இலக்கு 20 இணைய இதழின் கட்டுரை
++++++++++++++++++++++++++++
மார்க்சின் எல்லா எழுத்துகளும் வர்க்க சார்புடையவையே அதில் வர்க்க சமரசவாதம் எங்கேயும் காண முடியாது.
இன்று மார்க்சியத்தை குழப்ப நினைக்கும் சிலர் மார்க்சிய மூல நூல்களின் சில பகுதியை சுருக்கியும் வெட்டியும் தங்களின் கருத்துகளை அதனுள் சொருகியும் திணிப்பதை ஏற்க முடியவில்லை.
அவர்களை அம்பலப்படுத்தும் நோக்கிலானதே இக்கட்டுரை.
சோசலிசம் என்றால் நாம் சோவியத் புரட்சிக்கு பின் ஏற்பட்ட பொதுவுடைமை நோக்கி செல்லும் இடைகட்டம்தான் சோசலிசமென பலரும் நினைத்திருக்கும் அதேவேளையில் மார்க்சிய ஆசான்கள் 1848 லே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பல்வேறு விதமான சோசலிசம் பற்றி பேசியுள்ளனர் அவை எவ்வகையான சோசலிசம் என்றும் நமது ஆசான்கள் தெளிவாக சுட்டிகாட்டியுள்ளனர்.
பொதுவுடமை சமூக அமைப்பை நோக்கியும் செல்லும் பொழுது ஏற்படும் இடைநிலை அமைப்பாக சோசலிச அமைப்பு உள்ளது.
பொதுவுடமை சமூக அமைப்பின் முதல் கட்டமாகும் இந்த அமைப்பு குறித்த கருத்துகளே சோசலிச கருத்துகள் ஆகும்
முதலாளித்துவ சமூக அமைப்பில் ஏற்பட்ட சில நிலைகளின் எதிர்குரலாக தோன்றியதே சோசலிச கருத்துகளாகும். சோசலிச உற்பத்தி முறை தோன்றும் முன்னரே சோசலிச கருத்துகள் தோன்றி விட்டன.
தொடக்க காலத்தில் இத்தகைய கருத்தில் கற்பனை அளவில் இருந்தன. முதலாளித்துவ சமூகத்தை விட மேம்பட்ட ஒரு சமூகத்திற்காக கனவு கண்டனர். எனினும் முதலாளித்துவசமூகத்தை அம்பலப்படுத்தி அதற்கு மாற்றாக சோசலிசத்தை முன்வைத்த கருத்தளவில் இவர்கள் ஆற்றிய வரலாற்று பங்களிப்பு புறக்கணிக்க இயலாதவை .
இவர்கள் முதலாளிய சமூகத்தை அறிவில் அளவில் விளங்கிக் கொள்ளாத காரணத்தால் முதலாளிய சமூகத்தில் உள்ள கூலி அடிமை முறை பற்றியும் பாட்டாளி வர்க்கத்தின் சமூக பங்கு பற்றியும் சமூக மாற்றத்துக்கான வழியாக உள்ள வர்க்க போராட்டத்தைப் பற்றி இவர்களால் ஏதும் சொல்ல இயலாது போயிற்று எனவே இவர்களின் சோசலிச கருத்துகள் கற்பனை அளவில் நின்று போயின.
இதனைப் பற்றி காரல் மார்க்ஸ் தமது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை மிகத் தெளிவாக கூறியுள்ளார்.
இயக்கவியல் பொருள் முதலாதத்தை அணுகு முறையாக கொண்டு சமூக நடைமுறையில் ஈடுபட்ட மார்க்ஸ் முதலாளிய சமூகத்தில் காணப்படும் கூலி அடிமை முறையின் சாரத்தையும் புதிய சமுதாயத்தை படைக்கும் ஆற்றல் பெற்ற பாட்டாளி வர்க்கத்தின் பங்களிப்பையும் விளக்கிக் கொண்டு வர்க்கப் போராட்டமே எல்லா வளர்ச்சிக்கும் ஆதாரமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்திக் கொண்டார். பாட்டாளி வர்க்க தலைமையின் கீழ் முதலாளியத்தை எதிர்த்து உறுதியுடன் போராடினால் அன்றி சோசலிசம் ஏற்படாது எனவும் தெளிவு படுத்தினர். சோசலிச சமூகத்தில் ஏற்பட இருக்கும் முரண்பாடுகள் பற்றியும் குறிப்பிட்டார். மார்சியமானது சோசலிசம் குறித்த கருத்துக்களை அறிவியல் தளத்தில் நிறுவின.
இன்னும் இணையத்தில் வாசித்து கருத்திடுங்கள் தோழர்களே…
https://namaduillakku.blogspot.com/2023/03/blog-post_14.html