ஜெய்பீம் படத்தை ஏன் விமர்சிக்க வேண்டும் ?- சி.பழனி.
ஜெய்பீம் படத்தை ஏன் விமர்சிக்க வேண்டும் ?- சி.பழனி.

ஜெய்பீம் படத்தை ஏன் விமர்சிக்க வேண்டும் ?- சி.பழனி.

இந்திய சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு கலை அம்சங்களை கொண்டதாக உள்ள பொழுது, ஒரு சினிமாவில் மட்டுமே நாம் புரட்சியையும் அல்லது முற்போக்கின் எல்லா அம்சங்களையும் எதிர்பார்க்க முடியாது அதாவது வெறும் மசாலா படங்களாக உள்ள இந்திய சினிமாவில் ஒரு சில முற்போக்கு படங்கள் வருவது அதிசயமே!
அப்படி உள்ள பொழுது பத்தோடு பதினொன்றாக வரும் சில படங்களோடு நாம் கணக்கில் கொள்வதா இல்லையா என்பதல்ல பிரச்சனை ஒரு சிலர் ஒரு சில படங்களின் சில காட்சிகளில் முன்னெடுத்து அவையே படத்தில் முற்போக்கு அம்சமாகவும் படத்தை தூக்கி நிறுத்துவதும் சரிதானா என்பதை ஒரு அலசல் தான் என்னுடைய பதிவு…

ஜெய்பீம்

படம் என்பது உண்மை சம்பவத்தின் அடிப்படையாகக் கொண்டது என்று கூறுவதோடு, படம்  ஒடுக்குமுறைக்கு எதிரான படம் என்கின்றனர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை படமாக்கி உள்ளதாக டைரக்டர் கூறுகிறார் உண்மையில் படத்தைப்பற்றி அதன் தன்மை பற்றி அதன் பின்புலம் பற்றி தேடுவதே எனது இந்த பதிவின் நோக்கம்.

28 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் படம் எடுக்கப்பட்டதாக சொல்லுகின்றனர்.
படத்தை  முதல் முதலில் பார்த்து முதல்வர் ஸ்டாலின் படத்தின் மீதான தனது கருத்தை தெரிவிக்கிறார். உண்மை சம்பவங்கள் என்ற படம் கதை மிக கனமாக உள்ளது. ஏனென்றால் நான் அன்று மிசா காலத்தில் அனுபவித்த அதே போல் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் மீது போலீசின் நடவடிக்கைகள் உள்ளது என்கின்றார்.
அப்படியெனில் இந்த ஒடுக்குமுறைக்கும் இந்த வன்மமான அந்த  ஒடுக்குமுறையை யார் கட்டவிழ்த்து உள்ளனர். படத்தை படமாக்கிய டைரக்டர் என்ன சொல்லுகிறார் கேளுங்கள்? இது உண்மை தன்மையை புரிந்து கொள்ளவும் உதவும்.
அதிகாரத்துக்கு எதிராகப் பேசி உள்ளேன் என்கிறார் இங்கே அதிகாரம் படைத்தவர்கள் யார்? யார் கையில் அதிகாரம் உள்ளது?

சாதி ரீதியாக மக்களை பிரித்து வைத்துள்ளதும், ஜாதி கட்சிகளை ஊட்டி வளர்ப்பதும் யார்? இங்கு நடக்கும் ஒவ்வொரு வன்முறைக்கும் அடுக்கு முறைக்கும் தோல் கொடுப்பது யார்?

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மருந்தாக இந்த படம் உள்ளதா? அப்படி என்றால் இவை உண்மையை அடிப்படை யாக கொண்ட படம் என்றால் ஏன் வரலாற்று உண்மையை திரிக்கிறது?

1989 ம் ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது அவர்களுக்கு தெரியாதா?  ராமதாஸ் போன்றோர் தன்னை கம்யூனிஸ்டுகளாகவும் நக்சல்பாரிகளாவும்  அறிவித்துக் கொண்டு  ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலனாக தன்னை அறிவித்துக் கொண்டு இருந்த காலகட்டம் அவை.
அப்போது  மக்களிடையே ஜாதி வன்மத்தை  வளர்த்து விடாத  காலமாகும்.
காவல்துறையால்  ராஜாகண்ணு கொலை செய்யப்பட்டதை எதிர்த்து அனைத்து கட்சிகளோடு பாட்டாளி மக்கள் கட்சியும் அன்று போராடியது என்பதை இங்கே எதிர்நிலையில் கொண்டு நிறுத்தும் படத்தின் நோக்கம் என்ன ?
உண்மை சம்பவத்தை பேசுவதாக கூறும் டைரக்டர் பேசுவது ஜாதி வன்மம் இல்லையா?
அந்த பாதிக்கப்பட்ட பார்வதி கொடுத்துள்ள தகவல் அந்த ஊர் மக்கள்  கொடுத்த ஆதரவும் அவர்களுக்காக போராடியதையும் சுட்டிக்காட்டியுள்ளதை இந்த படம் தலைகீழாக அதே மக்கள் அவர்களுக்கு எதிராக நிற்பதாகவும் அவர்களை வன்மமாக தாக்குவதாகவும் காட்டியுள்ளது மேலும் படத்தில் காட்டியுள்ளது போல் அந்த ஊரில் நடந்த திருட்டு அல்ல மேலும் போலீஸ் கொலை செய்த நடந்த சம்பவங்கள் வேறானவை!

டைரக்டர் தன்னுடைய கலை பார்வையில் படத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் சிந்தித்து அதனை படமாக்கி உள்ளதாக கூறுகின்றார் அப்படி எனும் பொழுது தன்னுடைய கோர்ட் சீனில் ஒவ்வொரு படத்தை வைப்பதையும் அவர்களின் பின்னணி அறிந்து  சிந்தித்து செயல்பட்டதாக கூறும் அவர் தான், தெறியாமல் காலண்டரை தவறுதலாக வைத்துவிட்டார் என்றே வாதொட்டாலும்,  அந்த தாக்குதலுக்கு உள்ளான ஒடுக்கப்பட்ட மக்களோடு போராடிய மக்களையே  ஜாதிவாதிகளாக ஒடுக்குபவர்களா அடையாளப்படுத்தப்படுத்தும் இவரின் உண்மை தன்மை இங்கே தான் நிர்வாணமாகி போனது.
தவறான கருத்தை ஏற்படுத்திய இவர் தன் மார்கெட் தேவைக்காக பல பூசல்களை உருவாக்கினார் அவை அவரின் selling point of view என்பதா!! Marketing technique என்பதா நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

  தான் வருத்தப்பட்டு தனது தவறை திருத்திக் கொள்ள முன்வரவில்லை அதிலிருந்து அவருடைய உள்நோக்கம் தெளிவாகிறது.

சரி நேரடி விமர்சனம்….

ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக உரத்து பேச வேண்டிய திரைப்படம்  ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவான படமாகத்தான் உள்ளது.
இந்த  அமைப்பிற்குள், உள்ள நல்ல சட்டத்துறை வாதிகளும் போலீசும்  இருப்பதனால்   ஒடுக்கப்பட்ட மக்கள் (சாதிகள்) இல்லை இல்லை வர்க்கத்திற்கு நீதி கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை இது ஏற்படுத்தி விடுகிறது.
மக்கள் போராட்டத்தை வெறும் சட்டப்போராட்டத்தோடு நின்று கொள்ள சொல்கிறது.

படத்தில் ராஜாக்கண்ணுவாக நடிக்காமல் வக்கீல் சந்துருவாக சூர்யா நடிப்பது என்பதே கதை ராஜாக்கண்ணுவை பற்றியதோ அல்லது இருளர் சமூகத்தை பற்றியதோ அல்ல என்பதையும் சந்துரு என்ற நேர்மையான வழக்கறிஞர் பற்றியது என்பதையும் துல்லியமாக புரிந்துகொள்ள வேண்டும்.

பா.ம.க நிறுவனர் ராமதாசுடன் அவர்களது சமூகம் சார்ந்து நடந்த நிகழ்வுகளில் மேடையேறவும் தயங்கியவரல்ல சந்துரு.

பேரா கல்யாணியாக நடித்திருப்பவர் பேரா காளிஸ்வரன். இருவருமே என்ஜிஓ க்களில் சில பத்தாண்டுகளாக தொடர்ந்து இயங்கி வருபவர்கள் என்பது ஒருபுறமிருக்க, ராமதாசின் ஆரம்ப கால அரசியல் பிரவேசத்தின்போது அவருக்கு புரட்சியாளர் பட்டம் கொடுத்த நிறப்பிரிகை கும்பலில் இருந்தவர்களில் கல்யாணியும் ஒருவர். இன்னும் சிலரில் விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமாரும், பேரா அ.மார்க்சும் அடங்குவர்.

சந்துரு இந்தப்படம் தொடர்பாக நிறைய நேர்காணல்களை யூடியூப் சேன்ல்களுக்கு தந்து கொண்டிருக்கிறார். (தெரிந்து கொள்ள).

மேலும்
நாம் பேச வேண்டியவை
வர்க்க அரசியலா ? அடையாள அரசியலா?

ஜெய்பீம் ஏதோ புரட்சி கோட்பாட்டை தூக்கி நிறுதியதாக நினைக்கும் முன் வே. மதிமாறன் அவர்களின் வீடியோ பாருங்கள் பல செய்திகள் கிடைக்கும்.

படம் குறிப்பிட்ட பகுதி அந்த குறிப்பிட்ட மக்களை போலீஸ் அரசு  ஒடுக்குவதையும்  அவை காலம் காலமாக நடைபெற்று வருவதாக காட்டும் படம், அதை தட்டிக் கேட்க்க சந்துரு போன்ற நேர்மையான வக்கீலை காட்டும் பொழுது, உண்மையில் கம்யூனிஸ்ட் கோவிந்தன் புறக்கணிக்க பட்டத்தையும், ஒரு கம்யூனிஸ்ட் போராட்டம், அரசியல் போராட்டமாக இல்லாமல் சட்டவாத போரட்டமாக சுருங்கியது போலவே, ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை (சட்டவாத போராட்டத்தில் பின்புலமாக இருந்தவர்கள்) ஜாதி போராட்டமாக பட குழுவினர் காட்டியதில் இருந்தே அவர்களின் உள் நோக்கம் என்னவென்று புரிந்துகொள்ள முடியாமல் போனது வருத்தமளிக்கிறது!!

வர்க்க போராட்டம் என்பது வர்க்க எதிரிகளுக்கு எதிரானதே இங்கோ   சாதிகளுக்குள்ளே தீ மூட்டி உள்ள மர்மம் என்னே அதே பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி அல்லவோ?
உண்மையில் முக்கிய முரண் இங்கே என்ன?  ஒடுக்கும் அரசு எந்திரமா? அதே அரசால் பாராட்டி சீராட்டி வளர விடும் ஜாதியா?

இன்றும் அந்த மக்களை அதே போல் போலிஸ் துறை கையாளும் போது படத்தை தூக்கி பிடிக்கும் நோக்கம் என்ன?

படம் அப்பட்டமாக மக்கள் பிரச்சினையை கையில் எடுத்தது போல் காட்டிக் கொண்டாலும் அதன் நுண் அரசியல் மக்கள் பிரச்சினையை பேசுவது போல் ஜாதி துவேசத்தை மக்களிடையே விதைத்து அறுவடை செய்துக் கொண்டுள்ளது  அவைதானே அவர்கள் எதிர்பார்த்தது?   அன்பு மணி ராமதாஸ் அறிக்கை சூரியாவின் பதிலளிக்கையை வெறும் மார்கெட்டிங் இல்லாமல் வேறு என்ன?

ஜெய்பீம் சாதித்தவை என்றால், வர்க்க பேதாம் பேச வேண்டிய படம் சாதிகளை முரணாக அதன் குறியீட்டால் காண்பித்து கதை களத்தில் எதிரான அரசு எந்திரத்தை எதிர்த்து போராடாமல் கதை களத்தில் இல்லாத சாதிகளுக்கிடையில் சண்டை மூட்டியது எவ்வளவு திறன் வாய்ந்த செயல் என்பதனை புரிந்துகொள்ள வேண்டாமோ?

மற்றவை நேரத்தை வீண்னடிக்கும் விவாதம்.

https://m.youtube.com/watch?v=l2l1lTRkF4M&feature=youtu.be

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *