சீ.க.க. தனது அனுபவத்தை கூறுகிறபோது,”அக்டோபர் புரட்சிக்கு முன்பு லெனின் எதிர்ப்பட்ட நிலைமை சீனாவில் இல்லை.
1). ரசியப் போல்செவிக்குகள் வெற்றி பெற்று உயிருள்ள உதாரணத்தை உருவாக்கி வைத்த பிறகு கட்சி கட்டப்பட்டது.
2). இரண்டாம் அகிலத்தின் சித்தாந்த ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் செல்வாக்கிற்கு உட்படவில்லை.
3).ஐரோப்பியவைப் போன்று சீனாவில் தொழிலாளி வர்க்கம் சமாதானமான முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தை கண்டதேயில்லை. அன்றியும் ஐரோப்பாவில் இருப்பதைப் போன்ற சீனாவில் தொழிலாளர்களுக்குள் சலுகை பெற்ற பகுதி ஒன்று உருவாகவில்லை.
4). லெனினிய முறைப்படி அமைந்த ஒரு கட்சியை ஆரம்பத்தில் இருந்தே கட்டுவதற்கு உதவிற்று. புத்திப் பூர்வமாக நாம் லெனின் வகுத்து வைத்துப் போன கோட்பாடுகளில் இருந்து இம்மியளவும் பிறழாது நடந்து கொண்டோம். ஆரம்பத்தில் இருந்தே கட்சி கண்டிப்பான சுய விமர்சனம், உட்கட்சிப் போராட்டம் நடத்தி வந்துள்ளது. (உட்கட்சி போராட்டம் பற்றி லியோ-சோ-சி).
லெனினிய கோட்பாடுகளும், சுயவிமர்சனமும், உட்கட்சி போராட்டமும் சீ.க.க.யின் கட்டுமானத்தின் வெற்றிக்கு வழி வகுத்தது என்பதை கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களாகிய நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.