சீனா ஒரு கம்யூனிச நாடா?

இன்றும் சீனா ஒரு கம்யூனிச நாடு என்று பேசுவோரே நீங்கள் தூக்கி நிறுத்தும் பாராளுமன்றத்தை காப்பாற்ற என்னென்வோ செய்ய வேண்டியுள்ளது, உங்களை போன்றோர் தெரிந்து கொள்ளவே அன்றே நமது ஆசான் சொன்னவையே.“மார்க்சியத்தின் நேரடியான புரட்சிகரத் தன்மையைத் தவிர்த்துவிட்டு பிறவற்றை மட்டுமே மார்க்சியமாக பெர்ன்ஸ்டைன் வாதிகள் ஏற்றுக்கொண்டனர் இப்பொழுதும் ஏற்கின்றனர். பாராளுமன்றப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்துக்கு மட்டுமே பொருந்தும் ஆயுதங்களில் ஒன்று என்று அவர்கள் கருதவில்லை மாறாக “பலாத்காரம்”, “கைப்பற்றுதல்”, “சர்வாதிகாரம்” போன்றவற்றை தேவையற்றதாகச் செய்து விடுகிற முக்கியமான ஒரே போராட்ட வடிவமாக பார்க்கின்றனர்.”(லெனின் – இராணுவப் படைகளின் வெற்றியும், தொழிலாளர் கட்சியின் பணிகளும்)முதலாளித்துவப் பாராளுமன்ற அமைப்பில் “வர்க்க முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்தை மேற்கொள்ள இனியும் இடமில்லை” என்றும் “பலாத்காரத்தின் மூலம் அரசைத் தூக்கியெறிய வேண்டும் எனப் பிரசாரம் செய்வது கேலிக்குரியது” என்றும் ஓடுகாலி காவுத்ஸ்கி கூறினார். “இதுவரை இருந்தது போலவே இப்போதும் நமது அரசியல் போராட்டத்தின் நோக்கம், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று, நாடாளுமன்றத்தை அரசாங்கத்தின் எஜமானனாக மாற்றி, அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதாகத்தான் இருந்து வருகிறது” என்று ஓடுகாலி காவுத்ஸ்கி வாதிட்டார் அவரை லெனின் பின்வருமாறு விமர்சனம் செய்தார்.“கயவர்களும் முட்டாள்களும்தான் முதலாளித்துவ நுகத்தடியின் கீழ், கூலி அடிமை என்ற நுகத்தடியின் கீழ் நடத்தப்படும் தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சிக்கு வரும் என்று நினைக்க முடியும். இது ஒரு மிகப் பெரிய ஏமாற்று அல்லது முட்டாள்தனமாகும். இது வர்க்கப் போராட்டத்துக்கும் புரட்சிக்கும் பதில் பழைய அமைப்பின் கீழ் பழைய அதிகாரத்துக்கு ஓட்டுப் போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று போதிக்கிறது.”(லெனின் – ‘இத்தாலியன், பிரெஞ்சு, ஜெர்மன் கம்யூனிஸ்டுகளுக்கு வாழ்த்துக்கள்’)


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *