய ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பத்திகள் பற்றிய அவரது பதில் கருத்து என்ன என்பதையும் அந்த நான்கு கருத்துக்கள் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் சொல்லப்பட்டதுதான் என்பதை காண்பிப்பதற்காக தீர்மானத்தின் பத்திகள் ஏதேனும் அவர் ஆதாரங்களாக காட்டி இருக்கிறாரா என்பது பற்றியும் விவாதிப்போம்.தோழர் செல்வராஜ் அவர்கள் தனது பதில் விவாதத்தில் எங்குமே மேலே கண்ட அந்த நான்கு விமர்சனம்/ குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமாக அவர் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் இருந்து எந்த புதிய பத்திகளையும் எடுத்துக் காட்டவில்லை; மாறாக அவர் நான் மேற்கோள் காட்டிய பத்திகளில் இருந்து மட்டுமே தனது வாதங்களை முன்வைத்துள்ளார் என்பதை முதற்கண் தெளிவுபடுத்தி விடுகிறேன்.ஸ்டாலின் மீதான முதல் விமர்சனம்/ குற்றச்சாட்டு:1) மூன்றாவது அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் முதலாளித்துவ ஜனநாயகத்தை பாதுகாப்பதே இன்றைய பாட்டாளி வர்க்கத்தின் முன் உள்ள கடமை என்று தீர்மானித்தது.இந்த விமர்சனம் /குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கும் விதமாக இதற்கு நேர் எதிரான கருத்துக்களை உள்ளடக்கிய மூன்றாம் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் தீர்மான பத்திகள் வருமாறு:”…சோவியத் நாட்டின் மேலதிகமான ஒருங்கிணைப்பு, உலகப் பாட்டாளி வர்க்கம் அதனை மையமாக கொண்டு புத்தூக்கம் பெறுவது, சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச செல்வாக்கின் பெரும் வளர்ச்சி, சமூக ஜனநாயக தொழிலாளர்கள் மற்றும் சீர்திருத்தவாத தொழிற்சங்கங்களில் அணிதிரட்ட பட்டுள்ள தொழிலாளர்கள் மத்தியில் காணப்படும் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை நோக்கிய திருப்பம், பாசிசத்திற்கு எதிராக அதிகரித்துவரும் மக்கள் எதிர்ப்பு இயக்கம், காலனி நாடுகளில் புரட்சிகர இயக்கத்தின் வளர்ச்சி, இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சி மற்றும் கம்யூனிஸ்ட் (மூன்றாவது) அகிலத்தின் வளர்ச்சி ஆகியன உலக சோசலிச புரட்சியின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகின்றன; தொடர்ந்து துரிதப் படுத்திக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவத்தின் உள்முரண்பாடு மற்றும் வெளி முரண்பாடுகளின் அழுத்தத்தின் விளைவாக முதலாளித்துவ உலகம் கூர்மையான மோதல்களின் காலகட்டத்தில் நுழைகின்றது. இப் புரட்சிகர வளர்ச்சிக்கான இந்த நோக்கு நிலையை நோக்கி நிகழ்வுகளை திருப்புவதற்காக கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ், மாபெரும் அரசியல் செயல்பாடுகளையும் துணிச்சலையும் வெளிப்படுத்துமாறும் தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட செயல்பாட்டை கொண்டுவருவதற்காக சோர்வடையாத போராட்டத்தை நடத்துமாறும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அறைகூவி அழைக்கிறது. தொழிலாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணியை அமைப்பதே எதிர் வரவிருக்கும் இரண்டாம் சுற்று பாட்டாளிவர்க்க புரட்சிகளின் மாபெரும் போர்க் களத்திற்கு உழைக்கும் மக்களை தயார் படுத்துவதற்கான தீர்மானகரமான தொடர்பு சங்கிலியாகும். பாட்டாளி வர்க்கத்தை ஒன்றுபட்ட மக்கள் அரசியல் ராணுவமாக ஒன்றிணைப்பது மட்டுமே, பாசிசத்திற்கு எதிரான மற்றும் மூலதன அதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான மற்றும் சோவியத்துகளின் அதிகாரத்திற்கான போராட்டத்தில் அதன் வெற்றியை உறுதிப்படுத்தும். “புரட்சியின் வெற்றி ஒரு போதும் தானாக வராது. அதற்கான தயாரிப்புகளை செய்து வென்றெடுக்க வேண்டும். வலிமையானதொரு பாட்டாளி வர்க்க புரட்சிகர கட்சியால் மட்டுமே அதற்கான தயாரிப்புகளை செய்து வெற்றி பெறமுடியும்” -ஸ்டாலின்….அதை தடுப்பதற்காக தொழிலாளி வர்க்கம் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மீறி புதிய ஏகாதிபத்திய உலகப் போர் வெடிக்குமானால், கம்யூனிஸ்டுகள் சமாதானத்திற்கான போராட்டத்தில் அணிதிரட்டப்பட்ட போருக்கு எதிரானவர்களை, ஏகாதிபத்தியப் போரை உருவாக்கிய பாசிஸ்டுகளுக்கு எதிரான, முதலாளி வர்க்கத்துக்கு எதிரான, முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கான உள்நாட்டுப் போராக மாற்றுவதற்கான போராட்டத்தை நோக்கி கொண்டு செல்லப் பாடுபடுவார்கள்…. கம்யூனிச அகிலத்தின் ஏழாவது உலக காங்கிரஸ், பக்குவம் அடைந்து வரும் அரசியல் நெருக்கடியை வெற்றிகரமான பாட்டாளி வர்க்கப் புரட்சியாக மாற்றுவது என்பது பரந்துபட்ட பாட்டாளி வர்க்க மக்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இருக்கும் வலிமை மற்றும் செல்வாக்கையும், கம்யூனிஸ்டுகளின் சக்தி மற்றும் சுய அர்ப்பணிப்பையும் மட்டுமே பொறுத்ததாகும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.”மேலே கண்ட பத்திகளில் காங்கிரஸ் தீர்மானம் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாக பாட்டாளி வர்க்கக் கட்சியின் கடமையாக முன்நிறுத்துவது என்னவென்றால்,1) எதிர் வரவிருக்கும் இரண்டாம் சுற்று பாட்டாளிவர்க்க புரட்சிகளின் மாபெரும் போர்க் களத்திற்கு உழைக்கும் மக்களை தயார் படுத்த வேண்டும்.அதற்கு தொழிலாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணியை அமைக்க வேண்டும். 2. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான மற்றும் சோவியத்துகளின் அதிகாரத்திற்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்தின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக பாட்டாளி வர்க்கத்தை ஒன்றுபட்ட மக்கள் அரசியல் ராணுவமாக ஒன்றிணைக்க வேண்டும்3) பக்குவம் அடைந்து வரும் அரசியல் நெருக்கடியை வெற்றிகரமான பாட்டாளி வர்க்கப் புரட்சியாக மாற்ற வேண்டும்.4) புதிய ஏகாதிபத்திய உலகப் போர் வெடிக்குமானால், அதை முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கான உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும்.ஆனால் இந்த டிராட்ஸ்கியவாதிகள் சொல்கிறார்கள் மூன்றாம் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் முதலாளித்துவ ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்று ஸ்டாலின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றியதாம். அதற்கு ஆதாரமாக ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் எந்த பத்தியையும் மேற்கோள் காட்டாத தோழர் செல்வராஜ் நான் எனது கருத்துக்கு ஆதரவாக சுட்டிக்காட்டிய ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பத்திகளை பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.”அடுத்த ஐந்து பத்திகளின் சாரம் வருமாறு:” …என்று மேற்கண்ட பத்திகளின் சுருக்கத்தை எழுதிவிட்டு அதைப் பற்றி பின்வரும் தனது கருத்தை முன் வைக்கிறார்:”…என்று பொதுவான நிலைமைகளைப் பற்றி விவரிக்கிறது ஆனால் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் தேசிய விடுதலை புரட்சி யில் பாட்டாளி வர்க்க கட்சியின் பணியை பற்றி குறிப்பிடுவதற்கு மாறாகபாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி, தேசிய விடுதலை ஐக்கிய முன்னணி அமைப்பதற்கு தான் அழுத்தம் தருகிறது.மேலும் போரைத் தூண்டுவோருக்கு எதிராக அனைத்து சக்திகளையும் ஒன்று குவிக்க வேண்டும் என்பது வர்க்க கண்ணோட்டம் அற்ற பார்வை ஆகும்.ஆனால் போரை யார் தூண்டுகிறார் என்பதல்ல எந்த வர்க்கம் (தூண்டுகிறது) நடத்துகிறது, எந்த அரசியல் கொள்கையின் தொடர்ச்சியாக போர் ஏற்படுகிறது என்பதே மார்க்சியம்.”…என்று விவாதத்திற்கு சம்பந்தமில்லாத கருத்துக்களைப் பதிவிட்டு இருக்கிறாரே ஒழிய, அவர்கள் முன்வைத்த அதாவது ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பாதுகாப்பதே பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்று சொன்னதாக அள்ளிவிட்ட பொய்க்கு ஆதாரமாக அந்த பத்திகளில் இருந்து ஒரு பத்தியைக்கூட அவரால் ஆதாரத்தைக் காட்ட முடியவில்லை.ஆனால் அவர் சொன்ன அவதூறுகளுக்கு நேர் விரோதமான கருத்துக்கள் அந்தப் பத்திகளில் இருந்தாலும் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளும் நேர்மை அவரிடம் இல்லாததால் அப்பத்திகள் “பொதுவான நிலைமைகளைப்” பேசுவதாக கள்ளத்தனமாக கடந்து போகிறார்.ஆக,ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் முதலாளித்துவ ஜனநாயகத்தை பாதுகாப்பதுதான் பாட்டாளி வர்க்கத்தின் கடமை என்று அவர் இதுநாள்வரை சொல்லிவந்தது கடைந்தெடுத்த பச்சை பொய் என்பதை அந்தத் தீர்மானப் பத்திகள் தெளிவாக சொன்ன பின்பும் அதற்கு அவரிடம் எந்தப் பதிலும் இல்லை என்பது இங்கே தெளிவாகிவிட்டது.***அடுத்த விமர்சனம்/குற்றச்சாட்டு:2) ஏகாதிபத்திய உலக யுத்தங்களை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற லெனினியத்தை ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் கைவிட்டது. இந்த விமர்சனம் /குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கும் விதமாக இதற்கு நேர் எதிரான கருத்துக்களை உள்ளடக்கிய மூன்றாம் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் தீர்மான பத்திகள் வருமாறு:”…கம்யூனிஸ்டுகள், முதலாளித்துவ அமைப்பு இருக்கும்போதே போரே இல்லாமல் செய்துவிட முடியும் என்ற போலி நம்பிக்கைக்கு எதிராக போராடும் அதே வேளையில், போரை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்வார்கள். அதை தடுப்பதற்காக தொழிலாளி வர்க்கம் எடுக்கும் எல்லா முயற்சிகளையும் மீறி #புதிய_ஏகாதிபத்திய_உலகப்_போர்#வெடிக்குமானால், கம்யூனிஸ்டுகள் சமாதானத்திற்கான போராட்டத்தில் அணிதிரட்டப்பட்ட போருக்கு எதிரானவர்களை, #ஏகாதிபத்தியப்_போரை உருவாக்கிய பாசிஸ்டுகளுக்கு எதிரான, முதலாளி வர்க்கத்துக்கு எதிரான, முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கான #உள்நாட்டுப்_போராக மாற்றுவதற்கான போராட்டத்தை நோக்கி கொண்டு செல்லப் பாடுபடுவார்கள்.” தீர்மானத்தின் இந்தப் பத்தி,புதிய ஏகாதிபத்திய உலகப் போர் வெடிக்குமானால், அதை முதலாளித்துவத்தை தூக்கி எறிவதற்கான உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்று தெளிவாகவே சொல்கிறது. அதுமட்டுமல்ல அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதையும் சொல்கிறது. அதாவது அந்த உலகப்போர் வெடிப்பதற்கு முன்பாக போருக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் ஐக்கிய முன்னணியில் அணிதிரட்டப் பட்டிருக்கும் அனைத்து சக்திகளையும் உள்நாட்டுப் போராக மாற்றும் போராட்டத்திற்கு திருப்பிவிட வேண்டும் என்றும் சொல்கிறது.ஆக அனுப்பூர் செல்வராஜ் இதுநாள்வரை சொல்லி வந்த குற்றச்சாட்டான, ஏகாதிபத்திய உலக யுத்தங்களை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற லெனினியத்தை ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் கைவிட்டது என்பது பச்சைப் பொய் என்பதை மேற்கண்ட தீர்மானத்தின் பத்தி நிரூபித்து விட்டது.அதுமட்டுமின்றி அவரது வழக்கமான பாணியில் “இந்த பத்தி பொதுவான நிலைமைகளை கூறுகிறது” என்று சொல்லி அவரால் தப்பிச் செல்ல முடியாத அளவிற்கு பொட்டில் அடித்தாற்போல் சொல்லிவிட்டது. இப்போது நீங்கள் நினைப்பீர்கள், ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற லெனினியத்தை கைவிட்டு விட்டதாக நான் சொன்னது தவறு தான் என்று அவர் நேர்மையாக ஒப்புக் கொண்டிருப்பார் என்று. நேர்மையானவர்களிடம் நாம் அதை எதிர்பார்க்கலாம். ஆனால் டிராட்ஸ்கியவாதிகளிடம் அதை எதிர்பார்க்க முடியுமா? அனுப்பூர் செல்வராஜ் தான் அசலும் நகலும் ஒரு டிராட்ஸ்கியவாதி என்று இதிலும் நிரூபித்திருக்கிறார். அவரது பதில் இதுதான்:”…இறுதி நான்கு பத்திகள் குறித்து..கம்யுனிஸ்டுகள் புரட்சியை கொண்டு வர போரை விரும்புகிறார்கள் என்று கூறும் அவதூறை தீர்மானம் நிராகரிக்கிறது.முதலாளித்துவ அமைப்பபிற்குள் போரை ஒழித்து விட முடியும் என்ற நம்பிக்கையை நாங்கள் எதிர்க்கிறோம்.அதேபோல போரைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் செய்வோம்.மீறி ஏகாதிபத்தியத்திய போர் வெடித்தால் சமாதானத்திற்கான போராட்டத்தில் திரட்டப்பட்ட சக்திகளை கொண்டு போரை உருவாக்கிய பாசிஸ்டுகளுக்கு எதிராக, முதலாளித்துவ த்தை தூக்கி எறியும் உள் நாட்டு போராக போராட்டதை நோக்கி கொண்டு செல்வோம் என்கிறது.அவ்வாறு கொண்டு செல்லப்பட்டதா என்பதே கேள்வி.”அவர் இப்போது என்ன சொல்லிவிட்டார் பார்த்தீர்களா?தான் சொன்னது தவறு என்றும் ஒப்புக்கொள்ள வில்லை; சரி தான் என்பதற்கு ஆதாரமும் காட்டவில்லை. ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்று தீர்மானம் சொல்கிறது….. ஆனால்…. அவ்வாறு கொண்டு செல்லப்பட்டதா என்பதுதான் இங்கே கேள்வி என்று மழுப்பி விட்டார்.ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்று ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் வெளிப்படையாக பொதுவான நிலைமையை குறிப்பிடுவதாகச் சொல்லி இவரால் தப்பிச் செல்ல முடியாதவகையில் குறிப்பான செயல்திட்டமாக சொல்லும்போது, அதையும் நேர்மையாக ஒப்புக் கொள்ள மனமில்லாமல்,”உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்று தீர்மானம் சொல்கிறது; ஆனால் அப்படி நடந்ததா என்பதுதான் கேள்வி” -என்று வேறொரு விவாதத்திற்கு தப்பிச் செல்கிறார்.ஆக,அவர் இதற்கு முன் போட்ட பதிவுகளில் “ஏகாதிபத்திய உலக யுத்தங்களை உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்ற லெனினியத்தை ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் கைவிட்டது.” என்ற பச்சைப் பொய்க்கும்,தற்போது அவர் “உள்நாட்டுப் போராக மாற்ற வேண்டும் என்று தீர்மானம் சொல்கிறது; ஆனால் அப்படி கொண்டு செல்லப்பட்டதா என்பதுதான் கேள்வி” என்று சொல்வதற்கும் இடையே,மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது என்பதை அறிவு நேர்மை உள்ள எவரும் ஒப்புக் கொள்ளவே செய்வர். ஆனால் இவர் ஒப்புக்கொள்வாரா என்பது சந்தேகமே.***அடுத்த விமர்சனம்/குற்றச்சாட்டு:3) ஏழாவது காங்கிரஸ் தீர்மானம், பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி தந்திரத்தை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளில் சர்வ தேசியவாதம் கைவிடப்பட்டு தேசியவாதம் தலைதூக்க செய்தது.இந்த விமர்சனம் /குற்றச்சாட்டுக்களை பொய்யாக்கும் விதமாக இதற்கு நேர் எதிரான கருத்துக்களை உள்ளடக்கிய மூன்றாம் அகிலத்தின் ஏழாவது காங்கிரஸ் தீர்மான பத்திகள் வருமாறு:”தேசிய வெறிவாதத்திற்கு எதிரான போராட்டம்”: தேசிய வெறிவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் பணி என்பது, தொழிலாளர்களையும் அனைத்து உழைக்கும் மக்களையும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய உணர்வில் பயிற்றுவிப்பதிலேயே அடங்கியுள்ளது. அதனை பாட்டாளி வர்க்கத்தின் இன்றியமையாத வர்க்க நலன்களுக்கான சுரண்டல்காரர்களுக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கும் எதிரான போராட்டத்திலும் தேசிய சோசலிசக் கட்சிகள் மற்றும் பிற அனைத்து பாசிச கட்சிகளின் மிருகத்தனமான தேசிய வெறி வாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் மட்டுமே செய்து முடிக்க முடியும்.”இந்தத் தீர்மானம் என்ன சொல்கிறது என்றால்,1) கம்யூனிஸ்டுகள் தேசிய வெறிவாதத்திற்கு எதிராக போராட வேண்டும்.2) அப்போராட்டத்தில் கம்யூனிஸ்ட்கள், தொழிலாளர்களுக்கும், அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய உணர்வை பயிற்றுவிக்க வேண்டும்.3) அவர்கள் அத்தகைய சர்வதேச உணர்வை, i) பாட்டாளி வர்க்கத்தின் இன்றியமையாத வர்க்க நலன்களுக்காக சுரண்டல்காரர்களுக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கும் எதிராக நடத்தப்படும் போராட்டத்திலும் ii) தேசிய சோசலிசக் கட்சிகள் மற்றும் பிற அனைத்து பாசிச கட்சிகளின் மிருகத்தனமான தேசிய வெறி வாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் ஊட்ட வேண்டும்.இந்தத் தீர்மானம் தான் பாட்டாளி வர்க்க சர்வ தேசிய உணர்வை கைவிட்டு உலக கம்யூனிஸ்டுகளை தேசியவாதத்தை கைக்கொள்ள வைத்துவிட்டதாம். கேட்கிறவன் கேனப் பயலா இருந்தா கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொல்வார்களாம். இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கம் உட்பட உலக கம்யூனிச இயக்கம் தேசியவாதச் சேற்றில் சறுக்கி விழுந்ததற்கான காரணத்தை வெளிமுரண்பாடுகளான ஸ்டாலினிடமும் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்திலும் தேடுவதைவிட அந்தந்த கம்யூனிஸ்டு கட்சிகளின் உள்முரண்பாட்டில் தேடுவதுதான் இயக்கவியல் கற்ற கம்யூனிஸ்டுகளுக்கு அழகு. இவர்களுக்கு எப்படியோ? இப்படி வெளிப்படையாக தேசியவாதத்திற்கு எதிராக இயற்றப்பட்ட ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தைப் பத்தியைப் பற்றி அனுப்பூர் செல்வராஜ் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.இப்போது நீங்கள் நினைப்பீர்கள், ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் சர்வதேசிய வாதத்தை கைவிட்டுவிட்டு தேசியவாதத்தை கைக்கொள்ள வைத்ததாக நான் சொன்னது தவறு தான் என்று அவர் நேர்மையாக ஒப்புக் கொண்டிருப்பார் என்று. நேர்மையானவர்களிடம் நாம் அதை எதிர்பார்க்கலாம். ஆனால் டிராட்ஸ்கியவாதிகளிடம் அதை எதிர்பார்க்க முடியுமா? அனுப்பூர் செல்வராஜ் தான் அசலும் நகலும் ஒரு டிராட்ஸ்கியவாதி என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார். அவரது பதிலில், “அடுத்த ஐந்து பத்திகளின் சாரம் வருமாறு:…தேசியவெறிவாதத்தை எதிர்த்து (தேசியசோசலிஸ்டுகள்,பாசிஸ்டுகள்) பாட்டாளி வர்க்க சர்வதேசிய உணர்வை உருவாக்க வேண்டும்…….என்று பொதுவான நிலைமைகளைப் பற்றி விவரிக்கிறது.”ஆக,ஏழாவது காங்கிரஸ் தீர்மானம், பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி தந்திரத்தை முன்வைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளில் சர்வ தேசியவாதம் கைவிடப்பட்டு தேசியவாதம் தலைதூக்க செய்தது- என்று தான் இதுநாள்வரை சொல்லி வந்ததை பொய்யென நிரூபிக்கும் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின்படி கண்ணுக்கு முன்னால் இருந்தும் அதை வசதியாக மறந்துவிட்டு “பொதுவான நிலைமைகளைப் பற்றி” சொல்வதாக கடந்து போகிறார். இதுதான் அறிவு நேர்மை. இருக்கட்டும். அடுத்து நான்காவதாக அவர் பரப்பி வரும் ஸ்டாலின் மீதான அவதூறு விஷயத்தில் அவருடைய அறிவு நேர்மை எப்படி பல்லிளிக்கிறது என்பதைப் பார்ப்போம்.***அடுத்த விமர்சனம்/குற்றச்சாட்டு:4) ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் முதலாளித்துவ நாட்டு கம்யூனிஸ்டுகள் திட்டவட்டமாக தேர்ந்தெடுக்க வேண்டியது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், முதலாளித்துவ ஜனநாயகம் இரண்டில் ஒன்றை அல்ல. மாறாக முதலாளித்துவ ஜனநாயகம் பாசிசம் இரண்டில் ஒன்றைத்தான் என்று சொல்லி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டது.இந்த விமர்சனம் /குற்றச்சாட்டில் ஏழாவது காங்கிரஸ் தீர்மானம்பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு நேர் விரோதமான பத்திகள் ஏற்கனவே எடுத்துக் காட்டப்பட்டு, “ஏகாதிபத்தியப்போரை உள்நாட்டுப் போராக மாற்றி” “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான மற்றும் சோவியத்துகளின் அதிகாரத்திற்கான” போராட்டத்தை முன்னெடுப்பது பற்றி ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் கூறுவது பற்றியும் அதற்கு மாறான எந்த ஆதாரத்தையும் தோழர் செல்வராஜ் அவர்களால் முன்வைக்க முடியவில்லை என்பது பற்றியும் ஏற்கனவே மேலே நாம் சுட்டிக் காட்டி விட்டோம். எனவே, ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் முதலாளித்துவ நாட்டு கம்யூனிஸ்டுகள் திட்டவட்டமாக தேர்ந்தெடுக்க வேண்டியது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், முதலாளித்துவ ஜனநாயகம் இரண்டில் ஒன்றை அல்ல. மாறாக முதலாளித்துவ ஜனநாயகம் பாசிசம் இரண்டில் ஒன்றைத்தான் என்று சொல்லி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டது என்று அவதூறு பரப்பும் அனுப்பூர் செல்வராஜ் தான் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் இருந்து உரிய பத்திகளை எடுத்துக்காட்ட வேண்டும்.இப்போது நீங்கள் நினைப்பீர்கள், அவர் இது சம்பந்தமான ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பத்திகளை எடுத்து ஆதாரங்களை அள்ளி வீசுவார். அப்படி இல்லை என்றால் நான் சொன்னது தவறு தான் என்று அவர் நேர்மையாக ஒப்புக் கொண்டிருப்பார் என்று. நேர்மையானவர்களிடம் நாம் அதை எதிர்பார்க்கலாம். ஆனால் டிராட்ஸ்கியவாதிகளிடம் அதை எதிர்பார்க்க முடியுமா? அனுப்பூர் செல்வராஜ் தான் அசலும் நகலும் ஒரு டிராட்ஸ்கியவாதி என்று மீண்டும் மீண்டும் நிரூபித்திருக்கிறார். அனுப்பூர் செல்வராஜ் அவர்களின் பதில் இதோ://ஏழாவது காங்கிரஸின் தீர்மானம் முதலாளித்துவ ஜனநாயகத்தை பாதுகாப்பது பிரதான கடமை என்பதும்,முதலாளித்துவ நாடுகளின் கம்யுனிஸ்ட் கட்சிகள் தேர்ந்தெடுக்க வேண்டியது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை அல்ல முதலாளித்துவ ஜனநாயகத்தை தான் என கூறுவது ட்ராஸ்க்கியவாதிகளின் பொய் என்றும் அதற்கு ஆதாரம் இல்லை என்றும் Tha.sivakumar அவர்கள் கூறியிருந்தார்.அதற்கான ஆதாரத்தை கீழே பதிவிட்டுள்ளேன்(ஆதார நூல்- கம்யுனிஸ்ட் அகிலம்-சுருக்கமான வரலாறு -முன்னேற்றப் பதிப்பகம் ரஷ்யா.)(1) ஜூன் 14/1934-ல் ரஷ்ய பிரதிநி மனுயீல்ஸ்கி காங்கிரஸ் முன்னேற்பாட்டு கமிஷனில் ஆற்றிய உரை.(3),(4)ஜூலை 25/1935-ல்அகிலத்தில் டிமிட்ரோ ஆற்றிய உரை.மேற்கண்ட நிலைப்பாடுபாட்டாளி வர்க்க சர்வதேசியத்தையும், உலகப் போரிரை உள் நாட்டு போராக மாற்றுவதையும் கைவிட்டு விட்டது என்பதை எடுப்பாக எடுத்துக் காட்டுகிறது.//பார்த்தீர்களா, அவர் ஏழாவது காங்கிரஸ் இப்படிச் சொல்லி விட்டதாக தான் சொன்னதை நிரூபிப்பதற்காக ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் இருந்து எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.மாறாக அந்த ஏழாவது காங்கிரஸ் நடப்பதற்கு ஓராண்டுக்கு முன்பு அதன் தயாரிப்பு கூட்டத்தில் ரஷ்ய பிரதிநிதி மனுயீல்ஸ்கியும் 1935 ஜுலை 25 அன்று அகிலத்தில் ஆற்றிய உரையில் டிமிட்ரோவும் இப்படி ஒரு கருத்தை முன் வைத்ததாக, 1976இல் ஸ்டாலின் மறைந்து 26 ஆண்டுகள் கழித்து, ஸ்டாலினுக்கு எதிரான போலி ஆவணங்களை சிருஷ்டிக்கும் திருத்தல்வாத வேலைகள் துவங்கி 26 ஆண்டுகள் கழித்து, திருத்தல்வாதி பிரஸ்னேவ் ஆட்சியில் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட அகிலத்தின் வரலாறு எனும் திருத்தல் வாத புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பதாக ஒரு ஆதாரத்தை காட்டுகிறார். எப்படி இருக்கிறது கதை. வேலிக்கு ஓணான் சாட்சியாம். ஒரு போலிக்கு இன்னொரு போலி சாட்சியாம். ஒரு திருத்தல்வாத அவதூறுக்கு இன்னொரு திருத்தல்வாதப் புத்தகம் ஆதாரமாம். அந்தப் புத்தகம் ஒரு பக்கம் இருக்கட்டும். இங்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால், இவர் இதுநாள்வரை இப்படி முதலாளித்துவ ஜனநாயகம் அல்லது பாசிசம் இரண்டில் ஒன்றைத்தான் கம்யூனிஸ்டுகள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஏழாவது காங்கிரஸ் தீர்மானம்தான் சொன்னது என்று சொல்லிக் கொண்டிருந்தவர், அத்தீர்மானத்தில் அப்படி இல்லை என்றால், “நான் தவறாகச் சொல்லிவிட்டேன் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் அல்ல; தீர்மானத்தின் தயாரிப்பு கூட்டத்தில் ஒரு பிரதிநிதி சொன்ன கருத்து இது என்று தன் தவறுக்கு வருத்தம் தெரிவிப்பதுதானே அறிவு நாணயம் உள்ளவர்கள் முதலில் செய்ய வேண்டியது.ஆனால் கடைசிவரை அவர் அதைச் சொல்லவேயில்லை. இதுதான் இவரது அறிவு நேர்மை. ஏழாவது காங்கிரஸ்-கான ஆயத்தக் கமிட்டியில் ஒரு பிரதிநிதி கூறியதையும் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்திற்கு முந்தைய அகிலத்தின் கூட்டங்களில் ஒரு பிரதிநிதி பேசிய பேச்சையும் (அவர்கள் அப்படி பேசினார்களா இல்லையா என்பதை ஒரு வாதத்திற்காக ஒதுக்கி வைத்துவிட்டு பார்த்தாலும்) மட்டுமே வைத்து அந்த பிரதிநிதிகளின் கருத்தை ஏழாவது மாநாட்டுத் தீர்மானத்தின் கருத்தாக ஒருவர் பொய் பிரச்சாரம் செய்வது சரியா? இது நேர்மையான மனிதர்கள் செய்யக்கூடிய செயலா? ஒரு மாநாடு அல்லது கூட்டத்தில் ஏதேனும் ஒரு பொருள் பற்றி விவாதிக்கும்போது அதில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்துக்கள் சொல்வார்கள். அவற்றில் சரியான கருத்துக்கள் எல்லாம் ஏற்கப்பட்டு, தவறான கருத்துக்கள் எல்லாம் நிராகரிக்கப்பட்டு அனைவரின் ஒட்டுமொத்த முடிவாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்படும். அதன்பின்னர், அந்தத் தீர்மானம்தான் அந்த மாநாட்டின் முடிவான கருத்தாக இருக்குமே ஒழிய விவாதத்தின் போது ஒவ்வொரு பிரதிநிதி சொன்ன கருத்துக்கள் எல்லாம் மாநாட்டின் கருத்து அல்ல. இவ்வளவு ஏன் அந்த தீர்மானத்திற்குப் பிறகு அந்த கருத்தைச் சொன்ன பிரதிநிதியின் கருத்தாக கூட அது இருக்காது.இது ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறைகள் தெரிந்த சாதாரண அடித்தட்டு கட்சி ஊழியருக்கும் கூட – அவ்வளவு ஏன் தொழிற்சங்கத்தில் முன்னணியில் இருக்கும் ஒரு தொழிற்சங்க ஊழியருக்கும்கூட தெரிந்த இந்த சாதாரண நடைமுறைகூட, மாமேதை ஸ்டாலினுக்கு இயக்கவியல் தெரியாது என்று சொல்லும் அளவுக்கு மாபெரும் இயக்கவியல் வாதிகளாக தங்களை அறிவித்துக் கொள்ளும் அனுப்பூர் செல்வராஜ் போன்றோருக்கு ஏன் தெரியாமல் போனது. ஏனென்றால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்று அனுபவம் இல்லாமலா சொல்லியிருப்பார்கள்.ஆக,ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் முதலாளித்துவ நாட்டு கம்யூனிஸ்டுகள் திட்டவட்டமாக தேர்ந்தெடுக்க வேண்டியது பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், முதலாளித்துவ ஜனநாயகம் இரண்டில் ஒன்றை அல்ல. மாறாக முதலாளித்துவ ஜனநாயகம் பாசிசம் இரண்டில் ஒன்றைத்தான் என்று சொல்லி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டது என்று அனுப்பூர் செல்வராஜ் இதுநாள் வரை பரப்பிவந்த அவதூறுக்கு ஆதாரமாக அவர் ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் இருந்து எந்த பத்தியையும் எடுத்துக் காட்டவில்லை என்பதே அவர் இதுநாள் வரை ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பேரில் ஸ்டாலின் மீது பரப்பி வந்த இந்த அவதூறு பச்சைப் பொய் என்பது நிரூபணமாகிவிட்டது.****தோழர்களே, மேலே அனுப்பூர் செல்வராஜ் இதுநாள் வரை ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பேரில் ஸ்டாலினுக்கு எதிராக பரப்பி வந்த அந்த நான்கு அவதூறுகளுக்கும் அவை அவதூறுகள் தான் என்பதற்கு ஆதாரம் காட்டி விட்டோம்.ஆனால் அதை மறுத்து அனுப்பூர் செல்வராஜ் அவர்கள் தான் கூறியதற்கு ஆதாரமாக ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் இருந்து எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. அதுமட்டுமின்றி நாம் முன்வைத்த ஆதாரங்கள் தனது மேற்கண்ட நான்கு விமர்சனங்களை அவதூறுகள் என்று நிரூபிக்கவில்லை என்பதற்கான ஆதாரங்களையும் அவர் காட்டவில்லை. இதற்குமேல் இந்த நான்கு அவதூறு கருத்துக்களையும் அனுப்பூர் செல்வராஜ் (அவரது அடிப்பொடிகளும்) தொடர்ந்து ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தின் பேரால் ஸ்டாலினுக்கு எதிராக பரப்பிக் கொண்டே இருப்பாரா?அல்லது ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தை தான் தவறாக புரிந்து கொண்டதாக தன் தவறை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்பாரா? -என்பது அவரது அறிவு நேர்மையை பொருத்த விஷயம்.அதற்குள் நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த விஷயத்தில் உண்மை என்னவென்று தெளிவுபடுத்த வேண்டிய நம் கடமையை சரியாகச் செய்துவிட்டோம் என்ற திருப்தியே நமக்குப் போதுமானது.***பி.கு:அடுத்ததாக மேலே கண்ட பதிவில் நடந்த விவாதங்களில் அனுப்பூர் செல்வராஜ் அவர்கள் ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் பற்றி புதிதாக முன்வைத்துள்ள வேறுசில விமர்சனங்கள் அல்லது அவதூறுகள் மார்க்சிய அடிப்படையில் சரியானவையா, ஏற்றுக் கொள்ளத் தக்கவையா என்பதை அடுத்த தனிப்பதிவில் சுருக்கமாக விவாதிப்போம்.#த_சிவக்குமார்

 • Palani Chinnasamyஅந்த நேர்மை இருந்தால் இவ்வளவு எழுதியிருக்க வேண்டாமே தோழர்2
  • Vchinnadurai DuraiPalani Chinnasamy தோழர் எனது பதிவை நிர்மல்ராஜ் தோழர் ” அந்த ” நபர்களின் பெயரை டேக் பன்னி ஷேர் செய்துள்ளார்.நீங்கள் தயாரா ? நான் தயாரில்லைன்னு பின்னூட்டம் இட்டுவிட்டேன்.1
  • Palani Chinnasamyஅந்த திருட்டு கூட்டத்தை பற்றி எழுத நினைத்த பொழுது இன்னொறு பிழைப்புவாத கூட்டம் வந்து விட்டதே தோழர் ஆகவே இரு கூட்டம் அதாவது மார்க்சியத்தை பேசிக் கொண்டே மார்க்சிய விரோத செயல் படும் இந்தப்போக்குகளை அம்பலப் படுத்தி எழுத வேண்டும் தோழர்1
  • Vchinnadurai DuraiPalani Chinnasamy அப்போது இரண்டு குரூப்பா தோழர் ?நாம இரண்டு பேரு !!!1
  • Palani ChinnasamyVchinnadurai Durai இதொ தோழர் இதில் சிலர் அவரின் சேவைக்கானவர்கள் ஒழிந்துள்ளன்ர்
  • உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணிஇன்றைய சமூக தேவைகளை ஒட்டியே ஸ்டாலின் – டிராட்ஸ்கி பற்றிய விவாதங்கள் என்பதை கவனம் கொண்டு பேச வேண்டும்.ஆனால் அந்த அணுகு முறை துளி கூட தோழர் சிவக்குமாரிடம் இல்லை.ஆகவே தான் நாம் இன்றைய சமூக தேவைகளை ஒட்டி ஸ்டாலின் பற்றி எழுப்புகிற கேள்விகளுக்கு ஸ்டாலின் வ… See More
  • AuthorTha SivaKumarஉறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி ஸ்டாலின் மீதான உங்கள் விமர்சனங்கள் ஸ்டாலின் மற்றும் ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் இன்றைய காலத்தின் தேவைக்கு பொருந்துமா பொருந்தாதா என்பதாக இருந்தால் நீங்கள் சொல்வது போல் விவாதிக்கலாம்.ஆனால் இங்கு விவாதமே ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் சொல்லாததை எல்லாம் சொன்னதாக நீங்கள் பரப்பிவரும் பொய்கள் பற்றியே.3
  • உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணிஏழாவது காங்கிரசு தீர்மானம் இன்றைய காலத்தின் தேவைக்கு பொருந்துமா பொருந்தாத என்பதை ஒட்டியே விவாதங்கள்.இதிலிருந்தே ஸ்டாலினிய வழிமுறை பற்றிய மதிப்பீடுகள். அப்படி தான் தோழர் அனுப்பூர் செல்வராஜ் மற்றும் எனது விவாதங்கள். ஆனால்எங்களது கருத்தின் ஒரு பகுதியை மட்டுமே எடுத்துக் கொண்டுபேசுவது நீங்கள். அதாவது ஸ்டாலின் மீது அவதூறுஎன ஒற்றை சொல்லில் அடைத்துக் கொண்டு,,,,நரோதியவாதிகளான தோழர் பழனிசின்னச்சாமியோடு சேர்ந்து பேசுகிறீர்கள்.அது உங்கள் அணுகு முறை அதற்கு நான் பொறுப்பல்ல.
  • உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணிTha SivaKumar தோழர் சிவக்குமார் அவர்களே,,,சொன்ன கருத்து நடைமுறையில் ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதே விவாதம்.அதை ஒட்டியே எனது மற்றும் தோழர் அனுப்பூர் செல்வராஜ் கருத்துக்கள் உள்ளன. ஆனால் அத்தகைய பார்வையிலேயே ஸ்டாலின் மதிப்பீடுகள்.ஆனால் தாங்கள் ஷ்டாலினை அவதூறு செய்கிறோம் என்றேவிவாதங்களை சுருக்கிக் கொள்கிறீர்கள். இது உங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லை என்பது போன்ற எந்திரவியலான அணுகு முறை.இதன் காரணமாகவே நீங்கள்நரோதியவாதிகள் என தாங்கள் சொல்லும் எம்எல் தோழர் பழனிசின்னசாமியோடு சேர்ந்து பேசிக்கொண்டுள்ளீர்கள்.இந்த முரணான அணுகுமுறையை கைவிட வேண்டும். இல்லையெனில் நரோதியவாத கண்ணோட்டத்திற்கு நீங்களும் பலியாக வேண்டி வரும்.
  • AuthorTha SivaKumarஉறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி இதற்கு முன் நீங்களும் அவரும் போட்ட பதிவுகளை மீண்டும் ஒருமுறை நீங்களே படித்துப் பாருங்கள். புரியும்.
  • உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணிTha SivaKumar நாங்க போட்ட பதிவுகளுக்கு உரை விளக்கமா??
  • AuthorTha SivaKumarஉறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி இல்லை. நீங்கள் போட்ட பதிவுகள் எல்லாம் ஆதாரமற்ற பச்சை பொய்கள் என்பதற்கான விளக்கம்.2
  • உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணிTha SivaKumar ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத எந்திரவியலானஅணுகு முறை கொண்டவர்களுக்கு உண்மை பொய் தெரியாது.நரோதியவாதி என்பார்கள் அராஜகவாதி என்பார்கள்.ஆனால் அவர்களோடு கொஞ்சி குலாவுவார்கள்.வேறென்ன இந்த கொள்கையற்ற மூடர்களோடு எப்படிவிவாதிப்பது.
 • AuthorTha SivaKumarஉறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் இப்படி மார்க்சிய விரோதமாக சொல்லப்பட்டுள்ளது என்று சொன்னீர்கள். ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் அப்படி சொல்லப்படவில்லை என்று ஆதாரத்தோடு சொல்லியிருக்கிறேன்.இதிலென்ன எந்திரவியலும் பூகம்பவியலும் இருக்கிறது?நீங்கள் இதுவரை ஏழாவது காங்கிரஸ் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளதா க சொன்னது எல்லாம் பொய் தான் என்று அம்பலப்பட்டு போனால், ஆமாம் பொய்தான் சொல்லிவிட்டோம் என்று சொல்லிவிட்டு போக வேண்டும்.இப்படி மூடர்களோடு விவாதிக்க முடியாது என்று நீங்கள் ஏதோ அறிவுக் கொழுந்துகள் போல் பேசக்கூடாது.பதில் இல்லை என்றால் பதில் எங்களிடம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.பெட்ரோமாக்ஸ் லைட் இல்லை என்றால் பெட்ரோமாக்ஸ் லைட் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். கூடை வச்சு இருக்குறவங்களுக்கு எல்லாம் பெட்ரோமாக்ஸ் லைட் இல்லை என்று சொல்லக்கூடாது.புரிந்ததா?
  • உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணிTha SivaKumar பாசிச முதலாளிகளால் தான் உலகப்போர் வந்தது என லெனின் சொன்னாரா?பிரிட்டன் பிரான்சின் கட்டளைக்கு பணிந்து அகிலத்தை கலைத்து ஐநாவை உருவாக்க துனைந்தது மார்க்சியமா?ஐநா – அட்லாண்டிக் சாசனம் பற்றி காங்கிரசின் கருத்து கேட்டது பிரிட்டன். இந்திய கம்யூனிஸ்டுகள் கருத்தையாவது கேட்டா?பிரிட்டனுடன் பாசிச எதிர்ப்பு அணி பாசிசத்தை அழித்ததுடன் பிரிட்டனி்ல் பிரான்சில் #சோசலிசம் வந்தததா?பாசிசத்தை எதிர்த்து முதலாளியத்தை ஒழிப்பதாக முன்னோக்கி நகர்த்தப்பட்டதா?
  • AuthorTha SivaKumarஉறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி இதையெல்லாம் இப்படியே மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் ஏழாவது அகிலம் குறித்து நீங்கள் பரப்பிய பச்சைப் பொய்களை எல்லாம் அம்பலமாக்கியது போல் இதையும் நான் அம்பலமாக்கி பதிவு போடும் போது இப்போது சொல்வதுபோல் நாங்கள் அப்படி சொல்லவில்லை நிகழ்காலத்துக்கு அது பயன்படுமா என்று தான் சொன்னோம் என்று ஜகா வாங்குவது; மூடர்களோடு பேசமாட்டோம் என்று உதார் விடுவது என்று பல்பு வாங்காமல், நேரடியாக விசயத்தை விவாதிப்பதற்கு தயாராக இருங்கள். இப்போது ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் பற்றிய இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்… பதில் இருந்தால்.2
  • Palani Chinnasamyஉறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி இன்னும் உள்ளீரா? உங்களை போன்றோர் பொய் பேச மட்டுமேதான் தெரியுமா? அந்த பொய் எதற்க்கு? உண்மையில் இந்த பணி எதற்க்காக செய்கின்றீர்?1
   • Like
   •  · Reply
   •  · 1d
  • Vchinnadurai DuraiPalani Chinnasamy கொழப்பியுடதான்.
   • Like
   •  · Reply
   •  · 1d
  • உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணிதோழர் Tha SivaKumar அவர்களே,,,பாசிச முதலாளிகளால் தான் உலகப் போர் ஏற்படுகிறது என்றால் லெனின் காலத்தி்ல் உலகப் போர் ஏற்பட காரணம் என்ன?உலக அளவில் முதலாளிகளோடு கூட்டு.ஒவ்வொரு நாட்டிலும் புரட்சிக்கு வழிகாட்டல் என்ற முரண்பாடு.சர்வதேசியத்தை கைவிட்டு முதலாளியத்தோடு – தேசியவாத பயணம் தான் ஸ்டாலினியம்.ஐநா சபை நிறுவனர் ஸ்டாலின் ,,,அகிலமே தேவை இல்லை என்ற முடிவு அமெரிக்க வல்லரசு உருவாகவும் முதலாளியம் அமைப்பு ரிதியாக செயல்படவும் ஊக்கமானது.ஐநா மூலம் தேசிய இன விடுதலை போராளிகளை வர்க்கப் போராட்ட வீரர்களை அழித்தொழிக்கும் கலையாக ஸ்டாலின் வழி முறை அமைந்தது. இதை புரட்சிகரமானது வர்க்கப் போராட்டத்தை தூக்கி பிடித்தார் என பேசுவதுதான் மார்க்சிய வழிமுறையா??ஐநா மூலம் தான் உலக அளவி்ல் சோசலிசம் அழிக்கப்பட்டது.உலகமயம் கொண்டு வர வாய்ப்பானது.
   • Like
   •  · Reply
   •  · 1d
   •  · Edited
  • உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணிVchinnadurai Durai ஐநா சபை நிறுவனத்தை உருவாக்கியவர் மார்க்சியவாதிவர்க்கப்போராட்டவாதியா? நல்லா இருக்கு உங்கவழிபாடு.
   • Like
   •  · Reply
   •  · 1d
  • Vchinnadurai Duraiஉறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி இதை எத்தனை நாளைக்குத்தான் கேப்பிங்க !
   • Like
   •  · Reply
   •  · 1d
  • உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணிVchinnadurai Durai நீங்க எத்தனை நாளைக்கு இதற்கு பதில் சொல்லாம இருப்பீங்க?
   • Like
   •  · Reply
   •  · 1d
  • Palani Chinnasamyஉறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி “ஸ்டாலினை அழிப்பதற்குத் திருத்தல்வாதிகள் முப்பத்தைந்து ஆண்டுகள் உழைத்தனர். ஸ்டாலின் ஒழிக்கப்பட்ட பின்னர் லெனின் புறங்கையால் ஒதுக்கித் தள்ளப்பட்டார். குருச்சேவ் ஸ்டாலினுக்கு எதிராக ஈவிரக்கமின்றிப் போராடினார். கோர்பச்சேவ் தனது ஐந்து ஆண்டு க்ளாஸ்நாஸ்ட் காலத்தில், ‘ஸ்டாலினிசத்திற்கு’ எதிரான ஒரு போராட்டத்தைத் தானே முன்னெடுத்துச் சென்றார்.லெனினுடைய சிலைகளை அகற்றுவதற்கு முன்பாக அவரது பணிக்கு எதிரான அரசியல் பிரச்சாரம் நடத்தப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஸ்டாலினுக்கு எதிராக நடத்தப்பட்ட பிரச்சாரமே போதுமானதாக இருந்தது.ஸ்டாலினுடைய கருத்துக்கள் தாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு அழிக்கப்பட்டவுடன், லெனினின் கருத்துக்களும் அதே விதியை அனுபவித்தன என்பது தெளிவாகும்”லுடு மார்டஸ் எழுதிய நூலில் இருந்து தோழர் சுந்தர சோழன் பதிவு
   • Like
   •  · Reply
   •  · 1d
  • AuthorTha SivaKumarஉறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி உறவு கா.சே.பாலசுப்ரமணி இதையெல்லாம் இப்படியே மறக்காமல் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் ஏழாவது அகிலம் குறித்து நீங்கள் பரப்பிய பச்சைப் பொய்களை எல்லாம் அம்பலமாக்கியது போல் இதையும் நான் அம்பலமாக்கி பதிவு போடும் போது இப்போது சொல்வதுபோல் நாங்கள் அப்படி சொல்லவில்லை நிகழ்காலத்துக்கு அது பயன்படுமா என்று தான் சொன்னோம் என்று ஜகா வாங்குவது; மூடர்களோடு பேசமாட்டோம் என்று உதார் விடுவது என்று பல்பு வாங்காமல், நேரடியாக விசயத்தை விவாதிப்பதற்கு தயாராக இருங்கள். இப்போது ஏழாவது காங்கிரஸ் தீர்மானம் பற்றிய இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்… பதில் இருந்தால்.1
   • Like
   •  · Reply
   •  · 1d
  • AuthorTha SivaKumarVchinnadurai Durai கேட்டுக் கொண்டே இருக்கட்டும் தோழர். இதற்கு யாரிடமும் பதில் இல்லை என்று நினைத்து கேட்டுக் கொண்டே இருக்கிறார்.பதில் சொன்ன பிறகு, அதில் விவாதிக்காமல் இதைவிட்டுவிட்டு வேறொன்றை கேட்பார்.1
   • Like
   •  · Reply
   •  · 1dWrite a reply…
 • தோழர் ஞானம்தோழர் த.சிவக்குமார்அவர்களின் பதிவு சிறப்பானது. விவாத முறை சிறப்பானது.தொடரட்டும் உங்கள்பணி.சேராத இடம் சேர்ந்து செஞ்சோற்றுக் கடன்தீர்ப்போரின் முகத் திரை கிழிக்க நீங்கள்எடுக்கும் சிரத்தைக்குவாழ்த்துகள்!2
  • Like
  •  · Reply
  •  · 2d
  • Annupurselvaraj Selvarajதோழர் ஞானம்ஏஎம்கே-உயிருடன் இருக்கும் வரை அவரை எதிர்த்து (தவறுகளை கூட) என்னால் அரசியல் செய்ய முடியாது என்று சொல்லி செஞ்சோற்று கடன் தீர்த்தும் இறுதியில் அவராலேயே துரோகி என துரத்தப்பட்ட நீங்கள்நாங்கள் செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடத்தில் சேர்ந்துள்ளதாக கூறுவது தான் வேடிக்கை.இருப்பினும் அவர் தான் உங்கள் ஆசான். மேலும் யாருக்கு முகம் இருக்கிறது யார் திரைக்குள்,முகமூடிக்குள் இருக்கிறார்கள் என்பதை பற்றி தனியே காண்போம்.2
   • Like
   •  · Reply
   •  · 1d
 • Palani Chinnasamy“ஸ்டாலினை அழிப்பதற்குத் திருத்தல்வாதிகள் முப்பத்தைந்து ஆண்டுகள் உழைத்தனர். ஸ்டாலின் ஒழிக்கப்பட்ட பின்னர் லெனின் புறங்கையால் ஒதுக்கித் தள்ளப்பட்டார். குருச்சேவ் ஸ்டாலினுக்கு எதிராக ஈவிரக்கமின்றிப் போராடினார். கோர்பச்சேவ் தனது ஐந்து ஆண்டு க்ளாஸ்நாஸ்ட் கா… See More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *