ஜாதி வர்க்கம் பற்றிய ஒரு பார்வை
ஜாதி வர்க்கம் பற்றிய ஒரு பார்வை

ஜாதி வர்க்கம் பற்றிய ஒரு பார்வை

இது ஜாதி வர்க்கம் பற்றிய ஒரு பார்வை ————————–தோழர் Subramani அவர்கள் பதிவுஇது ஜாதி வர்க்கம் பற்றிய ஒரு பார்வை ——————————————————————பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் :சேர்ந்த ஒரு தோழரின் கேள்விக்கு எனது பதில் கீழே ” நான் இப்பொது தான் மார்க்சியம் பயின்று வருகிறேன்,” எனக்கு ஒரு சந்தேகம் விளக்கவும் தோழர் இது அவரின் கேள்வி அந்த கேள்வி கீழே கொடுக்கப்பட்டுள்ளது .” பாட்டாளிகளுக்கு இடையில் இருக்கும் சாதி எனும் பகை முரணை ஒழிக்காமல் எப்படி வர்க்க ரீதியில் ஒன்று சேர முடியும் தோழர், இங்கு வர்க்கத்திற்கு ள்ள் சாதியும், சாதிக்குள் வர்க்கமும் பின்னி பிணைத்திருக்கின்றது தானே? எப்படி இரண்டையும் கூறுகளையும் கையாளாமல் ஒன்றை மட்டும் வைத்து வர்க்கவிடுதலை அடைய முடியும்? “தோழரே நீங்கள் தற்போதுதான் மாக்சியம் படிப்பதாக கூறுகின்றீர்கள் நீங்கள் மார்க்சியத்தை படித்து அறிந்து கொள்வதற்கு எனது வாழ்த்துக்கள் .நாம் முதலில் மார்க்சியம் படிக்கும்போது ஆழமான ஒரு கருத்தை நம் மனதில் இருத்த வேண்டும்.அது மிகவும் அடிப்படையான கருத்தாகும் .அந்தக் கருத்து இதுதான் “வாழ்நிலையை தான் சிந்தனையை தீர்மானிக்கிறது சிந்தனை வாழ்நிலையை தீர்மானிக்கவில்லை “அதாவது அகநிலை உணர்வை புற நிலைகள் தான் தீர்மானிக்கிறது. புற நிலையை, அகநிலை உணர்வு தீர்மானிக்கவில்லை என்பதுதான்.அது .இதன் முழு அர்த்தம் .நாம் புற நிலையின் மீது தாக்கத்தை செலுத்த இயலும் .நமது அக நிலையில் ஒரு சிந்தனை தோன்றுகிறது என்று சொன்னால் அது சம்பந்தமான புலப்பாடு கள் வெளி உலகில் இருக்கிறது என்று அர்த்தம்.வெளி உலக புலப் பாடுகளின் ஒட்டுமொத்த மே நமது சிந்தனைக்கு ஊற்றாகும்.என்பதே .சிந்தனை தனியாக இயங்கவில்லை .வெளியுலக புலப்பாடு களின் கூட்டுக் கலவையே சிந்தனை ஆகும்.இதை நாம் முதலில் புரிந்து கொள்ளாமல் அடுத்த கட்டத்திற்கு நாம் செல்வது கடினம்.நீங்கள் ஒரு சந்தேகத்தை எழுப்புகிறீர்கள்.அதாவது “பாட்டாளி களுக்கு இடையில் இருக்கும் சாதி எனும் பகை முரணை ஒழிக்காமல் எப்படி வர்க்க ரீதியில் ஒன்று சேர முடியும் “என்று அருமையான கேள்வியை கேட்டுள்ளீர்கள் .இந்த பகை முரனை ஒழிக்க வேண்டும் என்ற சிந்தனை எப்பொழுது எப்படி வந்தது .இன்றைக்கு இருக்கிற சமுதாயம் நேற்று இதே மாதிரி இருந்தது இல்லை .பல்வேறு வடிவ மாற்றங்கள் அடைந்து வந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியும்.அப்படி வடிவ மாற்றங்கள் அடைந்து இன்றைய முதலாளித்துவ நிலைக்கு இன்று இன்றைய சமுதாயம் வந்து அடைந்திருக்கிறது..முதலாளித்துவ சமுதாயம் வளர்ந்த பிறகு அங்கு புதுவிதமான உழைப்பாளிகள் அதாவது பாட்டாளிகள் உருவாகிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும் .அதற்கு முன் இந்த உழைப்பாளிகள் கிராமங்களில் உழைத்துக் கொண்டு இருந்தவர்கள் பல்வேறு சாதிகளாகப் பிரிந்து இருந்தவர்கள் .அவர்கள்தான் இன்று தொழிற்சாலைகளில் பல்வேறு ஜாதிகளால்ச் சேர்ந்தவராக இருந்தாலும் ஒன்றாக வேலை செய்கிறார்கள் .அவர்களுடைய வேலை நிலைமைகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு ஒன்று சேர்ந்து குரல் கொடுக்கிறார்கள்.அவர்களிடம் பழைய ஜாதிய உணர்வுகள் அங்கு குறைந்து வர்க்க ஒற்றுமை என்பது உருவாகுகிறது .இது அக நிலையால் உருவாகிறதா புறநிலை வளர்ச்சியால் உருவாகிறதா என்ற கேள்வி கேட்டால் புறநிலை சமூக வளர்ச்சியால் தான் உருவாகிறது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் .அப்படி என்றால் வாழ்நிலையை தான் அந்த சிந்தனையை தீர்மானிக்கிறது என்பதையும் ஒத்துக் கொள்வீர்கள் .தொழிலாளர்கள் நிலையில் அங்கு யார் ஜாதியை ஒழித்தார்கள் அவர்கள் வேலை செய்யும் நிலைமையே அந்த உணர்வை அவர்களுக்கு உருவாக்குகிறது .இதனை நாம் உணர்வு பூர்வமாக உணர்ந்து நாம் பிரச்சாரம் செய்வது தவறு இல்லை .இதை நாம் கிராமங்களுக்கும் பரவச் செய்யலாம் .ஆனால் கிராமங்களில் தன்னுடைய பொருளாதார நிலை அப்படியே பழைய வடிவில் இருந்தால் இதை ஏற்றுக் கொள்வது கடினம் தான் .அங்கு நாம் பகுத்தறிவு பூர்வமாக புரிய வைக்க வேண்டிய தேவை இருக்கிறது இதை நாம் மறுக்கவில்லை .ஆனால் ஆரம்ப உணர்வு புறநிலையில் தொழிற்சாலைகளில் உருவாகிறது என்பதை நாம் மறுக்க முடியாது .இந்த புறநிலை மாற்றம்தான் ஜாதியை கடந்த வர்க்க ஒற்றுமையை உருவாக்குகிறது.என்பதை நாம் புரிந்து கொள்கிறோம் .அடுத்தது நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள் .”இங்கு வர்க்கத்திற்கு ள்ள் ஜாதியும் ,ஜாதிக்குள் வர்க்கமும் பின்னி பிணைந்திருக்கிறது தானே ?எப்படி இரண்டையும் கூறுகளையும் கையாளாமல் ஒன்றை மட்டும் வைத்து வர்க்க விடுதலை அடைய முடியும் ?என்றும் கேட்டுள்ளீர்கள் நல்லதுதான் .பல ஜாதிகள் தோற்றம் என்பது வேலைப்பிரிவினை இன் மூலம் வர்க்கத்தின் வடிவமாக ஜாதிகள் தோன்றி உள்ளது என்பதை நாம் அறிவோம்பழைய உற்பத்தி முறை மாறாதவரை இந்த ஜாதிகளும் வளர்ச்சி அடைந்து அதாவது நிலை நின்று வந்திருக்கிறது .உற்பத்தி முறையில் அதாவது சமூக மாற்றத்தால் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பில் இருந்து முதலாளித்துவ சமூக அமைப்பாக சமூகம் வளர்ச்சி அடைவதால் இந்த கெட்டிப்பட்ட ஜாதிய சமூக சிந்தனை என்பது தொழில்துறை பெருக்கத்தால் வர்க்க ஒற்றுமை ஏற்பட்டு அங்கு ஜாதிய தளர்வுகள் ஏற்படுகிறது ,வர்க்கத்திற்கு ள் ஜாதிய உருவாக்கம் என்பது தோன்றிய நிலையிலிருந்து,சமூக வளர்ச்சியில் புதிய நிலைமையில் முதலாளித்துவம் வளர்கையில் புதிய வர்க்கம் முதலாளித்துவ சமூகம் தோன்றும் பொழுது ஜாதிக்குள் ஒரு உடைப்பை ஏற்படுத்துகிறது .இன்று பல்வேறு சாதிகளுக்குள் முதலாளித்துவ வாதிகளும் மூலதனம் மும் வளர்ந்திருக்கிறது இந்த மாற்றம் கருத்து நிலைகளிலும் புதிய கருத்தாக்கங்களை புதிய போக்குகளை உருவாக்கியிருக்கிறது வர்க்கத்திற்கும் ஜாதிகளாய் பிரிந்திருந்தது போய், இன்று ஜாதிக்குள். பல வர்க்கங்கள் தோன்றியிருக்கிறது .இந்த வளர்ச்சியே இனி சாதியாய் ஒன்றிணைத்து இருக்க முடியாது என்ற சூழலை உருவாக்கி இருக்கிறது .இந்த வளர்ச்சி அடுத்தகட்ட சிந்தனையை உருவாக்குகிறது .நாம் வர்க்கமாய் அணி திரள்வதை தவிர எதிர்காலத்தில் நமது வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள உழைக்கும் வர்க்கத்திற்கு வேறு வழி இல்லை என்பதை நிரூபிக்கிறது .ஆகவே இந்தப் பார்வையே ஜாதிய அழுத்தங்களை தகர்த்து வர்க்க ஒற்றுமைக்கு வழிவகுக்கிறது.ஆகவே எதிர்கால வாழ்க்கை என்பது வர்க்க ரீதியான ஒன்றிணைப்பிலேயே எதிர்கால உழைக்கும் மக்களின் வாழ்க்கை இருக்கிறது என்பதை நமக்கு சமூக வளர்ச்சிப் போக்கு நிரூபிக்கிறது.இதற்கு மேல் விளக்கம் தேவை என்றால் எனது தொலைபேசி எண்ணுக்கு வரவும் 9445440165- tha. siva kumar facebook post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *