சோசலிசமும் கம்யூனிசமும்
சோசலிசமும் கம்யூனிசமும்

சோசலிசமும் கம்யூனிசமும்

சோசலிசம் என்றால் என்ன? கம்யூனிசம் என்றால் என்ன? இவையிரண்டும் வேறுபட்ட அமைப்புகளா? இவற்றிற்கிடையிலுள்ள ஒற்றுமை வேற்றுமையென்ன?

சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் ஒரு கரும்புத் தடிக்கு உவமானமாகக் கூறலாம். ஆச்சரியமாக இருக்கிறதா? கரும்பின் நுனிப்பகுதி சிறிது கசக்கும்; ஆனல் அடிப்பகுதியோ நன்றாக இனிக்கும். நுனிப்பகுதிதான் சோசலிசம். அடிப்பகுதிதான் கம்யூனிசம்! இரண்டும் ஒரே அடிப்படையிலிருந்து தோன்றியிருந்தாலும் அடி நுனி போன்று ஒருசில வித்தியாசங்கள் இருக்கவே செய்யும். இதனுல்தான் கம்யூனிசதத்துவத்தின் ஆசான்களான கார்ல் மார்க்சும் ஏங்கெல்சும் கம்யூனிசத்தின் ஆரம்பநிலையே சோலிசம் எனக்கூறி வைத்தார்கள். அதாவது சோசலிசத்திலிருந்து கம்யூனிசம் பிறக்கிறது.பொதுவுடைமை சமூகத்தின் ஒரு இடைகட்டமே சோசலிசம். சோசலிசமும் கம்யூனிசமும் ஒரு பொருளாதார அடிப்படையில் தோன்றுபவையாகும். அதாவது உற்பத்தி செய்யும் சக்திகள் தனிப்பட்ட முதலாளிகளினதும், நிலவுடைமையாளர்களினதும் கைகளிலிருந்து தொழிலாளி விவசாயிகளின் கைகளுக்கு மாறுகின்றன. முன்னரது செல்வாக்கு சரிய தொழிலாளி விவசாயின் கை ஓங்குகிறது. இருப்பினும் சகலரினதும் தேவைகளை உடனடியாகப் பூர்த்தி செய்யமுடியாதல்லவா? எனவே சோசலிசத்தில் திறமைக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது; தேவைக்கல்ல. திறமையான, கஷ்டமான, அதிக ஊக்கம் தேவையான உற்பத்தி உழைப்பிற்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகின்றது.

அதாவது கம்யூனிசம் மலரும் போது இவ்வேறுபாடு மறையும். கம்யூனிசத்தில் ஒவ்வொருவரது தேவைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மக்களின் தேவை முற்றுமுழுதாக பூர்த்தி செய்யப்படுகின்றது. எனவே வியாபாரம், கடன் பணம் என்பவை மறைந்து விடும்.

சோசலிசத்தில் ஒரு குறிப்பிட்ட சமுதாய பொருளாதார கலாச்சார சமவுடமையின்மை தவிர்க்க முடியாதது. இதனல் சோலிசத்தில் வர்க்கங்கள் தொடர்ந்தும் இருக்கும். இவற்றை மேலும் ஆராயும் போது தொழிலாளர், விவசாயிகள், புத்திஜீவிகள் என மூன்று வர்க்கங்களாகப் பிரிக்கலாம். இருப்பினும் இவ்வர்க்கங்கள் மத்தியில் குழப்பங்களோ, வேறு புதுப்பிரச்சினைகளோ தோன்றுவதில்லை. ஏன் தெரியுமா? இவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து தோளோடு தோளிணைந்து புதிய ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதே இவர்கள் தலையாய பணியாக அமைவதால்தான். அத்துடன் கிராப்புற உடல் உழைப்பிற்கும், நகர்ப்புற அறிவின் உழைப்பிற்கும் இடையில் பேதம் இருக்கும். பெண்களுக்கு அளவிற்கதிகமான வீட்டு வேலைகளிருப்பதால் ஆண் பெண் சமவுடமை கூட இருக்காது. ஆனல் கம்யூனிசம் மலரும் போது இவையாவும் இருந்த இடம் தெரியாமல் மறைகிறது.

சோசலிச சமுதாயத்தில் அரசு அதிகாரம் பிரதான பங்கை வகிக்கும். அது சோசலிசத்தை உள்நாட்டு வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாப்பதுடன் மக்களின் சகல தேவைகளையும் பூர்த்தி செய்யும் பொருளாதாரத்தை வழிநடத்தும் கம்யூனிஸ்ட் கட்சியுடனும் தொழிற்சங்கங்களுடனும் மக்கள் இயக்கங்களுடனும் இணைத்து, புதியவொரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் முழு மூச்சாக ஈடுபடும். இதே அரசு, அதிகாரம் கம்யூனிச சமூகத்தில் மறைந்துவிடும். சோசலிசத்தின் கீழ் மக்கள் மத்தியில் தொடர்ந்து தற்பெருமை, அவா, தந்நலம், பிறர் செலவில் வாழமுற்படல் ஆகியன தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். ஆனல் கம்யூனிச சமுதாயத்தில் ஒவ்வொரு தனிமனிதனின் சகல தேவையும் பூர்த்தி செய்யப் படுதலால் இவை அற்றுப்போய்விடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *