சமீப காலமாக சாதி மத கலவரங்கள் மேலோங்கி காணப்படுவதும் ஒரு சிலர் சாதியை ஒழித்தால்தான் வர்க்கப் போராட்டம் என்பதும் உண்மையில் இதற்க்கான சாத்திய கூறுகளை தேட எழுதும் பதிவே இவை……ஜாதியின் பொருளாதார கலாச்சார கூறுகள் குறிப்பிடும்பொழுது ஜாதி ஒழிப்பு சாத்தியமாகும். மக்கள் ஜனநாயக புரட்சி என்பது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றும் பொருளாதார அடிப்படையை ஒரு உடனடி போராட்டத்தின் மூலம் மாற்றி அமைத்துவிட முடியும் ஆனால் அப்பொழுதும் ஜாதியின் கருத்துக்கள் ஆதிக்கம் இருந்துகொண்டுதான் இருக்கும்.அக்காலத்தில் ஜாதிகளை ஒழித்து மக்களிடையே சமத்துவத்தை நிலைநாட்ட கூடிய கலாச்சார போராட்டத்தை தொடர புரட்சியின் பயன்கள் நீடித்து நிற்காது இந்த நீண்ட காலப் போராட்டத்தின் விளைவாக ஜாதியின் கலாச்சார ஆதிக்கம் ஒழிக்கப்படும் உடனடி செயல்பாடு மக்கள் ஜனநாயக புரட்சி ஏற்பட்ட ஜாதியை ஒழிக்கிறேன் என்று சொல்லும் பொழுது தீண்டாமை ஒழிப்பு கல்வி இட ஒதுக்கீடு வேலை ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை நாம் ஆதரிக்க வேண்டும் இதை நிரந்தர தீர்வு ஆகாது எனினும் இவற்றின் ஈடுபட்டுள்ள அடிப்படை மக்களை நியாயமான போராட்டத்திற்கு இது பயன்படும். எனவே சேர்த்து எதிர்த்துக்கொண்டு அடிப்படை மக்களின் உடனடியாக சமூக பொருளாதார அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து மக்களை திரட்ட வேண்டும்.சாதியம் இன்று வளர்ந்துள்ள நிலையை பார்ப்போம்.வர்க்க போரட்டத்திற்க்கும் சாதியத்துக்கும் இடையிலான உறவு, வர்க்கம் என்பது சாதியின் மறு வடிவமாக இருந்த நில உடைமைக் காலச் சூழலில் சாதிப் போரட்டத்தின் வெளிப்படு ஆகும்ஆனால் இன்றைய சூழலில் சற்று சிக்கலான பொருளாதார ஏற்ற தாழ்வுகளால் சாதிக்குள்ளே வர்க்கங்களாக மக்கள் முரண்பட்டு நிற்க்கும் பொழுது, ஜாதிகளை ஒழித்தாலே வர்க்கப் போராட்டம் நடத்த இயலும் என்ற தத்துவம் சாதியையும் வர்க்கத்தையும் தனித்து பார்ப்பதாகும் ஒரே சாதிக்குள்ளேயே காணப்படும் பகை வர்க்கங்கள் தம்முள் மோதிக்கொள்ளும் சூழலும் கண்கூடாக காணலாம், அடிப்படை வர்க்கத்தினர் பெரும்பான்மையாக இருக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகள் மேல்நிலை சாதியில் இருப்பவர்களுடன் தினம்நடைப்பெறும்மோதல் தவிர்க்க முடியாத நிகழ்வாக உள்ளது.நிலவுடமை சூழல் என்னும் நிலையைக் கொண்டு இருக்கும் இடங்களில் நிலப்பிரபுக்களின் அரசியல் அதிகாரம் இருக்கமாக உள்ளது ஏதேனும் ஒரு ஓட்டுக் கட்சி வாக்குச் சீட்டு வங்கி ஆகவே கிராமங்கள் உள்ளன எந்த ஒரு ஓட்டுக் கட்சியும் பெரும்பான்மை ஜாதியை கணக்கிலெடுக்காமல் வேட்பாளரை நிறுத்துவது இல்லை எந்தக் கட்சிக்கும் வெற்றி அலை வீசிய போதிலும் இந்த அம்சம் அவசியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படுகின்றது, தனித்தனியாக தோன்றிய ஜாதி சங்கங்கள் இறுதி நிலையில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சிகள் இணைந்து விட்டனர்அந்தந்தப் பகுதியில் பெரும்பான்மையாக கொண்ட அமைப்புகள் அந்தந்த பகுதியில் செல்வாக்கான ஓட்டுக்கட்சிகள் ஆக விளங்குகின்றன,இறுதியில் அந்தந்த சாதிகளில் உள்ள மேல் வர்க்கத்தினர் அந்த சாதிகளில் உள்ள அடி தட்டு வர்க்கத்தினரை அதற்கான அரசியல் அதிகார உரிமையை இந்த சாதி அமைப்புகள் வழங்குகின்றன,ஜாதி அமைப்பு என்பது முதலாளித்துவ முந்தைய உற்பத்திக்கான வடிவம் ஆகும் ஆனால் ஒரு தேசிய இனம் தன்னைத் தேசமாக உருவாக்கிக்கொள்ளும் காலத்தில் முதலாளிய உற்பத்தி முறையின் துணையுடன் தன்னை வளர்த்துக் கொள்ளும்,எனவே அதற்கு முன் தேசியத்துக்குள் காணப்பட்ட ஜாதிப் பிரிவினைகள் முதலாளித்துவ காலகட்டத்தில் தேசிஇன வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் எனவே தேசிய வளர்ச்சியை உந்திச் செல்லும் நோக்கம் கொண்ட இயக்கங்கள் ஜாதி அமைப்புகள் எதிர்க்க வேண்டிய தேவை உள்ளது இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவையாகும், பெரியாரின் தொடக்ககால வெற்றி இதைக் காட்டுகின்றது. தேசிய இனத்துக்கும் தலைமை தாங்கும் சக்திகள் சாதியுடன் தத்துவ நிலையிலும் சாதி அமைப்புகளுடன் நடைமுறை அளவிலும் சமரசம் கொள்ளும் பொழுது தோல்வி அடைந்தன். சாதியின் கலாச்சார ஆதிக்கத்தை மட்டுமே நினைவில் கொண்டு சாதியத்தை வெறும் பார்ப்பனியமாக மட்டுமே ஏற்றுக் கொண்ட இயக்கங்களின் சாதி எதிர்ப்பு வெறும் பார்ப்பன எதிர்ப்பு என்றும் பார்ப்பனரல்லாத உயர்சாதியினர் ஆதரவு என்றும் சுருங்கி போயிற்று.அதன் பின் தேசிய இனத்தில் உள்ள அனைத்து ஜாதிகளும் பிரதிநிதித்துவம் இல்லாமல் போயிற்று.படித்தோருக்கு வேலை ஒதுக்கீடு படிப்பதற்கான இட ஒதுக்கீடு என்பது சாதி அமைப்புகளின் கோரிக்கை 1920 காலகட்டத்தில் இந்த கோரிக்கைகளின் தன்மைக்கும் இன்றைய காலகட்டத்தில் இவற்றில் தன்மைக்கும் இடையிலான வேறுபாட்டை காணவேண்டும். வேலை ஒதுக்கீடு என்பது அன்று முதல் இன்று வரை ஆளும் வர்க்கக் கண்ணோட்டத்தில் காணலாம். வேலை ஒதுக்கீடு என்பது ஏமாற்று வேலையே என்பதும் உடனடி கோரிக்கை என்பதும் சரியே எனினும் அவற்றை பிற்பட்ட தாழ்த்தப்பட்ட சாதியில் போராட்டங்கள் என்ன நிலையில் உள்ளன?இப்படி ஜாதி அமைப்புகளில் ஆட்பட்டு உள்ள அடிப்படை உழைக்கும் மக்களின் பிரிவினர்கள் வர்க்க உணர்வு ஊட்டப்படும் போக்கில் இத்தகைய போராட்டங்களில் தன்னை வர்க்கப் போராட்டத்துக்கு உரிய வளர்த்தெடுக்கப்பட வேண்டாமோ?மேலோட்டமாக எழுதியுள்ளேன் தோழர்களே உங்களின் விவாதித்தின் அடிப்ப்டையில் தொடருவேன்….
9You, Vchinnadurai Durai, Arun Kumar A and 6 others4 Comments7 SharesShare