ஜம்மு- காஷ்மீர் வன்முறையும், காஷ்மீர் பண்டிட்களை பற்றிய அறிதலும் காஷ்மீர் ராணுவத்தின் கொலையாட்சியும்! (13/07/2016)
இந்த கட்டுரையை நான் புரிதலுக்காக மாற்றி எழுதியுள்ளேன், இதை JNU மாணவியின் உறையாடல் வினவில் வெளியானதே, J & K பற்றி அற்பதனமாக தேசபக்த்த காவிகள் கூறும் காரணங்களை திறைகிழிக்க இவை பயன்படும் என்பதனால் என் பாணியில் பதிவு செய்கிறேன் தவறை சுட்டிகாட்டலாம்.
காஷ்மீர் ஆங்கிலேயனால் வெல்லபட முடியாத பகுதி என்பதனுடன் ஆங்கிலேய இராணுவம் அங்கே செல்லவில்லை, பிறித்தாலும் சூழ்சியால் இந்திய-பாகிஸ்தனுகிடையே தீரா பகையையும் அதேபோல் அப்பாவி மக்களை பகடைகளாகவும், தீவிரவாதத்தின் பெயராலும் மதத்தின் பெயராலும் அம்மக்கள் தினம் சந்திக்கும் இன்னல்கள் சாதரணமானவையல்ல! இந்திய பாகிஸ்தானின் பலியாடய் காஷ்மீர் மக்கள்.
RSS கயவர்கள் சொல்வதுபோல் காஷ்மீர் பண்டிட்களை விரட்டியது யார்?
“பண்டிட்டுகள் காஷ்மீரை விட்டு வெளியேறியது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது தான்…ஆனால், நீங்கள் கதையின் ஒரு பக்கத்தை மட்டுமே வாசித்திருக்கிறீர்கள். மறுபக்கத்தையும் பாருங்கள்… பண்டிட்டுகள் வாழ்ந்த பகுதிகளில் திடீரென முஜாஹிதின்கள் பெயரில் சில நோட்டீசுகள் தோன்றியிருக்கின்றன. அதில் பண்டிட்டுகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. உடனடியா இந்திய இராணுவம் அவர்களை பாதுகாப்பாக இராணுவ ட்ரக்குகளில் ஏற்றி வெளியேற்றியது .. ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு ஏதாவது பாதுகாப்புப் பிரச்சினை என்றால் அரசு என்ன செய்ய வேண்டும்? அவர்களைப் பாதுகாக்க வேண்டுமா வெளியேற்ற வேண்டுமா?” இதை என்னவென்று சொல்ல? இந்துகளை காக்கவா அல்லது அரசியல் செய்யவா? இன்றும் காஷ்மீர் பண்டிட்களை புணரமைக்காமல் அரசியல் தேவைக்காக காவிகள் கொம்பு சீவும் தர்மம் என்னவோ? அல்லது சில இராணுவத்தினர் கூறுவது போல், “எதற்க்கு காஷ்மீர் முஸ்லிம்களை விட்டுவைக்க வேண்டும் ஒரு பக்கமிருந்து கொன்றொழித்தால் மொத்த காஷ்மீர் நம் கைக்கு வந்துவிடும்” இங்கேதான் இந்து என்ற ஒருவரும் இல்லையே அதனால் யாரையும் கொல்லாம் எல்லோரும் தீவிரவாதிகளே ( இந்திபடம் “சௌரியா” காஷ்மீர் அடிப்படையில் எடுக்கபட்டபடம்) RSS ம் அன்றைய பல கவர்னர்கள் இதனை நிறைவேற்றவே நினைத்தனர் நினைத்து கொண்டுள்ளனர்.
காஷ்மீர் பண்டிட்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்!
“ஷேக் அப்துல்லா நிலச்சீர்திருத்தத்தை அமல் செய்வதற்கு முன் பெரும்பாலான நிலங்கள் காஷ்மீரில் சிறுபான்மையினராக இருந்த பண்டிட்டுகளிடம் தான் இருந்தது. பெரும் பாண்மையான முஸ்லீம் மக்கள் அவர்களிடம் கூலிகளாக இருந்தனர். நிலம் பகிர்ந்து கொடுக்கப்பட்ட பின்பு அவர்களே கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் துவங்கியிருந்தனர். அதற்கும் முன் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் டோக்ரா அரசின் காலத்தில் பண்டிட்டுகள் தான் பெரும்பான்மையான அரசு வேலைகளில் இருந்தார்கள்.. முஸ்லீம் மக்கள் படிப்பறிவற்றவர்களாக.. முஸ்லீம் மக்களை அவர்கள் தீண்டத்தகாதவர்களாகவே நடத்தினர். முஸ்லீம் மக்கள் சமூகங்களுக்குள் கலப்புத் திருமணம் போன்ற எந்த சம்பந்தங்களும் ஏற்பட்டதில்லை… முஸ்லீம் மக்கள் கிட்டத்தட்ட இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்பட்டனர். சொல்லப் போனால் பண்டிட்டுகள் வெளியேறியது தான் முஸ்லீம் மக்களுக்கு இப்போது ஜே.என்.யுவில் சேர்ந்து படிக்கவும்,வெளியுலகம் காணவும் முடிந்தது”
“அவர்கள் அரசு பதவிகளில் இருப்பதால் முஸ்லீம் மக்களை கிள்ளுக்கீரைகளாகவே மதிப்தார்கள்.. உதாரணமாக பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு முஸ்லீம் மக்கள் நிலத்தைப் பதிவு செய்யச் செல்வதாய் வைத்துக் கொள்ளுங்கள்… ஒரு பண்டிட் என்ன செய்வார் என்றால்.. பத்திரத்தின் வாக்கியங்களை வேண்டுமென்றே தவறாக பொருள் வரும் படி எழுதி விடுவார்… பிறப்பு இறப்பு சான்றிதழ் தரும் அதிகாரி என்றால் குலாம் முகமது என்கிற பெயரை வேண்டுமென்றே கும்மு என்று எழுதி விடுவார்.. இதையெல்லாம் சரிசெய்ய முஸ்லீம் மக்கள் ஆண்டுக் கணக்கில் அரசாங்க அலுவலங்களின் படிகளில் ஏறி இறங்க வேண்டும்… இந்த மாதிரி நிறைய சொல்லலாம்.. ஒன்று சொல்லுங்கள், பண்டிட்டுகள் உள்நாட்டு அகதிகளாக இருக்கிறார்கள் என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல் நீலிக்கண்ணீர் வடிக்கிறதே… எங்காவது ஒரு பண்டிட் பிச்சையெடுப்பதையோ சோற்றுக்கே சிரமப்படுவதையோ காட்டச் சொல்லுங்கள் பார்க்கலாம்..”
“இருபதாம் நூற்றாண்டுத் துவக்கத்தின் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களின் கதையைப் போன்றதுதானோ இது?”( இங்கே நான் இதனை வர்க்க அடிப்படையில் அணுக முடியாமைக்கு வருந்துகிறேன்)
”உண்மை தான்.. சமீபத்தில் நான் ஒரு கட்டுரை வாசித்தேன். தமிழ்நாட்டுப் பார்ப்பனர் ஒருவர் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை.. அவர்களை திராவிட இயக்கம் தான் திட்டமிட்டு வெளியே விரட்டியடித்ததைப் போல் எழுதியிருந்தார்..”
ஜம்மு காஷ்மீரின் பிற பகுதிகளில் உள்ள மக்கள் சுதந்திர கோரிக்கை குறித்து என்ன கருதுகிறார்கள்?”
”ஜம்மு மற்றும் லடாக் பகுதி மக்கள் விடுதலையை ஆதரிக்கவில்லை. விடுதலைக்கான கோரிக்கை காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டும் தான் உயிர்ப்போடு இருக்கிறது. மக்கள் பிரிவுகளிடையே முறையான ஒரு உரையாடலை முன்னெடுக்க போராளிகள் தவறி விட்டார்கள் என்றே கருதுகிறேன். காஷ்மீர் விடுதலை இயக்கத்தின் மீது சுமத்தப்பட்டுள்ள இசுலாமிய மத அடையாளம் மற்றவர்களை நெருங்கவிடாமல் செய்கிறது”
”மத அடையாளம் பற்றிக் குறிப்பிட்டீர்கள்… காஷ்மீரின் பக்கத்தில் முசுலீம்களிடையே வகாபிய போக்கு தற்போது செல்வாக்கோடு வளர்ந்து வருகிறது…”
”சரியான கேடுகெட்டவர்கள் இந்த வகாபிகள்.. இப்போது காஷ்மீரில் தர்காக்களை இடிக்க வேண்டும் அது இது என்று உளறிக் கொண்டு திரிகிறார்கள். வகாபியகள் இந்திய அரசின் உளவாளிகளாக இருப்பார்கள் என்று எனக்கு நீண்ட நாட்களாக சந்தேகம் உள்ளது”
வரலாற்று ரீதியில் காஷ்மீரில் இசுலாம் அறிமுகமானதே சூஃபி ஞானிகளின் வழியே தான். அது மிகவும் சகிப்புத்தன்மை கொண்டது என்பதை நான் சொல்லத் தேவையில்லை என்று கருதுகிறேன்… இப்போது வகாபியம் என்ன செய்கிறதென்றால் காஷ்மீரின் சுதந்திர போராட்டத்திற்கு இனம் கடந்து மத சாயம் பூசுகிறது. இசுலாமிய வெறியையும் பாகிஸ்தானையும் தாலிபானையும் முடிச்சுப் போடுவதும் அதன் தொடர்ச்சியாக காஷ்மீரியின் சுதந்திரப் போராட்டத்தை பயங்கரவாதமாக கட்டமைத்துக் காட்டுவதும் இந்திய ஆளும் வர்க்கத்துக்கு எளிதானது தானே? அந்த வகையில் இவர்கள் மறைமுகமாக இந்திய ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்கிறார்கள்”
“சமீபத்தில் ஒரு தர்ஹா இடிக்கப்பட்டது… எல்லாருக்கும் அதை இடித்த வஹாபிய கும்பல் யாரென்பது நன்றாகவே தெரியும்.. இந்தியாவுக்கும் தெரியும் அங்கே தான் இந்தியாவுக்குத் தெரியாமல் ஒரு அணுவும் அசையாதே.. ஆனால், ஒருவர் மீது கூட போலீசு நடவடிக்கை எடுக்கவில்லை. தர்ஹா இடிக்கப்பட்ட பின் மக்களிடையே இரண்டு பிரிவினரும் அடித்துக் கொண்டனர். இந்த சண்டை சச்சரவுகளின் போக்கில் காஷ்மீரின் சுயநிர்ணய உரிமை குறித்த கேள்வியே மறந்து போனது. இந்திய ஆளும் வர்க்கம் எதிர்பார்ப்பதும் இதைத் தானே?”
பி.டி.பியின் அரசியல் தற்கொலை பி.ஜே.பின் உடன் கூட்டணி!
”உண்மை தான்.. மோடியின் நாடாளுமன்ற பிரச்சாரத்திற்கு ஜம்மு ஏமாந்து போனது…. அதே நேரம் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் உமர் அப்துல்லா கெட்ட பெயர் வாங்கியிருந்தார்.. இதெல்லாம் தேர்தலில் அந்தக் கூட்டணிக்கு சாதகமாகப் போய் விட்டது.. ஆனால் இந்தக் கூட்டணி பி.டி.பியின் அரசியல் தற்கொலை என்பதை மட்டும் என்னால் உறுதியாக சொல்ல முடியும்”
“ஒரு சிறிய உதாரணம் மட்டும் சொல்கிறேன்.. சாதாரணமாக இராணுவத்தால் கொல்லப்படும் போராளி ஒருவரின் சவ ஊர்வலத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் கூடுவார்கள்.. ஆனால், சமீபத்தில் இறந்து போன முப்தி முகமதுவின் சாவுக்கு சில ஆயிரம் மக்கள் கூட வரவில்லை.. ஒரு அனாதைத் தெருநாயைப் போல முப்தியை குழியில் இட்டு மூடினார்கள்..”
உழைக்கும் மக்களை பிறித்தாளும் உத்தியே ஆளும் கும்பலின் சூழ்ச்சி, இங்கே மதத்தை முன்னிருத்தும் எல்லாவகை போராட்டமும் மக்களுக்கானது அல்ல அவை ஆளும் கும்பலுக்கு சேவை செய்வதே என்பது உறுதி! ஒன்றுபட்ட ஜம்மு-காஷ்மீரின் சுய நிர்ணயத்துடன் கூடிய விடுதலை மட்டுமே தீர்வாகும். பாகிஸ்தானுடனோ இந்தியாவுடனோ நிர்பந்ததினால் இருப்பது சுதந்திரம் ஆகாது!