‘உலகத்தின் வயது 6000 ஆண்டுகள்”-கிறிஸ்தவர்கள்.
*உலகத்தின் வயது 100 கோடி வருடங்களுக்கு மேலானது” -பரிணாம வளர்ச்சியை ஏற்றோர்.
எத்தனையோ முரண்பாடான கருத்துக்கள்!
கிறிஸ்தவ எழுத்தாளரிடை, 19ஆம் நூற்றாண்டிலும், உலகத்தைக் கடவுள் படைத்த ஆண்டு பற்றிய வாதப்பிரதிவாதங்கள் நடந்து கொண்டு வந்தது.
ஆரம்பத்தில் கடவுள் படைத்த அழகான உலகம் மனிதர்களின் பாவத்தால் பிரளய வெள்ளம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது. மலைகளும் பள்ளத்தாக்குகளும் தோன்றின.
கடவுள், மனிதனிலும் பிற உயிரினங்கள் மரம் செடிகளிலும் இரண்டு இரண்டையே பிரளயத்தின் பின் காப்பாற்றினர் என்ற கருத்தே மேல் நாடுகளில் நிலவிவந்தது. அச் செடிகளது வளர்ச்சி யையே இன்று நாம் காண்கிருேம் என்பது அவர்களது முடிவு.
கொப்பனிக்கஸ் (1473-1543) பிரபஞ்சத்தின் ஒரு சிறு கோளமே உலகம் என்று நிரூபித்தபின்னர் புவியியல் பெளதிகவியல் ஆகிய துறைகள் வளர்ச்சியடைந்தன.
18, 19ஆம் நூற்றாண்டில் உயிரியல், தாவரவியல் ஆகியன விஞ்ஞான ஆய்வு முறைக்கு உட்படுத்தப்பட்டன. அவை உயிரின் தோற்றம் வளர்ச்சி பற்றிய புதிய கருத்துக்களையும் சிந்தனைகளையும் தோற்றுவித்தன.
ஆயினும் 19ஆம் நூற்றண்டு முற்பகுதியிலும் லூயி அகசிஸ், பாலே ஆகிய கிறிஸ்தவ எழுத்தாளரது கடவுளின் படைப்பின் சிறப்புப் பற்றிய மத நூல்கள் ஆதிக்கம் செலுத்தின.
உதாரணமாக, கண்களைப் பாருங்கள். கண்மணி அதன்மேல் மெல்லிய லென்ஸ், (குவிவில்லை) கண்மணி ஒடி பார்வையைத் தேடுகிறது. இத்தனை சிறப்பான அமைப்பை கடவுள் தவிர வேறு எவரால் ஒழுங்கு படுத்தித் தயாரிக்கமுடியும்? என்று கேட்டனர். டார்வின்கூட இளமையில் பாலேயின் நூலை முற்றாக நம்பியிருந்தார்.
சால்ஸ் டார்வின் 9-2-1809இல் இங்கிலாந்திலுள்ள சோல்பெரி நகரில் பிறந்தார். தந்தையார் கிராம வைத்தியர். 16 வயதில் எடின் பரோ
பல்கலைக் கழகத்தில் மருத்துவம் படிக்க அனுப்பினர். டார்வினுக்கு அக் கல்வியில் ஆர்வம் இருக்கவில்லை.
சிறுவயதிலிருந்தே செத்த உயிரினங்களைச் சேகரித்து அவற்றின் அமைப்புகளை அறிவதில் ஆர்வம் காட்டிவந்தார். செத்த உயிரினங் களைச் சேகரித்துவைத்திருக்கும் முறைகளை ஒரு நிபுணரிடம் கற்றிருந்தார்.
பரிணும வளர்ச்சி பற்றிய கருத்துகள் அறிஞர்களிடையே அவ்வேளை பரவத்தொடங்கிவிட்டது, அவற்றையெல்லாம் டார்வின் ஆர்வமாகப் படித்தார்.
விஞ்ஞானக் கட்டுரைகள் படித்து கலந்துரையாடும் பிலினியன் கழகத்தில் அவரும் அங்கத்தவராயிருந்தார்; ஒரு தடவை பொருள் முதல் வாதக் கருத்துக்களை ஒருவர் படித்தார்
அப் பேச்சு கழக குறிப்புப் புத்தகத்திலிருந்து முற்றாக அடிக்கப்பட்டது. இச் சம்பவம் கிறிஸ்தவரான டார்வின் தன் கருத்துக்களை வெளியிடுவதைத் தள்ளிப்போடச் செய்தது.
மருத்துவக்கல்லூரியை விட்டு அளவைக் கப்பல் ஒன்றில் இயற்கை ஆய்வாளராகச் சேர்ந்தார். உலகைச் சுற்றிய இப்பிரபாணத்தில் உலகின் பல பாகங்களிலிருந்து செத்த உயிரினங்களைச் சேகரித்துவந்தார். தென் அமெரிக்காவில் அவருக்கு ஏராளமான பயன்படக்கூடிய ஆதாரங்கள் கிடைத்தன.
1839இல் எம்மா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு லண்டன் மாநகரில் குடியேறினர்.
வெளியே கடவுள் பக்திநிறைந்த கிறிஸ்தவராகக் காட்டிக்கொண்ட போதும் பரிணாம வளர்ச்சி பற்றிய தன் கோட்பாடுகளை 1842 வரையி லேயே பெரும்பாலும் எழுதிவிட்டார். ஆயினும் நூலாக வெளியிடத் தயங்கினர்.
திருமணத்தின் ஒராண்டின் பின்னர் அவர் நோய்வாய்ப்பட்டார். அதனல் சமூக வாழ்க்கையிலிருந்து ஒதுங்கி கிராமப்புற வீடொன்றில் குடியேறினர். தென் அமெரிக்காவில் ஏற்பட்ட தொற்றுநோய் ஒன்றே அவரது நோய்எனகருதப்பட்டது. நடச்கமுடியாத நிலையிலும் உலாவினர். நாள்தோறும் சிலமணி நேரம் நூல்களுடனும் தன் உயிரின சேகரிப்புகளுடனும் உழைத்தார்.
லாமாக் என்ற பரிணும சிந்தனேயாளருடன் அவர் பெரும்பாலும் உடன்பட்டார். அன்னர் விளக்கத்தரமுடியாதவற்றை டார்வினால் சிறப்பாக விளக்கமுடிந்தது.
பரம்பரையாக மனிதன் உட்பட உயிரினங்களின் அமைப்பிலும் பழக்கவழக்கங்களிலும் நிரந்தர மாற்றம் ஏற்பட்டுவந்ததை அவர் கணித்தார். வாழ்வுப் போராட்டமும் தொடர்ந்து வந்திருப்பதையும் அவர் நிரூபித்தார். பயிர் செய்வோர், மிருகங்களை சினைப்படுத்தி வளர்ப் போர், பறவை சேகரிப்போர் ஆகியோரைக் கண்டு பேசுவதிலிருந்து இவை பற்றிய நூல்களையெல்லாம் ஆர்வமாகக் கற்றர்.
அவரது அன்றைய முடிவுகளை மூன்றாக வகுக்கலாம். (1) உலகம் பல மாற்றங்களை அடைந்துள்ளது. இது தொடரும். உயிர் வாழ்வதற்காக பூமியிலுள்ள உயிரினங்களும் தாவரங்களும் மாற்றமடைந்துகொண்டேயிருக்கும்.
(2) இயற்கை எல்லையற்ற வாய்ப்புகளையும் பரம்பரைப் புதுமை களையும் வழங்குகிறது.
(3) இயற்கையின் வளம் வாழ்வுப் போராட்டத்திற்கு இட்டுச் செல்கிறது.
இத்தகைய போராட்டத்தில் தனிச்சிறப்புள்ளவர்கள் உயிர் வாழ்வர். அதிர்ஷ்டம் குறைந்தவர் மடிவர். ஒவ்வொரு மாற்றமும் மிகச் சிறியது. ஒரு பரம்பரையிலிருந்து மறு பரம்பரை வரை ஏற்படும் மாறு தல்கள் மிகமிகச் சிறியன.
1844 வரையிலேயே டார்வின் தன் கண்டுபிடிப்புகளை தர்க்கரீதி யாக முடிவு செய்தபோதும் அவருக்கு அவற்றை வெளியிடத் துணிவு ஏற்படவில்லை. அவ்வாண்டில் 250 பக்க கட்டுரையாக எழுதிவிட்டார்.
தன் கருத்துக்களை வெளியிடின் பெரிய முரண்பாடுகள் ஏற்படும் எனவும், அவை இருட்டடிப்புச் செய்யப்படலாம் எனவும் அஞ்சினர். ஏற்கெனவே அவர் கடவுள் நம்பிக்கை அற்றவர் என்ற கருத்து நிலவி யது. அவரும் மதம் என்ற அபினியின் பிடியிலிருந்து முற்முக விடுபட முடியாத நிலையிலேயே இருந்தார்.
1857 வரையில் பரிணும வளர்ச்சி பற்றிய கருத்துக்கள் பரவலாக அடிபடத் தொடங்கின. டார்வின் தனது ஆய்வுகள் அடிபட்டுப்போய் விடுமோ என்றே அஞ்சினர். தன் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட வேண்டிய தவிர்க்கமுடியாத சூழ்நில் ஏற்பட்டது. இறுதியில் 1859 உயிரினங்களின் தோற்றம் என்ற அவரின் நூல் வெளிவந்தது; வாதப் பிரதிவாதங்கள் தொடர்ந்தபோதும் அந்நூல் ஆய்வு உலகிலே அவருக் கோர் அழியா இடம் தந்தது. உலகச் சிந்தனையாளர்களிடை அவருக் கும் மிக உயர்ந்த இடம் அளிக்கப்பட்டது.
டார்வின்து நூல் பற்றி பலரிடை இருந்து எதிர்ப்புகள் ஏற்பட்ட பொதும் அவ்வேளை பிரபலமாக இருந்த விஞ்ஞானிகளான ஹக்ஸ்லி, வலஸ், கூக்கர் போன்ருேர் ஆதரவு தந்து வரவேற்றனர்.
உயிரினத்தின் தோற்றம்” வெளிவந்த போது டார்வினது கோட்பாட்டில் பல சந்தேகங்க்ள் ஏற்படவே செய்தன. 1885 வரையில் (genes) ‘ஜீன்ஸ்’ பற்றி ஆய்வு விரிவடைய அது டார்வினது கோட்பாட்டிற்கு மேலும் வலுவூட்டியது.
நீண்டகாலமாகவே நோயோடு வாழ்ந்த டார்வின் 1882இல் இறந்தார். அவருக்கு ஐந்து ஆண்பிள்ளைகள். யாவரும் விஞ்ஞானிக ளாகப் புகழ்பெற்றனர்.
டார்வின் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது ‘மனிதன் குரங்கிலிருந்து தோன்றினான்’ என்ற தவறான கருத்தையே யாவரும் கூறக் கேட்டிருப்பீர்கள். அவ்வாறு அவர் கூறவில்லை. மனிதனும் குரங்கும் ஓர் ஆரம்பவழித் தோன்றலின் இரு வேறுபட்ட வழித்தோன்றல்களாகும் என்றே கூறினர்.