சோசலிசம் என்பது தோழர் ரவீந்திரன்

சோசலிசம் என்பது ஏதாவது ஒன்று கொடுக்கப்படுவதோ அல்லது நிலையானதோ அல்ல. அது சமூகமானது ஒரு கட்டத்திலிருந்து மற்றொரு கட்டத்திற்கு மாறுவதை குறிக்கிறது. முதலாளித்துவமானது எப்படி நிலப்பிரப்புத்துவத்திலிருந்து மாறுதலானது என்று கருதப்படுகிறதோ அதேபோல் சோசலிசமாற்றமும் மாறுதலானதாகும். ஆகவே சோசலிசமானது கம்யூனிச சமூகமாக சமுதாயதம் மாறுகின்ற போக்கிலுள்ள மாறுதலுக்கு உள்ளாக்கிக்கொண்டிருக்கின்ற கட்டமாகும்.(அல்லது சீனாவைப் பொறுத்தமட்டில் புதிய ஜனநாயகத்திலிருந்து கம்யூனிசத்திற்கு மாறும் கட்டமே சோசலிசமாகும்.) அதன் தன்மையிலேயே பல முரண்பாடுகளை உள்ளடக்கியதாக உள்ளது. ஒரு இரவுக்குள் ஒழிக்கமுடியாத வகையிலான பல்வேறு சமத்துவமற்ற நிலை நிலவுகிறது. அவைகள் பல ஆண்டுகளாக, பல நூறு வருடங்களாக நிலவுகின்றன. இந்த சமத்துவமின்மையை மரபுரிமையாக பழைய சமூகத்திலிருந்து பெற்றுள்ளனர். திறமையான உழைப்பிற்கும், திறமையற்ற உழைப்பிற்கும் உள்ள வேறுபாடுகள், மூளை உழைப்பிற்கும், உடல் உழைப்பிற்கும் உள்ள வேறுபாடுகள், பொருளாதாரத்தையும், கல்வியையும், கலாச்சாரத்தையும் பெற்று வளர்வதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில் நகரத்திற்கும், கிராமங்களுக்கும் இடையிலான வேறுபாடுகள், மக்களிடையே சமத்துவமில்லாத ஏற்றத்தாழ்வு இருக்கும்போது சந்தையில் சமஉரிமை, வாக்களிப்பதில் சமஉரிமை, சட்டத்தின்முன் சம உரிமை என்ற முதலாளித்துவ கோட்பாடு பொருந்துமா? என்ற கேள்வி, இந்த சூழலில் திறமையான உழைப்பாளர்களின் கூலியை திறமையற்றவர்களின் கூலிக்கு ஒரு நொடியில் குறைப்பது என்பது சாத்தியலில்லை. அல்லது திறமையற்றவர்களின் கூலியை திறமையுள்ளவர்களின் கூலியளவு உயர்த்துவதும் சாத்தியமல்ல. இதேபோல் அறிவாளிகளின் சம்பாத்தியத்தை உழைக்கும் மக்களின் சம்பாத்தியத்தின் அளவிற்கு குறைப்பதற்கும், அல்லது உழைப்பவர்களின் வருமானத்தை அறிவாளிகளின் வருமானம் அளவிற்கு உயர்த்துவதற்கும் ஒரே நொடியில் மாற்றிட இயலாது. நகரத்தில் வாழ்பவர்களுக்கு மாறாக வாழ்ந்துவரும் கிராம மக்களை ஒரே நொடியில் செல்வந்தர்களாகம் தரமான கல்வியாளர்களாகவும் ஆக்கமுடியாது. பொழுதுபோக்கு, சமூக வாழ்வு, மருத்துவ வசதி—–போன்றவற்றில் நகர்புறத்து மக்களுக்கு கிடைக்கும் அளவிற்கு கிராமப்புறத்திலுள்ள மக்களுக்கும் கிடைக்கும் நிலையை உடனடியாக அடைந்திட இயலாது. இதுபோன்ற சமத்துவமற்ற நிலை நாட்டில் நீடிக்கும்வரை சலுகைகள் கேட்பது, தனிநபர்வாதம், பிழைப்புவாதம், மற்றும் முதலாளித்து தத்துவங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும். நீடித்த முயற்சியும் உணர்வுப்பூர்வமான போராட்டமும் இல்லையென்றால் இந்த தவறான போக்குகள் வளர்ந்து ஒரு சமூக சக்தியாக மாறும். இவ்வாறு மாறியவர்கள் புதிய முதலாளித்துவ தனிநபர்களை உருவாக்குவார்கள், தனிச்சிறப்பு சலுகைபெற்ற உயர்அடுக்கு பிரிவினராக புதிய சுரண்டல்காரர்களாக ஒருங்கிணைவார்கள், இந்த வகையில் சோசலிசமானது அமைதியான முறையில் பின்னடைந்துபோகும். 2- மேலே கண்டது சீனாவில் நடந்த கலாச்சாரப் புரட்சி பற்றி வில்லியம் ஹிண்டன் அவர்கள் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி, சீனாவில் புதிய ஜனநாயகப் புரட்சி நடத்தப்பட்டு, சோசலிச நாடாக சீனாவில் மாற்றங்கள் நடந்த பின்பு அங்கு முதலாளித்துவம் மீட்க்கப்பட்டதற்கு அங்கு நிலவிய சமூக காரணங்களை அவர் விளக்கியுள்ளார். இந்த முதலாளித்துவ மீட்சியை தடுத்திட ஒரு நீண்ட கடுமையான, விடாப்பிடியான, உணர்வுப்பூர்வமான போராட்டத்தை மக்களும் அதன் தலைவர்களும் நடத்திடவேண்டும் என்ற கருத்தை கட்டுரை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். இதிலிருந்து நாம் புரிந்துகொள்ளவேண்டியது மக்கள் தியாகம் செய்து ஒரு ஆயுதம்தாங்கிய புரட்சி நடந்த நாட்டிலேயே அவர்களது லட்சியத்தை அடைந்திட மேலும் நீடித்த உணர்வுப்பூர்வமான போராட்டத்தை நடத்திடவேண்டிய அவசியம் இருக்குமானால் நமது நாட்டில் மக்களின் நல்வாழ்விற்காக நாம் எந்தளவு நீடித்த உணர்வுப்பூர்வமான போராட்டத்தை நடத்திடவேண்டும். இந்த உண்மையை சரியாகப் புரிந்துகொண்டவர்கள் நம்பிக்கையோடு புரட்சிகர இயக்கத்தில் இணைந்து பணியாற்றுவதை நான் காண்கிறேன். இதனை புரிந்துகொள்ள இயலாத மூடர்கள் புரட்சிகர இயக்கத்தைவிட்டு ஓடி புலம்பித்திரிகின்றன.