ஜாதியம்
ஜாதியம்

ஜாதியம்

ஜாதியம் என்பது அடிப்படையில் மக்களை பிளவுப் படுத்தி ஒடுக்கும் செயற்பாடுகளுக்கான ஒரு கருத்தியல். அதேவேளை பிளவுண்ட குழுக்கள் வேற்றுமைக் கூறுகளைப் பேணியபடி ஒரே சமூக அமைப்பாகச் சேர்ந்து இயங்க வகை செய்வதும் அந்தக் கருத்தியலுக்கான அடிப்படைப் பண்பாகும் .
சமூக ஏற்றத்தாழ்வுகள் ஒரு சமூகத்தின் உற்பத்தி உறவுகளின் அடிப்படையிலே பெரிதும் முடிவாகின்றன. எனினும் பிறப்பால் மனிதரை வேறுபடுத்தி அந்த வேறுபாடுகளுக்குள் ஏற்றத்தாழ்வுகளை கொண்ட உற்பத்தி சாராத சமூக ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அவற்றின் தோற்றுவாய்களை அடிமைச் சமுதாய நிலவுடைமை சமுதாய உற்பத்தி உறவுகளின் தொடக்கமே….
பிளவுபடுத்தலை முறியடித்து அனைத்து மக்களையும் ஒன்று படுத்துவது சாதியத்தை தவிர்ப்பதன் முன் நிபந்தனையும் முடிவான இலட்யமும் ஆகும். சாதிய உணர்வுகளை விட்டொழிந்து புத்துலகம் படைக்கும் உணர்வுடன் அனைத்து ஜாதியினரும் ஒன்றுபட்டு போராடுவது சாத்தியமானதா? சாதியை பேணும் சாதிக்கு எதிராக போராட வேண்டும் என்கிற வகையில் ஆதிக்க சாதி எதுவாயினும் எதிரி நிலைக்குரியதாக இருக்குமல்லவா? அத்தகைய ஆதிக்க ஜாதிக்கு எதிராக தானே ஏனைய ஜாதிகளை ஐய்கியப்படுத்தி போராட முடியும்!!! .
ஏற்றத்தாழ்வன சமூக அமைப்பில் சுருண்டுவோர்க்கு உரியதாக உள்ள அதிகாரத்தை பேணும் பொருட்டு வடிவமைக்கப்பட்டது ஜாதியம். சாதித் தகர்பில் அதிகார வர்க்கமாக பல்வேறு ஜாதிகளிலிருந்து பிரதிநிதிகள் இருப்பது போல ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களும் அனைத்து ஜாதிகளும் உள்ளனர் அதிகாரத்துவ சமூக அமைப்பு பேணும் ஜாதியத்தை தகர்க்கும் பொருட்டு வர்க்க அடிப்படையிலான பல்வேறு அரசியல் காரணிகள் ஒடுக்கு முறைக்கு ஆட் படுகிற அனைத்து ஜாதிகளையும் சேர்ந்த மக்களை ஓரணியில் ஒன்றிணைத்து போராட வேண்டியுள்ளது.
சாதியின் வளர்ச்சியை பற்றி பேசுவதை பின் பார்ப்போம் …
நிலவுடைமை சமூகத்தில் உறுதியடைந்த சாதியத்தை மனுதர்மம் பகவத் கீதை சங்கரர் அத்வைதம் ஆகியன பிராமணர்களுக்கான ஆன்மீகத் தலைமையை வலுவடையச் செய்ததோடு, சாதிகள் ஒவ்வொன்றும் தத்தமது தொழில்களை மாறுபாடின்றிச் செய்தொழுகும் வாழ்நிலைக்கு தெய்வ அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *