சோவியத் ஆட்சி உழைக்கும் மக்களின் ஆட்சி. அது ஏற்பட்ட முதல் மாதங்களிலேயே பெண்களைப் பற்றிய சட்டங்களில் மிகவும் திட்டவட்டமான புரட்சியை ஏற்படுத்தியது. பெண்களைக் கீழான நிலையில் வைத்த பழைய சட்டங்களில் எதுவும் இன்றைய சோவியத் குடியரசில் கிடை யாது. பெண்களின் பலவீனமான நிலைமையைப் பயன் படுத்திக் கொண்டு அவர்களைச் சமத்துவம் இல்லாத நிலைமை யில் – பெரும்பாலும் அவமானகரமான நிலைமையில் கூட – வைத்த சட்டங்களைப் பற்றி, அதாவது விவாகரத்துச் சட்டங்களையும் திருமணமாகாமல் பெற்ற குழந்தைகளைப் பற்றிய சட்டங்களையும் குழந்தையை வளர்ப்பதற்குத் தகப் பனார் பணம் கொடுக்க வேண்டும் என்று கோருவதற்குப் பெண்ணின் உரிமை சம்பந்தமான சட்டங்களையுமே நான் இங்கே பிரத்யேகமாகக் குறிப்பிடுகிறேன்.முதலாளித்துவச் சட்டங்கள், குறிப்பாக இந்தத் துறையில் தான் பெண்களின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை அவமானப்படுத்தி அவர்களுக்குக் கீழான நிலையைக் கொடுத்தன; மிக அதிகமாக வளர்ச்சி யடைந்த நாடுகளில் கூட இது தான் நிலை என்பதை நாம் இங்கே கூற வேண்டும். சோவியத் ஆட்சி, குறிப்பாக இந்தத் துறையில் தான், உழைக்கும் மக்கள் தாங்கிக் கொள்ள முடி யாதிருந்த பழைய, அநீதியான சட்டங்களில் எதுவும் இல்லாதபடித் துடைத்துவிட்டது. பெண்கள் முழு சமத்து வத்தை அனுபவிக்கும் நாடு, குறிப்பாக அன்றாடக் குடும்ப வாழ்க்கையில் ஏற்படக் கூடிய அவமானகரமான நிலைமை யில் பெண்களை வைக்காத நாடு உலகத்தில் சோவியத் ருஷ் யாவைத் தவிர வேறு எந்த நாடும் இல்லை என்பதை இன்று எத்தகைய மிகைப்படுத்தலும் இன்றி நாம் பெருமையோடு கூற முடியும். இது நமது முதல் கடமையாகவும் மிகவும் முக்கியமான கடமைகளில் ஒன்றாகவும் இருந்தது.போல்ஷிவிக்குகளுக்கு விரோதமான கட்சிகளோடு தொடர்பு கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உங்களுக்கு ஏற்பட் டால், கல்ச்சாக் அல்லது தெனீக்கின்* ஆக்கிரமித்துள்ள பிரதேசங்களில் ருஷ்ய மொழியில் வெளியிடப்படுகிற தின சரிப் பத்திரிக்கைகள் உங்களுக்குக் கிடைத்தால் அல்லது இந்தப் பத்திரிக்கைகளில் எழுதப்படுகின்ற கருத்துக்களை ஏற்றுக் கொள்பவர்களோடு நீங்கள் பேசுமாறு நேர்ந்தால் சோவியத் ஆட்சி ஜன நாயகத்தை அழித்துவிட்டது என்ற குற்றச்சாட்டை அவர்கள் அடிக்கடி சொல்வதை நீங்கள் கேட்கலாம்.சோவியத் ஆட்சியின், போல்ஷிவிக்குகள், கம்யூனிஸ்டு கள் மற்றும் சோவியத் ஆட்சியின் ஆதரவாளர்களின் பிரதி நிதிகளாகிய நாங்கள் ஜனநாயகத்தை அழித்துவிட்டோம் என்று அடிக்கடி குற்றம் சாட்டுகிறார்கள்; சோவியத் ஆட்சி அரசியல் நிர்ணய சபையைக் கலைத்து விட்டதை அதற்கு ஆதாரமாகவும் காட்டுகிறார்கள். இந்தக் குற்றச் சாட்டுக்கு நாம் வழக்கமாகத் தருகின்ற பதில் இதுதான் : நம்முடைய நாட்டில் இன்னும் தனி உடைமை இருந்த பொழுது, மக் களுக்கிடையே சமத்துவம் இல்லாதிருந்த பொழுது, சொந்த மூலதனத்தை வைத்திருந்தவர் எஜமானராகவும் மற்றவர் கள் அவரிடம் வேலை செய்கின்ற கூலி அடிமைகளாகவும் இருந்த பொழுது ஏற்பட்ட ஜனநாயகமும் அரசியல் நிர்ணய சபையும் – அந்த ஜனநாயகத்துக்கு நாம் எந்த மதிப்பும் கொடுக்கவில்லை. அத்தகைய ஜனநாயகம் மிகவும் அதிகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் கூட அடிமைத் தனத்தை மறைவாக வைத்துக் கொண்டிருந்தது. ஜன நாயகம் உழைக்கின்ற, ஒடுக்கப்படும் மக்களின் நிலைமையில் அபிவிருத்தியை ஏற்படுத்துமானால் அந்த அளவுக்கு மட்டுமே சோஷலிஸ்டுகளாகிய நாம் அதை ஆதரிக்கின்றோம். மனிதனை மனிதன் சுரண்டுவதை-அதன் ஒவ்வொரு வடி வத்தையும் – எதிர்த்துப் போராடுவதை சோஷலிசம் உலக முழுவதிலும் தன்னுடைய கடமையாகக் கொண்டிருக்கிறது. சுரண்டப்படுபவர்களுக்கு, உரிமைகள் மறுக்கப்பட்டவர் களுக்கு உதவுகின்ற ஜன நாயகத்துக்கே நாம் உண்மையான மதிப்பைத் தருகிறோம். உழைக்காமல் இருப்பவர்களுக்கு வாக்குரிமை ரத்துச் செய்யப்பட்டால் அது மக்களுக்கிடையே உண்மையான சமத்துவமாகும். யார் உழைக்கவில்லையோ அவர்களுக்கு உணவு கிடையாது.இந்தக் குற்றச் சாட்டுகளுக்கு பதில் சொல்லும் பொழுது பிரச்சினையை இப்படிப் பாருங்கள் என்று நாம் சொல்கிறோம்: எல்லா நாடுகளிலும் ஜனநாயகம் எப்படி அமுல் நடத்தப் படுகிறது? எல்லா ஜன நாயகக் குடியரசுகளிலும் சமத்துவம் பிரகடனம் செய்யப்படுகிறது என்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் சிவில் சட்டங்களிலும் பெண்களின் உரிமைகளைப் பற்றிய சட்டங்களிலும் – குடும்பம், விவாகரத்து ஆகியவை பற்றிய சட்டங்களில் – ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் சமத்துவம் இல்லாமல் அவமதிக்கப்படுவதைப் பார்க்கிறோம். இது, குறிப்பாக ஒடுக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை, ஜன நாயகத்தை மீறுவது என்று நாம் சொல்கிறோம். சோவியத் ஆட்சி வேறு எந்த ஆட்சியைக் காட்டிலும், மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளைக் காட்டிலும் மிகவும் அதிகமான அளவுக்கு ஜன நாயகத்தை அமுல்படுத்தியிருக் கிறது; ஏனென்றால் பெண்களுக்குக் கீழ் நிலையைக் கொடுக் கும் சுவடுகள் கூட அதன் சட்டங்களில் விட்டு வைக்கப்பட வில்லை. சோவியத் அரசு ஏற்பட்ட முதல் மாதங்களில் பெண் களுக்காகச் செய்திருப்பதில் பாதியளவு கூட வேறு எந்த அரசும் வேறு எந்தச் சட்டமும் எந்தக் காலத்திலும் செய்ய வில்லை என்று நான் மறுபடியும் சொல்கிறேன்.சட்டங்கள் மட்டும் போதுமானவை அல்ல என்பது உண்மையே; வெறும் உத்தரவுகளைப் போடுவதோடு நாங் கள் ஒரு போதும் திருப்தியடைவதில்லை. எனினும் சட்டத் துறையைப் பொறுத்தவரையிலும், பெண்களுக்கு சமத்துவ உரிமைகளைக் கொடுப்பதற்கு நாங்கள் செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் செய்துவிட்டோம். இதைப் பற்றிப் பெரு மைப்படுவதற்கு நமக்கு எல்லா உரிமையுமுண்டு. மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளோடு ஒப்பிடுகின்றபொழுது இன்று சோவியத் ருஷ்யாவில் பெண்களின் நிலை இலட்சிய வடி வத்தை அடைந்து விட்டது. எனினும் இது ஒரு ஆரம்பம் மட்டுமே என்று நாம் சொல்கிறோம்.வீட்டில் செய்கின்ற வேலையின் காரணமாகப் பெண்கள் இன்னும் கடினமான நிலையில் தான் இருக்கிறார்கள். பெண் களுக்கு முழு விடுதலை கொடுத்து ஆண்களுக்குச் சமமாக அவர் களை ஆக்க வேண்டுமென்றால் தேசியப் பொருளாதாரம் சமூக மயமாக்கப்படுவதும் பொதுவான பயனுள்ள உழைப் பில் பெண்கள் ஈடுபடுவதும் அவசியம். அப்பொழுது தான் பெண்கள் ஆண்களுக்குச் சமமான நிலையைப் பெறுவார்கள்.இப்படிச் சொல்லும் பொழுது உழைப்பின் உற்பத்தித் திறன், உழைப்பின் அளவும், நாளொன்றுக்கு வேலை செய்யும் நேரம், உழைப்பு நிலைமைகள் இன்னும் இதரவற்றிலும் பெண்களை ஆண்களுக்குச் சமமான நிலையில் வைக்கப் போவ தாக நாம் சொல்லவில்லை. குடும்பத்தில் பெண்களுக்கு இருக் கின்ற நிலைமை காரணமாக (இந்த நிலை ஆண்களுக்கு இல்லை), அவள் ஒடுக்கப்படக் கூடாது என்பதையே நாம் குறிப்பிடு கிறோம். பெண்கள் முழு உரிமைகளைக் கொண்டிருக்கும் பொழுது கூட அவர்கள் உண்மையில் இன்னும் அடக்கி வைக்கப்பட்டவர்களாகத் தான் இருக்கிறார்கள். ஏனென்றால் எல்லா வீட்டு வேலையுமே அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. வீட்டு வேலை என்பது பெரும்பாலுமே மிக அதிகமான அள வுக்குப் பயனற்றதாக, காட்டுத்தனமான தாக இருக்கிறது; ஒரு பெண் செய்யக் கூடிய வேலைகளிலேயே மிகவும் கடின மான தாக, மிக அதிகமான அளவுக்குச் சிறு தரமானதாக இருக்கிறது; ஒரு பெண்ணின் வளர்ச்சியை எவ்விதத்திலா வது ஊக்குவிக்கக்கூடிய ஒரு அம்சம் கூட அதில் இல்லை.சோஷலிஸ்ட் இலட்சியத்தைப் பின்பற்றி சோஷலிசத் தைப் பரிபூரணமாக அமுலாக்குவதற்கு நாம் போராட விரும்புகிறோம். இங்கே பெண்கள் உழைப்பதற்குரிய விரி வான துறை ஏற்படுகிறது. சோஷலிசத்தை நிர்மாணிப்பதற் காக தளத்தை சுத்தப்படுத்துகின்ற தீவிரமான தயாரிப்பு களில் இப்பொழுது நாம் ஈடுபட்டிருக்கின்றோம், ஆனால் பெண்களுக்கு முழுமையான சமத்துவத்தைக் கொடுத்து சிறு தரமான, வீணான, பயனற்ற உழைப்பிலிருந்து விடுதலையடைந்த பெண்களோடு சேர்ந்து நாம் இந்தப் புதிய வேலையை எடுத்துக் கொண்டால் தான் சோஷலிச நிர்மாணம் ஆரம்பமாகும். இந்த வேலையை முடிக்க நமக்குப் பலப் பல வருடங்கள் தேவைப்படும்.இந்த வேலையில் அதிவேகமான விளைவுகளைப் பார்க்க முடியாது; பிரமிக்கத்தக்க விளைவும் ஏற்படாது.பெண்களைக் குடும்ப வேலைகளிலிருந்து விடுவிக்கக் கூடிய குழந்தை வளர்ப்பு நிலையங்கள், உணவுச் சாலைகள், முன் மாதிரியான அமைப்புகள் ஆகியவற்றை நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த ஸ்தாபனங்களை அமைக்கின்ற வேலையும் பிரதானமாக பெண்களுக்கே கொடுக்கப்படும். குடும்ப அடிமைத்தனம் என்ற நிலையிலிருந்து பெண்களை விடுவிக்கக் கூடிய ஸ்தாபனங்கள் இன்றைய ருஷ்யாவில் மிகச் சிலவே இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். இவை மிகச் சொற்பமே. சோவியத் ருஷ்யாவில் இன்று நிலவுகின்ற நிலைமைகள் – யுத்த நிலைமை, உணவு நிலைமை ஆகியவற்றைப் பற்றித் தோழர்கள் எல்லா விவரங் களையும் உங்களிடம் முன்பே கூறியிருக்கிறார்கள் – இந்த வேலையைக் கெடுக்கின்றன. எனினும் குடும்ப அடிமைகள் என்ற நிலைமையிலிருந்து பெண்களை விடுவிக்கின்ற இத்தகைய ஸ்தாபனங்கள் ஏதாவதொரு விதத்தில் எங்காவது சாத்திய மாக இருந்தால் அங்கே அவை ஏற்படுத்தப்படுகின்றன என்பதைக் கூற வேண்டும்.தொழிலாளர்களுடைய விடுதலையைத் தொழிலாளர் களே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் சொல் கிறோம்; அதே விதத்தில் உழைக்கும் பெண்களின் விடு தலையும் உழைக்கும் பெண்களாலேயே ஏற்பட வேண்டும். இத்தகைய ஸ்தாபனங்களின் வளர்ச்சிக்கு உழைக்கும் பெண்களே பாடுபட வேண்டும். இத்தகைய நடவடிக்கை பழைய, முத லாளித்துவ சமூகத்தில் அவர்களுடைய நிலையோடு ஒப்பிடு கின்றபொழுது ஒரு முழுமையான மாற்றத்தை அவர் களுடைய நிலையில் ஏற்படுத்தும்.பழைய, முதலாளித்துவ ஆட்சி முறையில் அரசியலில் சுறுசுறுப்பாகப் பங்கெடுக்க வேண்டுமென்றால் அதற்கு விசேஷமான பயிற்சி தேவைப்பட்டது. எனவே மிகவும் வளர்ச்சியடைந்த, சுதந்திரமான முதலாளித்துவ நாடுகளில் கூட பெண்கள் அரசியலில் அற்பமான பாத்திரத்தையே வகித்தனர். ஒவ்வொரு உழைக்கும் பெண்ணும் அரசியலில் பங்கெடுத்துக் கொள்வதைச் சாத்தியமாக்குவது நம்முடைய கடமை. நிலத்திலும் தொழிற்சாலைகளிலும் தனியுடைமை ஒழிக்கப்பட்ட காலத்திலிருந்தே, நிலவுடைமையாளர்கள் மற்றும் முதலாளிகளின் பலம் முறியடிக்கப்பட்டதிலிருந்தே அரசியல் கடமைகள் எளிமையானவையாக, தெளிவானவை யாக, உழைக்கும் பெண்கள் உள்பட உழைக்கும் மக்கள் அனை வருமே புரிந்து கொள்ளக் கூடியவையாக மாறியுள்ளன. முதலாளித்துவ சமுதாயத்தில் பெண்களுக்கு சமத்துவம் என்பதே இல்லாத காரணத்தால், அரசியலில் அவர்களுடைய பங்கு ஆண்களுடைய பங்கில் மிகவும் அற்பமான அளவுக்கு மட்டுமே இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த உழைக்கும் மக்களின் சக்தி அவசியமாக இருக் கிறது. ஏனென்றால் அப்பொழுது அரசியலின் முக்கியமான கடமைகள் உழைக்கும் மக்களின் எதிர்காலத்தை நேரடி யாக பாதிக்கின்ற விஷயங்களைப் பற்றியதாகவே இருக்கும்.இங்கும் உழைக்கும் பெண்கள் – கட்சியின் உறுப்பினர் கள் மற்றும் அரசியல் உணர்வு படைத்த பெண்கள் மட்டு மல்லாமல் கட்சியில் இல்லாத பெண்களும் சிறிதும் அரசியல் உணர்வில்லாத பெண்களும் கூட – பங்கெடுப்பது அவசியம். இங்கே சோவியத் ஆட்சி உழைக்கும் பெண்கள் ஈடுபட்டு வேலை செய்யக்கூடிய விரிவான களத்தைத் தோற்றுவித் திருக்கிறது.சோவியத் ருஷ்யாவைத் தாக்கிய எதிரிகளோடு போரா டியபொழுது நாம் மிகச் சிரமமான அனுபவங்களை அடைந் தோம். உழைக்கும் மக்களின் ஆட்சிக்கு எதிராக யுத்தம் தொடுத்த சக்திகளை எதிர்த்துப் போர்க் களத்திலும் இலாப வேட்டைக்காரர்களை எதிர்த்து உணவு வழங்குகின்ற துறையிலும் ஒரே சமயத்தில் போர் புரிவது நமக்குச் சிரம மாக இருந்தது. ஏனென்றால் தங்களுடைய உழைப்பைக் கொடுத்து முழுமனதோடு நமக்கு உதவி செய்ய முன்வந்த மக்கள், உழைக்கும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறை வாகவே இருந்தது. இங்கும் கூட கட்சியில் இல்லாத பெருந் திரளான உழைக்கும் பெண்கள் செய்த உதவிக்கு இணையாக வேறு எதுமில்லை என்று சோவியத் ஆட்சி பாராட்டு கிறது. பழைய, முதலாளித்துவ சமுதாயத்தில் அரசியலில் பங்கெடுப்பதற்கு விரிவான பயிற்சி தேவைப்பட்டதென்பது ஒரு வேளை அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். இந்தப் பயிற்சி அன்று பெண்களுக்கு இல்லாதிருந்தது. சோவியத் குடியரசில் அரசியல் நடவடிக்கை என்பது பிரதானமாக நில வுடைமையாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் எதிராக நடை பெறுகின்ற போராட்டம் ; சுரண்டலை ஒழிப்பதற்காக நடை பெறும் போராட்டம்; எனவே சோவியத் குடியரசில் உழைக் கும் பெண்களுக்கு அரசியல் நடவடிக்கைக்கான வாய்ப்புக் கொடுக்கப்படுகிறது; அது உழைக்கும் பெண் தன்னுடைய ஸ்தாபன அமைப்புத் திறமையின் மூலம் உழைக்கும் ஆணுக்கு உதவி செய்வதில் அடங்கியிருக்கிறது. மாபெரும் அளவில் இலட்சக்கணக்கானவர்கள் ஈடுபடு கின்ற ஸ்தாபன வேலை மட்டுமே நமக்கு அவசியம் என்று நினைக்கக் கூடாது. மிகச் சிறிய அளவிலும் கூட நமக்கு ஸ்தா பன வேலை தேவைப்படுகிறது. இது பெண்கள் ஈடுபட்டு உழைப்பதைச் சாத்தியமாக்குகிறது. யுத்த நிலைமைகளிலும் கூட பெண்கள் உழைக்க முடியும். இராணுவத்துக்கு உதவி செய்தல், இராணுவத்தில் பிரச்சாரம் செய்தல் போன்ற வேலைகளைப் பெண்கள் செய்ய முடியும். இந்த வேலைகளில் பெண்கள் தீவிரமாகப் பங்கெடுக்க வேண்டும். அப்பொழுது தான் செஞ்சேனையினர் தங்கள் மீது பரிவு காட்டப்படு வதாக, தாங்கள் நன்கு கவனிக்கப்படுவதாக உணர்வார்கள். உணவு வினியோகம், பொது உணவு விடுதிகளின் நிலைமையை அபிவிருத்தி செய்தல் ஆகிய துறைகளில் பெண்கள் உழைக்க முடியும். பெத்ரோகிராதில் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதைப் போன்ற உணவு விடுதிகளை எங்கும் ஏற்படுத்த வேண்டும். இந்தத் துறைகளில் உழைக்கும் பெண்கள் செய்யக் கூடிய வேலைகள் ஸ்தாபன ரீதியில் அதிகமான முக்கியத்து வத்தைக் கொண்டிருக்கின்றன. பெரிய அளவில் பரிசோதனை விவசாயப் பண்ணைகளை ஏற்படுத்துவதிலும் அவற்றை நடத்துவதிலும் உழைக்கும் பெண்கள் பங்கு கொள்வது மிக அவசியம்; இதை மிகப் பெரிய அளவில் செய்ய வேண்டும். உழைக்கும் பெண்கள் மிகவும் அதிகமான எண்ணிக்கையில் ஈடுபட்டாலொழிய இதை நிறைவேற்ற முடியாது. இந்தத் துறையில் உணவு வினியோகத்தை மேற்பார்வையிடுவதிலும் உணவுப் பொருள்கள் மிகச் சுலபமாகக் கிடைக்கும் படிச் செய் வதிலும் உழைக்கும் பெண்கள் மிக உபயோகமாக இருப்பார் கள். இந்த வேலையைக் கட்சியில் இல்லாத உழைக்கும் பெண் கள் கூட சிறப்பாகச் செய்ய முடியும். இதை நிறைவேற்று வது வேறு எல்லாவற்றையும் காட்டிலும் சோஷலிஸ்ட் சமு தாயத்தை வலுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். நாம் நிலத்தில் தனி உடைமையை ஒழித்துவிட்டோம்; தொழிற்சாலைகளில் தனி உடைமையை அநேகமாக முழுமை யாக ஒழித்துவிட்டோம். எல்லா உழைக்கும் மக்களும் – கட்சி உறுப்பினர்களும் கட்சியில் இல்லாதவர்களும், பெண் களும் ஆண்களும் – பொருளாதார வளர்ச்சிப் பணிகளில் பங்கு கொள்வதை உறுதிப்படுத்துவதற்கு சோவியத் ஆட்சி முயன்று வருகிறது. சோவியத் ஆட்சி தொடங்கியுள்ள இந்தப் பணியில் ருஷ்ய நாடு முழுவதிலும் பெண்கள் – நூற்றுக் கணக்கில் அல்ல, லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் – பங்கெடுத்துக் கொண்டால் தான் அது முன்னேற்றமடை யும். அப்பொழுது தான் சோஷலிஸ்ட் வளர்ச்சி என்ற இலட் சியம் முழுநிறைவடையும் என்று நாங்கள் நம்புகிறோம். அப் பொழுது தான் நிலவுடைமையாளர்கள், முதலாளிகளுடைய உதவி இல்லாமல் நாங்கள் வாழ முடியும், நாட்டை நடத்த முடியும் என்பதை உழைக்கும் மக்கள் எடுத்துக்காட்ட முடியும். அப்பொழுது தான் வெளிநாடுகளைச் சேர்ந்த எதிரி களாலும் ருஷ்யாவுக்கு உள்ளே இருக்கின்ற எதிரிகளாலும் சோவியத் குடியரசுக்கு எத்தகைய ஆபத்தும் ஏற்பட முடியாத அளவுக்கு ருஷ்யாவில் சோஷலிச நிர்மாணம் வலுப் பெறும். லெனின் நூல் திரட்டு, தொகுதி 39, பக்கங்கள் 198-205

LikeComment