பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் வேண்டும் என விலங்குகள் மாட்டு கொல்லாமையை வலியுறுத்திய வள்ளுவர் மனிதக் கொலையை ஏன் அங்கீகரிக்கிறார் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
காரணம் இதுதான். அன்றைய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைக்கு விலங்குகளின் உழைப்புத் தேவைப்பட்டது; அதனால் அது பாதுகாக்கப்படவேண்டியது அவசியமாயிற்று; விலங்குகளைப் பாதுகாப்பது நில உடைமையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதா கும். எனவேதான் பசு என்ற ஒரு சொல்லே விலங்கையும் செல்வத்தையும் குறிக்க வழங்கலாயிற்று.
ஆனால் உடைமையாளர்களின் ஏகப் பிரதிநிதியான வேந்தனின் நலனுக்கு விரோதமாய் இருப்பவர்கள் கொல்லப்பட்டாலன்றி உடைமையாளர்களின் நலனைப் பாதுகாக்க முடியாது. யார் யாரை ஒதுக்க முடியும்?- அதிகாரத்தில் உள்ளவன் ஆளப்படுவோனை ஒதுக்கலாம். கொடியவன் யார் நல்லவன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இடத்திலே இருப்பவன் உடைமையாளனே தவிர வேறுயாருமில்லை. எனவே வேந்தனின் எண்ணத்திற்கு மாறுபட்டவர்களை வள்ளுவர் கொடியோராகக் காட்டுகின்றார், ஆக “கொடியார்” என்ற சொல் வள்ளுவன் காலத்தில் உடைமையற்றவர்களுக்கும் வேந்தனின் எண்ணங்களுக்கு விரோதமானவர்களுக்கும் பயன் படுத்தப்பட்டது. இதன் மூலம், தான் எந்த வர்க்கத்தின் பிரதிநிதி என்பதையும் வள்ளுவன் காட்டிக்கொள்கிருன், நிற்க.
இக்குறளில் இயற்கையிலும் சமூகத்திலும் காணப்படும் இரு முரண்பட்டவர்க்கங்களை பாமரரும் புரியும் வண்ணம் எளிமையாக எடுத்துக் காட்டுகிருர்.
பயிரும் களையும் இயற்கையில் காணப்படும் முரண்பட்ட வர்க்கம்; வேந்தனும் கொடியரும் சமூகத்தில் காணப்படும் முரண்பட்ட வர்க்கம்.
கவித்துவம் தாண்டவமாடும் இக்குறளிலே, உடைமை, ஆளும், ஒடுக்கும் வர்க்கத்தினனன வேந்தனைப் பயிருக்கும், உடைமையற்ற பாட்டாளி, ஆளப்படும், ஒடுக்கப்படும் வர்க்கத்தினனை “கொடியன்’ என பெயர் சூட்டி களைக்கும் உவமையாக, படிமமாகக் காட்டுகின்றர். வாழைப்பழத்தில் ஊசி குத்துவதுபோல, உடைமைவர்க்க நலன் காக்க, பாமரப் பாட்டாளிகள் ஏமாந்து ஏற்றுக்கொள்ளும் வண்ணம் இங்கே கூறியிருக்கிருன். வேத்தனைப் ‘பைங்கூழ்" என்றும் அவனை எதிர்த்தவனை 'களை" என்றும் வர்க்கச் சார்போடு, பாசத் தோடு கூறியிருப்பதில் வியப்பே இல்லை.
ஒடுக்கப்படுவோர்களை ‘களை" என பெயரிடும் செயல், வள்ளுவன் காலத்தில் மட்டுமல்ல, இன்றும், வர்க்க வேறுபாடுள்ள, முரண்பாடுள்ள எல்லா நாடுகளிலும் தினசரி நடவடிக்கைகளில் ஒன்ருகிவிட்டது. ஒடுக்கப்பட்டோர்-கோரிக்கை எழுப்பினல் "கூச்சல்" என்றும் கூட்டங் கூடினல் "கும்பல்" என்றும்; போராட்டஞ் செய்தால் "கலகம்" "ரகளை "வன்முறை" என்றும் ஒடுக்குவோரால் வருணிக்கப்படுகிறது. ஆனால் உடைமை, ஆளும், ஒடுக்கும் வர்க்கம் தன்னலத்தைக் காப்ப பற்காக-உரிமைக்காகப் போராடும் மக்களை அடித்துப் பயமுறுத்த முற்படுவதை "அமைதியை நிலைநாட்ட லேசான பிரம்படி என்றும்; "வன்முறையைச் சமாளிக்க துப்பாக்கிச் சூடு' என்றும்; தங்களைத் தற்காத்துக்கொள்ள சமூக விரோதிகளைச் தீர்த்துக்கட்ட தீவிரமாகச் சுட்டுக் கொன்றனர்" என்றும், முன் கூட்டியே சொல்லி வைத்தாற்போல் சொல்லி வருகின்றனர். இவைகள் எல்லாம் சொற்கள் வர்க்கச் சார்போடு வழக்காக கொண்டுள்ளதையே நாம் காண்கிறோம்.
ஆளுவோர், உடைமையோர், ஒடுக்குவோர் மக்களுக்கு விடுக்கும் வேண்டுதல்களும், விண்ணப்பங்களும் ஆணைகளாக-கட்டளைகளாக இருக்குமேயன்றி வேண்டுதலாக இருக்காது என்பதை வள்ளுவரின் குறள் கூறுகிறது. கொடுங்கோல் அதிகாரத்தில்
“வேலொடு நின்ருன் இடுஎன் றதுபோலும்
கோலொடு நின்முன் இரவு" *வேந்தன் குடிமக்களைப் பொருள் தரும்படி வேண்டுதல், வேல் கொண்டு வழிப்பறி செய்யும் ஆறளைக் கள்வர்கள் பிடுங்கிக்கொள்வது போன்றதாகும்" என்பது இக்குறளின் பொருள்.
இங்கே ஆளும், உடைமை, ஒடுக்கும் வர்க்கம் 'தாரீர்” எனக் கூறும் சொல், சொல்லுகின்ற வர்க்கத்தினூலே, அச்சொல் அவ்வர்க்கச் சார்பைப் பெறுகிறது.
நமது மத்திய மாநில அரசுகளால் மக்களின் தேவைகளுக்கு சேகரிக்கும் பொழுது அவர்களின் விளம்பரம்"நிதி தாரீர்" என வேண்டுகோள் விடுக்கப்படுகின்றன. உணமையில், அரசு எந்திரம் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல வேகமாக செயல் புரிவதை அன்றடும் வாழ்க்கையில் கண்டு கொண்டுதான் வருகிருேறோம்.
ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இன்று எழுதும் பத்திரிக்கையே அரிதாகி விட்ட நிலையில் சில பத்திரிக்கைகள் பூடகமாக செய்திகளை வெளிக் கொணர்ந்தாலும் அவை அதன் வர்க்க னிலையிலிருந்து மாறுவதில்லை.
அன்ருட நிகழ்ச்சிகளை கூறும் சொற்களில் வர்க்கச் சார்பு: வர்க்க முரண்பாடுள்ள நாடுகளில் போராட்டங்கள் அன்றாட நடை முறையாகிவிட்டது. அரசுக்கு எதிரான ஒரு போராட்ட நிகழ்ச்சியை ஆளும் வர்க்க சார்புடைய பத்திரிகைகள் தோல்வி என்றும், ஆளும் வர்க்க எதிர்ப்புடைய பத்திரிகைகள் ‘வெற்றி" என்றும் கூறும். எதிர் வர்க்கம் ஹர்த்தால் நடத்தினல், எவ்வளவுதான் வெற்றிகரமாக நடத்தினலும் ஆளும் வர்க்கப் பத்திரிகைகள் அதனை ‘தோல்வி" என்றே. பிசுபிசுத்தது" என்றே, 'பல இடங்களில் மாமூல் வாழ்க்கை பாதிக்கவில்லை" என்றுதான் எழுதுகின்றன. ஆளும் வர்க்கம் முட்டாள் தனமான திட்டம் எதையாவது அறிமுகப்படுத்தி தோல்வி கண்டாலும் 'திட்டம் மகத்தான வெற்றி" என்று ஆளும் வர்க்கச் சார்பு ஏடுகள் போடுகின்றன. இதுபோல பல பார்க்க முடியும். இங்கெல்லாம் சொற்கள், செய்திகள் வர்க்கச் சார்புடன்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெளிவாகும்.
அன்றட் வாழ்க்கையில் வர்க்கச் சார்பான சொற்கள்: உணவைக் குறிக்கப் பல சொற்கள் இருக்கின்றன. 'கூழ், கஞ்சி, பழையது" போன்றது பாட்டாளி மக்களின் வர்க்கச் சார்ப்போடு இணைந் ள்ளது. "சோறு, சாதம்” போன்றவை பாட்டாளிகள் அல்லாதவரின் வர்க்கச் சார்பைச் சார்ந்துள்ளது.
முடிவாக: தொல்காப்பியர் காலம்முதல் இன்றுவரை நாம் அன்றாட வாழ்க்கையிலும் சொற்கள் வர்க்கச் சார்போடு வழங்கப்பட்டுள்ளமையைக் கண்டோம்.
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்றார் தொல்காப்பி யர். "எல்லாச் சொல்லும் வர்க்கச் சார்புடையன" என்றால் அது தவறாகாது!
வர்க்க அடிப்படையிலே பாத்திரங்களை அணுகாமல் விசேஷ தனிப்பிறவிகளை இலக்கிய மாந்தராகக் கொண்டமையாலேயே, ஒரு காலத்து முற்போக்கு எழுத்தாளராக இருந்தவர் பிற்காலத்தில் பிற்போக்குவாதியாக மாறியுள்ளார். இது ஒரு குறிப் பிட்ட எழுத்தாளனது தனிப்பட்ட பலவீனம் மட்டுமன்று. அவன் பற்றிக்கொண்டிருந்த இலக்கியக் கோட்பாட்டிலே உள்ளார்ந்த பலவீனமாய் இருந்த அம்சத்தின் பரிணுமம் என்றும் கூறலாமல்லவா? வர்க்க ஆய்வின் அடிப்படையில், தூலமான சந் தர்ப்பங்களில் பாத்திரங்களைச் சித்திரிக்கத் தவறும் எந்த எழுத்தாள னும் பிற்போக்குவாதி ஆவதற்கு அதிக நாள் பிடிக்காது.
இதை இன்னெரு வகையாகவும் நோக்கலாம். சமுதாய மாற்றத்துக்கு ஆதரவு தருபவராக இல்லாத ஒருவர் முற்போக்குவாதியாக இருக்க முடியாது. எனவே பிழை எங்கே உள்ளது என்று கவனமாய்த் தேடவேண்டும்.
Related