செய்ததெல்லாம் சரியே என்று சுய திருப்தி அடைவதை நிறுத்துங்கள் – மாவோ

நேற்று ஒரு தோழர் தான் சார்ந்து நிற்க்கும் அணியை பற்றி பேசியதற்க்கு தரும் பதில்.(கட்சி என்று அழைவோருக்கு லெனின் வரையரை தருகிறேன் தேவை படும் பொழுது).நான் சொல்லவில்லை மாவோ சொல்கிறார் ஒரு நாட்டில் புரட்சியை நடத்தி முடித்த பல பத்தாண்டுகளுக்கு பிறகு தனது கட்சியில் உள்ளோரை விமர்சிப்பதன் சுருக்கம் கீழே:-செய்ததெல்லாம் சரியே என்று சுய திருப்தி அடைவதை நிறுத்துங்கள் – மாவோ (டிசம்பர் 13, 1963)நல்ல அனுபவங்களை நாம் பணிவோடு முன்வந்து கற்றுக்கொள்ள வேண்டும்.அரசியல் பொருளாதார தத்துவார்த்த கலாச்சார ராணுவ கட்சி பணிகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல மற்றவர்களின் அனுபவங்களை நாம் கற்றுக் கொள்வது அவசியம். ஆனால் சில தோழர்களின் அணுகுமுறை எப்படி உள்ளது. தாங்கள் செய்வதெல்லாம் சரிதான், போதும் என்ற சுய திருப்தியும் செருக்கும் கொண்டவர்களாக, தொடர்ந்து இதுவரை செய்தவற்றை செய்துக் கொண்டும் உள்ளனர்.மார்க்சியத்தின் இயக்கவியல் கோட்பாட்டினை இவர்கள் புரிந்து கொண்டவர்களாக இல்லை.மார்க்சிய இயக்கவியல் வெளிச்சத்தில் தங்களது பணிகளை ஆய்ந்து பார்க்க தவறுகின்றனர் ஆனால் சாதனைகளை மட்டும் பார்த்து திருப்திக் கொள்கிறார்கள் குறைகளையும் தவறுகளையும் கண்டுகொள்வதில்லை பாராட்டுதல்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறார்கள் விமர்சனத்தை வெறுக்கிறார்கள்.அவர்களது உலகம் மிகக் குறுகியதாக இருக்கிறது.தங்களது பகுதி தங்களது கட்சி இதுதான் அவர்களது உலகம் இதை தாண்டியும் ஒரு மிகப்பெரிய உலகம் வெளியே உள்ளது என்பதை அவர்கள் உணர்ந்த பாடில்லை இது வரட்டுத்தனமான அராஜகப் போக்கு அன்றி வேறென்ன?.தமது கட்சி தமது தோழர்கள் இவர்கள் சாதனை மட்டுமே விசாலமாக பேசுவார்கள் இவர்கள் .தனது குறைகளை பற்றி மறந்தும் பேசமாட்டார்கள். அப்படி ஏதாவது பேச நிர்பந்தம் உண்டானாலும் அவசரகதியில் பேச்சை துண்டித்து விடுவார்கள்.ஒரு கம்யூனிஸ்ட் ஆனவன் மார்க்சிய கோட்பாடான இயக்கவியல் கோட்பாட்டை கற்றுத்தேர்ந்த வனாகவும் தத்துவார்த்த புரிதலும் நடைமுறை அறிந்தவனும், சாதனைகள் – குறைபாடுகள் உண்மை – பொய் தத்துவத்தைப் புரிந்து நடைமுறையில் செயல்படுத்த வேண்டுமென தெரிந்த்திருக்க வேண்டும்.எந்த ஒரு இயக்கமும். தேங்கிக் கிடப்பது இல்லை அவற்றிக்கு இடையிலான இணைவும் போராட்டமும் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்கின்றன.ஆனால் வருத்தப்பட தக்க விதமாக கட்சியின் மேல்மட்ட குழுவிழும் கீழ்மட்ட குழுவிழும் சரி எங்கேயும் இதை உணர்ந்தவராக இருக்கவில்லை, இந்த மார்க்சிய தத்துவத்தின் வெளிச்சத்தில் தமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வதும் இல்லை.இந்த இயக்க மறுப்பியல் சிந்தனையை அவர்கள் மாற்றிக் கொள்வது என்றால் அவர்களுக்கு வேப்பங்காயாக இருக்கின்றது. எதிர்மறைகளின் ஒருங்கிணைவும் எதிரான தொடர் போராட்டமும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் இரண்டும் தனது குணங்களை மாற்றிக் கொள்ளும் என்ற மார்க்சின் தத்துவத்துக்கு எதிரான இயக்க மறுப்பியல், மார்க்சிய இயக்கவியலை நிராகரிக்கின்றது. தோழர்களுக்கு, நேர்மையாக தன்பகுதியை தனது கட்சி கிளையை தன்னை மதிப்பிட விமர்சனம் செய்யத் தவறுகின்ற தோழர்களை பிற பகுதிகளை பிற கிளைகளை பிற தோழர்களை மதிப்பீடு விமர்சனம் செய்ய தவறுகின்ற தோழர்களை நாம் விமர்சிக்க வேண்டும் அவர்களது சிந்தனையை அவர்களது பணியை மாற்றிக் கொள்ளுமாறு தோழமை உணர்வோடு அறிவுறுத்த வேண்டும் இது ஒரு முக்கியமான விஷயம் என்பதை புரிந்து கொண்டு இதை விவாதிக்க வேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன் – மாவோ (மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் தொகுதி 9 பக்கம் 67-71).இதை படித்து ஒரு அமைப்பேனும் தனது நிலையை மாற்றிக் கொள்ளுமேயாயின் அவர்கள் மார்க்சியத்தை புரிந்து செயல்பட உள்ளனர் இல்லையேல் குறுங்குழுவாத புதைச் சேறில் வீழ்ந்தே கிடக்க வேண்டியதுதான் தோழமைகளே.