சோசலிசமும் முதலாளித்துவ மீட்சியும்

முதலாம் உலகப்போரில் ரஷ்யாவும் இரண்டாம் உலகப்போருக்கு பின் சீனா கிழக்கு இந்தோசீன நாடுகளில் அதன் பின் பல உலக நாடுகளின் சோசலிச சமூகம் மலர்ந்தது ஆனால் இன்று கசப்பான உண்மை  என்னவென்றால் சோஷலிச தளங்கள் அனைத்தும் தகர்ந்துவிட்டன. உலகில் இப்பொழுது பொதுவுடமை புரட்சிகர இயக்கங்களும் புரட்சிகர சிந்தனைகள் மட்டுமே உள்ளன சோசலிச தளங்கள் பொறுத்த வரை நவம்பர் 1917 க்கு முந்திய கட்டத்திலேயே  உள்ளது என்பதையும் புதிய அனுபவங்களும் படிப்பினைகளும் நாம் இன்றும் தொடங்கப்பட வேண்டிய கட்டத்தில் உள்ளோம் என்பனை பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள்  புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய அரசியல் பொருளாதார நிகழ்வுகள் லெனினிய வரையறையில் பல அளவு சேர்க்கைகளை சேர்த்துள்ளன.
அவையாவன
1). இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலகளாவிய போர் இல்லை எனினும் மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏகாதிபத்தியங்கள் ஏற்றுமதி செய்யும் வட்டார போர்கள் (Tegional wars).
2). முதலாளிகளிடயிடம் இருந்து ஏகபோகங்கள் உருவானது போல ஏகாதிபத்தியங்கறிடமிருந்து பெருவல்லரசு நாடுகள் என்ற தனியினம் உருவாதல் .
3).மூன்றாம்  உலக நாடுகளைத் தடையற்ற விதத்தில் ஏகாதிபத்தியங்கள் பயன்படுத்த இயலாதபடி மூன்றாம் உலக நாடுகளுக்கு கிடைத்த அரசியல்  பேராற்றல் .
4). 1960 கள் முதற்கொண்டு உலக சோசலிசத் தளங்கள் தகர்ந்து போதலும் அதனால் ஏற்பட்ட கருத்து விளைவுகளும்.
இத்தகைய அளவு சேர்க்கைகள் லெனினிய வரையறையில் பண்பியல் மாற்றங்களைக் கொணர்ந்து விடவில்லை. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதல், சமனற்ற பொருளாதார வளர்ச்சி, உலகப் பொருளாதார அமைப்பில் பலவீனமான இணைப்பு ஆகியவை தொடர்ந்து கோர விளைவுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் இன்றைய காலத்திலும் உலகில் சோசலிச புரட்சியே சாத்தியம்.
====
முதலாளித்துவப் புரட்சிகும் சோசலிச புரட்சிக்கும் இடையில் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு ,முதலாளித்துவப் புரட்சி நடைபெறுவதற்கு முன்னரே அந்த நாட்டில் முதலாளிய பொருளாதாரக் கூறுகள் காணக் கிடைக்கும் ,அவற்றை தொகுத்து விரிவாக்கம் செய்தலும் அதற்குரிய அதிகார அமைப்பை நிறுவும் முதலாளிய புரட்சியின் பணிகள் ஆகும், ஆனால் சோசலிசப் புரட்சியில் அரசு அதிகாரமே முதலில் புரட்சியாளர்களின் கைக்கு வருகிறது ,பின்னரே பொருளாதார நிர்மாணப் பிரச்சினை எழுகிறது, லெனின் சொல்வது போல முதலாவது வெற்றி  அரசியல் இராணுவ ரீதியில் ஆகும் இரண்டாவது ஆகவே பொருளாதார பணிகள் தொடங்குகிறது இரண்டாவது பணி முடிவடைந்தால் மட்டுமே சமூகம் பொதுவுடைமைக்குச் செல்லும்,

சீனப் புரட்சி நடத்தி காட்டினர்தார்,. பொதுவுடமை கட்டத்திற்கு மாறி செல்வதற்கு உரிய இடைகட்டம் சோசலிசம் என்ற மார்க்சிய நிலைபாட்டை சோசலிசத்திற்க்கு மாறி செல்வதற்க்கு ஓர் இடை கட்டம் தேவை என்று லெனின் வளர்க்கிறார் , சோசலிசம் குறித்த கோட்பாடு பங்களிப்புகளில் முதன்மையான இதைத்தொடர்ந்து இன்னமும் இரண்டு அம்சங்களில் லெனினது நிலைப்பாட்டை காண்பது பொருத்தமாகும்